full video link: https://youtu.be/NNnADw0pqjo?si=qigX5DnSTMPAaBbT
வணக்கம்.
நான் சாந்தகுமார் ALP அஸ்ட்ராலஜர் சென்னையில் இருந்து. ஏற்கனவே திருமணம்
பொருத்தம் சம்பந்தமா ஏற்கனவே ஒரு வீடியோ பார்த்திருந்தோம். அதுல திருமணம்
பொருத்தம் அப்படின்னா என்ன,
ALP எதுக்கு பார்க்கணும், அது
ஏன் ALP முறையில் பார்க்கணும் அது நீண்ட காலத்துக்கு பார்க்க வேண்டிய
விஷயங்கள் என்னென்ன அப்படிங்கிறத பார்ப்போம். 
ஆனா
திருமணம் ஆகாம நிறைய பேரு கஷ்டத்துல இருப்பாங்க. 
அவங்களுக்கு அது தோஷமா இருந்ததுனா அதுல எப்படி தோஷத்தை சரி பண்ணிக்கணும்
அப்படிங்கிற விஷயத்தை இன்னைக்கு கொஞ்சம் பாக்க போறோம். 
தோஷம்னு
ஒன்னு இல்லை :
தோஷம்னு
ஒன்னு இல்லைங்க. திருமணத்துக்கான தடை அப்படிங்கிறது மனிதனால் உருவாக்கிறது
தவிர கிரகங்கள் தடுக்கிறது இல்லை. ஆனால் கிரகங்கள் ஒரு சிலதை
சுட்டி காட்டும். அது என்னன்னு தெரிஞ்சுக்க போறோம். அது எப்படி கையாளனும்
அப்படிங்கிறதையும் பாக்க போறோம். சரிங்களா.
திருமண
காலம் :
இப்போ
பாத்தீங்கன்னா காலத்தில் பயிர் செய் அப்படின்னு சொல்லுவாங்க. இந்த திருமண
காலம்கிறது 21 ல இருந்து 30 வரைக்கும். இந்த 21வயதிலிருந்து 30 வயதிற்கு
உள்ளாரா ஒரு திருமணம் நடக்கணும். 
எவ்வளவுக்கு எவ்வளவு லேட் பண்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த
திருமணத்திற்கான வாய்ப்புகளும் இந்த வாழ்க்கையும் ஒரு பக்குவம் இல்லாமலேயே  போயிட்டு இருக்கும். 
அப்போ
காலத்தே பயிர் செய்யும்போது அந்த திருமண காலத்திலேயே ஜாதகத்தில் தோஷம் இருக்கும்
பட்சத்தில் அதை எப்படி கையாளனும் அப்படிங்கிறத இன்னைக்கு பார்க்க போறோம். 
ALP ரிஷப லக்னம் :
இப்போ
ஜென்ம லக்னம் மீனம் வச்சுக்கிடுவோம். சரிங்களா ஒரு 20 வயசு கடக்கும்போது அவர்
வந்துட்டு ALP வந்து ரிஷபத்தில் வரதா வச்சுக்கிடுவோம். இந்த ரிஷப லக்னம் நடக்கும்
காலத்தில் அவருக்கு ஏழாம் பாவத்துக்கு அதிபதி வந்து செவ்வாய்.
இந்த செவ்வாய் துலாத்தில் இருக்க கூடாது. தனுசில்
இருக்க கூடாது. இரண்டும்இந்த
திருமணத்துக்கான தடைக்கான அடையாளங்களாக காட்டுது. 
தடையை
உருவாக்கியது யார்?
:
அப்ப
இந்த செவ்வாய் தடைய உருவாக்குதானா. செவ்வாய்
உருவாக்க வில்லை.
ஜாதகர்
உருவாக்கின விஷயம்தான்
சரிங்களா. இதை கையாள முடியுங்கிறது தான் நம்ம சொல்றோம். 
