வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR

 


IBC பக்தி நேயர்களுக்கு வணக்கம். நான் ஸ்ரீ விக்னேஸ்வரி சீனிவாசன். இன்று நம்மோடு இணைந்துள்ள சிறப்பு விருந்தினர் உண்மையாகவே இவர் சிறப்பு விருந்தினர் அப்படின்னு தான் சொல்லணும் ALP அப்படின்னு சொல்லக்கூடிய அட்சய லக்ன பத்ததி மூலமா நிறைய ஜோதிடர்களை வீட்டுக்கு ஒரு ஜோதிடர் அப்படிங்கற மாதிரி நிறைய ஜோதிடர்களை உருவாக்கிக் கொண்டிருக்க கூடிய ALP பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் இன்று நம்மோடு இணைந்து இருக்கிறார்கள். வணக்கம் ஐயா.

ஐயா :

வணக்கம்.

தொகுப்பாளர் :

ALP அப்படிங்கும் போது நீங்க நிறைய பேர உருவாக்கி இருப்பீங்க. எல்லாருக்குமே இப்ப தெரியும் நிறைய ALP அஸ்ட்ராலஜர்ஸ் இருக்காங்கன்னு. இந்த ஒரு பாதை எப்படி போய்க்கிட்டு இருக்கு ஐயா.

 ஒவ்வொருவருடைய பாதையும் வெவ்வேறு விதமானது:

 ஐயா :

எல்லாரும் எல்லாருடைய பாதையும் தெரிஞ்சுக்கணும்னா இந்த ALP கிற ஒரு பாதை உருவானது. ஏன் அப்படின்னா, உங்க பாதையை நீங்க தெரிஞ்சுக்கணும். என் பாதையை நான் தெரிஞ்சுக்கணும். உங்க பாதைக்கு நானும் என் பாதைக்கு நீங்களோ பதில் சொல்றது நடக்க முடியாதுல.

 உங்க செப்பல் நீங்க போட்டு நடந்தா தான் அழகா இருக்கும். என் செப்பல் நான் போட்டு நடந்தா அழகா இருக்கும். ஒவ்வொருவருடைய பாதையும் வெவ்வேறு விதமானது.

 ஒரே ஜாதகம் இரண்டு விதமான நிகழ்வுகள் இருக்கு. அதுக்கு தகுந்த மாதிரி தான், நான் படிச்ச என்னுடைய வாழ்க்கையில நான் இன்னைக்கு முடிவெடுக்கலாமான்னு உங்ககிட்ட கேட்க முடியாது பாருங்க.

 காலையில 9:00 மணிக்கு ஒரு பொருள் வாங்கணும். இது எனக்கு தேவையா? தேவையில்லையா? எனக்கு தேவை இல்ல இந்த பொருள். வாங்கினால் எனக்கு விரையம் ஆகும். அதனால இந்த பொருள் வாங்க வேண்டியது இல்ல. நான் தான் முடிவெடுக்க முடியும். நான் உங்ககிட்ட போன் பண்ணா உங்க அப்பாயிண்ட்மெண்ட் ஒரு வாரம் கழிச்சு 10 நாள் கழிச்சு கொடுத்தீங்கன்னா நான் எங்க போய் வாங்குறது.

அதுக்குள்ள ஒரு பத்தாயிரம் விரையம் ஆயிடும். அதனால எல்லாரும் ஜோதிடம் படிக்கணும் சொன்னதுக்கு உண்மையிலேயே அவரவரோட பாதை நல்லாவே தெரிஞ்சுக்கணும்.  அந்தப் பாதையில ALP பாதை ரொம்ப சிறப்பாக போயிட்டு இருக்குகிறது தான் நான் சொல்ல முடியும்.

 வாஸ்துக்கும் தீர்வு அப்படிங்கறது உண்டா?

 தொகுப்பாளர் :

கண்டிப்பா. ALP அப்படிங்கற ஒரு விஷயத்துல ராசிய பற்றி லக்னம் பற்றி இந்த மாதிரி கேள்விகள் நிறைய கேட்டிருப்பாங்க. வாஸ்து அப்படிங்கறதுமே இந்த ALP முறையில வாஸ்துக்கும் தீர்வு அப்படிங்கறது உண்டா?

ஐயா :

இப்ப ஜாதகத்துக்கு தான் வாஸ்து அப்படிங்கறத நம்ம ALP ல சொல்ல முடியும். இப்ப சென்னையில மிக பிரபலமான ஒரு அரசியல்வாதின்னு வச்சுக்கோங்க. அவங்க இன்னைக்கு இல்ல. அவங்க வீட்டை வந்து பார்த்து பார்த்து கட்டினாங்க. தமிழ்நாட்டுல இந்தியால உலகத்துல இருக்கக்கூடிய வாஸ்து நிபுணர்கள் கொண்டந்து வச்சு கட்டினாங்க. அந்த ஒரு தனிப்பட்ட நபர் இல்லைனதும் அந்த வீடு பூட்டி இருக்கு. அந்த வாஸ்து எங்க போச்சு.

