வீடியோ லிங்க் : https://youtu.be/JOzTfos5cFI?si=Mblca9EsAm0S-A1b
திரு.சி.பொதுவுடைமூர்த்தி ஐயா.
நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள். வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு ஜாதகத்தில் எந்த காலகட்டங்கள் யோகத்தை தரும் அப்படிங்கறது பாக்குறோம்.
பங்குச்சந்தையில் ஈடுபடலாமா?
இன்னைக்கு நண்பரோட கேள்வி என்னன்னா பங்குச்சந்தையில் ஈடுபடலாமா? அப்படிங்கற ஒரு கேள்வி கேட்டு இருக்கார்.
பங்குச்சந்தை என்பது என்ன அப்படின்னா ஒரு பலமான நிகழ்வு. ஏன் அப்படின்னா ஒவ்வொரு ஜாதகத்துலயும் ஆச்சரியமான அதாவது ஒரு கடல் அளவு இருக்கக்கூடிய நிகழ்வுகளை வந்து நாம கையாள்றது. கடல் தண்ணிய அள்ளளுவது மாதிரி தான் (ஷேர் மார்க்கெட்) பங்குச்சந்தை. அது எப்படி சார் அப்படின்னா மதி மயக்கக்கூடிய அமைப்பு. எப்படின்னா காசுல நாம பணத்தை போடுறோம். இன்வெஸ்ட் பண்றோம் ஒரு கம்பெனி பேர்ல. அந்த கம்பெனி வளர்ந்தால் நமக்கு பணம் உண்டு.
நம்ம என்ன பண்றோம் டெய்லி அன்று அன்றைக்கு, அதாவது இன்ட்ராடே நாம சொல்லுவோம். டெய்லி வளரக்கூடிய ஒரு நிகழ்வு. காலைல பணத்தை இன்வஸ் பண்ணனும். மாலை அதிலிருந்து ரிட்டர்ன்ஸ் பாப்போம்.
ஐந்தாம் வீடு
:
அப்படி நாம பார்க்கும்போது ஐந்தாம் வீடு என்பது மனம். மனம், புத்தி எப்படி இருக்கு?
ALP
லக்னத்திற்கு
ஐந்தில் இருக்கக் கூடிய கிரகம் யாரு அப்படின்னா சனி, ராகு
,
சந்திரன் தொடர்பு இருக்கக்கூடாது.
இருந்தால் என்ன பண்ணும் அப்படின்னா
கண்டிப்பாக அந்த ஜாதகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். இல்லை அதீத நம்பிக்கையை
ஏற்படுத்தும். என்ன பண்ணுவாங்கன்னா பதட்டத்தை ஏற்படுத்துங்க.
என் மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லை
அப்படிங்கிற மாதிரி ஏதோ ஒரு டூல்ஸ் நாம என்ன பயன்படுத்துவோம் நம்ம வந்து கேண்டில்
பாத்துட்டு வாங்குறதுக்கு நாம டெக்னிக்கல் சைட்ல நிறைய நிகழ்வு வச்சிருப்போம்.
அதுல ஏதோ ஒன்னு புடிச்சுகிட்டு நாம போவோம். அது எல்லாமே சரியா இருக்காதுல.
இப்போ உதாரணத்துக்கு வந்து இன்னைக்கு
சிம்பிளா அப்படிங்கற கம்பெனி உயருது அப்படின்னா இப்ப எல்லாருமே உயருதுன்னு
அப்படின்னு தெரிஞ்சிட்டா எல்லாருமே வாங்குவாங்க.
அதுலயும் ஒரு குறிப்பிட்ட நபர்கள்
என்ன பண்ணுவாங்க அப்படின்னா இன்னைக்கு ஒரு அறுபது ரூபாய் உயர்ந்து அப்படின்னா நான்
என்ன பண்றேன் கரெக்டா 45 ரூபாயில் நான் வெளியில் வந்துவிடுகிறேன்.
அப்போ அது என்ன அப்படின்னா அறுபது ரூபாய் வரும்னு நினைச்சு வெயிட் பண்ற எல்லாருமே
அது 50 ரூபா ல போய் என்ன செய்யும் ரிட்டன் ஆயிடும்.