துலாமில்
செவ்வாய் :
இது
எப்படி கையாளனும் அப்படின்னு பாக்கணும்னா இந்த ஜாதகருக்கு பக்கத்துல தெரிஞ்ச
சோர்ஸ் அத்தனைலயும் தேடினாலும் இந்த பொண்ணு கிடைக்கவே கிடைக்காது. ஏன் கிடைக்காது
அப்படின்னா துலாம்ல இருக்கிற செவ்வாய் இருந்ததுனா முதல்ல நம்ம துலாம் செவ்வாய்
மட்டும் பார்ப்போம் அப்புறம் இதுக்கு வரலாம். 
துலாமில்
செவ்வாய் இருக்கிற ஜாதகமா இருந்தா, அந்த பெண்ணு இந்த
(விருச்சிகத்திற்கு) இடத்துல இருந்து 12 இடத்தில் இருக்கு. அது
உள்ளூரில் இல்லை வெளியூரில் இருக்கிறார் அப்படின்னு காட்டுது. 
அப்போ
வெளியூரில் இருக்கிற ஒரு பெண்ணை தேடி திருமணம் பண்ணாதான் அது கரெக்டா
இருக்கும். வெளியூரோ வெளிமாநிலத்திலோ இல்ல வெளிநாட்டிலையோ தேடுனா தான் இந்த பொண்ணு
கிடைக்கும்.  
லோக்கல்ல
தேடுனா அது கிடைக்காததுனால
இவருக்கு திருமண வாழ்க்கை தள்ளி போய்கிட்டே இருக்கும். இதுதான் நமக்கு புரிய
வேண்டிய விஷயமா இருக்கும். அப்போ இந்த மாதிரி ஒரு பிரச்சனை வரும் பட்சத்தில் நம்ம
பண்ணிக்க வேண்டிய விஷயம் எல்லாம் இத வெளியூர்ல, வெளிநாட்டுல ,
வெளி
தேசங்களில் நம்ம தேடினோம்னா இந்த திருமணம் நடக்கும்.  
தனுசில்
செவ்வாய்
:
அடுத்தது
பார்த்தீங்கன்னா சப்போஸ் செவ்வாய் இங்க இருக்காரு தனுசுல இருக்கார் அப்படின்னா
இதுவும் ஒரு தோஷ ஜாதகம்னு சொல்லணும். ஏன்னா இந்த தோஷத்துக்கு பண்ண
வேண்டியது என்னன்னா இந்த பெண் அவளுடைய படிப்பு சம்பந்தப்பட்ட இடத்துல இந்த
செவ்வாய் இருக்கிறார்.  இந்த பெண்ணு ஒரு கரடு முரடான
பிரச்சனைகளை,  தினப்படி 
கையாளக்கூடிய வேலைக்கான படிப்பு படிச்சி இருப்பாங்க அப்படின்னு பாக்கணும். 
எட்டாம்
பாவகம் :
தினமும்
பிரச்சினைகளை கையாளக் கூடியவர் யார் யாருன்னு பாருங்களேன் போலீஸ், ஹாஸ்பிடல்ல வேலை செய்றவங்க,கோர்ட்ல வேலை செய்றவங்க, பண விவகாரங்களை ரொம்ப
கண்ட்ரோல் பண்ணக்கூடியவங்க இந்த மாதிரி விஷயங்கள் இதெல்லாம் ஹாண்ட் பண்றவங்க
எல்லாம் எட்டாம் பாவகம் சம்பந்தப்பட்டவங்க. 
அந்த
மாதிரி படிப்பு படிச்சவங்களுக்கு அவங்கள திருமணம் பண்ணி கொள்ளும்போது அவங்களுக்கு
இவருக்கும் திருமண வாழ்க்கை சுமூகமா இருக்க போறது இல்ல அதுதான் உண்மை. ஆனா
திருமணத்தை தள்ளி போடுறதுனால எதுவும் நடந்திட போறது இல்ல. 
அப்போ
எல்லாம் சரியாகட்டும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னா இவருக்கு அந்த மாதிரி
சரியாகி  கல்யாணமே நடக்காம தள்ளி போய்
அதனாலேயே திருமணங்கள்  நடக்காம வாழ்றவங்க
நிறைய பேரை பார்த்து இருக்கோம். 
