இங்கு சென்று இப்படி வழிபடுங்கள் - ALP ஜோதிடம். ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். ALP ஜோதிடர்.
ஜோதிடம் டிவி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். நம்ம இன்னைக்கு ஒரு முக்கியமான ஒரு கோவிலை பத்தியும் அது ஜோதிடத்தோட எந்த லெவல்ல தொடர்பு பெற்றிருக்கு அப்படிங்கறது பற்றியும் நாம இந்த பதிவுல பார்க்க போறோம்.
முக்கியமா நம்ம எல்லாருக்குமே உடம்புல
எங்கேயாவது பிரச்சனைகள் இருந்ததுன்னா அதை சரி செய்துக்க முடியும் தாங்கிக்க
முடியும் அதனோட பயணிக்க முடியும். ஆனா ஒரு முக்கியமான உறுப்பில மட்டும் பிரச்சனை
வந்ததுன்னா அது எப்படி ஒரே இருள் சூழ்ந்த நிகழ்வாக போயிடும். 
அது என்னங்க? 
கண்கள். அந்த கண்கள் அப்படிங்கிற ஒரு
நிகழ்வு நமக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதே மாதிரி அந்த கண்களில் பிரச்சனைகளை
தீர்க்கக்கூடிய ஒரு அற்புதமான ஒரு ஆலயத்தை பத்தி தான் நம்ம இப்போ பாக்க போறோம். 
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் சன்னதிக்கு பின்னாடி
இருக்கக்கூடிய கரிய மாணிக்க பெருமாள் பற்றி தாங்க பார்க்க போறோம். கரிய மாணிக்க
பெருமாள். சூரியன் வந்து ஒளி தரக்கூடிய கிரகம். சனி பகவான் அந்த ஒளியை
இருளாக்கக் கூடிய ஒரு கிரகம். அப்போ சூரியன் தரக்கூடிய வெளிச்சத்தை இருட்டாக்கக்
கூடிய ஒரு அமைப்பு யார்கிட்ட இருக்குன்னா சனிபகவானிடம் இருக்கு. 
சூரியனும் சனியும் :
அப்ப அந்த சூரியனும் சனியும் எந்த
ஜாதகத்தில் உங்களுக்கு இணைந்துள்ளதோ அந்த ஜாதகம் நினைவுமட்டும் இல்ல நிறைய பேர்
ஜாதகத்துல சூரியன் சனியும் இணைந்திருக்கும். 
அவங்களுக்கெல்லாம் கண்ணுல பிரச்சனை இருக்குமானா நிச்சயமா இருக்காது. 
அப்போ யாருக்கு இருக்கும்
ஒருத்தருக்கு  லக்னத்திற்கு இரண்டாம்
இடத்தில் சூரியனும் சனியும் இணைந்து இருக்கா? 
ஏன்னா இரண்டாம் வீடு தான் கண்கள். 
அப்ப அந்த இரண்டாம் பாவத்துல
அதுவும் நம்ம அட்சய லக்னத்தில் ALP லக்னம் இன்னைக்கு என்ன நடப்பு லக்னம்
உங்களுக்கு இருக்கிறதோ அந்த லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் இந்த சூரியனும்
சனியும் இணைஞ்சு இருக்காங்க அப்படின்னா கட்டாயம் நீங்க உங்களுக்கான பதிவு தான்
இது. 
அப்போ இந்த சூரியனும் சனியும் இணைஞ்சி
இருக்காங்க கண்கள்ல அவங்களுக்கு பிரச்சனைகள் இருக்கு பாதிப்புகள் இருக்கு
அப்படின்னா அதுக்கான தீர்வு யாருகிட்ட இருக்கு இந்த கரியமாணிக்க பெருமாள் கிட்ட
இருக்கு. 
