குழந்தை பாக்கியம் - ஜோதிட ரீதியா இதற்கு என்ன பதில் ? ஸ்ரீ குரு சாந்தகுமார். ALP ஜோதிடர்.

full video link: https://youtu.be/FTFduaJi8mQ?si=Z2WinSeX6gyyAzN3

வணக்கம். நான் சாந்தகுமார், ALP அஸ்ட்ராலஜர், சென்னையில் இருந்து. இன்னைக்கு குழந்தை பாக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை பேசலாம்னு இருக்கோம்.

ஜோதிட ரீதியா இதுக்கு என்ன பதில் ?

குழந்தை பிறக்கல அப்படின்னு நிறைய வருத்தப்படக்கூடிய சூழலை இன்னைக்கு நிறைய இருக்கு. அதுலயும் குறிப்பா கரு  தங்கிருச்சி ஆனா குழந்தையா பிறக்கிறதுக்கு முன்னாடியே கரு கலஞ்சிருச்சு. இப்படிங்ககிற நிகழ்வு நிறையவே கேட்கிறோம். கருவே தங்கலங்கிறதையும் கேட்கிறோம். இதெல்லாம் ரொம்ப சோகமான விஷயம். ரொம்ப சங்கடமான விஷயம். நிறைய பேரு மனசு இதுல பாதிக்கப்பட்டு இருக்கு. நிறைய கேள்விகள் ஜோதிட ரீதியா இதுக்கு என்ன பதில் சொல்றது அப்படிங்கிற கேள்விகள் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கு.

நியூட்ரிஷன் :

ஒரு விஷயம் முதல்ல நம்ம தெளிவா புரியணும். நான்  நியூட்ரிசியனிஸ்ட்னு உங்களுக்கு தெரியும்னு நம்புறேன். நான் நிறைய விஷயங்கள் பார்த்திருக்கேன் குழந்தை இல்லாதவங்களுக்காக நிறையவே பேசி இருக்கேன். அப்படி பேசும் பொழுது நியூட்ரிஷன் சம்பந்தமா சொல்லும்பொழுது நான் கேள்வி கேட்பேன்.

முதலில் ஆரோக்கியம் :

உங்களுக்கு குழந்தை வேணும்னு நினைக்கிறீங்களா இல்ல ஆரோக்கியமான குழந்தை வேணுமா அப்படின்னு ஒரு கேள்வி கேட்பேன். ஆரோக்கியமான குழந்தை தான் வேணும் அப்படின்னு சொல்லுவாங்க. அப்படின்னா என்கிட்ட முதல்ல ஆரோக்கியம் இருந்தா தான் எனக்கு அந்த குழந்தை பிறப்புக்கு நான் அதை கொடுக்க முடியும். என்கிட்ட இருக்கிற  ஜீன் தானே குழந்தையா பிறக்குது அது ஆணா இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.

என்கிட்ட இல்லாத  ஆரோக்கியத்தை அந்த குழந்தை பிறக்க முடியாது அப்படிங்கிறதனால இயற்கையாவே அந்த கருவை தங்க விடாமல் தடுக்குது அப்படிங்கிறது நம்ம முதல்ல புரிஞ்சிக்கணும். அப்ப முதல்ல என்னுடைய ஆரோக்கியம் என்னுடைய மனநிலை இது ரெண்டுத்தையும் முதல்ல பேணிட்டு தான் நான் ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றி யோசிக்கணும்.

ஐந்தாம் பாவகம் :

இந்த விஷயங்கள் ஜாதக ரீதியா ஐந்தாம் பாவகம் அப்படிங்கிறது மனம்னும் வரும். ஐந்தாம் பாவகம் குழந்தைனும் வரும். அப்ப இது ஜாதகரீதியா பார்த்தோம்னா ஐந்து மனம் ஐந்து குழந்தை. இப்ப குழந்தை  பெத்துக்கணும்னா மனசு நல்லா இருக்கணும். நல்லா இருக்கும் பொழுது தான் குழந்தை பெத்துக்க முடியும். இது முதல் விஷயம். 

