full video link:: https://youtu.be/Fly9g1PnTJE?si=sB7LFBiMlnkORkqi
வணக்கம்.
நான் சாந்தகுமார் ALP அஸ்ட்ராலஜர் சென்னையில் இருந்து. கோபம் பத்தி இன்னைக்கு
பேசலாமா கோபம் ரொம்ப அழகான ஒரு விஷயம். என்னங்க கோபத்தை பத்தி
எல்லாரும் தப்பா பேசுறாங்க. நீங்க என்ன அழகான விஷயம்னு சொல்றீங்க. கோவம்னா
என்னன்னு நம்ம தெரிஞ்சுக்கணும். கோபத்தை எப்படி
பயன்படுத்தனும்னு தெரியணும். கோபம் ரொம்ப நல்ல விஷயமும் கூட.  ஆனால்
எப்போ எப்படி எங்க வெளிப்படுத்தணும் ரௌத்திரம் பழகுனு சொல்றாரு யாரு? பாரதியார்.
சும்மா சொல்லுவாரா கோபம் தப்பான விஷயமா இருந்தா சொல்லுவாரா? அப்படி இல்ல.
அப்ப
இந்த கோபம்னா என்ன? 
 கோபம்
அப்படிங்கிறது என் பார்வையில் இருந்து ஒரு இயலாமையின் வேறுபாடே கோபம். நான்
ஒன்னு சொல்லணும்னு நினைக்கிறேன்  ஆனா
சொன்னத எதிரில் இருக்கிறவருக்கு புரிய வைக்க முடியலைங்கும் போது அதை அவரை உணர
வைக்க முடியலைங்கிறபோது நான் நினைச்ச மாதிரி நடக்கலங்கிற என்னுடைய எதிர்பார்ப்பு
நடக்கலைங்கும் போது எனக்கு கோவம் வருது. 
ஒரு
குழந்தை இருக்கு அதற்கான தகப்பன் இருக்காரு. இந்த மாதிரி ஒரு ஹெட்செட்
வாங்குகிறார். இந்த ஹெட்செட் ரொம்ப கஷ்டப்பட்டு அதை வாங்கிறதுக்கு ரொம்ப
சிரமப்பட்டு தான் காசு இல்லாத நிலையில வாங்கிட்டு வாராரு. அன்னைக்கே அந்த குழந்தை
அத பிச்சுருச்சு. 
இப்போ
அந்த குழந்தை மேல அந்த கோபத்தை காட்டுறாரு. என்ன கோபத்தை காட்டுறாரு? ஹெட் செட்ட
குழந்தை பிச்சுருச்சுங்கிறது கோவமா? குழந்தைன்னா பிக்க தானே செய்யும். அதுக்கு
என்ன தெரியும். 
ஒரு
பூனை பிச்சதுனா அத கோவிச்சுக்கிடுவாரா? அதுகிட்ட அந்த கோபத்தை காட்ட முடியுமா? ஒரு
குழந்தைங்கிறதுனால காட்டுகிறார். அப்ப கோபம் என்ன அப்படின்னா என்னால இந்த ஹெட்செட்
வாங்க முடியலங்கிற இயலாமைதான் அந்த கோவமா அந்த குழந்தை மேல அந்த வெளிப்பாடு. 
என்னுடைய
சூழ்நிலைகள் :
அப்போ
என்னுடைய சூழ்நிலைகள் என்ன இருக்குதோ அதை ஹேண்டில் பண்ண தெரியலங்கிற இயலாமை தான்
கோவமா வெளிப்படுது. அப்போ கோபம் அப்படிங்கிறது அது சரியா பயன்படுத்தவும்
செய்யனும். 
அப்போ
இயலாமைகிறது புரிஞ்சுக்கணும் . இயலாம்கிறது இருக்கு. இத நம்ம ஓவர் கம் பண்ணனும்.
சரியா. கோபம் என்பது கத்தி பேசுறது அப்படிங்கிற ஒரு  நிகழ்வா நிறைய நேரத்தில் வெளிப்படுது. கோபம்
வரும்போது மூளை வேலை செய்றதுல இல்லை. அதை இங்கிலீஷ்ல சொல்லும்போது Getting
mad அப்படின்னு
சொல்லுவாங்க. Getting mad அப்படி என்றால் பைத்தியம் ஆகுதல் அப்படின்ற அர்த்தம். 