இப்ப
என்ன சொல்றோம் கரடு முரடான திருமண வாழ்க்கைதான் இருக்க போதுனு புரிஞ்சாலும் அத
கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த மாதிரி பிரச்சனைகளுக்கு அவங்க வேலையே பரிகாரமா
இருக்கும் பட்சத்தில் அத உபயோகப்படுத்திக்க சொல்றோம். 
திருமண
வாழ்க்கை :
அந்த
மாதிரி உங்களுக்கு தினப்படி பிரச்சனைகளை கையாள்றதுனால அவங்கள திருமணம் பண்ணும்
போது ஜாதகருக்கும் பிரச்சினைகளை இவங்களுக்கு சரியா கையாண்டுக்கிட்டு அந்த திருமண
வாழ்க்கையை சுமூகமா பத்தாண்டுகள் கடந்து போக முடியும். பத்து ஆண்டுகள் கழித்து
அந்த வாழ்க்கை நல்லா தான் போகும் பாருங்க. அந்த மாதிரி வாழனும். 
அப்போ
ஒரு தோஷம் பார்த்தோம்னா இந்த மாதிரி தோஷம்னா இது தோஷம்னு இல்ல இது பிரச்சனைக்குரிய
அப்படிங்கிறத சுட்டிக்காட்டுதே தவிர அதுக்கான தீர்வும் இருக்கு. 
திருமண
வாழ்க்கை தள்ளி போடுறதுனால மட்டும் இந்த 
பிரச்சனைகள் சரியாகிவிடுமானா சரியாகா போறது இல்ல. இவர் இந்த திருமணம்
பண்ணிக்காட்டாலும் இந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் இருப்பார். அதுதான் இது
காட்டுது. 
அப்போ
திருமணம் பண்ணியே இதை எதிர்கொள்றதுக்கும் திருமணம் பண்ணாம எதிர்கொள்றதுக்குமான
வித்தியாசங்கள் இருக்கு இல்லையா எப்படி இருந்தாலும் பிரச்சனைதான். அது திருமணம்
பண்ணி அதை கையாண்டு ஒரு பக்குவத்துக்கு வந்துட்டா அதுக்கு அடுத்து பத்தாண்டுகள்
நல்லபடியான வாழ்வதற்கான வாழ்க்கை முறை கிடைச்சிருக்கு பாருங்க. அதைத்தான் நம்ம
எடுத்துக்கிட்டு போக சொல்றோம். 
மனிதர்கள்
மட்டுமே காரணம் :
அப்போ
அந்த மாதிரி வாழ்க்கையில வாழனும்னா அலை ஓய்ரதுக்கு அப்புறம்தான் நான் குளிக்கப்
போவேன்னு சொல்ற மாதிரி  கதையாயிரும். சோ
பிரச்சினைகள் இருக்கும் ஆனால் அதைத் தாண்டியும் நம்ம வாழ்க்கை எடுத்துட்டு போக
முடியும். திருமண தடைக்கு மனிதர்கள் மட்டுமே காரணம் எந்த கிரகங்களும் இல்லை.  
வினைகளுக்கான
சுட்டிக்காட்டுதல் :
கிரகங்களை
பழிக்காதீர்கள்.
கிரகங்கள் எப்போதுமே உங்களுக்கு வழி விட்டுக் கொண்டே இருக்கிறது. கிரகங்களால்  உங்களுடைய வாழ்க்கையில எந்த தடைகளும்
வருவதில்லை. நீங்கள் செய்த வினைகளுக்கான சுட்டிக்காட்டுதல் மட்டுமே அங்கே
காட்டப்படுகிறது. அதை நீங்க சரி பண்ணிக்கும்போது அதை கையாளும் பொழுது
உங்களுக்கான வாழ்க்கை உங்கள் கையில் எப்போதுமே இருக்கு. நன்றி. வணக்கம்.
ALP ASTROLOGY: +91 9363035656 | +91 9786556156

Comments
Post a Comment