DNA :

என்னுடைய ஜீன் என்னுடைய DNA அப்படிங்கிறதும் ஐந்தாம் பாவகத்துல தான் இருக்கு. அப்போ ஐந்தாம் பாவகம் பாதிக்கப்பட்டு இருக்கும் போது ஒரு குழந்தை பிறப்புக்கான முயற்சிங்கிறது ஒரு சரியான செயல் இல்லை.

ட்ரீட்மென்ட்க்கு செல்வது :

ஒரு உதாரணத்துக்கு ஆறாம் பாவக அதிபதி பிரச்சினைகளை கொடுக்கக்கூடிய அதிபதி ஐந்தில் இருப்பதால் ஒரு உதாரணம் வச்சுக்கிடுவோம். அப்படின்னா குழந்தை பாதிப்பு இருக்கு. அப்ப அதை தாண்டி குழந்தை பெத்துக்க முடியுமானா நீங்க ட்ரீட்மென்ட் எல்லாம் இருக்கு.  ட்ரீட்மென்ட் எடுத்து குழந்தை பெத்துகிறது என்று ஒரு பலனை அங்க சொல்ல முடியும் அப்படின்னாலும் விஷயம் என்னன்னா அப்படி ஒரு குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தைக்காக பிரச்சனை அப்படின்னு ஒரு பலனும் சேர்ந்து வரும்.

இப்ப நான் குழந்தை இல்லை என்கிறதால பிரச்சினையோடு இருக்கிறது நல்லதா இல்ல எனக்கு பிறக்கிற குழந்தை அந்த நோய்களோட அவஸ்தப்படணும் என்பது நல்லதா. அப்ப அதுக்கு காரணம் யாரு அப்படின்னா நான் தான் திரும்ப. அப்ப நான் முதல்ல என்னுடைய ஆரோக்கியத்தை நல்லா உருவாக்கிக்கிட்டு அதுக்கப்புறம் குழந்தை பெத்துக்கிறது ரொம்ப முக்கியம் அப்படிங்கிற புரிதல் முதல்ல வரணும்.

மன ஆரோக்கியம் :

ஏன்னா இன்னைக்கு பிறவி குறைபாடுகள், மனநல பாதிப்புகள், பிறந்த குழந்தைக்கு இருக்கிறதெல்லாம் பார்க்கிறோம். காரணம் நான் குழந்தை பெத்துக்கணும்னு நினைக்கும் பொழுது என்னுடைய உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்தை சரியா வச்சி இருக்கேனா அப்படிங்கிற ஒரு கேள்வி இருக்கு. அப்போ குழந்தை இல்லைகிற  குறையோடயே அந்த நேரத்தை கடக்கிறது நல்லதா இல்ல குழந்தை பாக்கியத்தை பெத்துக்கணும் அப்படிங்கிறதுக்காக பணம் செலவு பண்ணியாது ஒரு குறை உள்ள குழந்தையை பெத்துகிறதா அப்படிங்கிறது தெளிவாகுங்க.

இப்ப இந்த தெளிவு நமக்கு முதல்ல வந்துடனும். இப்ப குழந்தை பெத்துக்கணும் அப்படிங்கிற ஒரு முடிவு எடுத்துட்டா நம்ம ஆரோக்கியத்தை முதல்ல சரி பண்ணிட்டு அதுக்கப்புறம் குழந்தை பெத்துக்கிறது பத்தி யோசிங்க. அதுக்கான சூழ்நிலைகளை உருவாக்குக. உங்க ஃபர்ஸ்ட் பிரியாரிட்டி குழந்தை  அப்படின்னு வந்துருச்சுன்னா உங்க மனசு முதல்ல லேசாகுங்க. அதுல நிறைய பாரங்களை வச்சுக்கிட்டு குழந்தை பெத்துக்கிறதுக்கு முயற்சி பண்ண வேண்டாம். இது முதல் தகவல்.

