வீடியோ லிங்க்: https://youtu.be/UsJqV6OFUsE?si=jcpwqMc9A_eSlkVP
இன்னைக்கு நம்ம கூட ALP ஜோதிட
முறையை கண்டுபிடித்த திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா இருக்காரு.
அவர்கிட்ட பேசிரலாம். வணக்கம் சார்.
ஐயா:
வணக்கம்.
கருங்காலி மாலை :
தொகுப்பாளர்:
இப்ப டிரெண்ட் ஆயிட்டு இருக்க கூடிய ஒரு விஷயம் அப்படின்னா கருங்காலி மாலை அப்படிங்கறது. இன்னொரு பக்கம் செங்காலி மாலை இதை பத்தின விஷயங்கள் சொல்லுங்க.
ஐயா:
யாரோ ஒரு நடிகரோ, இது வந்து பிராண்டிங் மாதிரி இன்னைக்கு ஆயிப்போச்சு. இன்னைக்கு ஏன் அப்படின்னா இது உடனே செஞ்சா இது நடந்திரும். உடனே இது இந்த கோவில் போனா உடனே இது நடந்துரும். அது உங்களுக்கு மட்டும் தாங்க அந்த கோயிலுக்கு போனா நடக்கும். அவர் கருங்காலி மாலை போட்டா அவருக்கு மட்டும் தான் நடக்கும்.
எல்லாரும் கருங்காலி மாலை போட்டா
நடக்குமா. கருங்காலி மாலை யாருங்க போடணும்? இதுல பாத்தீங்கன்னா சூரியனுடைய
நட்சத்திரம் கார்த்திகை, உத்திரம்,
உத்திராடம் நட்சத்திரம் போடவே கூடாது. ரோகிணி , ஹஸ்தம் , திருவோணம் நட்சத்திரம் போடவே
கூடாது.
இந்த ஆறு நட்சத்திரத்துக்காரங்க
கருங்காலி மாலை போடவே கூடாது.
உதாரணமா உங்களுக்கு ஒரு கேது திசை நடக்குது. இல்ல உங்களுக்கு சனி திசை நடக்குது. சப்போஸ் இந்த கருங்காலி மாலை உங்களுக்கு வேலை செய்யும்.
தொகுப்பாளர்:
அப்படியா அது வேலை செய்யுதுன்னா ஒரு பாசிட்டிவிட்டி கொடுக்குது அப்படிங்கிறாங்களே என்னலாம் நடக்கும்?
ஐயா:
அப்படி எல்லாம் கிடையாதுங்க. அதெல்லாம் கிடையாதுங்க. இது என்னன்னா, இப்போ தோள்ல ஒரு துண்டு போட்டு இருக்கேன். பார்க்க எப்படி இருக்கு? அழகா இருக்கு. இன்னொரு தலையில ஒரு குல்லா மாதிரி வச்சிருக்கேன். அது இன்னும் கொஞ்சம் அழகா இருக்கு. இப்படி ஒரு அழகு சம்பந்தப்பட்டது. இது என்ன அப்படின்னா அந்த காலத்துல நிறைய நிகழ்வுகள் இருந்துச்சு. இது ஒரு சக்தி வந்து ஒரு ஆத்மார்த்தமா இப்ப என்ன பண்ணுவாங்க அந்த காலகட்டத்துல சில மரங்களுடைய குச்சியை வந்து நம்ம பயன்படுத்தக்கூடிய நிகழ்வு இருந்துச்சு. அது வந்து என்ன அப்படின்னா பொதுவாகவே வந்து குச்சி வந்து நம்ம பயன்படுத்தணும். அது பின்னாடி நாம சொல்லுவோம். அப்ப என்ன நடந்துச்சு அப்படின்னா இது ஒரு விதமான நம்பிக்கை தான். நம்பிக்கையில நடந்த, இப்ப எப்படின்னா இரும்பு போட்டா எப்படி இருக்கு, வைரம் போட்டா எப்படி இருக்கு, தங்கம் போட்டா எப்படி இருக்கு, ஒரு அழகு சம்பந்தப்பட்டது அது என்ன அப்படின்னா இருக்க கூடிய இடத்துக்கு தகுந்த மாதிரி.
