பிரச்சினை இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டும் பாவகம். - ALP ஜோதிட ஆய்வு.
அனைவருக்கும் வணக்கம். நான், ALP அஸ்ட்ராலஜர் சாந்திதேவி ராஜேஷ்குமார். இந்த நாள், இனிய நாளாக அமைய வாழ்த்துகள். எல்லோரும் கேட்கும் ஒரு கேள்வி. ஜோதிடத்தில், ஒருவரின் ஜாதகத்தில் 8 வது பாவகம் என்றாலே பிரச்சனை தானா? ஆமாம். ஆனால், பிரச்சனைகள் இருக்கும் இடத்தை, சுட்டிக் காட்டுவது 8 வது பாவகம். நம்மை இயக்கக் கூடியது, 12 கட்டங்கள் அப்படின்னு சொல்லுவோம். ஒவ்வொரு கட்டங்களுக்குமே பல பொறுப்புகள் இருக்கு. அந்த ஒவ்வொரு பொறுப்புகளுக்குமே அவர்கள் தான் காரண கர்த்தாவாக இருக்கணும். இப்போ, 8 அப்படின்னா அதனுடைய பொறுப்பு என்ன? நம்முடைய உடல் கூறுகளை நாம 12 பாவகமாக பிரிக்கிறோம். அந்த 12 பாவகத்திற்கும், 12 பலன்கள் அப்படிங்கிறது இருக்கு. அப்போ 8 ஆம் பாவகத்தோட பலன்கள் என்னவா இருக்கு, அப்படின்னா, நாம பிரதானமா எல்லாரும் கேட்கக் கூடிய என்னுடைய கர்மா எப்படிப்பட்டது? அப்படிங்கிற கேள்விக்குரிய பதிலும் 8 -ல் தான் இருக்கு. நான் எவ்வளவு வருஷம் வாழ்வேன், அப்படிங்கிற கேள்விக்குரிய பதிலும் 8 -ல் தான் இருக்கு. நம்முடைய, ஆயுள் பாவகம் அப்படிங்கிறது 8 ஆம் பாவகம். அப்போ அந்த 8 ஆம...