அப்ப என்ன பண்ணுவாங்க சில பேரு இது ஏறுதுன்னு நினைச்சுகிட்டு 50 ரூபா ல தான் வாங்குவதற்கு உள்ளாரா போவாங்க. எல்லாருமே ஆகா நல்லா வளருதே அது ரெண்டு ரூபா இருக்கும்போதோ பத்து ரூபா இருக்கும் போதோ முப்பது ரூபா இருக்கும் போதோ வாங்க மாட்டாங்க.
மிக மிக கவனமா இருக்கணும்
:
ரூ.50 ல வாங்கும்போது விலை கொடுத்து
வாங்குவது அதிகமாக விற்பது குறைவாக. இதுதான் அந்தப் பங்குச்சந்தையில் நம்மளுடைய
புத்தியை மயக்குவது புத்தியை மாற்றுவது. மிக மிக கவனமா இருக்கணும்.
ஏன்னா அது சார்ந்த ஆய்வுகள் எனக்கு தெரிஞ்சு நீண்ட வருடங்கள். அது நான் சொல்லவே கூட முடியாது. ஏன்னா அவ்ளோ வருடங்கள் அது வந்து பாத்துக்கிட்டே இருக்கேன்.
கண்டிப்பா அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறைல வந்து ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாய்ப்பு கொடுக்குது. சில பேருக்கு பணத்தை அதுல ஜெயிக்கிறவங்களும் இருக்காங்க. சில பேர் அதுல பணத்தை விட்டுட்டு போறவங்களும் இருக்காங்க. மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
நம்ம அங்க இருக்கக்கூடியது வந்து,
“நம்பர் கிடையாது. நம்மளுடைய வாழ்க்கை“
வாங்குவதும் விற்பதும் வாழ்க்கை
என்று நினைத்து அதை இருந்து பார்த்தோம்னா கண்டிப்பா நம்ம வாழ்க்கை முன்னேறும்.
அது நம்பர்னு நெனச்சு ஏதோ ஒரு நம்பர் தான, 113 ரூபாய் அப்படின்னு நம்பர் தானனு நினைச்சுட்டு நம்ம வாங்கினோம்னா அது வந்து திட்டமிடாத பாதை பயணம் வாழ்க்கையில் வெற்றி பெறாது அப்படிங்கறது உண்மை.
50 ரூபாய் போகும்போது ஒரு விஷயத்தை வாங்கணும்னா அவர் என்ன பண்ணுவாரு கரெக்ட்டா அப்பதான் விலை கொடுத்து வாங்குவது அதிகம் விற்பது குறைவு. அப்ப என்ன பண்ணுவாங்க 30 ரூபாய்க்கு வந்து நிப்பாங்க அடுத்த நிமிஷத்துல.
சந்திரன் என்ன பண்ணும்
:
ஒரு கேண்டில என்ன பண்ணுவாங்க நேரா ஒரே கோட்ல வந்து அங்கே
வந்து 20 பாயிண்ட் இறக்கி விடுவாங்க. அப்போ ஆகா இவ்வளவு இறங்கி போச்சேன்னு
வித்தீங்கன்னா மறுபடியும் என்ன பண்ணுவாங்க 20 30 ரூபாயிலிருந்து பத்து மறுபடியும்
ஒரு பத்து ரூபா வித்துருவாங்க. ஆகா பத்து ரூபா ஏறிட்டேன் நினைச்சீங்கன்னா மறுபடி
ஒரு பத்து ரூபாய் இறங்கி மறுபடி 20 ரூபாய்ல கொண்டு வந்து நிப்பாட்டி வைத்து
விடுவார்கள்.
என்ன ஒன்னு பொறுமை இருக்கணும். இல்ல பதட்டம் இருக்க கூடாது ரெண்டு விஷயம் நமக்கு இருக்கணும். இதுல சந்திரன் என்ன பண்ணும் அப்படின்னா, நம்மள யோசிக்க விடாது.
ஏன்னா நம்ம அதிபுத்திசாலி. நம்ம எப்பவுமே நம்மளுடைய மூளை என்ன சொல்லும் நான்தான் புத்திசாலின்னு சொல்லிட்டே இருக்கும். அங்கேயே நமக்கு நிறைய கணக்குகளை கொடுத்து இது சரியா இருக்கா அப்படிங்கறத செய் செக் பண்ணும் சில நேரத்துல.