என்ன சொல்றாங்க கண்ணுக்கு ஒளி தரும்
என் கரிய மாணிக்கமே அப்படிங்கிறது 
தான் அந்த பாடல் வரிகளே வருது. கரிய மாணிக்க பெருமாள் கரினா சனீஸ்வரன்
மாணிக்கம் அப்படின்னா சூரிய பகவான். இந்த சனியும் சூரியனும் இணைந்த பெருமாள்
அப்படிங்கிறது தான் இந்த கரியமாணிக்க பெருமாள். 
சூரியன் சனிக்கு பரிகார ஸ்தலமாக இந்த
ஸ்தலம் அப்படிங்கிறது விளங்குகிறது. அது மட்டும் இல்லாம ராகு கேதுகளுக்கும்  பரிகார ஸ்தலமாக இது இருக்கு. 
இந்த ஸ்தலத்தினுடைய  விசேஷம் என்ன? 
நின்ற அமர்ந்த கிடந்த கோலத்தில் இறைவன்
காட்சி தரக் கூடியவராக இருக்கார். அந்த நின்ற இது வந்து நீல ரத்தினசேத்தரம்
அப்படின்னு சொல்லி இருக்காங்க. நீலம் அப்படிங்கறதும் சனிபகவானுக்கு உரியது.
இந்த நீல ரத்தினசேத்திரம் இதுல பெருமாள் வந்து என்ன சொல்றாரு நின்ற கோலத்தில்
காட்சி கொடுக்கிறார். 
அதுக்கு அடுத்து அங்க லட்சுமி
நரசிம்மராக அமர்ந்த காலத்தில் காட்சி கொடுக்கிறார். அடுத்து சயன கோலத்தில்
அனந்த பத்மநாபசுவாமியாக சயன கோலத்தில் அங்கு காட்சி கொடுக்கிறார் அப்படின்னு
சொல்லலாம். இரண்டு தயார் இருக்காங்க சவுந்ரவல்லி தாயார் கோதைவள்ளி தாயார்
அப்படின்னு இரண்டு தேவதைகள் இருக்கிறாங்க. இந்த ஆலயத்தினுடைய ஸ்தல விருச்சம்
என்னனா மூங்கில். 
இந்த மூங்கில் யாருக்கு உரியது? 
முக்கியமா புனர்பூச
நட்சத்திரம். உங்களுக்கு இப்ப நடப்புல குரு மகா திசை நடக்குது. புனர்பூச
நட்சத்திரம் அட்ச நட்சத்திரமாக அட்சய லக்னமாக பயணிக்குதுனா கட்டாயம் இந்த கோயில்
உங்களுக்கான கோவில் அப்படின்னு நீங்க தெரிஞ்சுக்கலாங்க. 
அப்ப இந்த புனர்பூச  மூங்கில் மரம் அப்படிங்கறது அங்க விசேஷமாக
இருக்கிறதுனால இங்க போய் நீங்க வழிபாடு செய்றீங்கனா கட்டாயம் நன்மைகள்
அப்படிங்கிறது உங்களுக்கு உண்டு. 
இங்கு தை மாதம் ரதசப்தமி
அப்படிங்கிறது ரொம்ப விசேஷமாக இருக்கு. இதுல என்னன்னா திருப்பதிக்கு அடுத்தபடியாக
இந்த உற்சவம் வரக்கூடிய நிகழ்வு அப்படிங்கிறது இந்த ஆலயத்தில் உண்டு. அப்ப சுற்றி
வரக்கூடிய அமைப்பு  ரதசப்தமி  அப்படிங்கறது ரொம்ப விசேஷமாக கொண்டாடுறாங்க. 
வியாசர் உடைய பிரதான சீடராக
இருக்கக்கூடிய பைலர் அப்படிங்கிறவர் இந்த பெருமாளுக்கு ஆயிரம் மலர்களால அர்ச்சனை
செய்றார். அதனாலதான் அந்த ஸ்தலத்திற்கு வந்து நீல இரத்தின ஷேத்திரம் அப்படிங்கற
பெயர் உருவானது அப்படின்னு சொல்றாங்க. வியாசர் - மகாபாரதத்தை இயக்கியவர் நமக்கு
வியாசர் அப்படின்னு தெரியும். அந்த வியாசர் உடைய பிரதான சீடர் வழிபட்ட அவ்வளவு
பழமையான 2000 வருடங்களுக்கு முன்பு பழமையான ஒரு ஆலயம் அப்படிங்கறது இந்த ஆலயம். 