கழுத்துல ஒரு விஷயம் போடும்போது அது ஒரு அழகு சம்பந்தப்பட்டதாக மாறும். அடர்த்தி மிகுந்தது. இந்த கருங்காலி பொறுத்தது அளவுக்கு அடர்த்தி மிகுந்தது அப்படிங்கும் போது, அது ஒரு சின்னதா ஒரு சந்தோசத்தை கொடுக்குது அவ்வளவுதான். பணமோ , காசோ , பொருளோ , பொன்னோ இது வந்து இன்னைக்கு என்னன்னா யாரோ ஒருத்தர் போட்டுட்டாரு நானும் போட்ருவேன். யாரோ ஒருத்தர் போட்டா நானும் போட்ருவேன். அதுல என்ன இருக்கு.
தொகுப்பாளர்:
ஆனா அந்த சந்தோஷமும்மே கூட அந்த திசைகள்
யார் யாருக்கு போகுதோ அவங்க தான் போடணுமா
ஐயா:
ஆமா எல்லாரும் போட்டா எல்லாரும் ஜெயிச்சிருவாங்களே. ஏங்க நான் தான் போட்டா நான் தான் ஜெயிச்சிருவேனே. இது எப்படி இருக்கு. இந்த ஜாதகர் போட்டா ஜெயிப்பர் இந்த ஜாதகர் போட்டா தோப்பார். அது தான் விஷயம்.
தொகுப்பாளர்:
அப்படி யார் யாரெல்லாம் போடலாம் ?
ஐயா:
இப்ப அதான் சொல்றேன்ல, இப்ப உதாரணமா உங்களுக்கு சூரிய திசை நடக்குது. அடுத்து சந்திர திசை நடக்குது. இவங்க ரெண்டு பேரும் போடக்கூடாது.
அதே மாதிரி சனி திசை நடக்குது கேது திசை நடக்குது இவங்க போடலாம் இந்த கருங்காலிய.
தசாவோட சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு. இல்லங்க இப்போ ஒரு புத்தி ஒருத்தவங்களுக்கு நடக்குது. தசாபுத்தி அந்தரம் அப்படிலாம் பழக்கம் இருக்கு இன்னைக்கு. நாங்க அட்சய லக்னத்தில கார்த்திகை உத்திரம், உத்திராட நட்சத்திரத்தில் போறவங்களுக்கு ரோகிணி ஹஸ்தம் திருவோணம் நட்சத்திரத்தில் போறவங்களுக்கும் போடக்கூடாது. இது நாங்க சொல்ற விஷயம்.
இந்த ஜாதகர் இந்த மாதிரி போடக்கூடாதுங்க. போட்டோ பணம் ஒரு 4,000 3,000 வந்துட்டு இருக்கும். அந்த பணம் நின்னு போயிடும்.
எனக்கு எட்டாம் நம்பர் செப்பல்
என்றால் எல்லாருக்கும் எட்டாம் நம்பர் செப்பல் ஓகேவா? எனக்கு எட்டு இருக்கும்
அவருக்கு ஒன்பது இருக்கும் இன்னொருத்தருக்கு ஆறு இருக்கும். ஒருத்தருக்கு அஞ்சு
இருக்கும் இதுதானே. ஒரு சட்டையோட அளவு அப்படித்தான் வரும்.
எண்ணங்கள் மாறுது :
எல்லாமே மாறுதுல இங்க. எண்ணங்கள் மாறுது உடம்பு மாறுது புத்திகள் மாறுது நிகழ்வுகள் மாறுது எல்லாமே மாறும். அதனால ஒருத்தருக்கு பயன்பட்டது யாரோ ஒருத்தர் நடிகர் போட்டாரு இன்னைக்கு எந்த நடிகர் போட்டு என்னங்க நடந்துச்சு. ஒன்னும் நடக்கல. சும்மா விளம்பரத்துக்கு அப்படி ஒரு நிகழ்வு நடந்தது. அதை தூக்கி எல்லாம் போட்டுக்கிட்டு இனி கருங்கால மாலை எல்லாம்.
