ஆதிசேஷன் - வாசுகி வழிபட்ட ஸ்தலம் -ராகு கேது பரிகார தலம்
🙏🙏🙏



ஹர ஹர நமபார்வதி பதயே ! ஹர ஹர மகாதேவா! 

தென்னாடுடைய சிவனே போற்றி! 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. போற்றி! 

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி! 

பாகம் பெண்ணுறு ஆணாய் போற்றி! 

அண்ணாமலையும் அண்ணா போற்றி!

கண்ணார் அமுதக் கடலே போற்றி! 

காவாய் கனகத் திரளே போற்றி!

கயிலை  மலையானே போற்றி !!

* எல்லாம் வல்ல அருள்மிகு நாகவல்லி சமேத நாகேஸ்வர சுவாமி ஆலயம்,  சோழிங்கபுரம் அருகில் 108 திவ்ய தேசம் என்று சொல்லக்கூடிய சோழிங்க சேத்திரம் என்று சொல்லக்கூடிய நரசிம்ம யோக நரசிம்ம சுவாமி ஆலயத்தின் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நாகவல்லி நாகேஸ்வர சுவாமி ஆலயம்.

*  இந்த ஆலயத்தில் அர்ச்சகராக பணிபுரியும் மா. கணேஷ் குருக்கள், இந்த ஆலயச் சிறப்பு பற்றி சொல்கிறார்: 

* இந்த ஆலயத்தின் சிறப்பு -நாக தோஷம் - காலசர்ப்ப தோஷம் விலக கூடிய விசேஷமான ஸ்தலம்.

* சுவாமி பெயர் நாகேஸ்வரர்.

* அம்பாள் நாகவல்லி.

* இரு மூர்த்திகளும்,  சுயம்பு மூர்த்தியாக விளங்கக் கூடிய விசேஷமான ஸ்தலம்.

* கிருதயுகம் - திரேதாயுகம் - துவாபர யுகம் - கலியுகம், என நான்கு யுகத்திற்கும் பூஜை பண்ண விசேஷமான ஸ்தலம் .

* இந்த ஸ்தலத்தில் நாகராஜர்களே பூஜை பண்ணியதால், இந்த ஸ்தலத்திற்கு வந்தால், கால சர்ப்ப தோஷம் அப்படின்ற தோஷம் ஆகப்பட்டது,  - ஜாதகத்தில் லக்னம் உட்பட ராகு கேது கட்டத்துக்குள் இருக்கக்கூடிய கால சர்ப்ப தோஷமாகப்பட்டது - நிவர்த்தி பண்ணக் கூடிய விசேஷமான ஸ்தலம். அதே மாதிரி சர்ப்ப தோஷங்கள் அப்படின்னு சொல்லக்கூடிய,  லக்னத்தில் ராகு கேது, ஏழாம் இடத்தில், ராகு கேது,  இரண்டாம் இடத்திலும் எட்டாம் இடத்திலும் இருந்தால் வரக்கூடிய சர்ப்ப தோஷங்கள், நாக தோஷங்கள் விலகக்கூடிய விசேஷமான ஸ்தலம்.

* திருபாம்பகம் - திருநாகேஸ்வரம் - காளஹஸ்தி என்று சொல்லக் கூடிய ஸ்தலத்திற்கு நிகரான ஸ்தலமாக விளங்க கூடியது.

* இந்த ஸ்தலம்,  நாகப்பூண்டி என்ற கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரக் கூடிய அருள்மிகு நாகவல்லி சமேத நாகேஸ்வர சுவாமி ஆலயத்தில் முதல் யுகம் என்று சொல்லக் கூடிய கிருத யுகத்தில்,  காலகண்டன் ஆதிசேஷன் சிவபெருமானுடைய கழுத்தில் உள்ள நாகமும், பெருமாளுடய . படுக்கை அறையாக இருக்கக் கூடிய நாகமும் பூஜித்த ஸ்தலமாக விளங்குகின்றது.

* கிருதயுகம் எனும் முதல் யுகத்தில் காலகண்டன் அனைத்து ரிஷிகளும்,  ஞானிகளும்,  சித்தர்களும்,  சிவபெருமான் வழிபாடு செய்வதற்காக கைலாயத்தில் தரிசனம் பண்ணிட்டு இருக்கும்போது - அந்த சமயத்தில் கருடாழ்வாரை பார்த்து ஆதிசேஷனும் காலகண்டனும் கேலி பண்ணதாக ஐதீகம். 

*  அதன் பிரகாரம்,  அவர் சினம்  கொண்டு, தன்னுடைய கால்களால் எட்டி வந்து, இந்த பூலோகத்தில் உள்ள புற்றில் போட்டு விடுகிறார்.