 என்னுடைய கேள்வி அங்க இருந்து தான் வந்துச்சு. நானும் வாஸ்து பார்த்து நான் பத்து வருடத்துக்கு மேல நிகழ்வுகள் என் மனசுக்குள்ள இருந்தாலும், ஒரு கேள்வி வரும்ல. எல்லாருக்குமே ஒரு கேள்வி, ஒரு விடை தெரியாத இடத்துல தான் நிறைய விதிகள் பிறக்கும் அப்படிங்கறது தான் என்னுடைய ஆச்சரியமான நிகழ்வு.   

அப்ப பார்க்கும்போது இவ்வளவு நாளா வந்து ஒரு ஜாதகர் இருக்கும் போது லட்ச லட்சமா கோடி கோடியா அதிகாரம் இருந்துச்சு , ஆட்சி இருந்துச்சு , செல்வ செழிப்பு, மகாலட்சுமி வந்து எப்பவுமே செல்வம் அவ்வளவு செழிப்பா இருந்தது அந்த வீட்ல.

 ஒரு நபர் இல்லைன்ன உடனே அந்த வாஸ்து எங்க போச்சு? வேற நபர் அந்த இடத்தில போய் உட்கார்ந்து இருக்கலாம்ல. வாஸ்து வந்து ஒரு இடத்தில அந்த இடத்துல இருந்துச்சுன்னா, அந்த இடத்துல நான் உட்கார்ந்து இருந்திருக்கலாம்.  வேற ஏதோ ஒரு அரசியல் தலைவர் அந்த இடத்தை எடுத்து இருக்கலாம்ல. இன்னைக்கு வரைக்கும் வீடு பூட்டி இருக்கு.

 அப்பதான் எனக்கு ஒரு கேள்வி வந்துச்சு. அப்ப இந்த ஜாதகத்தை தான் முன்னுரிமை குடுக்கணும். அப்போ அந்த ஒரு ஜாதகர் இல்லைனதும் அந்த வீடோட வாஸ்து மொத்தமும் அப்ப நான் என்ன பண்றேன் சரி இது வந்து ALP க்கு லக்னம் மாறும்போது கண்டிப்பா வாஸ்துவோட தன்மைகளும் மாறுது அப்படிங்கறத முதல் நிகழ்வா எடுத்துக்கிட்டு  ஆய்வு  பண்ண  ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் ஒவ்வொரு படிப்படி நிலைகளா அத நான் உணர ஆரம்பிச்சது.

இப்ப நீங்க, சார் இது வந்து வீடு மாறுமா? திசைகள் மாறுமான்னு?  கேட்காதீங்க.

இப்போ எனக்கு மேற்கு பார்த்த வீடு அமையனும்னு இருக்குங்களேன், எனக்கு பொருத்தம் இல்லாத திசையில தான் நான் வீட்டில் உட்காருவேன்னு என் தலையெழுத்து இருக்கு.  என் ஜாதகம் நான் பொருத்தம் இல்லாத வீடுதான் வாங்குவேன்.

எனக்கு எப்ப லக்னம் மாறுதோ, இல்ல அதுக்கான தன்மைகள் எப்ப என் ஜாதகத்துல மாறுதோ, அப்பதான் நான் என்ன பண்ணுவேன், இல்ல இல்ல நான் டிராவல் போறேன் சிங்கப்பூர்ல ஒரு மூணு வருஷம் இருக்க போறேன் சொல்லிட்டு என் ஜாதகம் மாறும்போது நான் அந்த வீட்ல இல்லாம வேற வீட்டுக்கு மாறுவேன். அப்போ பார்த்தீங்கன்னா நான் மேற்கு பார்த்த வீட்டிலேயே போய் உட்காருவேன்.

தொகுப்பாளர் :

அப்ப நம்ம வாஸ்து நிபுணர்களை போய் இதுக்காக எனக்காக இது பண்ணி குடுங்க அப்படி எல்லாம் நாம கேட்க வேண்டியதே இருக்காதுங்காளா?

மேஷ ராசி :

ஐயா :

இருக்கும். நீங்க இப்போ உதாரணத்துக்கு நல்ல லக்னம் அமைதுன்னு வச்சுக்கோங்களேன். இப்போ உங்களுக்கு மேற்கு பார்த்த வீடு அமையனும்னு இருக்கு.

 இப்போ உதாரணமாக மேஷ ராசினு வச்சுக்குவோம். ஒரு ராசியை வச்சி பேசுவோம் இல்ல மேஷம் லக்னம் ALP யா போகுது அப்படின்னு வச்சுக்குவோம். அவங்களுக்கு வடக்கு பார்த்த திசை நல்லா இருக்கும். ஆனா அவங்களுக்கு வீடு அமைஞ்சது பார்த்தீங்கன்னா அமைப்பு வந்து எப்படின்னா, தெற்கு பார்த்த வீடு அமைஞ்சு போச்சு. நாங்க என்ன பண்ணுவோம், இப்ப சில பேர் என்ன பண்ணுவாங்க, ஒரு வாசல் இல்ல ரெண்டு வாசல் வைங்கன்னு நாம சொல்லுவோம் சில இடத்துல.

 நாங்களும் அதே மாதிரி என்ன சொல்லுவோம் இப்போ தெற்கு வடக்கு வாசலை மாத்துவோம். அந்த வீட்டில வாசல் என்ன பண்ணுவோம் இல்ல சார் நான் அப்பார்ட்மெண்ட்ல இருக்கேன். அப்போ ஒன்னும் பண்ண முடியாது. அந்தப் பத்து வருடத்திற்கு அந்த ஜாதகர் அந்த வீட்ல இருக்கக்கூடிய நிலை முழுமையாக எதிர்பார்த்த மாதிரி இருக்காது.

 தொகுப்பாளர் :

 இல்லன்னா வேற வீடு மாறனும்.

 ஐயா :

 வேற வீடு மாதிரி தான் ஆகணும். அதை உடைக்கிறதுனால, இப்ப நாம அப்பார்ட்மெண்ட்ல இருந்தா எப்படி உடைக்க முடியும்? முடியாது. அப்ப என்ன? முழுமையா அந்த வீடு எனக்கு பொருந்தாது. அவ்வளவுதான். வெளியில இருந்தா என்னுடைய நான் ஒரு ஆபீஸ் போறேன். நான் வெளியே போறேன். அது நல்லா இருக்கா? நல்லா இருக்கும். அதுதான் என்னுடைய விஷயம்.

 இல்ல சார் எனக்கு மேஷ ராசி. எனக்கு வடக்கு பார்த்த வாசல் இருக்குது சார். உங்களுக்கு அந்த கிரகங்கள் அமைப்பு நல்லா இருந்துச்சுன்னா வடக்கு பார்த்த வீடு மட்டும் தான் அமையும். சூப்பரா இருக்கும் அந்த வீடு. பத்து வருடத்திற்கு ஓகோனு ஓடுவார்.  சார் இப்ப நீங்க மேஷ லக்னம் முடிஞ்சு. இப்போ உதாரணமா 25 வயசுல இருந்து 36-வது வயசு வந்துருச்சு.

ரிஷப லக்னம் :

இப்ப ரிஷப லக்னம் வந்துருச்சுன்னு சொல்றீங்க மூர்த்தி. இப்ப என்ன பண்ணுவார்னா? இப்போ அதே வீடு தான் வீடு மாறல வாஸ்து மாறல அந்த வடக்கு பார்த்த வாசல என்ன பண்ணுவாரு? அப்படியே மாறி இவர் என்ன பண்ணுவாரு? ஒரு தவறான முடிவு எடுப்பார். அந்த வீட்டில. அந்த வீட்ல இருக்கிற காலம் முழுதும் விரையம் பண்ணிக்கிட்டே இருப்பார் பத்து வருடத்திற்கு.

தொகுப்பாளர் :

 அப்போ வீட்டில யாருக்காவது மேஷ லக்னம் வந்தா அவங்க பெயருக்கு வீட்டை மாற்றி விடலாமா?

ஐயா :

மாத்திடலாம். ரொம்ப நல்லது. அப்படி பண்ண மாட்டாங்களே. இந்த கிரகம் அமைப்பு விட்டால் தானே மாத்துவாங்க. இப்ப சூரியன் நல்லா இருக்குன்னு வச்சுக்கோங்களேன். இப்ப ரிஷப லக்னத்திற்கு சூரியன் நல்லா இருந்துச்சுன்னா கண்டிப்பா அந்த வீட்டை என் பெயர் இல்லாமல் என் நண்பர் பெயருக்கோ, என் வைஃப் ஓட பெயருக்கோ, என் பசங்களோட பெயருக்கோ, இல்ல அப்பாவோட பெயருக்கோ, அம்மாவோட பெயருக்கோ, யார் பெயருக்கோ மாத்திக்கலாம்.

 என் கிரகம் நல்லா இல்லனா நான் மாத்தவே மாட்டேன். பத்து வருடத்திற்கு விரையம் பண்ணிக்கிட்டே இருப்பார் அந்த வீட்ல. அப்பதான் அத உடைப்பேன்.  அப்பதான் அது திருப்புவேன். இங்குட்டு ஸ்டார் வைப்பேன். ஒன்னும் நடக்காது.

 நீங்க எத்தனை வீடுனாலும் எடுத்துக்கோங்க. லட்சம் வீடுனாலும் எடுத்துக்கோங்க. நடக்கவே நடக்காதுங்க.

 என் ஜாதகம் என்ன பிரகாரம் இருக்கோ, இப்போ அதுக்கு நிறைய கால்குலேஷன் இருக்கு. ஏன்னா இது வந்து நான் சொன்னது மேலோட்டமா சொல்லி இருக்கேன். இல்ல சார் மேஷ லக்னம் எனக்கு வடக்கு பார்த்த வீடு சார். எனக்கு சந்திரன் நல்லா இருக்குன்னு  சொன்னீங்கன்னா, சந்திரன் எப்படி நல்லா இருக்குன்னு சொல்றீங்க? இப்ப இதுநாள் வரைக்கும், சந்திரன் உச்சம் ரிஷப ராசியில் உச்சம்னு சொல்லிட்டோம். இது யாருக்குனா ஒரு ஜோதிடருக்கு புரியும். இப்ப சந்திரன் உச்சம்னு சொல்றோம்னு வச்சுக்கோங்களேன். இப்போ உச்சம்னா நீங்க எந்த கணக்குல உச்சம்னு சொல்றோம்ல. இப்ப நாங்க என்ன சொல்றோம்னா, அதுக்கு ஒரு கால்குலேஷன் பண்றேன். இந்த சந்திரனுடைய வேல்யூ 25 தான் இருக்குன்னா அந்த வீடு எதிர்பார்த்த மாதிரி இருக்காது. அங்க எனர்ஜியே இருக்காது.

தொகுப்பாளர் :

என்ன சார்? இப்படி பயமுறுத்துறீங்க.

ஐயா :

ஆமாங்க. நீங்க எத்தனையோ வீடு வாஸ்து மாத்துனவங்க எத்தனையோ பேர் கேளுங்க. இந்த வீடியோ பாத்துட்டு இருக்கவங்க கேளுங்க. இந்த வீடியோவுக்கு பின்னாடி கமெண்ட் பண்ண சொல்லுங்க. நான் வீடு வாஸ்து மாத்துன நான் நல்லா இருக்கேன்னு சொல்ல சொல்லுங்க. ஒரு 100 ல ஒரு 60 பேருக்கு ஓகே, 40 பேருக்கு ஏன் நீங்க சரி பண்ண முடியல?

தொகுப்பாளர் :

அப்ப என்ன சொல்லுவாங்கன்னா நாங்க சொன்ன கரெக்சன் அவங்க ஒழுங்கா பண்ணல அதனாலதான் அப்படி இருக்கும் சொல்லுவாங்க.

காற்றோட்டம் :

ஐயா :

நீங்க கரெக்ஷன் ஒன்னுன்னா பண்ணனும்னா பண்ண முடியாதுங்க. நான் ஒரு கோயிலுக்கு போக சொல்றேன். நீங்க போயிட முடியுமா? போக முடியாது. உங்க நேரம் சரி இல்லன்னா, நீங்க கண்டிப்பா 100 பேர் இல்ல நான்தான் சொல்றேன்ல நீங்க அது எப்படி பண்ண முடியும்.

இவருக்கு வீடு மாத்தவே முடியாது. வாஸ்து பார்க்கவே முடியாதுன்னா இவர் பாக்கவே மாட்டார். பத்து வருஷம் என்ன பண்ணுவாரு? எனக்கு இந்த வீட்ல உட்கார்ந்தா தூக்கமே வரலேன் பாரு. ஏங்க இந்த வீட்ல இருந்தா இவருக்கு எப்படிங்க தூக்கம் இருக்கும்.

 ஒன்னும் இல்ல வீடு அடசலாக இருக்குன்னு வச்சுக்கோங்க. காத்தோட்டமே இல்ல அந்த இடத்துல. அவருக்கு எப்படி தூக்கம் இருக்கும். ரூம பூட்டி வச்சா எப்படிங்க தூக்கம் இருக்கும். அது மாதிரி தான் வாஸ்து. ஆனா ஜன்னலை திறக்கவே மாட்டார்.

 நீங்க ஒன்னும் இல்ல. இதே வந்து மேஷ ராசிக்காரங்க.  உதாரணமா தெற்கு பார்த்த திசையில வீடு அமஞ்சு போச்சு. அவர் ரூம என்ன பண்ணுவாரு ஜன்னல் திறக்கவே மாட்டார். நீங்க போய் பாருங்க. ஜன்னலை திறந்து வச்சா போதும். ஒன்னு காற்றோட்டம். அடர்த்தின்னு சொல்லுவோம். நாங்க என்ன சொல்லுவோம் அதனா அடர்த்தின்னு சொல்லுவோம்.