ஒரு நம்பிக்கை:
கருங்காலி மாலைங்கிறது ஒரு அம்சம் இருக்குது. அந்த அம்சம் பயன்படும். அவ்வளவுதான். அது ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயம். அவ்வளவு தான்.அதுல மருத்துவ குணங்கள் இருக்கு. மருத்துவ குணங்கள் இருக்கிறதுட்டு பண்ணலாம்.
தொகுப்பாளர்:
அந்தக் கருங்காலியுமே வந்து ஒரிஜினல்
கருங்காலி அப்படிங்கற விஷயம் எல்லாம் சொல்லப்படுது. எதுதான் அப்படி ஒரிஜினல்
கருங்காலி?
ஐயா:
அதெல்லாம் பார்க்க முடியாதுமா இந்த
காலத்துல. எங்க இருக்கு? என்ன ஜீபூம்பாவா? அதெல்லாம் கிடையாதுங்க. எனக்கு தெரிஞ்சு
அப்படி எல்லாம் எங்க இருக்கு. ஏதோ ஒரு சில இடத்துல இருக்கலாம். அது எனக்கு தெரியல.
ஆனா வந்து அப்படி எல்லாம் ஏன்னா இருக்கக் கூடிய கருங்காலிகள் ரொம்ப கம்மிதான். கருங்காலி மரமே நம்ம பக்கத்துல பாத்தீங்கன்னா மேற்கு தொடர்ச்சி மலையில கொஞ்சம் இருந்துச்சு. அடுத்து பாத்தீங்கன்னா இலங்கை சம்பந்தப்பட்ட இடத்துல இருந்துச்சு. சுத்தி கொஞ்சம் கொஞ்சம் இருக்கு அவ்வளவுதான்.
ஆனா இந்த மரங்களோட தன்மைகள் பழசு இருந்தது வச்சு பண்ணிட்டு இருக்காங்க. இன்னைக்கு இது ஒரு கொஞ்ச நாள் போகும் அடுத்தது இன்னொன்னு வந்துட்டே இப்பதான்.
தொகுப்பாளர்:
செங்காலி ஒரு விஷயம்.
ஐயா:
அதான் பாருங்க கருங்காலி முடிஞ்சு
போச்சு. செங்காலி வந்துருச்சு. செங்காலியுமே கொஞ்ச நாள் என்ன பண்ணுவாங்க வாங்கின
நாலு பேர் ஏங்க வாங்கி போடுறாங்கல யாருக்கு நல்லது நடந்துச்சு. நாலு பேருக்கு
நல்லது நடக்கும். நாலு பேருக்கு கெட்டது நடக்கும்.
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னு வாங்கி போடுவாங்க. கெட்ட நடக்கப் போறவனும் வாங்கி போட்டுட்டு. எனக்கு மட்டும் நடக்கல எனக்கு மட்டும் நடக்கல எனக்கு ஐநூறு நட்டம் ஆயிரம் நட்டம் இப்படி சொல்லிட்டு உட்கார்ந்திருப்பாங்க.
அது பார்த்து பண்ணா பரவால்ல. இப்ப கருங்காலி சொன்ன மாதிரி இப்ப செங்காலி பாத்தீங்கன்னா இவங்களுமே இந்த ஜாதகருமே பாத்தீங்கன்னா சூரிய திசையில் சந்திர திசை நடந்துச்சுன்னா இந்த செங்காலியுமே போடக்கூடாது. போட்டா பிரச்சனை அதிகமா ஆயிடும். கோர்ட்டு கேஸ் வம்பு வழக்குன்னு தேவையில்லாத கடன் பிரச்சனை. சம்பந்தமே இல்ல அதான் சொல்றேன்ல 10,000 வந்துட்டு இருக்கும் மாதம். அந்த பத்தாயிரமும் நின்னு போகும்.
