பெண்களால் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் ராசிகள். ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். ALP ஜோதிடர்
பெண்களால பிரச்சனைகளை சந்திக்கக்கூடிய
ராசிகள் என்ன அத பத்தி தான் பாக்க போறோம்.
ஏன்னா நிறைய பேருக்கு ஒரு கண்ணோட்டம் 
பெண்கள்னாலே பிரச்சனை தான் பா அப்படிங்கிற மாதிரி இருக்கு. 
இன்னைக்கு பெண்கள் வந்து தான் எங்களை
ரொம்ப டீஆக்டிவேட் பண்ணிட்டாங்க. அவங்க தான் எல்லா துறையிலும் இன்னைக்கு மேம்பட்டு
இருக்காங்க. எங்களுக்கு வேலை இல்லாம பண்ணதுக்கு காரணமே பெண்கள் தான் அப்படின்னு
சொல்லி பெண்கள் பார்க்கிறது எல்லாம் நாங்க பார்க்க வேண்டியதா இருக்கு. நாங்க
பார்க்கிறது எல்லாம் பெண்கள் பாக்குறாங்கிற மாதிரியான ஒரு மாயையான ஒரு
சூழலுக்குள்ள நம்ம இருக்கிறோம். சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். 
வாழ்க்கையில நம்ம பிறந்தது முதல்
நம்மளுடைய வாழ்நாள் வரையும் பெண்கள் அப்படிங்கறது சார்ந்து தான் ஆண்கள்
இயங்குறாங்க. அப்போ அந்த பெண்களால பாதிக்கப்படக்
கூடியவங்க யாரெல்லாம் பாதிக்கப்படுவாங்க. அப்ப என்ன மாதிரியான  நிகழ்வுகளாலெல்லாம் அவங்க பாதிக்கப்படுவாங்க
அப்படின்னா அது வயதுக்கு தகுந்த மாதிரி அந்த பலன் உண்டு. 
குழந்தை பருவம் :
இப்போ ஒரு குழந்தை பருவமா இருக்கு அந்த
குழந்தைக்கு பெண்களால் என்ன பிரச்சனை வரப்போகுது சித்தி கொடுமை அனுபவிக்கும். அது
பெண்ணால தானா தாத்தா,
பாட்டி கிட்ட கஷ்டத்தை அனுபவிக்கும்
பாட்டிகிட்ட கஷ்டத்த அனுபவிக்கும் அது பெண்ணால தானே. சரி இது வாலிப வயது
வந்துடுச்சு இப்போ யாரால அனுபவிக்கும் இந்த காதல் என்கிற பெயரில் பெண்ணாலே கஷ்டம்.
என்னை ஏமாத்திட்டா நான் உருகி உருகி
காதலிச்சேன். என்னோட வசதியானவன் கிடைச்சிட்டான்னு போயிட்டா. இந்த அப்பா,
அம்மா சொல்ற பேச்சு கேட்டுட்டா. அதனால என் வாழ்க்கையே வீணா போச்சு. எத்தனை பேரை
பார்க்கிறோம். 
சரி , இன்னொரு ரகம்
இருக்கு. ஒரு பொம்பளைகிட்ட போய் கடன் வாங்கிட்டீங்க என்ன வெச்சு செய்துங்க.
பார்த்திருக்கோமா ஆண்கள் கூட நீ ஏன் ஜாதிடா ஏன் இனம்டா அப்படின்னு சொல்லி
விட்டுட்டு போயிருவாங்க. ஆனா அந்த பொம்பளைங்க கிட்ட கடன் வாங்கிட்டு அவங்க
பேசப்பேச அப்பப்பா காதுல கேட்க முடியலன்றவங்க எல்லாம் நிறைய இருக்காங்க.  
இன்னைக்கு ஒரு டிவி சீரியல்ல கூட
பாருங்களேன். எவனாவது ஆண் வில்லன பார்க்க முடியுதா ரொம்ப கொடுமைங்க இது. பெண்களை
எந்த அளவுக்கு சித்தரிக்கிறாங்க. என்ன சொல்றது நடைமுறையில சமுதாயமும்
அப்படித்தான் இருக்கு. அப்படிங்கிற தான் நடந்த நிகழ்வுகளை தானே
பிரதிபலிக்கிறாங்க நடக்காத நிகழ்வுகளை பிரதிபலிக்கலையே. அதனால அந்தப் பெண்களால
பிரச்சனைகளை சந்திக்க கூடிய ராசிகள் என்னென்ன அப்படிங்கறத தான் நம்ம இன்னைக்கு
பாக்க போறோம்.
