காலத்தை அறிந்து செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்! கர்மா ரகசியத்தை விளக்கும் ALP ஜோதிடம்
வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் ஏன் வருகிறது? அது நம்ம பாவமா அல்லது முன்னோர் கர்மாவா? ALP ஜோதிடர் ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார் அவர்கள் வாழ்க்கை வெற்றியின் உண்மையான ரகசியத்தை விளக்குகிறார். காலத்தை அறிந்து செயல்பட்டால் எப்படி வெற்றி பெறலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 🎥 வீடியோ: https://youtube.com/shorts/mkW7kkS2m9E?si=NbaKdXCC_FjBmIeA காலத்தை அறிந்து செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் ALP ஜோதிட முறையில் முக்கியமான ஒரு வாழ்க்கை உண்மையை சாந்திதேவி ராஜேஷ்குமார் அவர்கள் விளக்குகிறார். அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். பலர் “நூறு வருடம் சந்தோஷமாக வாழ்ந்தேன்” என்று சொல்ல முடியுமா? உண்மையில் வாழ்க்கை முழுவதும் பல சவால்களோடு தான் மனிதன் வாழ்கிறான். பணம் உள்ளவர்களுக்கு ஒரு பிரச்சனை பணம் இல்லாதவர்களுக்கு பல பிரச்சனை இதுவே வாழ்க்கையின் இயல்பு. மனித வாழ்க்கை ஏன் கஷ்டம் நிறைந்தது? நாம் இந்த பிறவி எடுப்பதற்கான முக்கிய காரணம் கர்மா . நாம் செய்த செயல்களின் பலனை அனுபவிப்பதற்காகவே இந்த வாழ்க்கை. ஆனால் பலர் இப்படிக் கேட்கிறார்கள்: “நான் என்ன பாவம் செய்தேன்?...