இப்போ வீடு முழுக்க சாத்தி, ஜன்னலே இல்லாத வீடு எப்படி இருக்கும்.

 தொகுப்பாளர் :

ஒரு மாதிரி ரொம்ப இறுக்கமா இருக்கும்.

 ஐயா :

இறுக்கமா இருக்கும். பத்து நிமிஷம் பேசின உடனே மூச்சு அடைக்கிற மாதிரி இருக்கும். எனக்கு என்னமோ வித்தியாசமா இருக்கு. எனக்கு ஏதோ தலைவலி வர்ற மாதிரி இருக்கு.

 வேற என்ன இதுதான் வாஸ்து. அந்த வீட்டுக்கு போனங்க எனக்கு என்னமோ வித்தியாசமா இருக்கு. வீடு பூட்டியே வச்சிருந்தா அப்புறம் எப்படி இருக்கும்? இதுதான் வாஸ்து.

 தொகுப்பாளர் :

 காற்று , வெளிச்சம் ரெண்டுமே வரணும்.

 ஐயா :

 வரணும் வரணும். வெளிச்சம் வந்ததுனாலே ஆட்டோமேட்டிக்கா அங்க காற்றோட்டம் இருக்கும். இதெல்லாம் என்னன்னா அடிப்படையா பேஸிக்கா நாங்க சொல்ல கூடியது.

 ஃபர்ஸ்ட் என்னுடைய ALP லக்னம் என்னவோ அதுக்கு வீடு நல்லா இருக்கணும். வாஸ்து நல்லா இருக்கணும். என்னுடைய லக்னமும் நல்லா இருந்து அந்த கிரக அமைப்பு நல்லா இருந்ததுனா எனக்கு அந்த வாஸ்து அமைப்பு நல்லா இருக்கும். இல்லேன்னா இருக்காது.

 தொகுப்பாளர் :

இப்போ என்னுடைய பெயர்ல தான் அந்த வீடு இருக்கு அப்படின்னா என்னுடைய லக்னம் நல்லா இருக்கணும். அதுக்கு தான் இந்த திசையில் இருக்கணும் அப்படின்னு சொல்றீங்க. மேஷ லக்னத்திற்கு இப்ப வடக்க பார்த்து இருந்தால் நல்லா இருக்கும்னு சொல்றீங்க. தெற்கு பார்த்து இருந்தால் நல்லா இருக்காது அப்படின்னு எடுத்துக்கலாமாங்க ஐயா.

 ஐயா :

 கண்டிப்பா. இப்ப மேஷ லக்னத்திற்கு நம்ம பேசணும் அப்படின்னா உதாரணத்துக்கு அவங்க வீட்ல கிச்சன் எப்பயுமே மாத்தி தான் வச்சிருப்பாங்க.

 நீங்க எவ்ளோ பெரிய வீடா இருக்கட்டும் கிச்சன் சம்பந்தப்பட்ட விஷயமா இருக்கட்டும், அடுத்தது நில அமைப்பு இருக்குல, பூமிக்கு கீழ இருக்குல நில அமைப்பு அது சரி நேராவே இருக்காது. அதாவது சதுரமா இருக்கணும் அப்படிங்கறதுதான் நம்ம அமைப்பு. ஆனால் சதுரமா இருக்காது. ஒன்னு தென் மேற்கோ இல்ல வடகிழக்கோ இழுத்துகிட்டு தான் இருக்கும்.

 நீங்க யார் வீடுனாலும் எடுத்துக்கோங்க, மேஷ ராசி எத்தனை பேர்னாலும் எடுத்துக்கோங்க லட்சம் பேர் கூட எடுத்துட்டு வரச் சொல்லுங்க. ஏன்னா இதெல்லாம் அமைப்பு. சார் ரொம்ப நேர்ல வச்சிருக்கேன். அந்த மனை அருங்கோணமாக தான் இருக்கும். இல்ல ஆறு ஏழு எட்டு அப்படித்தான் இருக்கும். அது திக்குக்கே கிடையாது.

 ஏதோ சதுரமாவோ, செவ்வகமாகவோ , ஒரு வட்டமா கூட இருந்தா கூட இருக்கட்டுமே. வட்டமா கூட இருக்காது.  ஏன்னா நீங்க மேஷ ராசியின் எடுத்தாலுமே அதுக்கு அவ்வளவு.

 மேஷ ராசி , மேஷ லக்னம் இது ரெண்டுக்குமே இது பொருந்தும்.