 பொதுவா நம்முடைய வாழ்க்கையில நமக்கு பெண்
அப்படின்னா கிரகங்கள் ரீதியாக நம்ம எடுத்துக்கிறோம் ஜோதிட ரீதியாக நம்ம யாருக்கு
அந்த பெண் அங்கீகாரத்தை கொடுக்கிறோம் அப்படின்னா அது சுக்கிரனுக்கு தான்
கொடுக்கிறோம். 
அந்த சுக்கிரன் தான் பல பரிமாணங்களை
எடுத்து வருது. அது எந்த நிலையிலேயும் பெண் அப்படின்னா சுக்கிரன். அது முதிர்ந்த
பெண் அப்படின்னா சந்திரனாகவும். அது ஒரு இளம் வயது பெண்  அப்படின்னா அது சுக்கிரனாக நாம
பாவிச்சிக்கிறோம். 
அப்ப இந்த சுக்கிரன் உடைய நிலை
யாருக்கு மைனஸ் ஆகுது. ரிஷபத்துக்கு சுக்கிரன் லக்னத்திற்கு அவர் தான் அதிபதி. அதே
சமயம் ஆறாம் வீட்டுக்கும் அவர்தான் அதிபதி. அப்ப ஆறு என்பது பிரச்சனையா அந்தப்
பிரச்சினைக்குரிய பாவம் சுக்கிரனா அப்ப பெண்ணால அங்க பிரச்சனை வருமா கண்டிப்பா
வரும். 
சரி, அடுத்து
மிதுனும் 12க்குரியவர் சுக்கிரனாக போயிடுறார். அப்ப என்ன பண்ணும் உங்களுக்கு
தூக்கம் கெட்றதே பொம்பள பிள்ளையால தான் அப்படின்னு நம்ம ஈஸியா சொல்லிட முடியும்.
ஏன் தூக்கம் கெடும் காதல் வரும் காதல்னால தூக்கம் கெடும். கனவு கற்பனையிலேயே
சஞ்சரிச்சுட்டு இருப்பார். அப்ப அது என்ன தூங்க முடியாது. 
ஏன்னா ஐந்தாம் பாவகத்துக்கும்
சுக்கிரன் தான் அதிபதி இருக்கிறார். அதனால அங்க சுக்கிரன் வந்து இயக்குவர். 
கன்னி :
 சரி அடுத்து கன்னி. இந்த கன்னிக்கு சுக்கிரன்
நல்லா இருக்குங்க. இது வந்து பிரச்சனைன்னு நம்ம சொல்லவே முடியாது.  கன்னிக்கு சுக்கிரன் ரொம்ப சூப்பரா இருக்கு.
நம்ம இன்னொரு பதிவு போடுறோம். பெண்களால் நன்மை அடையும் ராசி என்ன அடுத்து உங்க
சந்தோஷத்துக்காகவே  ஒரு பதிவு போட்டுறேன்.
துலாம் :
இப்ப துலாமுக்கு வந்துடுவோம்.
துலாமுக்கு எட்டாம்  அதிபதி சுக்கிரன்.
அங்க சுக்கிரனால தான் அவமானமே அந்த சுக்கிரன். சாரி. கிரகத்தை நம்ம பலிக்க கூடாது.
அந்த சுக்கிரன் காரகத்துவம் எங்க பெண்ணாக வேலை செய்யும். அந்தப் பெண்ணால தான்
அவமானமும் அசிங்கமும் அவபேரு எல்லாம் ஏற்படும். 
ரிஷபமும், துலாமும் :
இந்த ரிஷபமும் இந்த துலாமும் பெண்கள்
கிட்ட தயவு செய்து கடன் வாங்காதீங்க. கடன் வாங்கினீங்க அத்தோடு அவ்வளவுதான்
முடிஞ்சது. அந்த கடனால நீங்க கஷ்டப்படுவீங்க. அந்த கடனை கட்ட முடியாத ஒரு
சூழ்நிலைகள் ஏற்படும். இன்னும் சொல்லப்போனா 
ரிஷபம் கூட சமாளித்து விடும். ஆனா துலாம் மட்டும் சமாளிக்கவே முடியாமல்
லாக் ஆயிடும். அந்த அளவுக்கு அது சிக்கல்கள் தந்துவிடும். 
