இங்கு சென்று இப்படி வழிபடுங்கள் - ALP ஜோதிடம். ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். ALP ஜோதிடர்.
full video link: https://youtu.be/YazZXcPmrq4?si=b3Z0KoZG0uRowIgx ஜோதிடம் டிவி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். நம்ம இன்னைக்கு ஒரு முக்கியமான ஒரு கோவிலை பத்தியும் அது ஜோதிடத்தோட எந்த லெவல்ல தொடர்பு பெற்றிருக்கு அப்படிங்கறது பற்றியும் நாம இந்த பதிவுல பார்க்க போறோம். முக்கியமா நம்ம எல்லாருக்குமே உடம்புல எங்கேயாவது பிரச்சனைகள் இருந்ததுன்னா அதை சரி செய்துக்க முடியும் தாங்கிக்க முடியும் அதனோட பயணிக்க முடியும். ஆனா ஒரு முக்கியமான உறுப்பில மட்டும் பிரச்சனை வந்ததுன்னா அது எப்படி ஒரே இருள் சூழ்ந்த நிகழ்வாக போயிடும். அது என்னங்க? கண்கள். அந்த கண்கள் அப்படிங்கிற ஒரு நிகழ்வு நமக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதே மாதிரி அந்த கண்களில் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஒரு அற்புதமான ஒரு ஆலயத்தை பத்தி தான் நம்ம இப்போ பாக்க போறோம். திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் சன்னதிக்கு பின்னாடி இருக்கக்கூடிய கரிய மாணிக்க பெருமாள் பற்றி தாங்க பார்க்க போறோம். கரிய மாணிக்க பெருமாள். சூரியன் வந்து ஒளி தரக்கூடிய கிரகம். சனி பகவான் அந்த ஒளியை இருளாக்கக் கூடிய ஒரு...