கரு தங்குது :

கரு தங்குது கரு ஆனா குழந்தையா பிறக்குறதுக்கு முன்னாடி கலைஞ்சிடுது. இந்த நிகழ்வு பத்தி இதையே ஒரு தடவை இரண்டு தடவை இல்லை நிறைய தடவை நடந்துருச்சு. கர்ப்பப்பை வீக் ஆகுது இப்படிங்கிற நிகழ்வு வரைக்கும் நம்ம கேள்விப்படுகிறோம்.

மகாபாரதம்  மூலம் விளக்கம் :

இந்த நிகழ்வுக்கு மகாபாரத்தில் இருந்து ஒரு கதை அதை பத்தி இங்க பேசினா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். ஒரு ராஜா அவர் வந்து ஒரு பெண்ணை பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்கணும் விரும்புறேன் சொல்றாரு. நீ என்னை தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா ஒரு கண்டிஷன் என்னை எந்த கேள்வியும் கேட்க கூடாது அப்படின்னு அந்த பெண் சொல்லுது. சரின்னு ஒத்துக்கிறார்.

அதுக்கப்புறம் அவங்க கல்யாணம் பண்ணிக்கிறாங்க. கல்யாணம் பண்ண பிறகு குழந்தைங்க பிறக்குது. முதல் குழந்தை பிறந்த உடனே அத கொண்டு போயி கங்கை நதில அந்த குழந்தையை போடுறாங்க அந்த பெண். அந்த ராஜா வந்து எந்த கேள்வியும் கேட்க முடியல தவிக்கிறார். ஆனால் வாக்கு கொடுத்துட்டோம்னு காப்பாத்தணும்னு பேசாம இருக்கிறார்.

இரண்டாவது குழந்தை பிறக்குது இதே பண்றாங்க. மூணு அதே பண்றாங்க. நான்கு ஐந்து,ஆறு, ஏழு வரைக்கும் பண்ணிட்டாங்க. ஒண்ணுமே பேசல ராஜா. ஆனால் எட்டாவது குழந்தை பிறந்த போது இவரால பொறுத்துக்க முடியல.

அப்போ அந்த மகாராணி கிட்ட கேட்கிறார். ஏம்மா இந்த மாதிரி பண்ற என்னால சகிச்சுக்க முடியல. எனக்கு பிறக்கிற குழந்தைகள் எல்லாம் நீ கொன்னுக்கிட்டே இருக்கியே. இத நான் எப்படி ஏத்துக்கிறது அப்படின்னு சொல்லி கேட்கிறார். என்னால உனக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாத்த முடியல மன்னிச்சுக்க. ஆனா எனக்கு இதுக்கு பதில் தெரிஞ்சாகணும் அப்படின்னு கேக்குறாரு.

அப்போ அந்த  மகாராணி சொல்றாங்க நான்தான் கங்காதேவி. நான் தான் பெண்ணா வந்துருக்கேன். உங்களுக்கு மனைவியா வந்திருக்கிறது நான்தான். அப்ப என்னுடைய இதுல நான் விட்டு இருக்கேன் முதல் விஷயம்.

ஆனா நடந்த நிகழ்வு என்னன்னா இந்த அஷ்டதிக் பாலகர்கள் குழந்தையா பிறக்க வேண்டிய ஒரு சாபம் அவங்களுக்கு கிடைக்குது. அப்ப அவங்க ஒன்னும் பெரிய தவறுகள் பண்ணல, புண்ணியம், பாவங்கள் ஏதும் இல்ல அவங்க கிட்ட அதை அனுபவிக்க கூடிய  பிராப்தமே இல்ல. ஆனா அவங்களுக்கு ஒரு சாபம் கொடுக்கப்பட்டதுனால இங்கே பிறந்து இறக்கணும் அப்படிங்கிற ஒரு அமைப்பு அவங்களுக்கு இருக்குது.

அவங்களுக்கு சாப விமோசனமா என்ன சொல்லப்பட்டது என்றால் நீங்க வந்து கங்காதேவி கிட்ட போய் வேண்டிக்கோங்க அப்படின்னு சொல்லப்பட்டது. அதனால கங்காதேவி கிட்ட போய் கேக்குறாங்க எங்களுக்கு ஒரு தீர்வு குடுங்கம்மா அப்படின்னு சொல்லி.