விருச்சிகம் :
இந்த விருச்சிகத்துடைய நிலை என்ன
பண்ணும் அந்த தூக்கம் அப்படிங்கறது அவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகும். அதுவும் பெண்ணால
தான் டிஸ்டர்ப் ஆகும். அது யாரால மனைவியால டிஸ்டர்ப் ஆகும். நான்  இவள் கிட்ட எப்படி சொல்லுவாங்க நான் இவர்கிட்ட
வாக்கப்பட்டேன் போனது இவகிட்ட நான் வாக்கப்பட்டு படுற பாடு இருக்கே அப்படிங்கற
மாதிரி  நொந்து நூடுல்ஸ் ஆகிடுவாங்க. அப்போ
இங்கே விருச்சிகம்  மனைவியால் தூக்கத்தை
தொலைக்கும் நிம்மதியை இழக்கும் அப்படிங்கற ஒரு நிலையை கொடுத்திடும். வெளிநாட்டில்
இருந்துகிட்டாங்கன்னா தப்பிச்சிடுவாங்க அப்பவும் 
போன் வழியா வரும் பிரச்சனை. உடனே ஆஹா நான் வெளிநாட்டில் இருக்கேன்
தப்பிச்சிட்டேன்லாம் நினைச்சுறாதீங்க போன் வழியா வரும் பிரச்சனை. என்ன பண்றீங்க
ஏன் பண்றீங்க உங்க அம்மா இதை  பேசுனாங்க
அப்பா இத பேசுனாங்க அண்ணா அத  பேசினாங்க
தம்பி இத பேசினாங்க எப்பப்பா போதும் போன வைன்னு கட் பண்ற மாதிரி ஆயிடும்.
தனுசு :
இது எந்த வழியில் பெண் ஆள பிரச்சனை
வருமா இன்னொரு பொண்ணு மேல மனைவி இருக்க இன்னொரு பெண் மேல ஆசை வச்சீங்கன்னா
அங்க  பிரச்சனை கட்டாயம் வரும். 
இங்க சுக்கிரன் என்னன்னா 11-ஆம்
பாவகத்துக்கு அதிபதியாக ஏன்னா என்னுடைய இன்பம் என்னுடைய லாபம் 11 ங்குறது
இரண்டாவது திருமணம். அப்ப அங்க ஆசை எப்படி தூண்டும் அப்படின்னா  ரெண்டாவது கல்யாணம் பண்ணனும்னு தூண்டும்
அதனாலேயே அங்கு பிரச்சனை. அதனாலேயே அவங்க வாழ்க்கையில சிக்கிக்குவாங்க.
மீனம்: 
பெண்ணால் அவமானம் அவப்பெயர்
கஷ்டம்  அப்படிங்கிறது எல்லாமே இந்த மீனம்
தான். மீனம் பெண்கள் விஷயத்துல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும். ஆண்கள் வந்து
மீனத்துல அட்சய லக்னமா போகுதா ராசி எல்லாம் கூட நீங்க பயப்பட வேண்டியதில்லை. இப்போ
ஏன்னா நீங்க மீன ராசியில் பிறந்திருந்தீங்கன்னா இப்போ மீன ராசியே உங்களுக்கு
கிடையாது. அதனால நீங்க பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. 
ALP லக்னம் :
இப்போ அட்சய லக்னம்  மீன லக்னமா போகுதா ரொம்ப உஷாரா இருங்க.
பெண்களால் உங்களுக்கு பிரச்சனை காத்துகிட்டு இருக்கு ஆபத்துகள்
காத்துக்கொண்டிருக்கு.அப்ப இந்த ஆறு ராசிகளும் பெண்களால் பிரச்சனைகளை சந்திக்க
கூடிய ராசிகளாக இருக்கு. 
இந்தப் பெண்களால பிரச்சனை எந்த
ரூபத்தினாலும் உங்களுக்கு வரும். அவமானங்களை தரக்கூடியதாக காதல் மூலமாக,
காமத்தின் மூலமாக ,இச்சை மூலமாக கடன் மூலமாக ஒரு நம்பிக்கையின் மூலமாக சரி இங்க நம்ம
மத்த உறவுகள் தான் பேசுறோம். 
ஏன் தங்கச்சியால பிரச்சனை வராதா
அக்காவால பிரச்சனை வராதா இந்தப் பெண்ணாலும் அங்க பிரச்சனைகள் வரும்.
வேலைக்காரியால  பிரச்சனை வராதா  வேலைக்காரியாலும் பிரச்சினைகள் வரும். 
பெண்களால இந்த ஆறு ராசிகளும்
பிரச்சினைகளை சந்திப்பீங்க. உங்கள் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்
கேட்டுக்குறேன். சரி இதுக்கு என்ன தீர்வு என்ன பரிகாரம்.