அதுவே பாத்தீங்கன்னா இந்த ராகுவோட சம்பந்தப்பட்டது கேதுவோடு சம்பந்தப்பட்டது தசாபுத்தி போகும்போது கொஞ்சம் சப்போட்டா இருக்கும் அவ்வளவுதான். தசாபுத்தி போகும்போது கொஞ்சம் நல்லா இருக்கும். நாங்க அதெல்லாம் போடவே போடாதீங்க ஒரு தெரிஞ்சு போடுங்க தெரிஞ்சு பார்த்து நல்லபடியா போடுங்க.
இது ரெண்டுமே இல்லைங்க கருங்காலி செங்காலி விடுங்க. நான் வந்து இந்த அழிஞ்சில் ன்னு சொல்லி பார்த்திருப்பீங்க பண்டைய காலத்துல உங்களுக்கெல்லாம் தெரிஞ்சுருக்கும். அழிஞ்சில் அப்படின்னா நம்ம ஊர்ல காட்டு மரம் ஒன்னு இருக்கும். சின்ன குழந்தையா பிறந்த குழந்தைக்கு பார்த்தீங்கன்னா கையில வந்து கட்டைய கட்டி விடுவாங்க. சின்ன குச்சியை கட்டி விடுவாங்க. அதே மாதிரி கொஞ்சம் வளர வளர பசங்க வளர வளர இடுப்புல அருணா கொடில அந்த குச்சியை கட்டி வைப்பாங்க.
அது வந்து பண்டைய காலத்துல நிறைய இருந்துச்சு. இந்த அழிஞ்சில் குச்சி இருக்குல அந்த அழிஞ்சில் குச்சி சும்மா மிஞ்சி மிஞ்சி போனா ரோட்டுல கிடக்கும் அந்த குச்சி.
மிஞ்சி மிஞ்சி ஒரு ரெண்டு இன்ச் வெச்சு அது எங்கேயோ ஒரு டாலரா செஞ்சு அது வெள்ளில காப்பு கட்டி அழகா போட்டால் அதைவிட பெரிய சந்தோசமே இல்லை. அவ்வளவு சந்தோஷம் இருக்குங்க அதுல.
அழிஞ்சலுக்கு எதுக்கு காசு?
தொகுப்பாளர்:
அழிஞ்சில் அப்படி என்ன எல்லாம் இருக்கு.
ஐயா:
அதுல என்ன இல்ல அதுல. இப்ப நம்ம வந்து குச்சி தான் இருக்கு அப்படின்னா அந்த மரம் இருக்கு பாருங்க. அந்த மரத்தோட பட்டை என்ன பண்ணுவாங்கன்னா அந்த காலத்துல கேன்சருக்கு ஒரு மருந்தே அதுல இருந்து எடுப்பாங்க. அந்த பட்டையை எடுத்து அந்த பட்டையை தண்ணீரில் கொதிக்க வச்சு அதை வடிகட்டி அதுக்கு ஒரு இது பண்ணுவாங்க. அதை பண்ணி சாப்பிடுவாங்க. அதுல ஒரு பழம் இருக்கு அந்த பழத்தை சாப்பிடுவாங்க. அதுல இருக்கக்கூடிய இலை மரம் மரத்துல இருக்கக்கூடிய முள்ளு அப்படியே எல்லாமே அதுல பயன்படும். எல்லாமே அந்த காலத்துல மருத்துவ குணம் உள்ளது.
இந்த கருங்காலி செங்காலிய விட இதுக்கு காசு கொடுத்து வாங்க வேண்டாம். அழிஞ்சலுக்கு எதுக்கு காசு? நம்ம ஊர்ல பார்த்தீங்கன்னா, நிறைய இடத்துல இருக்கும். நிறைய இடத்துல நீங்க போனீங்கன்னா அழிஞ்சில் குச்சி எங்க இருக்குன்னு கேட்டீங்கன்னா சும்மா வெட்டிட்டு போக சொல்லுவாங்க.
