ஆட்டிஸம் (Autism), செரிப்ரல் பால்சி (Cerebral Palsy) பற்றிய, அட்சய லக்ன பத்ததி எனும் ALP ஜோதிடத்தில் மருத்துவ ஜோதிட ஆய்வு.
full video link: https://www.facebook.com/share/v/1Lmg9DVQMu/
பொள்ளாச்சியை சேர்ந்த திரு. நல்லதம்பி,
முன்னர் IT துறையில் பணியாற்றி, தற்போது பெங்களூருவில்
Autism, Cerebral Palsy போன்ற சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான (Children
with special needs) அரசு சாரா நிறுவனத்தில் தலைமைச் செயல் அலுவலராக உள்ளார்.
அவர் ALP ஜோதிடம் கற்றதன் பலனாக சில
அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துள்ளார்.
அவர் அக்குழந்தைகளின் தீர்வுகளுக்காக
மூளை, மனம், உடல் ஆரோக்கியம், மருத்துவ முறைகள் என பல முறைகளைத் தேடி ஆய்ந்து ஆலோசனை
வழங்கிய அனுபவத்தில் சிகிச்சைகள் முழுமையடையாததை உணர்ந்து அவற்றிற்கு கட்டுப்பாடு வேறு
எங்கோ உள்ளது என்று தேடிய போது ஜோதிடத்தை அணுகியுள்ளார்.
மேலும், அறிவியல் ரீதியாக அணுத்துகள்
முதல் மனித உடல் வரை அனைத்தும் சக்தி வடிவிலும்
அதிர்வு அலைவரிசைகளிலும் இயங்குவதையும், மருத்துவ முறைகள் சில குழந்தைகளிடத்தில் உடனே
வேலை செய்தாலும் சில காலம் மட்டுமே நல்ல நிலையில் இருந்து மீண்டும் சிகிச்சைக்கு ஆட்படுவதைக்
கண்டு அதோடு, ஜோதிட ரீதியாக அம்மாதிரி ஜாதகத்தில் 8-ஆம் இடம் தொடர்ந்து வேலை செய்வதையும் கவனித்துள்ளார்.
புறச்சூழல்களால் மனித உடலியலில் மரபியல்
ரீதியான தாக்கமானது வெளியிலிருந்து அதிர்வலைகளாக மனித செல்களுக்குள் வருகிறது என்பதை உணர்ந்ததால் இதன்
கட்டுப்பாடுகள் அனைத்தும் கிரகங்கள் மூலமாக வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு அதிர்வலைகளில்
தாக்கத்தை ஏற்படுத்துவதால் அதற்கேற்ப ஹோமியோபதி, மலர் மருத்துவம் போன்ற சிகிச்சைகளை
கொடுத்துப் பார்த்ததில் குணமடைவதிலுள்ள துல்லியத்தன்மை உள்ளதை புரிந்துள்ளார்.
முருகனின் திருவருளால் ALP ஜோதிடம் கற்கும் வாய்ப்பு:
இவர் சிறுவயதிலிருந்தே முருக பக்தர்
என்பதால் அந்த முருகனின் திருவருளால் ALP ஜோதிட முறையை கற்பதற்கான வாய்ப்பு அமைந்ததாகவும்,
அந்த முருகனே குரு வடிவில் வந்து அமர்ந்தது போல் உணர்ந்துள்ளார். ALP ஜோதிடம் கற்றதிலிருந்தே
தனது நண்பர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
பிரச்சினையில் ஜாதகரின் பங்கு:
ALP ஜோதிடத்தை கற்றுத் தரும் திரு.பொதுவுடைமூர்த்தி
ஐயா சொல்வது போல் முதலில் சுய ஜாதக ஆய்வு செய்ததில் ”தான் பார்ப்பதும், தானே தான் உலகம்”
என்ற கண்ணோட்டம் தொடங்கி பிரச்சனை எங்குள்ளது எனவும் அதில் தன்னுடைய பங்கு என்ன என்பதையும்
கண்டறிந்துள்ளார்.