அதிலேயே பாதி பேர் வந்து பாபா முத்திரை மாதிரிதான் இந்த விஷயம். இவன் பண்ணக்கூடிய கணக்கு கரெக்டா இருக்கும். அது பயன்படுத்த மாட்டோம். சில கணக்குகள் நம்பி போவோம். அந்த கணக்குகள் வந்திருக்காது. சில கணக்குகள் பயன்படுத்தி அந்த கணக்குகள் எல்லாமே நம்மள விட்டுட்டு வெளியே போயிடும்.
ஐந்தில் :
ஐந்தில், சனி இருந்தாலும் அது மாதிரி குழப்பத்தை
ஏற்படுத்தும்.
ராகு இருந்தாலும் அதீத மாயை
கொடுக்கும்.
சந்திரன் இருந்தாலும் புத்திசாலித்தனத்தை
கொடுக்கும்.
இதெல்லாம் நாம எதிர்பார்த்த யோகத்தை
கொடுக்குமா? அப்படின்னா ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.
அதுட்டு பங்குச்சந்தை பொறுத்த அளவுக்கு நீண்ட காலமான ஆய்வு ஆய்வை என்கிட்ட பதிவு பண்ணி வச்சிருக்கோம்.
கண்டிப்பா மிக மிக கவனமா இருக்கணும்.
அது வந்து அங்கு இருக்கிறது வந்து ரொம்ப கவனமா நல்ல கம்பெனில நல்ல நிறுவனங்களில்
உங்களுடைய முதலீடுகளை பதிவு பண்ணீங்கன்னா கண்டிப்பா இதுல ரிட்டர்ன் என்பது உண்மை
100% அதுல எடுக்கலாம்.
ஆனால் நான் சும்மாவே இருக்க
முடியாது. நான் என்னமோ பண்ணனும்னு வாங்கி வைக்கணும்னு நினைச்சுட்டு உள்ள போனோம்னா,
கண்டிப்பாக அதில் கடைசியா மிஞ்சுவது வழுக்கை தலைக்கு எதுக்கு சீப்பு அப்படிங்கற
மாதிரி தான் வாழ்க்கை.
அது சீப்பு கிடைச்சா என்ன
கிடைக்கலைன்னா என்ன வழுக்கை தலைக்கு. அனுபவம் என்பது எல்லாம் முடிஞ்சதுக்கு
அப்புறம் எதுக்கு அனுபவம். அதுட்டு கண்டிப்பாக மிக மிக கவனமாக இருக்க வேண்டியது
விஷயம்.
விருச்சிக லக்னம்
:
இன்னைக்கு ஏன் இத பத்தி பேசுறேன்
அப்படின்னா செல்வம் திருப்பூர்ல இருந்து கேள்வி கேட்டு இருக்காரு.
பங்குச்சந்தையில் ஈடுபடலாமான்னு கேட்டு இருக்காரு. அவருக்காக தான் இந்த பதிவு.
அவருடைய லக்னம் பாத்தீங்க அப்படின்னா இப்ப போற லக்னம் விருச்சிக லக்னம் போகுது. விருச்சிக லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய், லக்னத்தில் இருக்காரு. அதே மாதிரி வருமானத்திற்கு அதிபதி குரு பலமா ரெண்டுலயே இருக்காரு. ஆனால் 5 ல் சந்திரன் இருக்கும் போது, 12 ல் சனி 7 ல் ராகு. மிகமக கவனமா இருக்க வேண்டும்.
கண்டிப்பாக ஐந்தாம் வீடு என்பது மிக மிக கவனமாக இருக்க வேண்டிய ஒரு பாவங்கள். ஏன்னா ஐந்தில் சந்திரன் இருந்துச்சுன்னா அதி புத்திசாலி.
மிகப்பெரிய நான்தான் எல்லாத்துலயும். அதாவது புதன் வந்து பாத்தீங்கன்னா கேட்டை நட்சத்திரத்தில் லக்ன புள்ளி செல்லுது. அவர் எங்க இருக்காரு 6 ல இருக்காரு. 6 ல இருந்தா ஒரு விதமான பதட்டத்தையும் பயத்தையும் நோயும் கொடுக்கும்.
என்ன பண்ணும்?
அடுத்தடுத்த நிகழ்வு என்ன பதட்டப்பட்டாலோ பயப்பட்டாலோ என்ன பண்ணும் அது நோயா தான் மாறும்.