இத்துனூண்டு வச்சு அதை வெள்ளில தாயத்துன்னு சொல்லுவாங்க. தாயத்து பண்ணி சப்போஸ் போட்டா சந்தோஷம். அது காசு எல்லாம் வேண்டியதில்லை. அதுக்கு எதுக்கு காசு.
தொகுப்பாளர்:
இப்போ இந்த அழிஞ்சில் மருத்துவ குணம் இருக்கு அதனால வச்சுக்கலாம்னு சொன்னீங்க. அழிஞ்சில் க்குமே கூட ஏதாவது பணம் தரக்கூடிய குணம் அந்த மாதிரி எல்லாம் இருக்குதா?
ஐயா:
நீங்க வச்சு பாருங்க. இந்த கருங்காலி செங்காலியை விட ஆயிரம் மடங்கு இந்த அழிஞ்சிட்ட இருக்கு. ராகுவோட பெரிய அம்சமாவும் ஆஞ்சநேயரோட அம்சமாகவும் நான் பார்க்கிறேன். எனக்கு தெரிஞ்சது. ஆனா நீங்க ஒரு தடவை வச்சு பாருங்க சந்தோஷமா இருக்கும்.
ஏன்னா காசே செலவு கிடையாது பாருங்க. இதுக்கு 500, 1000 கொடுக்க வேண்டியது இல்ல. நீங்க போனீங்கன்னா எங்கேயாவது ஓரிடத்தில் வெட்டி சின்னது ஒரு குச்சி வெட்னீங்கன்னா 100 பேருக்கு கொடுத்திடலாம்.
அது என்னன்னா சின்ன குழந்தைகளுக்கு பேய் பிசாசு பிடிச்சுரும்னு சொல்லி அந்த காலத்துல இடுப்புல கட்டி விடுவாங்க. அடுத்து கையிலயும் கட்டுவாங்க. அழிஞ்சில் கட்டை என்ன பண்ணுவாங்க அறுத்து அறுத்து சின்ன சின்னதா எப்படி இருக்கும் இவ்ளோ தான் இருக்கும். அறுத்து கட்டி கையில காப்பு மாதிரி கட்டி வச்சிருப்பாங்க. பிறந்த அன்னைக்கே கட்டுவாங்க அத.
அதே மாதிரி தான் அந்த அழிஞ்சில் குச்சி கட்டையை கடைசி வரைக்கும் இடுப்புல கோர்த்து கட்டக்கூடிய பழக்கம் இருந்துச்சு. அவ்ளோ அழகா அதுல இருக்கு. அதுல என்ன பணமா காசா பேரா புகழா அதிகாரமா எங்க கட்டி எல்லாமே இருக்கே. என்ன வேணும் இதுல. உங்களுக்கு என்ன கிடைக்கணும். அது என்னன்னா அதுவும் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள். அது எல்லாருக்குமே வருமா. அப்படின்னா எனக்கு என்னை பொருத்தவரைக்கும் 12 லக்னம் பண்ணுங்க சந்தோஷம் வரும்.
ஆனா வந்து அதுக்கு கேரண்டி எல்லாம் கிடையாது. ஆனா என்னன்னா 100 சதவீதம் நடக்குது. ஏன்னா நான் பார்த்திருக்கேன்ல நான் பாக்குறேன்ல.
தொகுப்பாளர்:
இதுக்கு வந்து இந்த திசைகாரங்க தான் இந்த லக்னக்காரர்கள் தான் அப்படி எல்லாம் கிடையாதா?