* சாப விமோசனம் கேட்கிறார்கள்.

* சுவாமி உள்ளுக்குள்  இருக்க கூடிய சிவ வடிவத்தில் சுயம்பு மூர்த்தியான லிங்க வடிவத்தை பூஜை பண்ணிக்கிட்டு வாங்க என்று கருடாழ்வார் சொல்கிறார்.

* காலகண்டனும் ஆதிசேஷனும் சிவனை பூஜை பண்ணி ஒருவர் வைகுண்டத்துக்கும்,  ஒருவர் கையிலாயத்தும்,  போனதாக ஐதீகம்.

* இரண்டாம் யுகத்தில் வாசுகி நாகம் பூஜித்த ஸ்தலம்.

* இந்த அம்பாள் பூஜை - எதற்காக? பாற்கடலை கடையும் போது மேருமலையை மத்தாகவும், வாசுகி என்ற நாக தேவதையை  கயிறாகவும் - தேவர்களும், அசுரர்களும் உபயோகப்படுத்தனாங்க.

* அப்படி அமிர்தம் எடுக்க பயன்படுத்துகையில், காயம்பட்டது. 

*  காயம் ஆறாத சமயத்தில் - சக்தி இழந்து காயங்கள் மறையாத சமயத்தில் இருக்கும் போது, அந்த வழியாக நாரத முனிவர் வந்து - அம்மா! நீங்க இங்க இருக்கீங்களே?  உங்களுக்கு நாகலோகத்துக்கு போகக்கூடிய சக்தி ஏன் போச்சு,  அப்படின்னு கேட்கும் போது, எனக்கு என்னுடைய காயங்கள் மறைந்து சக்தி கிடைத்தால் மட்டுமே செல்ல முடியும். அப்படின்னு சொல்றாங்க!! அதற்கு பிராயசித்தமாக நாகபூண்டி சிவனை வழிபட சொல்ல, அம்பாளும் - பக்தி பூர்வமாக - சுவாமியே மனதார வழிபட அவங்க மேனியில் இருந்த காயங்கள் மறைய வேண்டும் என்று சுவாமிக்கு பூஜை பண்றாங்க.  அவங்களுக்கு, அந்த மேனியில் இருந்த காயங்கள் மறைந்து,  எல்லா சக்தியும் கிடைத்து,  இங்கிருந்து நாகலோகத்துக்கு ராணியாக வாசுகி என்ற நாகத்தோடு அம்பாள் ஆனவர் சென்றார்.

*  மூன்றாவது யுகம் திரேதா யுகம் - எட்டு நாகங்கள். பூஜை பண்ண விசேஷமான ஸ்தலம் -  

* அனந்தாத நமஹ வாசுகினே நமஹ - தட்சிண மஹ - கார்கோடக நமஹ சங்க பாலாத் நமஹ - குலி காத நமஹ - பத்மாத் நமஹ - மஹாபத்மா நமஹ - இந்த எட்டு நாகங்கள் சிவபெருமானை வணங்கி, சிவன் மேனியிலேயே இருக்கக் கூடிய பாக்கியம் பெற்றனர்.

* நான்காவது யுகத்தில்,  பிரயங்கராங்கேஸ்வ இரண்டு முனிவர்கள்,  பாம்பினார் சாபம் அடைந்து பாம்பாக மாறி பூஜை பண்ணப்பட்ட ஸ்தலம்.

* ஊர் பெயர் பெரிய நாகப்பூண்டி. அது நுழையக் கூடிய வாயில் சின்ன நாகப் பூண்டி.

*  இரண்டு கிராமம் - பெரிய நாகம் - சின்ன நாகம் இரண்டும் காலை மாலை பூஜை பண்ணிட்டு வரும்போது சித்திரை மாதம் வளர்பிறை அஷ்டமி திங்கட்கிழமையில் சுவாமியாகப்பட்டவர் ஒரு பூஜை பண்ணும்போது அவங்க பூஜை, பண்ணிட்டு வராங்க. திங்கட்கிழமை ராகு காலத்தில் அஷ்டமி நவமி காலத்தில், சிவபெருமான் மனமகிழ்ந்து, அவருக்கு எல்லாவிதமான சகல சம்பத்துகளும் கொடுத்த விசேஷமான ஸ்தலம்.

* ராகு கேது -  சர்ப்ப தோஷங்கள் விலகக்கூடிய விசேஷமான ஸ்தலம் .

* திருமணம் - குழந்தை பாக்கியம் அருளக்  கூடிய விசேஷமான ஸ்தலம்.

