ரிஷபம், சிம்மம் லக்னக்காரர்களுக்கு இந்த வருடம் பதவி உயர்வு கிடைக்கும்?

 

ரிஷபம், சிம்மம் லக்னக்காரர்களுக்கு இந்த வருடம் பதவி உயர்வு கிடைக்கும்?

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்.

- ALP ஜோதிடர்.

 


தொகுப்பாளர்:

 

வணக்கம் மேம். இப்ப ஒருத்தர் கேள்வி கேட்டு இருக்காரு எந்த லக்ன காரங்களுக்கு பதவி உயர்வு கண்டிப்பா  கிடைக்கும்? அத சொல்ல முடியுமா மேம்.

 

உமா வெங்கட் மேம்:

        

கண்டிப்பாக சொல்ல முடியும். 12 பாவகங்களில் 12 ராசி கட்டங்களிலும் பதவி உயர்வு, இந்த கிரகம் அமர்ந்தால் கண்டிப்பாக கிடைக்கும் என்பதை நாம சொல்ல முடியும்.  

 

இப்ப உதாரணமாக ரிஷப லக்னம் அட்சய லக்னமாக யாருக்கு போகுதோ அவங்களுக்கு தற்போது பதவி உயர்வுக்கு உண்டான காலமாக அமையுமானா கண்டிப்பாக அமையும்.

 

ரிஷப லக்னம் அட்சய லக்னம் யாருக்கு போகுதோ இந்த பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். நீங்க இதற்கு முன்னாடி  செய்ததோட பலன்தான்  இந்த  பதவி உயர்வு.

 

இன்னைக்கு தான் ஜாயின் பண்ணி இருக்கேன். நாளைக்கு பதவி உயர்வா என்ற கேள்வி கண்டிப்பாக வேண்டாம்.

 

கடந்த இரண்டு வருஷமாக நான் அதற்காக வெயிட் பண்றேன் கிடைக்கல. இந்த வருடத்திலாவது 2026, 2027ல எதிர்பார்க்கிறேன் அதற்கு உண்டான காலம் எனக்கு தற்போது அமையுமா என்று கேள்வி கேட்டீங்கன்னா கண்டிப்பாக அமையும் என்பதை இந்த இடத்தில் பதிவு பண்ணலாம்.

 

சிம்ம லக்னம் அட்சய லக்னமாக  போகிற நண்பர்களுக்கு தற்போது பதவி உயர்வு அனுகூலமாக இருக்கும்.

 

இதுல என்ன ஒரு ட்விஸ்ட் என்றால் ஒரு பிளேஸ் மாத்திட்டு மறுபடியும் ஒரு மாற்றம் என்பது இந்த சிம்ம லக்னம் அட்சய லக்னமாக போறவங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும் சொல்லலாம்.

 

சிம்ம லக்னத்திற்கு 11ம் பாவகம் என்பது புதன் பகவான். அவர் தற்போது அவருடைய ஜாதகத்தில் எங்கு இருக்கிறாங்கன்னு பார்க்கணும். இன்று அவர் முற்பட்டால் கண்டிப்பாக பதவி உயர்வும் லாபம் சம்பந்தப்பட்டதும் எதிர்பாராத ஒரு யோகமும் அவர் வாழ்க்கையில் கண்டிப்பாக உண்டு சொல்லலாம்.

 

ஆனா அவர் முயற்சி மட்டும்தான் கொஞ்சம் பண்ணனும். அமைதியாக இருந்தார்கள் என்றால் எந்த ஒரு செயலும் நடக்காது. சிம்ம லக்னக்காரர்களுக்கு ஒரு செயல் என்பது  தன்னை தேடி வரவேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கும். காலம் கடந்து வருவதை விட உரிய காலத்தில் ஒரு செயலை பெற்றுக் கொள்வது என்பது சிறப்பாக இருக்கும்.

 

தைரியமா கேளுங்க உங்களுக்காக அதற்குண்டான காலம் மிக விரைவில் என்பதை மட்டும் இந்த இடத்தில் பதிவு பண்ணலாம். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/E9EV0FyoiGA?si=xuwF4H6LjL0QiIe8

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR