ஆட்டிஸம் (Autism), செரிப்ரல் பால்சி (Cerebral Palsy) பற்றிய, அட்சய லக்ன பத்ததி எனும் ALP ஜோதிடத்தில் மருத்துவ ஜோதிட ஆய்வு.
full video link: https://www.facebook.com/share/v/1Lmg9DVQMu/ பொள்ளாச்சியை சேர்ந்த திரு. நல்லதம்பி, முன்னர் IT துறையில் பணியாற்றி, தற்போது பெங்களூருவில் Autism, Cerebral Palsy போன்ற சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான (Children with special needs) அரசு சாரா நிறுவனத்தில் தலைமைச் செயல் அலுவலராக உள்ளார். அவர் ALP ஜோதிடம் கற்றதன் பலனாக சில அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துள்ளார். அவர் அக்குழந்தைகளின் தீர்வுகளுக்காக மூளை, மனம், உடல் ஆரோக்கியம், மருத்துவ முறைகள் என பல முறைகளைத் தேடி ஆய்ந்து ஆலோசனை வழங்கிய அனுபவத்தில் சிகிச்சைகள் முழுமையடையாததை உணர்ந்து அவற்றிற்கு கட்டுப்பாடு வேறு எங்கோ உள்ளது என்று தேடிய போது ஜோதிடத்தை அணுகியுள்ளார். மேலும், அறிவியல் ரீதியாக அணுத்துகள் முதல் மனித உடல் வரை அனைத்தும் சக்தி வடிவிலும் அதிர்வு அலைவரிசைகளிலும் இயங்குவதையும், மருத்துவ முறைகள் சில குழந்தைகளிடத்தில் உடனே வேலை செய்தாலும் சில காலம் மட்டுமே நல்ல நிலையில் இருந்து மீண்டும் சிகிச்சைக்கு ஆட்படுவதைக் கண்டு அதோடு, ஜோதிட ரீதியாக அம்மாதிரி ஜாதகத்தில் 8-ஆம் இடம் தொடர்ந்து வேலை செய்வத...