* திங்கள் கிழமை ராகு காலத்தில், 7.30 முதல் 9 மணிக்குள்,   ராகு கால பூஜையானது சிறந்த முறையில் செய்யப்பட்டு,  அனைத்து அன்பர்களுக்கும் கால சர்ப்ப தோஷம் - சர்ப்ப தோஷம் - ராகு கேது தோஷங்கள் விலகுவதற்காகவும் - குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காகவும்,  பரிகார ஸ்தலமாக - பிரார்த்தனை ஸ்தலமாக விளங்கக் கூடிய விசேஷமான ஸ்தலம் .

* ஆலய நிர்மாணம், 750 வருடங்களுக்கு முன்பு, கிருஷ்ண தேவராயர் ராஜா மூலம் கட்டப்பட்டது.

* சுவாமி எப்படி கிழக்கு நோக்கி இருக்கிறாரோ, அதே மாதிரி அம்பாளும் கிழக்கு நோக்கி இருக்கக்கூடிய சிறப்பு.

* சுவாமி நாகேஸ்வரர்,  அம்பாள் நாகவல்லி,  ஊர் பெயர்: நாகப்பூண்டி, என  மூன்றுமே நாகத்தினால் அமையக் கூடியது ஒரு சிறப்பு .

* இந்த ஆலயத்தில் ஒரு சிறப்பு யோகம் - போகம் - வீரம்,  மூன்று சக்தியும் தரிசனம் பண்ணக்கூடிய விசேஷமான ஆலயம்.

* சிவபெருமானை,  சக்தி தேவி,  நமச்சிவாயா என்ற பாராயணம் பண்ணக்கூடிய ஆலயம். 

* நல்ல ஞானங்கள் நல்ல விதமான புத்தி கொடுக்கக்கூடிய அம்பாள்.

*  சிவபெருமான் பக்கத்திலேயே வைக்கக்கூடிய சக்தி போக சக்தி.

* உலகமெல்லாம் செல்வங்கள் கொடுக்கக்கூடிய விசேஷமான அம்பாள் போக சக்தியாக விளங்கக்கூடியது.

* சிவபெருமான் எப்படி கிழக்கு நோக்கி தனியாக சன்னதியாக இருக்காரோ, அதே மாதிரி சன்னதி கருவறையிலிருந்து வீர சக்தியாக - மனுஷனுக்கு தேவையான 16 செல்வங்களையும் அருள்பாலிக்கக்  கூடிய விசேஷமான ஸ்தலமாக விளங்கக்கூடியது தான் - இந்த நாகவல்லி சமேத நாகேஸ்வர சுவாமி ஆலயம்.

*  இந்த ஆலயத்தினுடைய சிறப்பு, கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷங்கள், ராகு கேது தோஷங்கள்,  நிவர்த்தி ஸ்தலம்.

*  குழந்தை பாக்கியமும் மற்றும் திருமணத்தடை விலகக் கூடிய விசேஷமான ஸ்தலம்.

* வரக்கூடிய விசேஷமான ஆருத்ரா நட்சத்திரம் - திருவாதிரை விசேஷமான நட்சத்திரம் - சிவபெருமான் கிட்ட எல்லா விதமான பலன்களும் பெறக்கூடிய விசேஷமான நாளாகப்பட்டது.

*  திருவாதிரை களி அப்படின்னு சொல்லக் கூடிய  சுவாமிக்கு - கடவுளுக்கு திருவாதிரை களியாகப்பட்டது படைக்கப்பட்டு, ஒரு வாயாவது அது வாங்கி சாப்பிட்டால் உன்னதம் - என்று பழமொழியில் சொல்லி இருக்காங்க

* அந்த திருவாதிரை நட்சத்திர நாளில்,  சிவபெருமான் ஆலயத்திற்கு நடராஜப் பெருமானை தரிசனம் பண்றது ரொம்ப ரொம்ப விசேஷமான பலன்கள் கொடுக்கக்கூடியது.

* முக்கியமாக அரக்கோணத்தின் பக்கத்தில், நமக்கு ரொம்ப அருகாமையில் இருக்கக்கூடிய  திருஆலங்காடு அப்படின்னு சொல்லக் கூடிய காரைக்கால் அம்மையாருக்கு முக்தி கொடுத்த விசேஷமான ஸ்தலம்.

* ரத்ன சபையில் சுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனையாகப்ப ட்டது,  தரிசனமாகப்பட்டது பட்சி ராஜனுக்கு கொடுக்கக்கூடிய விசேஷமான காட்சி - அனுக்கிரக தரிசனத்தைக் கண்டு களிக்குமாறு அனைத்து அன்பர்களும் கேட்டுக் கொள்கின்றேன்.

* இதுவரையும் வாய்ப்புக் கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Comments