 இல்ல சார் மேஷ ராசிக்கு கிச்சன் மட்டும் தான் பொருந்தாதா வேற ஏதாச்சும் அந்த வீட்ல இருக்குமா? அப்படின்னா நிலம் சம்பந்தப்பட்டது பூமி சம்பந்தப்பட்டது மனை சம்மந்தப்பட்டது மனைக்கு கீழ இருக்கக்கூடிய பிரச்சனைகள் இருக்குதா இருக்குது.

 ஏன் அப்படின்னா மனைக்கு கீழே இப்ப கிணறு சம்பந்தப்பட்டது. எலும்பு சம்பந்தப்பட்டது. அதுக்கு கீழே ஈர்ப்பு விசைகள்னு சொல்றோம்ல அந்த எனர்ஜின் சொல்றோம்ல அது சுத்தமா இருக்காது. அந்த மனையை பாத்தீங்கன்னா சும்மா டிரையா தான் இருக்கும்.

 அந்த இடத்தை வச்சுக்கிட்டு, நீங்க பணம் வரணும் பணம் வரணும் அப்படின்னா எப்படி வரும்? அப்ப மேஷ ராசிக்காரங்க என்ன பண்ணனும் என் பேர்ல நான் வீடு வாங்க மாட்டேன்.

 அப்ப மேஷ ராசி உங்க பேர்ல இல்ல வீட்டுக்காரம்மா பேரு நல்லா இருக்குங்க இல்லங்க உங்க அப்பா பேரு நல்லா இருக்கு உங்க அம்மா பேரு நல்லா இருக்கு அதுல வாங்கிருங்க. அதான் அந்த இதுல யாருக்கு பவர் நல்லா இருக்கோ அந்த இதுல வாங்க சொல்லிடுவோம்.

 சரி இது பத்து வருஷம் தானே இருக்கும். பத்து பத்து வருஷம் பாப்போம் 20 வருஷத்துக்கு இந்த வீடு ஓடும். அதோட நிப்பாட்டிக்குவோம். இந்த மாதிரி எல்லாம் நாங்க பார்க்க முடியும்.

கிழக்கு திசை நல்லா இருக்கும் :

தொகுப்பாளர் :

இப்ப ரிஷப ராசி ரிஷப லக்னக்காரர்களுக்கு எந்த ஒரு திசை பார்க்க இருந்தா நல்லா இருக்கும்.

ஐயா :

கிழக்கு திசை நல்லா இருக்கும். கிழக்கு திசை வச்சு தான் அப்படித்தான் அமையும். நாமெல்லாம் என்ன பண்ணுவோம் நம்ம கிரகங்கள் நல்லா இல்லைன்னு வச்சுக்கோங்களேன் அது தெற்கு பார்த்த திசையில வந்து உட்கார்ந்துகிட்டு எனக்கு மட்டும் நடக்க மாட்டேங்குது. இந்த உலகத்துல நான் மட்டும் எனக்கு வந்து இப்படியே சொல்லிக்கிட்டே இருப்பாங்க. இது எப்பவுமே இப்படித்தான் இருக்கும்.

 இவங்க சப்போஸ் தெற்கு திசைல இருந்தாங்கன்னா ஒரு சப்போர்ட் பண்ணும். வடக்கு திசையில் இருக்கவே கூடாது இவங்க. அதுதான் பெரிய ஆச்சரியம். ஆனா இவங்களுக்கு எல்லாமே ஆப்போசிட்டா தான் அமையும் . வீடே பார்த்தீங்கன்னா அப்படித்தான் இருக்கும்.

 ஆனா என்னன்னா இவங்க அந்த இருக்கக்கூடிய தன்மைகள் என்ன இருக்கும் இந்த ரிஷப ராசி ரிஷப லக்னம் அதோடையே அப்படியே அனலைஸ் பண்ணியே போயிடுவாங்க. அதுதான் பெரிய பிளஸ். எங்கிட்ட வாஸ்து குறைபாடு இருக்குன்னு சொல்லவே மாட்டாங்க. அவங்களுக்கு அது என்னன்னே தெரியாது அப்படி ஒரு பட்ட ராசி அது.

 தொகுப்பாளர் :

 மிதுனத்துக்கு ஐயா

நல்ல இடம் தான் :

 ஐயா :

மிதுனத்தைப் பொறுத்த அளவுக்கு எப்பவுமே வீடு மனை எப்பயுமே ஓரளவுக்கு அது வீடு இருக்கு ,வீடு இல்ல, வாடகை வீடா இருக்கு, இல்ல ஒத்திக்கு பிடிக்கிறேன். எந்த வீடா இருந்தாலும் அது ஓரளவுக்கு அது நல்ல இடமாதான் அமையும். எந்த இடமாக இருந்தாலும் வாஸ்து சம்பந்தப்பட்ட குறைபாடு இவங்க நீக்க முடியும்.