ஐயா:
அதெல்லாம் கிடையாது. எந்த திசையா வேணா நீங்க சூரிய திசை இருக்கலாம் சந்திர தசையா செவ்வாய் தசையா ராகு திசையா குரு தசையா சனி திசையா புதன் திசையா சுக்கிர திசையா இருக்கலாம். நீங்க எந்த திசையா, தசாபுத்தி அந்தரம் சூட்சமம் அதிசூட்சமம் எந்த சூட்சமமா வேணாலும் வச்சுக்கோங்க. என்ன திசை ஆனாலும் வச்சுக்கோங்க கட்டி பாருங்களேன்.
ரிஷப லக்னகாரங்க சாப்பிட்டால் பணம் வரும் :
ஏன்னா மக்களுக்கு ஒரு எளிமையான ஒரு பரிகாரம். அதான் சொல்றேன்ல உதாரணமா ஒரு புடலங்கா இருக்குல நீங்க பரிகாரம் சொன்னதும் நான் இந்த விஷயம் சொல்றேன். புடலங்காய் இருக்குல புடலங்காய் என்ன பண்ணும் அப்படின்னா இந்த ரிஷப லக்னம் போறவங்க இந்த புடலங்காய் சமைச்சு சாப்பிட்டா கண்ணு நல்லா தெரியும்.
அதே விருச்சிக லக்னக்காரங்க
அதே புடலங்காய் சமைச்சு சாப்பிட்டா உஷ்ணம் அதிகரிச்சு அவங்களுக்கு செரிமான
கோளாறு ஆகும். அதே விஷயம்தான் ஒரே புடலங்காய் தான் அதே ரிஷப லக்னகாரங்க
சாப்பிட்டா கண்ணு நல்லா தெரியும். காது நல்லா கேட்கும் முகம் பளிச்சுன்னு
இருக்கும். பணம் வருங்க. ரிஷப லக்னகாரங்க சாப்பிட்டால் பணம் வரும்.
தொகுப்பாளர்:
புடலங்காய் சாப்பிட்டால் பணம் வருமா?
ஐயா:
பணம் வரும். ஆனா என்னன்னா அது ஒரு கெமிக்கல் ரியாக்ஷன் நடக்கும் பாருங்க. அது என்னன்னா சாப்பிடும் போது என்ன நடக்கும் இன்னைக்கு இவர் கிட்ட போன் பண்ணி பேசலாமே. இவர்ட்ட போன் பண்ணி பேசினா ஏதோ பரவால்ல சும்மா சாதாரணமா நான் போன் எடுத்து பேசிடுவேன். ஆனா பார்த்தா என்ன நடக்கும்னா சார் உங்க கிட்ட வாங்கி இருந்த பணம் திருப்பி தாரேன்.
எதார்த்தமா நடக்கும்.
இப்ப நம்ம எல்லாருமே எலுமிச்சம்பழம் நிறைய பேசுவோம். இந்த எலுமிச்சம் பழத்தை, இது எல்லாம் என்னன்னா கருங்காலி செங்காலிய விட ஏன்னா இதெல்லாம் தாண்டி நமக்கு ஆயிரம் பரிகாரங்கள் இருக்கு லட்சம் லட்சம் பரிகாரங்கள் எல்லாம் இருக்கு அவ்ளோ பரிகாரங்கள்.
கன்னி லக்னம் :
எலுமிச்சம் பழம் இருக்கு. இந்த
எலுமிச்சம் பழத்தை உதாரணமா கன்னி லக்னம். கன்னி ராசிக்காரர்கள் இந்த எலுமிச்சம் பழத்தை
அழகா பயன்படுத்தலாம். அவ்ளோ அழகா பயன்படுத்தலாம். அத வச்சிருந்தாலோ அதை பார்த்தாலோ
அதைக்கூட வச்சிருந்தாலோ, பரிகாரம் எடுத்தோம்னா இது நம்பிக்கை சார்ந்த பொருளா தான்
இருக்கும்.
இப்ப நம்ம போகும்போது ஒருத்தருக்கு மரியாதை நிமித்தமாக ஒரு எலுமிச்சம் பழத்தை கொடுக்கிறோம். அவ்வளவு அழகா அன்னைக்கு அந்த விஷயம் நடக்கும். சக்சஸ் ஆகும்.
