வீடியோ லிங்க்: https://youtu.be/xNkuNmt8dxQ?si=gic5rudq2OkH2jJs
ஒரு நண்பர் வந்து ஜாதகம் பார்க்க வந்தாங்க.
அவங்களோட கேள்வி வந்து எல்லாருமே தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு கேள்வியாக இருந்தது.
நம்ம எல்லாருமே பேச்சு வாக்குல கேப்போம் நான் என்ன கர்மா வாங்கி பிறந்தேனோ? ஏன்
இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறேனோ அப்படின்கிற கேள்வி.
உண்மையிலேயே ஒரு ஒரு ஜாதகம் நம்ம லக்னம் அனுசரிச்சு அந்தக் கர்மாக்கள் அப்படிங்கறதுல நாம பிறந்து இருப்போம். அந்த கர்மாவ நாம எப்படி தீர்க்க போறோம். அதை நம்மளால தீர்க்க முடியுமா? கண்டிப்பாக தீர்க்க முடியும்.
வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமா வெங்கட்.
என்ன கர்மால பிறந்து இருப்பாங்க :
ஒருத்தவங்க லக்னம் மேஷ
லக்னமாக இருந்தது அப்படின்னா, அவங்க வந்து என்ன கர்மால பிறந்து இருப்பாங்க
அப்படின்னா தாய் வழி கர்மால பிறந்து இருப்பாங்க.
இவங்க முன் ஜென்மத்துல தாயால ஏற்பட்ட
ஒரு நிகழ்வால அவங்களோட திருப்தி இல்லாமையால அந்த தாய்க்கு ஏதோ கடன் வைத்ததினால
ஏற்பட்ட ஒரு பிறப்பாக இந்த ஜென்மம் அவங்களுக்கு அமையும்.
சரி,அட்சய லக்னத்தில மாற்றம் அடையுது. இந்த கர்மா இந்த காலகட்டத்துல அவங்க என்ன கர்மால இயங்குறாங்க. இந்த கர்மாவை அவங்க எப்படி கழிக்கிறது அப்படிங்கற ஒரு கேள்வி இருக்கும்.
மூன்று வித கர்மா :
பொதுவாகவே பொதுவுடைமூர்த்தி சார் கர்மாக்களை
மூன்று விதமாக பிரிச்சிருக்காங்க.
தாய் வழி கர்மா, சுய கர்மா, தந்தை வழி
கர்மா. நான் இப்ப எந்த கர்மால இயங்குகிறேன்.
அப்படிங்கறது உங்க ஜாதகம் இங்க குறி காட்டும்.
சிலருக்கு இப்ப கன்னி லக்னமாக
இருந்தது அப்படின்னா அந்த ஜாதகர் என்ன கர்மால இயங்குவார் அப்படின்னா தந்தை வழி கர்மால
இயங்குவார். அந்த ஜாதகர் தந்தை வழி கர்மா அப்படிங்கற ஒரு இடத்திலிருந்து
இயங்குவார்.
இவங்க என்ன பண்ணுவாங்கன்னா தந்தையை முறையாக
வழிபடுதல். அப்பாவுக்கும் அவங்களுக்கும் பிரச்சனையா இருக்குமானா? பிரச்சனையா
இருக்கும். சின்ன குழந்தையிலிருந்து பாருங்க. ஒருத்தவங்களுக்கு கன்னி லக்னம்
போகுது அப்பாக்கும் ,
பையனுக்கும் பெரும் போராட்டம். அப்பா படி படிம்பார். பையன் இல்ல படிக்க மாட்டேன்.
நான் கொஞ்சம் ஜோவியலா தான் இருப்பேன். ஊர் சுத்திட்டு தான் இருப்பேன்
அப்படிம்பாங்க.
இந்த
பத்து வயசுல இருந்து இந்தப் போராட்டம் அப்படிங்கறது நடக்கும். பார்த்திருப்போம்
நாம. 20 வயசு வரைக்கும் இவங்களுக்கு அப்பாவுக்கும் பையனுக்கும் பிரச்சனை
இருக்குமானா கண்டிப்பாக பிரச்சனை அப்படிங்கறது இருக்கும் இவங்களுக்கு.
அப்போ இந்த போராட்டம் எப்ப முடியும். இவங்க
இவங்கள உணர்ந்து நான் செய்தது எங்க அப்பா சொல்றது சரி.
நான் என்னை எப்படி மாத்திக்கணும்?
அப்படிங்கிற ஒரு கேள்வி இருந்ததுனா, இவங்க
லக்னம் மாறும்போது இவங்களுக்கு அந்த சுய கர்மா இயங்கும்போது தன்னை மாற்றிக்க கூடிய
தன்மை அப்படிங்கறது இந்த விருச்சிக லக்னத்தில அவங்களுக்கு கண்டிப்பாக
ஏற்படும். அதுவரைக்கும் அவங்களுக்கு தெரியுமானா? தெரியாது.