கேட்டை நட்சத்திரத்தோடு அதிபதி புதன்
விருச்சிக லக்னத்திற்கு 6 மேஷத்தில் புதன் இருப்பது நோயைக் கொடுக்குமா? நோயை
கொடுக்கும். ஜாதகருக்கு நோயை கொடுத்தே தீரும். அதுட்டு தேவையில்லாத நிகழ்வுகள்.
அப்போ நீங்க இன்ட்ரா டே பண்ணவே கூடாது. லாங் டைம் ல ஆறு மாசத்துல இல்ல ஒரு வருஷத்துல ஒரு கம்பெனி வளரும். ஒரு நிறுவனத்தில் வந்து பெரிய அளவுல வளரும் அப்படின்னா அந்த மாதிரி ஒரு விஷயத்துல நீங்க பதிவு பண்ணிங்க அப்படின்னா கண்டிப்பா உங்க வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றம் வரும்.
தயவுசெய்து அன்றைக்கு வாங்கி அன்றைக்கு விற்கக்கூடிய இன்ட்ராடேன்னு நாம சொல்லுவோம். அந்த நிகழ்வுகளில் தயவுசெய்து ஈடுபட வேண்டாம். நீங்க வாங்கும்போது எப்படி வாங்குவீங்க அதிகமான பணம் கொடுத்து வாங்குவீங்க. போது குறைவா வைப்பீங்க அப்ப அதுல என்ன சார் லாபம் இருக்கு.
தசா புத்தி :
அவருடைய தசா புத்தி சூரிய தசையில்
சனி புத்தி கண்டிப்பா ஈடுபடக்கூடாது. அடுத்தது புதன் புத்தி அதுவும் ஈடுபட
முடியாது. அடுத்து வருவது கேது கேதுவுமே
இந்த ஜாதகத்துக்கு யோகத்தை கொடுக்குமானா? கொடுக்காது.
அதுட்டு மிக மிக கவனமா இருக்கணும். ஏன்னா சூரியன் எங்க இருக்குன்னா, ALP லக்னத்திற்கு ஆறில் சூரிய திசை. சூரியன் என்ன பண்ணும் கண்டிப்பாக கடன் நோயை வழக்குகளை தேவையில்லாத எண்ணங்களை பிரச்சனைகளை கொடுக்கக்கூடிய அமைப்பு உண்டு. மௌனமா இருக்க வேண்டும்.
கேட்டை நட்சத்திரம்
:
கண்டிப்பாக இவருக்கு கேட்டை
நட்சத்திரம் மூன்று பாதங்கள் முடிய வேண்டும். அதுக்கப்புறம் வரக்கூடிய லக்னம்
தனுசு லக்னத்திற்கு பிறகு இவருக்கு யோகமான காலம் உண்டு. கண்டிப்பா இவருக்கு
மிகப்பெரிய மாற்றம் உண்டு அதுல மாற்று கருத்து கிடையாது.
கண்டிப்பா இப்பவே சொல்றேன். 2024 முடிந்து 25ல தனுசு லக்னம் மூல நட்சத்திரம் 1ம் பாதம் போகும் போது ஒரு மாற்றத்தை கொடுக்க கூடிய அமைப்பு உண்டு. கண்டிப்பாக ஒரு யோகத்தை கொடுக்கும் அப்படின்னு இந்த நேரத்துல பதிவு செய்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் முருகன் அருளால் இவர் முருகனுடைய அப்படியே பற்றுங்க. முருகனைத் தவிர முருகனை எப்படின்னா சரணாகதி அடைங்க. உங்க வாழ்க்கையில அவ்ளோ பெரிய மாற்றம் உண்டாகும்.
ஏன்னா எல்லாமே நான் செய்யுறேன். ஆனா எல்லா கணக்குகளும் சரி. எல்லா கணக்குகளும் சரியா இருந்தும் வாங்கி ஒரு பொருளை விட்டோம்னா கூட லாபம் வராது சில நேரங்கள்ல. அது எல்லாமே நமக்கு மேல இருக்கக் கூடிய எண்ணம் அலைகள் தான் நம்மள இயக்குது அப்படின்னு நமக்கு தெரியும்.
அதுட்டு முருகனை பற்றுங்க உங்க வாழ்க்கை மாறும் மீண்டும் இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி.
வணக்கம்.
ALP ASTROLOGY OFFICE: 9363035656 / 9786556156
Comments
Post a Comment