அதே தனுசு லக்னக்காரங்க எலுமிச்சம்பழத்தை கொடுக்கவே கூடாது. கொடுத்து வாங்கினோம்னா அன்னிக்கு நடக்க வேண்டிய காரியங்கள் எல்லாமே தடங்கலா போயிடும். அதான் சொல்றேன்ல நமக்கு தெரியாது எதார்த்தமா நீங்க ஒரு பழம் கொடுக்குறீங்க நான் வாங்குறேன். அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு.
இவங்க தனுசு லக்னம்னு தெரியப்போதா? தனுசு ராசிக்காரர்கள்னு தெரிய போதா? இவரு கடக லக்னம் கடக ராசின்னு தெரிய போதா? அதொட்டு அந்த நிகழ்வு அப்படித்தான் அமையும்.
தொகுப்பாளர்:
சார் இது மாதிரி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விஷயம் சொன்னா நல்லா இருக்குமே. ஒரு ஒரு பரிகாரங்கள்.
ஐயா:
மேஷ லக்னம் :
இதே பழம் இதே எழுமிச்சை பழத்தை வச்சு ஒரு பரிகாரம். உதாரணமா வீடு இருக்குல்ல வீட்டிலயோ , வண்டியிலயோ அந்த எலுமிச்சம் பழத்தை வச்சுக்கிறது மேஷ ராசிக்கு நல்ல பரிகாரமா இருக்கும்.
ரிஷப லக்னம் :
ரிஷப ராசிக்காரர்கள் ரிஷப லக்னம் ALP போகும்போது இந்த எலுமிச்சம் பழத்தை கொடுக்கிறது ரிஷப ராசிக்காரர்கள் கையில வச்சிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
மிதுன லக்னம் :
மிதுன ராசி மிதுன லக்னம் ALP போகும்
போது அந்த எலுமிச்சம் பழத்தை நம்ம வந்து கண் பார்வையிலே ஏதோ ஒரு இடத்துல டேபிள்ல பாக்குற
இடத்துல வச்சா அந்த பணம் சம்பந்தப்பட்ட விஷயம் நடக்கும்.
கடக லக்னம் :
கடக லக்னம் ALP போகும் போது கூட எப்பவுமே ஒரு பர்ஸ் வச்சிருப்போம் சின்ன ஒரு பாக்கெட் வச்சிருப்போம் அதுல வந்து எலுமிச்சம் பழம் வச்சிக்கிறது.
சிம்ம லக்னம் :
சிம்ம ராசி சிம்ம லக்னக்காரர்கள்
எலுமிச்சம் பழத்தை தானமா கொடுத்துகிட்டே இருக்கணும். கையில வச்சிருக்கவே
கூடாது. கையில வச்சிருந்தா ஒரு பழத்தை வச்சிருந்தீங்கன்னா அன்னைக்கு 10,000 பணத்தை
காலி பண்ணிடுவீங்க. சிம்ம ராசி சிம்ம லக்ன காரங்க இருக்கீங்களா பாத்துட்டு
இருக்கீங்கல பார்த்து செஞ்சு பாருங்க நாலு நாள். நீங்க பத்தாயிரம் இல்ல ஒரு லட்ச
ரூபாய் பணத்தை வச்சிருங்க. செஞ்சு பாருங்க. அதான் சொல்றேன்ல எப்போ இந்த பணம் யார்
வாங்கிட்டு போவாங்கன்னு தெரியாது. வாங்கிட்டு போயிருவாங்க.
கன்னி லக்னம் :
கன்னி லக்னம். கன்னி ராசிக்காரங்க எலுமிச்சம் பழம்
வச்சிருக்கும் போது பணம் சேர்ந்துட்டே இருக்குங்க. யாரோ ஒருத்தர் சும்மா
ஒரு 500 ரூபாய் கொடுத்துருவான். எனக்கு ஒரு 500 ரூபாய் இன்னொருத்தருக்கு 5000
இன்னொருத்தருக்கு 50,000. இப்படி வச்சுக்கோங்க.