இங்கிலீஷ்ல
வந்துட்டு ஒய் ஆர் யூ மேட் அட் மீ        (Why are
you mad at me? ) அப்படின்னு
கேப்பாங்க. மேட் அட் மீனா ஏன் பைத்தியம் மாதிரி நடந்துக்கிறேன்னு கேக்குறாங்க
கோவப்படுறத. 
அப்போ
ஒரு பைத்தியக்கார நிலை. ஒரு டெம்ப்ரவரி பைத்தியக்கார நிலைதான் கோபம்கிறது. உங்க மூளை
சரியா வேலை செய்யாது அப்படிங்கிற ஒரு நிலைதான். அதுதான் அந்த இயலாமையின்னுடைய
வெளிப்பாடுன்னு சொல்றோம். 
இப்ப
இந்த பைத்தியக்கார நிலையில நம்ம மூளை வேலை செய்யாத போது எதிரில்
இருக்கிறவங்களுக்கு சத்தமா பேசினா புரிஞ்சுரும் அப்படின்னு நம்புறோம். அதனால கத்தி
பேசுறோம். அதாவது அவர் காதுக்கு கேக்கல கம்யூனிகேட் ஆகல அப்படிங்கிறதுனால தான்
சத்தமா பேசினா அவருக்கு புரிஞ்சுரும் அப்படின்னு நம்புறோம். நம்ம ரொம்ப பக்கத்துல
இருந்தா கூட சத்தமா பேசுறதுக்கு கோபத்தை உரக்க குரலில் பேசுறத நம்ம காரணமா
வச்சிருக்கோம். 
நம்மள
அறியாம செய்வோம் அதை. காரணம் நம்மளுடைய இயலாமை. முதல்ல இத புரிஞ்சுக்கணும். சரி
கோபம் காட்டறதே தப்பா? அப்படி இல்லைங்க. தேவைப்பட்ட இடத்தில் கோபம் காட்டணும். 
கோவம்
எப்படி என்ன பாதிக்கும்? 
ஆனா
அந்த கோபம் உங்கள முதல பாதிக்காம வச்சுக்கணும். கோபம் உங்கள பாதிக்காம
வச்சுக்கணும். எப்படி அது? கோவம் எப்படி என்ன பாதிக்கும்? நான் கோபப்பட்ட உடனே
உடம்பெல்லாம் ஜில்லுனு ஆகுது. ஒரு சடனா பாடி டெம்பரேச்சர் மார்றத  நீங்க உணர முடியும். அந்த மாதிரி உடம்பு
நடுங்கிற அளவுக்கு கோபம் வாராத நான் நிறைய பேர்கிட்ட பாத்திருக்கேன். 
இந்த
கோபம் என்ன பண்ணனும்னா 70% என்னுடைய உடம்புல தண்ணீதான் இருக்கு.
இந்த தண்ணியதான் முதல்ல பாதிக்கும். இந்த பாதிப்பினுடைய உக்கிரம் இந்த உடம்புல
இருக்க எண்ணங்கள் மூலமா வெளிப்பட்டு யார் மேல கோபப்படுறனோ அவங்க உடம்புல இருக்குற
தண்ணியையும் பாதிச்சு அந்த வெளிப்பாடு அங்க வரும். 
இந்த
மாதிரி வெளிப்படுவது முதல்ல என்னுடைய உடம்ப டேமேஜ் பண்ண பிறகு தான் அடுத்த உடம்புல
செய்ய முடியும். அப்போ இந்த கோபம்றது கத்தி மாதிரி. இருமுனை கொண்ட கூர் கத்தி
மாதிரி. என்ன முதல்ல டேமேஜ் பண்ணாம அடுத்த முனையை நான் டேமேஜ் பண்ண முடியாது. 
அப்போ
என்ன பாதிச்ச பிறகுதான் அடுத்தவன பாதிக்கிறேங்கும் போது திரும்ப திரும்ப
கோவப்படுறது என் உடம்பைதான் முதல்ல பாதிக்கும். 
நான்
நிறைய பேசிட்டு கோபப்பட்டு இருப்பேன். அவங்கள பாதிப்பு உருவாக்கினதை விட என் மேல்
அதிக பாதிப்பை தான் நான் முதல்ல உருவாக்கிறேன் அப்படிங்கிறத முதலில்
புரிஞ்சுக்கணும்.  