 இவங்களுக்கு போய் ஒரு பரிகாரம் சொல்றீங்கன்னு வச்சுக்கோங்க. மிதுன ராசி, மிதுன லக்னம் இப்போ உங்களுக்கு நல்லா இருக்குங்க. இந்த வீடு ரொம்ப இருட்டான வீடா இருக்கும். அந்த வீட்ல ரொம்ப சந்தோசமா இருந்துட்டு இருப்பாங்க. அதனால அவங்களுக்கு ரொம்ப பெரிய சப்போர்ட்டா இருக்கும். இவங்கள பொறுத்த அளவுக்கு அது கிராசா தான் மனை அமையும். இவங்களுக்கு வந்து நேராக வந்து தெற்கோ கிழக்கோ , மேற்கோ, வடக்கோ அமையாது.

 இவங்கள பொருத்த அளவுக்கு வட மேற்கு இல்ல தென்கிழக்கு இப்படித்தான் அந்த கோணலா தான் அந்த திசைகள் அமையும் மற்றபடி நேர அமையாது.

ஆனா இந்த மிதுனத்துக்கு நீங்க என்ன சொன்னாலும் ஓரளவுக்கு சரி பண்ற மாதிரி ஒரு சூழ்நிலை அவங்க உருவாக்கி விடுவாங்க.

 தொகுப்பாளர் :

ஓகே.  வாஸ்த்துக்கே டாப்  கொடுத்துடுவாங்க.

ஐயா :

அந்த ஒரு நாலு ராசிங்க பொதுவாவே வந்து தனுசு, மீனம் இந்த நாலு ராசிகளும், எப்பவுமே இந்த வாஸ்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தப்பிச்சுக்கிறதுக்கு அதிக வாய்ப்பு உண்டு.

 ஆனா இதுல வந்து உதாரணமா வந்து மிதுனத்தை சரி பண்ண முடியாது. ஆனா கன்னிய வந்து நீங்க சொன்னா அப்படியே கேட்டுக்குவாங்க. அதை மாற்ற முயற்சி பண்ணுவாங்க.

 தனுஷ பொருத்த அளவுக்கு மாத்துற மாதிரி நடிச்சுகிட்டு வாழ்ந்துருவாங்க. நீங்க சொன்னா சரியாதான் இருக்கு சார் அப்படிம்பாங்க ஆனாலும் மாத்தி இருக்க மாட்டாங்க. நீங்க கேட்டு பாத்தீங்கன்னா இந்த தனுசு ராசி ஆமா சார் நீங்க சொன்னீங்க செஞ்சுட்டேன் சார்.

 என்னையா இது அவர் செஞ்சே இருக்க மாட்டார். நீங்க ஒன்னும் இல்ல இந்த கலர் வந்து ஒரு ஒயிட் கலரும் ஒரு பிங்க் கலரும் லைட்டா யூஸ் பண்ணுங்க சார் உங்களுக்கு வீட்ல அப்படின்னு சொன்னோம்னு வச்சுக்கோங்களேன். பெயிண்ட் அடிக்க மாட்டார். ஆனா நல்லா இருக்குன்னு சொல்லுவார். ஆனா பெயிண்ட் அடிச்சிட்டீங்களான்னு கேட்டா. அடிச்சிட்டேன் சார். சரி பண்ற மாதிரி நடிச்சு இந்த தனுசு அப்படி வரும்.

 மீனம் :

மீனத்தைப் பொறுத்த அளவுக்கு எல்லா சூழ்நிலையும் தக்க வச்சிக்கும். அவங்க சரி பண்றது முயற்சி பண்ணுவாங்க. ஆனா பாதி பாதி செய்ய முடியும். ஆனா கொஞ்சம் மேனேஜ் பண்ணுவாங்க.

 ஆனால் நல்ல வாஸ்து அமைவது மீன ராசி. நூற்றுக்கு நூறு சதவீதம் நீங்க  யாராச்சும் மீன ராசி இருந்தாங்கன்னு வச்சுக்கோங்க அவங்க கிட்ட சொல்லுங்களேன் இந்த வாஸ்து பத்தி, இந்த வீடியோ அதிகமா யாரு பார்ப்பா மீன ராசி தான் பார்ப்பாங்க. வாஸ்து பத்தி பேசினாலே மீன ராசிக்காரங்களும், கன்னி ராசிக்காரங்களும் அதிகமா பாப்பாங்க.

 வேற எந்த ராசியும் பார்க்காது. பார்த்தா ஆமா வாஸ்தா, வாஸ்துங்கிறது ஒண்ணுமே இல்லைங்க நம்ம வீட்டோட அமைப்பு எனக்கு எப்படி பொருத்தம் இருக்கு என் பையனுக்கு எப்படி பொருத்தம் இருக்கு என் மனைவிக்கு எப்படி இருக்கு அம்மாக்கு எப்படி இருக்கு.