துலாம் லக்னம் :
துலாம் ராசி. துலா லக்னகாரங்க வைத்திருந்தால் நடக்கிறது எல்லாம் ஏடாகூடமாக தான் நடக்கும். இந்த எலுமிச்சம்பழத்தை கூடவே வச்சுக்க கூடாது.
விருச்சிக லக்னம் :
விருச்சிக ராசி விருச்சிக
லக்னக்காரங்க எலுமிச்சம் எல்லாம் இந்த கோயிலுக்கு உதாரணமா ராஜராஜேஸ்வரி கோயிலுக்கு கொண்டு
போயி குடுத்துட்டு வந்து சாமி கும்பிட்டு இருந்தா. அவ்வளவு ஒரு திருப்தி
கிடைக்கும். நடக்காத நிகழ்வு இதுவரைக்கும் இடம் வாங்கல வீடு வாங்கல , சொத்து வாங்கல, இதுவரைக்கும் நடக்காத விஷயங்கள் எல்லாமே
நடந்துரும்.
தனுசு லக்னம் :
தனுசு ராசி. தனுசு லக்னக்காரங்க அவங்க என்ன பண்ணனும் அப்படின்னா இந்த எலுமிச்சம் பழத்தை வெட்டணும். வெட்டுனா மட்டும்தான் உங்களுக்கு பரிகாரம் ஜெயிக்கும். அது என்ன வேண்டிட்டு வெட்டினாலும் நடக்கும். ஏதோ ஒரு கோவில்.
மகர லக்னம் :
மகர லக்னகாரங்க இவங்க யாருக்காவது
ஒருத்தவங்களுக்கு கொடுத்தாலோ, வச்சுக்கிட்டாலும் அந்த
பழத்தை நல்லாவே இருக்கும்.
கும்ப லக்னம் :
கும்ப லக்னம் கும்ப ராசிக்காரங்க அந்த எலுமிச்சம் பழத்தை அறுக்கணும். அறுத்தால் மட்டும்தான் உங்களுக்கு பரிகாரம். அவங்க வச்சுக்கிட்டு இருந்தாங்கன்னா இருக்கிற பணம் எல்லாமே ஆஸ்பத்திரி கொண்டு போய் கொடுத்துடுவாங்க. கும்ப லக்னம். கும்ப ராசிக்காரர்கள் யாராவது பார்த்துட்டு இருப்பாங்கள அவங்க ஒரு நாலு நாள் வச்சு பாருங்க கையில. நீங்க ஒரு பைய எப்பவுமே வச்சிருக்க போறோம் அந்த பையில ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு வச்சிருந்தா கண்டிப்பா அவங்க நேரா ஆஸ்பத்திரிக்கு போவாங்க. நீங்க ஹாஸ்பிடல் போயிட்டு தான் திரும்பி வரணும்ங்க. இல்லங்க எனக்கு ஆஸ்பத்திரிக்கு போகல என் நண்பனுக்காக இல்லைங்க நான் போவேண்டிய வேலைக்காக போனேன். இல்லைங்க ஒருத்தர பாக்கணும்ங்கிறதுக்காக போனேன்.
மீன லக்னம் :
மீன ராசிக்காரங்க. மீன லக்னக்காரங்க உண்மையிலேயே எலுமிச்சம் பழத்தை ரொம்ப அழகா கொண்டாடனுங்க. அவங்க குலதெய்வம் மாதிரி அவங்களுக்கு சந்தோஷம் வரும்.
இந்த மாதிரி 12 ராசிக்கு ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கு மினிமம் ஒரு லட்சம் பரிகாரம் சொல்ல முடியும்.
ALP ASTROLOGY OFFICE: 9786556156 /9363035656
Comments
Post a Comment