இறை சக்தியை உணர்ந்த நாங்கள்
வீரா' எங்கள் வீட்டில் பாசம் என்ற வார்த்தைக்குப் பிரதான நாயகன். நாங்கள் வெளியூர் சென்றாலும் அங்கிருந்து கைபேசியின் மூலம் மாமியாரிடம் வீராவுக்கு உணவு அளித்தார்களா? என்று கேட்காமல் இருந்ததில்லை. என்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் வீராவிடம் பேசி விளையாட அலாதி பிரியம்!! நாங்கள் வெளியூரிலிருந்து திரும்பி வந்து வெளிக்கதவின் தாழினை திறக்கும் பொழுதே எங்களைத் தழுவிக் கொள்வான்!! எங்கே சென்றீர்கள்? எப்படி இருக்கிறீர்கள்? தற்காலிகப் பிரிவை ஏன் தந்தீர்கள்? உங்கள் வாசம் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்பது தெரியாதா? என்று பலமுறை ஒலித்த ஒரே சத்தத்தின் வினா எங்கள் செவியில் கேட்கும்... எங்கள் செல்ல நாய்க்குட்டி வீரா!!! 👉SASTI TV YOUTUBE: https://youtube.com/@alpastrology?si=nWyCMQYJLL7BuaGD அன்றொரு நாள் மாலை நேரம். என் கை முழுவதும் மருதாணியின் கோலங்கள்; மஹாலட்சுமி என் விரலில் குடியேற தன் நிறத்தை பறி கொடுக்க, ஈரப்பதத்தை இழந்துக் கொண்டிருந்தாள். வீராவின் குரல் வெகு நேரமாக கேட்கவில்லையே என்று பள்ளிப் பாடம் எழுதிக் கொண்டிருந்த என் மகனை தேடச் சொல்கிறேன். வீடு முழுவதும் அலைந்து தேடி பதட்டத்துடன் வீராவைக...