ALP ஜோதிடம் ஒரு Map:
ALP ஜோதிட
முறை Map மாதிரி வழிகாட்டுவதாகவும் அதில் நாம் எப்படி பயணிக்க வேண்டும் என்பதை உணர்ந்து,
அவருடைய நண்பர் ஒருவருக்கு வேலை செய்யுமிடத்திலிருந்த பிரச்சனைக்கு அதனை ஜோதிட ரீதியாக
முதலாளியின் பார்வைக் கோணத்திலிருந்து வேலை செய்தது போன்ற சிறு சிறு மாற்றங்களால் தீர்வுகள்
கிடைப்பதாக தெரிவிக்கிறார்.
தூக்கமின்மை சரியாகும் நாளை சொன்ன ALP ஜோதிடம்:
மற்றொரு அனுபவத்தில், சுமார் ஒன்றரை ஆண்டுகளாக தூக்கமின்மையால் மாலை / இரவு நேரங்களில் அழுது கொண்டே இருந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு ALP ஜோதிட முறையில் பார்த்து 23 நாட்களில் அக்குழந்தைக்கு தூக்கம் சரியாகும் என்று இவர் கூறியது போல் குணமடைந்து மாலை நேரத்தில் விளையாடி இரவில் ஆழ்ந்து தூங்கத் தொடங்கிய அதிசயத்தைப் பார்த்ததையும் மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.
கௌரவப் பிரச்சினையை சுட்டிக் காட்டிய ALP ஜோதிடம்:
மற்றொரு நண்பருக்கு இவரைப் போலவே 9-ஆம் இடம் தொடர்பிருந்ததால் கௌரவத்தால் யாரிடமும் எதையும் கேட்கக் கூடாது என்றிருந்த நிலையில் பெரிய வருமானம் எதிர்பார்த்தவருக்கு முதலில் சின்ன சின்ன வேலைகளை எடுத்து செய்யக் கூறியது போல் நல்ல மாற்றம் வந்ததாகவும் தெரிவிக்கிறார்.
அண்டத்தின் சக்தியும் ALP ஜோதிடமும்:
அதேபோல் அவரிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களின் பேச்சை கவனித்து ஜாதகத்தில் ALP முறைப்படி கடந்த காலத்திற்கு நகர்த்தி தீர்வுகள் கூறியுள்ளார். அண்டத்தின் சக்தியை உணர்ந்து உணர்த்தி வழிநடத்த ALP முறை புரட்சி தான் என்கிறார்.
Panic Attack-கிற்கு எந்த மருத்துவ சிகிச்சை எடுக்க
வேண்டும் என்று தீர்வு சொன்ன ALP ஜோதிடம்:
Canada-வில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் மற்றவருக்கு வரும் பிரச்சனைகளை தன் பிரச்சனைகளாக எண்ணி Panic attack-ஆல் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ALP முறையில் ஜோதிட ரீதியாக எப்படி மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும் என்று வழிகாட்டி முதல் 6 மாதத்திலேயே நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதை பகிர்கிறார்.
வாழ்வின் ஒட்டு மொத்த தேடலின் முற்றுப்புள்ளி
ALP ஜோதிடம்:
அறிவியல் பூர்வமாகவும் மரபியல் ரீதியாகவும் 10 வருடங்களில் வாழ்க்கை சூழல் மாறுவது போல் லக்னம் மாறுவதும் ஒத்துப்போவதாகவும் அவரின் ஒட்டு மொத்த தேடலுக்கும் ALP ஜோதிட முறை முற்றுப்புள்ளி வைத்ததாகவும் தெரிவிக்கிறார்.
அட்சய லக்ன பத்ததி எனும் ALP ஜோதிடத்தை கண்டுபிடித்த Dr. சி. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு, நன்றி.
ALP ASTROLOGY OFFICE: 9363035656 / 9786556156
Comments
Post a Comment