தாய் வழி கர்மா :
நம்மளை
யாரோ இயக்குறாங்க நம்ம அதை செய்றோம்கிற மனப்பான்மை தான் இந்த ஜாதகருக்கு
இருக்கும்.
நடுவுல 20 வயசுல இருந்து 30 வயசு வரைக்கும்
இவங்க என்ன பண்ணுவாங்க. அம்மா கிட்ட போய் ஒளிஞ்சிப்பாங்க. அம்மா பேச்சு கேட்கிறது.
நாம என்ன செயல்கள் செஞ்சாலும் அம்மாவ சப்போர்ட் கூப்பிடுகிறது. உங்க எல்லாருக்கும்
தெரியும் நிகழ்காலத்தில் நடக்கக்கூடிய ஒரு தன்மை. அப்ப இந்த ஜாதகர்
யார் மூலமா இயங்குகிறார்ன்னா? தாய் வழி மூலமாக.
அம்மா மூலமாக இயங்குகிறது.
அம்மாட்ட என்ன சொன்னாலும் கேட்கிறது. அம்மாவை சப்போர்ட்க்கு கூப்பிட்டுகிறது. அப்போ ஒவ்வொரு ஜாதகத்துலயும் நாம என்ன கர்மால பிறந்திருக்கோம்? அந்த கர்மா கழிக்கக்கூடிய இடம் எது? அந்த இடத்தை நாம கரெக்டா செய்றோமா? செய்துவிட்டு வாரோமா? அப்படின்னு ஒரு செக் பண்ணிக்கணும்.
நாம எப்படி பாடி செக்கப் பண்ணிக்கிறோமோ, அதே மாதிரி என்னோட ஜாதகத்தை நான் என்ன கர்மால பிறந்து இருக்கேன்? என்னுடைய கர்மா என்னவாக இயங்குது? சொல்லுவாங்க, என்ன கர்மா வாங்கி பிறந்தனோ? எப்ப கழிக்க போறனோ? தெரியலையேன்னு. கழிக்கக்கூடிய காலங்கள் உங்களுக்கு கண்டிப்பாக உங்க ஜாதக அமைப்பு அப்படிங்கறது இருக்கும்.
அட்சய ராசி :
நீங்க ஒரு ஜாதகம் எடுத்த உடனே உங்களுக்கு
தெரியும். பூர்வ புண்ணியம் சார்ந்த கர்மாக்களை செய்ய வாராங்க அப்படின்னா
அவங்களுக்கு அட்சய ராசியும் அவங்களுக்கு அழகாக வெளிப்படுத்தும்.
எனக்கு என்ன அட்சய ராசி போகுது?
என்னுடைய அட்சய ராசி என்னது? என்னுடைய அட்சய
லக்னம் என்னது?
அதுக்கு நான் கரெக்டா இயங்குகிறனா தன்மை இருந்தால் மட்டுமே என்னுடைய பூர்வீக
கர்மாவை ஒரு ஜாதகத்திற்கு ஒரு ஜாதக அமைப்புங்கறது செய்யவிடும். அந்தக் கேள்வியாகவே
இருக்கும். இல்லைனா யாருமே அந்த கேள்வியை கேட்க மாட்டாங்கன்னு அப்படிங்கறது
சொல்லலாம். ஏன்னா அந்த கேள்விக்கு யாருமே போக மாட்டாங்க.
கர்மாவை நான் கழிக்க கூடிய காலம் :
எனக்கு என்னுடைய அட்சய லக்னம் எப்படி
இயங்குதோ, அதே மாதிரி அட்சய ராசி அப்படிங்கறது ஒன்னு இருக்கு. அது கரெக்டா
இயங்குனா மட்டும்தான் என்னுடைய கர்மாவை நான் கழிக்க கூடிய காலமாகவும் அந்த
நிமித்தம் அப்படிங்கறது எனக்கு அங்க தெரியும். இதுதான் எனக்கு கர்மா செய்யக்கூடிய
காலம். கரெக்டா தான் நான் செய்றேன். அந்த திருப்தி ஏற்படுமானா? ஏற்படும்.
அதுக்கு ஒரு நிமித்தம் அவங்களுக்கு காமிக்குமானா? காமிக்கும். உடனே அவங்களுக்கு உங்க வீட்ல சுப நிகழ்வுகள்.
ஒரு புதிய சந்தோஷம். ஒரு புதிய வரவு அப்படிங்கிறது அவங்க வீட்ல இருக்குமானா? இருக்கும். அதுதான் கர்மா செய்ததினுடைய பலன் அப்படின்னு சொல்லலாம்.
தடைபட்ட காரியங்கள் கர்மா கழிப்பதின் மூலம் நிவர்த்தி ஆகுமானா? நிவர்த்தி ஆகும்.