அப்போ நீங்க பிறங்க, பிறந்த உடனே நான் உங்களுடைய இறப்பையும் கையோடவே கொடுத்து விடுகிறேன் அப்படின்னு சொல்லி கங்காதேவி ஒத்துக்குறாங்க. அப்படி நடந்த நிகழ்வு. இப்ப ஏழு குழந்தைகளுக்கு இத பண்ணியாச்சு. எட்டாவதாக பிறக்கிறது நம்முடைய பீஷ்மர் அப்படின்னு சொல்லக்கூடியவர்.

நீங்க நல்லா யோசித்துப் பாருங்களேன் ஏழு பேரு பிறந்த உடனே இறந்தது. அவங்களுக்கு அந்த ஆத்மாக்களுக்கு இங்க வேலை இல்ல. அதனால கட கடன்னு வந்த உடனே போயிட்டாங்க. அது புனித ஆத்மாக்கள் அது புரிஞ்சிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

எட்டாவது பிறந்தவரு அவரும் புனித ஆத்மா தான். ஆனா அவர் இங்க தங்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கவே என்ன நடந்தது என்று பார்த்தீங்கன்னா அவர் தன் வாழ்நாள் ஃபுல்லா அவர் அனுபவிச்ச துன்பங்கள் வேறு யாரும் அனுபவிச்சி இருக்க முடியாது. அப்போ எந்த கரு தங்கணுமோ அது தங்கும். எது போணுமோ அது போகும். அது நம்ம ஆய்வு செய்ற இடத்துக்கு போக வேண்டாம் அப்படிங்கிறது தான் இந்த கதையினுடைய கரு.

பகவான் கிருஷ்ணர் பிறப்பு :

வேறு இன்னொரு விதமாகவும் இதை பார்க்கலாம். கிருஷ்ணர் எட்டாவது குழந்தையா பிறக்குறாரு. கிருஷ்ணர் மாதிரியான ஒரு பெரிய ஆத்மா கரெக்டா ஒரு கருவில் தங்கணும்னா அந்த வயிறு எவ்வளவு பாக்கியம் பெறனும். அப்ப அது எத்தனை தடவை புனித படுத்த வேண்டி இருக்கும். அந்த புனித தன்மைகளை ஆறு குழந்தைகள் பண்ணி ஏழாவது குழந்தையாக துர்கா தேவி பிறக்கிறதா கதை சொல்லுவாங்க. அந்த குழந்தை பிறந்து அந்த வயிரை சுத்தம் பண்ணி  பலப்படுத்தி அப்புறமாக எட்டாவது குழந்தையா கிருஷ்ணர் பிறந்ததா கதை.

அப்போ ஒரு நல்ல குழந்தை  பிறக்கணும்னா இந்த நிகழ்வுகள் சகஜம் அப்படிங்கிறத புரிஞ்சுகிட்டு அதை பாசிட்டிவாவே எடுத்துட்டு போறதுக்கு நம்ம பழகணும் அப்படிங்கிறதுதான் இந்த இடத்துல சொல்லிக்க விரும்புறோம். திரும்ப சொல்றேன் நம்முடைய மனம் நம்முடைய உடல் நம்முடைய ஆரோக்கியம் இதெல்லாம் சேர்ந்துதான் நம்ம குழந்தை.

அதனால நம்ம முதல்ல ஆரோக்கியமா இருக்கோம் அப்படிங்கிறது கன்ஃபார்ம் பண்ணிட்டு குழந்தை பெத்துக்கணுமே தவிர குழந்தை வேணும் என்பதற்காக மெடிக்கலா ஏதாவது மிராக்கல் பண்றேன்னு சொல்லி அதுக்கு நம்மள டிவியேட் பண்ணிக்க வேண்டாம். இதுக்கு ஜாதகம் எப்படி சப்போர்ட் பண்ணுதுங்கிறது செக் பண்ணிட்டு முடிவு எடுப்போம்.

நன்றி.

www.alpastrology.com

ALP ASTROLOGY: +91 9363035656 | +91 9786556156

Comments