யாருக்கெல்லாம் சூரியனும் சனியன்
இருக்காங்களோ அவங்க அதோட இன்னொன்னு சூரியன் சனி மட்டும் கிடையாதுங்க புதனுடைய
தொடர்பும் இங்கே இருக்குன்னு வச்சுக்கங்களேன் ஏன்னா அங்க பெருமாள் இருக்கிறார்
பெருமாள்னாலே புதனுடைய அம்சம் அப்படின்னு சொல்லலாம். சூரியன் சனியோட அந்த வித்தைக்கு
கல்விக்கு அதிபதியான புதன் தொடர்பு பெறும் போது
அவங்களுக்கு படிக்கிறதுக்கு கண்
இருந்தா தானே படிக்க முடியும்.  அந்த
படிப்புங்கிற ஒரு நிகழ்வை தரக்கூடிய ஒரு பாக்கியத்தை இந்த கரியமாணிக்க பெருமாளை
வணங்குவதால் உங்களுக்கு ஏற்படும். 
புதனுடைய அருள்கடாட்சம்
கிடைக்கணும்  படிப்பு அவங்களுக்கு நல்லா
இருக்கணும். கண்ணு பிரச்சனையா இருக்கிறவங்க மட்டும் தான் இங்க போய் வழிபடனும்
என்கிறது இல்லை. படிப்பு உங்களுக்கு பிரச்சனையா இருக்கா நீங்க இந்த ஆலயத்துக்கு போய்
வழிபாடு செய்யலாம். 
அதுபோல இந்த புதன்கிழமை அன்று
பெருமாளை வழிபடுவதும் சனிக்கிழமை அன்று பெருமாளை வழிபடுவதும் ரொம்ப விசேஷமா
இருக்கும். வாய்ப்பு உள்ளவர்கள் இந்த கரியமாணிக்க பெருமாளை கண்டு பேரின்பம் பெற
வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறோம். 
இந்த பெருமாளை பிரச்சனை உள்ளவர்கள்
எப்படி வழிபட வேண்டும் அப்படின்னா விரதம் இருந்து முக்கியமா பெருமாளை தரிசனம்
பண்றதுக்கு ஏகாதசி நாளும் துவாதசி நாளும் ரொம்ப சிறப்பான நாட்கள். இந்த ஏகாதசி
துவாதசி நாட்களில் இந்த பெருமாளை போய் பிரச்சனைக்குரியவர்கள் புதன்கிழமை அல்லது
சனிக்கிழமை துளசி மாலை வாங்கிய சாற்றி, சுத்தமான நெய் தீபம் போட்டு, பொதுவா
பெருமாளுக்கு வந்து அலங்கார பிரியர் அப்படின்னு சொல்லுவாங்க. 
அபிஷேக பிரியர் சிவனாக இருந்தால் அலங்கார பிரியர் பெருமாளாக இருப்பார். எந்த அளவுக்கு உங்களால
அலங்காரம் பண்ண முடியுமோ இன்னும் சொல்லப்போனா இந்த பைலர் வந்து என்ன பண்றாரு 1000
தாமரை மலர்களால் அர்ச்சனை பண்ணி இருக்கார். அந்த அளவுக்கு  வாய்ப்புகள் நமக்கு கிடைக்குமா அப்படின்னு
தெரியல. வாய்ப்பு இருக்கிறவர்கள் அந்த ஆயிரம் எண்ணிக்கையில் உள்ள மலர்களை வாங்கி
நீங்க அர்ச்சித்து வழிபட்டாலே உங்களுக்கு வாழ்க்கையில நல்லா இருக்கும். 
