உங்கள் வாழ்க்கை உங்கள் கைரேகையில் !!!!! 🤲
கைரேகை நிபுணர். தஞ்சாவூர் உயர்திரு ராஜேஷ் குமார் அவர்களுக்கும் , உயர்திரு. சிம்மம் ரங்கநாதன் அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆசிரியருக்கும் இடையில் நடந்த கலந்துரையாடல்.
சிம்மம் ரங்கநாதன்:
🙏 வணக்கம். கைரேகை துறையில் ஞானம் பெற்றவர். நிபுணத்துவம் பெற்றவர். உயர்திரு. தஞ்சாவூர் ராஜேஷ் குமார் அவர்களை வணக்கம் கூறி வரவேற்கிறோம் .
தஞ்சாவூர் ராஜேஷ் குமார் :
🙏 வணக்கம்
சிம்மம் ரங்கநாதன்:
கைரேகைக்கும் அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்திற்கும் எப்படி தொடர்புகள் இருக்கு?
தஞ்சாவூர் ராஜேஷ் குமார் :
மக்களுக்கு ஜாதகம் எதற்கு, கைரேகை எதற்கு, என்ற விளக்கம் தேவைப்படுகிறது.
ஜாதகம் என்பது ராசி, நட்சத்திரம் என்பது மக்களுக்கு தெரியும். இந்த கைரேகை பற்றிய விஷயங்கள் கேள்விக் குறியாக உள்ளது. நாம் பிறக்கும் போது இறைவனால் தனித்துவத்துடன் படைக்கப்பட்டது தான் கைரேகைகள்.
சித்தர்கள் ... "உகந்த ஆயுசும் பொன்னும் பொருள்கள் வித்தை செல்வம் இரின் மரணங்கள் ஏறும் பிரம்மதேவன் தொடங்கும் முன் தாயின் கர்ப்பத்தில் நிச்சயிப்பார்" என சொல்லி வைத்திருக்கிறார்கள். நாம் பிறந்ததற்கு பிறகு தான் நேரம் காலம் ஜாதகம் குறிக்கின்றோம். நாம் பிறக்கும் போதே இவருக்கு இந்த காலகட்டத்தில் செல்வம் கிடைக்கும், எந்த வயது வரை ஆயுள் தீர்க்கம் அமையும், என்பதை நிர்ணயிப்பது தான் கைரேகை சாஸ்திரம். ஜாதகப் பலன்கள், நல்ல பலன்கள் , தீய பலன்கள் நடைபெறும். இவற்றை கைரேகை சாஸ்திரம் மூலம் கூற முடியும்.
சிம்மம் ரங்கநாதன்:
கைரேகை என்பது மாற்றத்திற்குரியதா? இல்லை, பிறக்கும் பொழுது இருக்கும் அந்த ரேகைகள் தான், இறப்பு வரைக்குமா? வயதுக்கு வயது மாறுமா?
தஞ்சாவூர் ராஜேஷ் குமார் :
நல்ல கேள்வி!! சந்தர்ப்ப ரேகைகள் -27 இருக்கு.
9 கிரக மேடுகள் இருக்கு. சூரியன் மேடு - சந்திரன் மேடு - செவ்வாய் மேடு - புதன்மேடு - சனிமேடு - சுக்கிரமேடு - குரு மேடு என ஏழு வகை மேடுகள், ராகு கேதுவிற்கு உச்சமேடு நீச்சமேடு.
கையில் குரு சுக்கிரன் மேல் நோக்கி இருப்பது உச்ச நிலை. சூரியன், புதன், செவ்வாய், சந்திரன், இடையில் கீழ் பகுதிகள் எல்லாமே நீச்ச நிலை. கேது உச்சமேடு - ஞானம் - பிரம்மத்தை தரக்கூடியது. ராகு - நீச்சமேடு - அதர்மத்தை தரக்கூடியது.
சிம்மம் ரங்கநாதன்:
எத்தனை துல்லியமாக கைரேகை பலன்கள் இருக்கும்? இன்றைய வழக்குல ஜாதகம் இல்லாதவங்களுக்கு கை பார்த்து சொல்வீர்களா? என்று கேட்பார்கள்? தசாபுத்தி -நிறைய கணக்கீடுகள் - ஆதிபத்தியம் - உச்ச நீச்சம் - படிப்பு முதலான அனைத்து விஷயங்களையும் கைரேகையில் நிர்ணயம் பண்ண முடியுமா?
தஞ்சாவூர் ராஜேஷ் குமார் :
சந்தர்ப்ப ரேகைகள் வைத்து கூற முடியும். சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி நிலைகளை கைரேகை காண்பிக்கும். கையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரேகைகள், சந்தர்ப்ப ரேகைகள் உதவி செய்யும் என சாஸ்திரம் சொல்கிறது. ஒருவருக்கு குரு நல்ல அமைப்பில் இருக்கிறார் என்றால் குரு மேடானது உச்ச நிலையோ, ஆட்சி நிலையோ பெற்று சந்தர்ப்ப ரேகை சொல்ல கூடிய தேவ சந்திர அமைப்பும் இருந்து, சந்தர்ப்ப ரேகை வைத்து நல்லது எது, கெட்டது எது என தெரிஞ்சுக்கலாம். கைரேகை அமைப்பை நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம்.