உங்க வீட்ல இருக்கிற உங்க கூட
இருக்கக்கூடிய பெண்களை நீங்க மதிச்சு பழகனுங்க. அவங்க சாபத்தை  வாங்னீங்கன்னா இவங்க கிட்ட எல்லாம் நீங்க
மாட்டிக்குவீங்க. அதனால உங்களுடைய பிள்ளைகள் பெண் பிள்ளைகள் உன்னுடைய உடன் பிறந்த
தங்கச்சி அக்கா உங்களுடைய மனைவி உங்களுடைய அத்தையாக இருக்கட்டும் பாட்டியாக
இருக்கட்டும் உங்க குடும்பத்துல உள்ள பெண்களை மதிங்க. 
உங்க வயசுக்கு கீழ இருக்குற பெண்களாக
இருந்தால் அவர்களுக்கு ஏதாவது ஒரு பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை சந்தோஷமாக
பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய பேர் வீட்ல தங்கச்சியா இருந்தா கில்லி அடிச்சு
அளவெச்சி வேடிக்கை பார்ப்பாங்க. இருடா நீ ஒரு நாளைக்கு மாட்டுவ பாரு அந்த குழந்தை
சொல்லும் போது அது இன்னொரு தங்கச்சி மாதிரி ஒரு உருவத்தின் மூலமாக  பிரச்சனைகள் ஸ்டார்ட் ஆயிடும். 
நான் தங்கச்சி மாதிரி தாங்க பழகினேன்
அப்போ தங்கச்சியோட அழுக எங்க வேலை செய்து பாத்தீங்களா. அக்கா சொல்லுவா ஏண்டா என்னை
இப்படி படுத்துற தம்பியா வந்துட்டு என் உசுர எடுக்குறியேடா அக்கா நொந்துக்கும்.
அப்போ அங்க அக்கா மாதிரி இருக்க ஒருத்தவங்க கிட்ட கடன் வாங்கி நம்ம
மாட்டிக்குவோம். பாட்டிய மதிக்கல அப்ப ஏதாவது ஒரு பாட்டி நமக்கு சாபம் விட்டுடும்.
அம்மாவ மதிக்கல  அம்மா மாதிரி ஒருத்தங்க
பிரச்சனை தரக்கூடியவர்களாக அமைஞ்சிடுவாங்க. இப்படி உறவுகளை மதிக்கிறோம் அப்படின்னா
பெண்கள் கிட்ட  நல்ல பேர்
எடுத்துட்டீங்கன்னா அந்த  ஆண்மகன்  வாழ்க்கையில் நிச்சயம்  ஜெயிச்சிடுவாங்க. 
யாருகிட்ட மத்த பெண்களிடம் நல்ல
பெயர் எடுக்க சொல்லல உங்க குடும்பத்துல பெண்கள் கிட்ட நல்ல பெயர் எடுங்க.
கண்டிப்பாக நான் என்ன பண்ணினாலும் என் மனைவி என்ன நல்லவன்னு சொல்ல மாட்டா. அது வேற
சங்கதிங்க. அதனுடைய கர்மா எல்லாம் வேற. நீங்க போன ஜென்மத்துல வச்சி செஞ்சி
இருப்பீங்க அதனால இப்போ அவங்க  மனைவியா
வந்து துன்பப்படுத்துவாங்க. ஆனா கூடுமானவரைக்கும் உங்களால் ஒரு பெண் அழுதாள்
அப்படிங்கிற ஒரு நிலை வர வேண்டாம். ஆனந்தக் கண்ணீரை மட்டுமே பார்க்க வேண்டும்
அப்படின்னு நீங்க இன்னைல இருந்து உறுதிமொழி எடுத்துக்கோங்க. 
கண்டிப்பா பெண்கள்  பிரச்சினையிலிருந்து விடுபடுவீங்க. பெண்
ஆலயங்களில் போய் வழிபாடு பண்ணுங்க. என்னைக்கு பண்ணனும் திங்கள் கிழமை,
வெள்ளிக்கிழமை இந்த இரண்டு நாட்களுக்கும் தவறாமல்
அருகில்  உள்ள பெண் ஆலயங்களுக்கு போய்
முத்து மாரியம்மன் இருக்கட்டும் கருமாரியம்மன் இருக்கட்டும் காமாட்சி அம்மனாக
இருக்கட்டும் இல்ல இந்த கோயிலுக்கு போனாலும் அங்க முதல்ல அம்பாளை தரிசனம்
பண்ணிட்டு ஐயனை தரிசனம் பண்ணுங்க. கண்டிப்பா உங்க வாழ்க்கையில  பெண்களால் பிரச்சனை குறையும் அப்படிங்கறது
சொல்லி மீண்டும் இனியதொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி. வணக்கம்.
ALP ASTROLOGY OFFICE: +91 9363035656 | +91 9786556156

Comments
Post a Comment