அப்போ நீங்க என்ன ஜாதக அமைப்பு உங்களுக்கு இருக்கு. தற்கால கட்டகத்துக்கு நீங்க என்ன கர்மால இயங்கறீங்க. கரெக்டான வழியில் தான் நீங்க போறீங்களா? இல்ல அப்படின்னா நான் எப்படி அதை சரி பண்றது அப்படி ஒரு கேள்வி உங்க எல்லாருக்குமே இருக்கும். உங்களுடைய ஜாதகம் அதற்கு வழி காட்டும்.
அட்சய லக்ன பத்ததி முறையில ரொம்ப தெள்ளத்தெளிவாக என் கர்மாவை நான் கழிக்கக்கூடிய காலம் இதுவா? இது எல்லாராலையும் முடியுமானா? முடியாது. அதையும் சொல்லிடுறேன். இந்த வீடியோவை பாக்குறவங்க, சொல்லிட்டாங்க கேட்டுருவோம். போன் எடுக்க மாட்டோம். சரி நம்ம இல்லன்னா இன்னொருத்தங்க கிட்ட கேட்பாங்க. அவங்களும் கேட்க மாட்டாங்க. போன் பண்ற நேரம் சரியாக அமையாது. அந்த கர்மா கழியுமானா? கழியாது.
அப்போ தகுந்த நேரம் உங்களுக்கு கிடைத்ததுன்னா கண்டிப்பாக ஒரு ஜாதகரை தொடர்பு கொண்டு ஒரு ஜோதிடரை தொடர்பு கொண்டு கர்மா சரிதானா? அது கழிக்கக்கூடிய காலம் இதுவாக இருந்ததுனா கண்டிப்பாக உங்களுக்கு அந்த வாய்ப்பு பகவான் ஏற்படுத்திக்கொடுப்பார்.
பொதுவாக நிறைய கர்மாக்கள் நம்ம தெரியாமலே நிறைய தப்புகள் அப்படின்னு செஞ்சிருப்போம். தப்பு எல்லாருமே செய்றது தான். நம்ம ரோட்ல போகும்போது எறும்பை மிதிச்சா கூட தப்புதான். கரெக்ட்டுங்களா. முன்ன காலத்துல வந்து வீட்ல அரிசி மாவு கோலம் போடுவாங்க. அந்த அரிசியை சாப்பிட சாப்பிட எறும்பு வந்து நம்ம பாவத்தை கொண்டு போகும் சொல்லுவாங்க.
ஒரு படி அரிசி எறும்புக்கு கொடுத்தோம்
அப்படின்னா இரண்டரை ஆண்டு காலங்கள் வந்து ஒரு அரிசி அந்த எறும்பு
சாப்பிடுமாம். அப்போ அந்த கர்மாவோட தாக்கம் அப்படி கரையுமாம்.
என்ன பண்ணுவாங்க முன்னோர்கள் வந்து பித்துருக்கள் அம்மாவாசை அன்னைக்கு திதி கொடுப்பாங்க. திதி கொடுத்துட்டு வந்து பெரியவங்களுக்கு சாப்பாடு கொடுப்பாங்க. அன்னதானம் அப்படிங்கறது நிறைய பண்ணுவாங்க.
நாம என்ன பண்ணலாம்?
யாருக்கு உணவு வாங்கி கொடுக்கலாம். உணவு
வாங்கி கொடுக்க முடியலையா ரெண்டு பிஸ்கட்டும் ஒரு பழமும் வாங்கி
கொடுக்கலாம். ஒரு வாட்டர் பாட்டில் மஸ்ட்.
நீரும், பழமும் வாங்கிக்
கொடுப்பது ரொம்ப சிறப்பா இருக்கும். இப்போ ஃபாரின்ல எல்லாம் இருக்காங்க. நீங்க
சாப்பாடு வாங்கி கொடுக்க முடியாது. கரெக்டுதான் அப்ப நான் என்ன வாங்கி
கொடுக்கலாம்? பிஸ்கட் வாங்கி கொடுக்கலாம். தண்ணி வாங்கி கொடுக்கலாம். இரண்டு பழம்
வாங்கி கொடுக்கலாம். உங்க கர்மா கழியுமானா? கழியும். நீங்களே
நினைவுபடுத்தி பாருங்க. நான் எதனால இவ்வளவு பிரச்சனை அனுபவிக்கிறேன். எனக்கு
எல்லாமே இருக்கு. ஆனா திருப்தி அப்படிங்கறது இல்ல. எங்கேயோ நான் லாக் ஆயிருக்கேன்.
என்னையும் இங்க தடைப்பட்டு வச்சிருக்கு. அந்த தடைகளை உடைக்க கூடியதுதான் உங்க
கர்மா. அதை அறிந்து நீங்க செயல்படுவது உங்க வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி அப்படிங்கிறது
கண்டிப்பாக கிடைக்கும். நானும் பார்க்க கூடிய நண்பர்கள் அனைவருக்கும் உங்க
கர்மங்களை வென்று உங்களுக்கு வெற்றி அப்படிங்கிறது உங்களுக்கு கிடைக்கட்டும்.
நன்றி.
ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656
Comments
Post a Comment