கோபப்படுறது
முதல்ல என்ன டேமேஜ் பண்ணுது உணர்வு வந்துட்டா அது எப்படி கையாள்றது? கோபம்
வரும்போது எதுவும் எக்ஸ்பிரஸ் பண்ணாதீங்க. அது ஒரு எமோஷனல் டேம்ங்க. 
உணர்ச்சி
என்பது ஒரு மடை வெள்ளம் :
எமோஷன்
என்பது ஒரு டேம். உணர்ச்சி என்பது ஒரு மடை வெள்ளம் மாதிரி. அதை தடுப்பணை போட்டு
தடுத்து வச்சிருக்கணும். இதை ஒடச்சு விட்டீங்கன்னா அதுதான் கோபம். இந்த கோபம்
எப்பவுமே டேமேஜ் மட்டும்தான் கிரியேட் பண்ணும். 
எப்படி?
ஒரு
டேம் உடைஞ்சா ஒரு ஊர் முழுக்க வெள்ளம் ஆகி பயிர்கள் எல்லாம் நாசம் பண்ணிரும்.
வீடுகள் எல்லாம் நாசம் பண்ணிரும். நாசம் மட்டுமே கிரியேட் பண்ணும். அப்படி
இருக்கிற கோபத்தை கண்ட்ரோல் பண்ணி கொஞ்சமா தண்ணிய தொறந்து விட்டிங்கன்னா அது
பயிர் வைக்கிறதுக்கும் பயனாகும். கரண்ட் எடுக்கலாம் டிரான்ஸ்போர்ட் பண்ணலாம்
குடிக்க தண்ணியா உபயோகப்படுத்தலாம். பல நேரத்துல அதுக்கு பயன் இருக்கு. 
அந்த
மாதிரி இந்த உணர்வுகளை கட்டுப்படுத்த கத்துக்கணும். உணர்ச்சியற்ற ஜடமா இருக்க நான்
சொல்ல.  உணர்ச்சி உள்ள மனுஷனாதான்
இருக்கணும். அப்ப உணர்ச்சின்னா கோபமும் ஒரு உணர்ச்சிதான். அது இருக்கணும் ஆனா அது
வெளிப்படுத்த தெரியணும் அப்படிங்கிறதுதான் விஷயம். 
ரௌத்திரம்
பழகு :
அடக்கி
வைக்க அடக்கி வைக்க அது இன்னும் மோசமான டேமேஜ் ஆகும். அதனால வெளிப்படுத்தணும் ஆனா
வெளிப்படுத்துவது அந்த கோபம் உங்களோட வார்த்தைகள்ல அது சத்தமாகவோ மற்ற உடல்
மொழிகளாகவோ வெளிப்படுத்தாம அதை நிதானத்தின் மூலமா வெளிப்படுத்த தெரியணும்
அப்படிங்கிறது தான் இந்த ரௌத்திரம் பழகு வார்த்தைக்கான அழகான அர்த்தமா சொல்றோம். 
நிதானம் :
அந்த கோபம் இருக்கணும் கோபம் வெளிப்படுத்துறது
நிதானத்துல இருந்து வரணும். நிதானம் என்பது நல்ல கையாள கூடிய திறனாய் இருக்கும்பொழுது
அந்த கோபம் கூட காட்டுங்க. 
ஆனா
உங்களை முதல பாதிக்காது நீங்க சத்தமா பேச மாட்டீங்க. ஆனா வார்த்தைகள் மட்டும்
கரெக்டா பிரயோகம் பண்ணுறவீங்க. பக்கத்துல இருக்ககிறவங்களுக்கு கேட்கும். ஈசியா
புரியுங்க. கோவப்படுறீங்கன்னு கூட தெரியும். நீங்க பேசவே வேண்டாங்க. ஆனா உங்களுடைய
உடல் பாஷைகளை நிதானத்துல இருந்து வெளிப்படுத்தும் போது மத்தவங்களுக்கு புரிந்து
கொள்ளக்கூடிய தன்மையே வேற லெவல்ல இருக்கும். 
அப்போ
அந்த நிதானத்தை பழகுறது நான் பக்குவப்படணும்கிறது தான் விஷயமே தவிர கோவம் தப்பான
விஷயம் இல்லை. கோபத்தை எப்படி வெளிப்படுத்துறோங்கறதுல வித்தியாசம் இருக்கு. உங்கள
பக்குவப்படுத்திக்கோங்க. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். 
நன்றி.
ALP ASTROLOGY OFFICE: +91 9363035656 | +91 9786556156

Comments
Post a Comment