சிம்மம் ரங்கநாதன்:
கைரேகையில், அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் 10 வருடத்திற்கு ஒருமுறை லக்னம் மாறுவது போல், கைரேகை சாஸ்திரம் சொல்லும் பொழுது, உங்கள் மனோநிலை பொறுத்து ரேகைகளுக்கு மாற்றம் ஏற்படுமா?
குழப்பமானவர்களுக்கு கச-கச என்று ரேகைகள் இருக்கும். இரு பொண்டாட்டி எனில், இரு ரேகைகள். சக்கர ரேகை - சங்கு ரேகை - விரல் மேல் உள்ள ரேகைகள் - பலன்கள் எவ்வளவு உபயோகமானதாக இருக்கும்?
தஞ்சாவூர் ராஜேஷ் குமார் :
* சக்கர ரேகை பெருவிரலுக்கு மேல் சுக்கிர பலன் அதிகமாக இருக்கும்.
* சக்கரக்குறி குரு வீட்டிற்கு மேல் இருந்தால் குருபலம் அதிகம்.
* சனி மேட்டிற்கு மேல் சக்கர குறி இருந்தால், சனி பலம் அதிகம் என எடுத்துக் கொள்ளலாம்.
சிம்மம் ரங்கநாதன்:
இவைகளால் என்ன பயன்? என்ன பலன் தரும் ?
தஞ்சாவூர் ராஜேஷ் குமார் :
சுக்கிரன் நல்ல அமைப்பில் இருந்தால், அதாவது சுக்கிர ரேகை நன்றாக இருப்பின் மனைவி மூலம் யோகம் - காதல் அமைப்பு ஏற்படும்.
சிம்மம் ரங்கநாதன்:
சுக்ர பலம் அமைய வேண்டும் என்று இருந்து, அவரது கையில் இருக்கிறது - அப்படியே ஜாதகத்தில் பிரதிபலிக்குமா?
தஞ்சாவூர் ராஜேஷ் குமார் :
கைரேகையில் உச்ச நிலை - ஆட்சி நிலை - ஜாதகத்தில் உள்ளது போல கைரேகையில் எப்படி பொருத்தலாம்?
*சுக்கிர மேடு உயர்ந்து தேவச்சந்திர குறிகள் 16 உள்ளன .
*அவை சங்குடன் சக்கரம் - சாமர கோபுரம் - விண்மீன் - ஈன்மீன் - வில்லுடன் வாளும் - வேலுடன் சூலம் - அரை நிலம் - ஆதவன் - கொடியுடன் தாமரை.
* மச்சம் என்னும் மீன் குறி ஆட்சி பெற்ற சுக்கிர மேட்டில் வந்து விழுகிற சமயத்திலேயும், சுக்கிர மேடு மேல் சங்கு குறி எனில் மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும் எனவும், கீழ் மச்சம் எனில் பெருமாள் ஆதிக்கம் எனவும் பலன் சொல்லலாம்.
* சுக்கிர மேடில் எந்த அளவு மாற்றம் ஏற்படுகிறதோ, அந்த அளவுக்கு திருமணமாகாத ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் எளிதில் ஈடு ஏறும் எனவும், கணவன் மனைவி ஒற்றுமைக்கான காலகட்டம் எனவும் பலன் கூறலாம் .
* சுக்கிர பெயர்ச்சி கணக்கீடு செய்து, அந்த சமயம் கைரேகை பொருந்துதா என பார்த்து, அட்சய லக்ன பத்ததி மூலம் - மேஷ லக்னம் பரணி நட்சத்திரமாகவோ - சிம்ம லக்னம் பூரம் நட்சத்திரமாகவோ - தனுசு லக்னம் பூராடம் நட்சத்திரமாகவோ செல்கையில் திருமண யோகம் உண்டு. திருமணம் நிச்சயமாக நடைபெறும் என கணக்கிடலாம்.
சிம்மம் ரங்கநாதன்:
கையில் முக்கோணம் - வேல் -அச்சு - தாமரை -ஒரு சில ரேகைகள் மாற்றம் ஏற்படுகிறது. அதற்கான பலன் என்ன?
தஞ்சாவூர் ராஜேஷ் குமார் :
முக்கோணம் எனில் மேல் நோக்கிய அமைப்புகளாக இருப்பின் அதிர்ஷ்டம் எனவும், திசைகள் பொறுத்து பலன்கள் மாறும். தாமரைத் தண்டு போன்ற அமைப்புகள் - இலைகள் மேல்நோக்கி இருப்பின் அதிர்ஷ்டம் எனவும், கீழ்நோக்கி இருப்பின் எச்சரிக்கையாக இருக்கவும் - எனவும் பலன் கூறலாம்.
சிம்மம் ரங்கநாதன்:
கைரேகை சின்னங்கள் - குறிகள் மூலம் ஜாதகருடைய, ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கையை கை ரேகையால் மேம்படுத்த முடியும் என்கின்ற சிறப்பான அம்சங்களை நம்முடைய தஞ்சாவூர். உயர் திரு.ராஜேஷ்குமார் - கைரேகை நிபுணர் - அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் பகிர்ந்து கொண்டுள்ளார்
https://youtu.be/KzBlQT8kp5E?si=IpKly0D73wJ03MLl
* மீண்டும் இது போன்ற இன்னொரு சிறப்பு பதிவில் உங்களை சந்திக்கின்றோம் .
* நன்றி வணக்கம்
* 🙏🙏🙏
Comments
Post a Comment