எத்தனை சுற்று வணங்கி வர வேண்டும்   இந்த ஆலயத்துல கண் சம்பந்தப்பட்ட
பிரச்சனைகளுக்கு. அந்த இரண்டு அப்படிங்கிற எண் சம்பந்தப்படக்கூடிய இரண்டு முறை
வலம் வரலாம் 11 முறை வலம் வரலாம் 20 முறை கூட வலம்  வரலாம் ஆனா அந்த அளவுக்கு முடியாது. அதனால
இரண்டு முறை வலம் வந்தாலே போதுமானது அப்படின்னு சொல்லலாம். 
சனிக்கிழமை சனி ஓரை அல்லது  புதனுடைய ஓரையில் புதன்கிழமை புதன் ஓரை அல்லது
சனி ஓரைல போய் நீங்க பெருமாளை வழிபடுவது நல்லது. பச்சை நிறம் அப்படிங்கறது
பிடித்தமானது. அதனாலதான் துளசி மாலை அப்படிங்கறது சொல்லி இருக்கோம். 
துளசி மாலை மரிக்கொழுந்து வாசனை உள்ள
மரிக்கொழுந்துனாலே அலங்காரம் பண்ணி பாக்குறீங்கனாலும் அதிர்ஷ்டம். இந்த சூரியன்
சனி சேர்க்கை யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவங்களுக்கு பத்து வருட காலகட்டங்கள்
அவங்களுக்கு அந்த கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்னால அவஸ்தை படுவாங்களா? கண்டிப்பா
அவஸ்தை படுவாங்க. 
ஏன் இந்த பத்து வருடம்
அப்படின்னு சொல்றோம்னா யாருக்காக இருந்தாலும் இந்த சூரியன் சனி சேர்க்கையில்
இருந்தால் ஏதாவது ஒரு காலகட்டங்கள்ல அவங்களுக்கு அந்த லக்னம் போகும்போது அது
இரண்டாவது வீடாக வரும். அப்படி அந்த இரண்டாவது வீடு தொடர்பாக இருக்கக்கூடிய அந்த
பத்து வருட காலகட்டங்கள் கண்டிப்பா இந்த கண் நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
அவர்களுக்கு ஏற்படுமா?  கண்ணு மட்டும்
கிடையாது இரண்டாம் வீடு  தொடர்பான வருமானம்
அப்படிங்கறதையும்  அங்க பாதிக்கும். 
அடுத்த இரண்டாவது வீடு பேச்சு
நிறைய குழந்தைகளுக்கு நீங்க கேட்டு இருக்கீங்க இரண்டு வயதாகிறது அஞ்சு வயசு ஆகுது
ஏழு வயதாகிறது இன்னும் பேச்சு சரியா வரல அப்படின்னு அந்த பேச்சு சம்பந்தப்பட்ட
நிகழ்வுகளுக்கும் இந்த கிரக இணைவுகள் காரணமாக இருக்குமானால் நிச்சயமாக காரணமா
இருக்கும். 
அதனால படிப்பு சம்பந்தப்பட்ட பேச்சு
சம்பந்தப்பட்ட கண் சம்பந்தப்பட்ட முக்கியமா எல்லாத்துக்கும் தேவையான பொருளாதார
வருமானம் சம்பந்தப்பட்ட தன பிரார்த்தம் அப்படிங்கறது இந்த இரண்டாம் இடம் தான்
நமக்கு தரணும். அந்த தன பிராப்த்தத்தை தருவதற்கு இந்த காரியமாணிக்கம் பெருமாள்
உங்களுக்கு பாக்கியமாக ஏன்னா அவர்தானே மகாலட்சுமியையே வச்சிருக்காரு இல்லயா? ஏன்னா
அவர் மனசு வச்சா அவர் நமக்கு கொடுத்திடலாம். 
அதனால அந்த இரண்டாம் இடம் தொடர்பான
அத்தனை நிகழ்வுகளுக்கும் இந்த கரியமாணிக்க பெருமாளை பிடிச்சுக்கோங்க. மீண்டும்
இனியது ஒரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி.
ALP ASTROLOGY OFFICE: +91 9363035656 | +91 9786556156

Comments
Post a Comment