 ஒரே வீட்ல நாலு பேர் இருப்போம். ஒருத்தர் தூக்கம் வராது. ஒரே வீட்ல ஒரே ரூம்ல நாலு பேர் படுத்தா மூணு பேர் தூங்குவாங்க ஒருத்தர் தூங்க மாட்டாங்க. ஏன்?  அது வாஸ்து எல்லாருக்கும் ஒன்னு தானே?

ஒரு விழிப்புணர்வு :

தொகுப்பாளர் :

உங்களுக்கு மட்டும் அவங்களுக்கு மட்டும் அப்ப அது வேலை செய்து அப்படின்னு எடுத்துக்கணுமா?

 ஐயா :

அப்படித்தான் எடுத்துக்கணும். அதான் சொல்றேன்ல அந்த வீடியோ பத்தி பேசணும்னா ஒரு நாள் வீடியோ நீங்க எனக்கு கொடுக்கணும். அவ்ளோ பேச முடியும். ஏன்னா மேஷ ராசிக்கு மட்டும் ஒரு நாள் பேசணும். இந்த ஜாதகத்தோட கலந்து பேசும்போது தான் அது சரியா தவறா.

 ஏன்னா இது ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக இருக்கட்டும். ஒரு வாஸ்து நிபுணருக்கு ஜாதகமும் தெரிந்திருக்கும் அதே வாஸ்து தெரிஞ்சு, இது இரண்டையும் சரி பண்ணா தான் அது ஒரே நேரத்துல நேர்கோட்டில் செயல்படும்.

 சும்மா வாஸ்து மட்டும் பண்ணா நடந்திராது. இல்ல ஜாதகம் மட்டும் பார்த்தா நடந்திராது. இது இரண்டையும் மேட்ச் பண்ணி இந்த லக்னம் இந்த ராசி இவருக்கு இந்த நேரத்துல நல்லா இருக்கு. இவர் பயன்படுத்த முடியும்.

 இவருக்கு நல்ல திசையே இல்ல. நல்ல புத்தி இல்ல. நல்ல லக்னமே இல்ல. இவர் வீட்டை போய் மாத்துவாரான்னா மாற்றவே மாட்டார். இவருக்கு பரிகாரம் சொல்லி என்ன பண்ண. வீட்டை மாத்துன்னு சொன்னா என்ன? வெள்ளை கலர் அடிக்க சொன்னா பச்ச கலர் அடிச்சு வச்சிருப்பாரு.

 கடக ராசி :

கடக ராசி பொருத்த நீங்க என்ன சொன்னாலும் சரி. இவங்களுக்கு மேற்கும் கிழக்கு திசையும் நல்லாவே இருக்கும். அதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும் இவங்களுக்கு.

 ஆனா இவங்களுக்கு எதார்த்தமாவே அந்த மாதிரி திசைகள் அமையும் இவங்களுக்கு. ஆனா இவங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க.  கடக ராசி யாராச்சும் இருந்தாங்கன்னா பாருங்களேன் நீங்க வாஸ்து மாத்த சொல்லுங்க எனக்கு இப்படித்தான் இதான் நல்லா இருக்கு. இது நல்லா வருதுன்னு சொல்லுவாங்க.

 கடக ராசியா உங்களுக்கு ரொம்ப சிரிப்பா இருக்கு. அப்படித்தான் பாருங்க அதான் சொல்றேன்ல நீங்க சொல்லும் போதே தெரியுது. நல்லது. நன்றி.

 ஏன்னா நீங்க எத்தனை கடக ராசி எடுத்துக்கோங்க. கடக ராசின்னா இந்த மாதிரி அமைப்புல இருப்பாங்க. அமைப்பே எதார்த்தமாக அமையும் அது. நல்லா தான் இருக்கும்.

 ஆனால் கிரகங்கள் உதாரணமாக சுக்கிரன் நல்லா இருக்கு அப்படின்னா அவங்களுக்கு எதார்த்தமாவே அவங்களுக்கு சுக்கிரன் நல்லா பலமா இருக்கு அப்படின்னா அவங்களுக்கு யோகத்தை கொடுக்கும். இல்ல சுக்கிரன் நல்லா இல்ல அப்படின்னா யோகத்தை கொடுக்காது. அது மாதிரி நாம எடுத்துக்கலாம்.

 சிம்ம ராசி - தெற்கு வடக்கு :

சிம்ம ராசி பொருத்த அளவுக்கு எப்பவுமே தெற்கு வடக்கு நல்லா இருக்கும். அது வடக்கு பார்த்த திசைகள். இது வந்து ஒரு நேர்கோட்டில் இருக்காது. இந்த சிம்மத்தை பொருத்தவரைக்கும் நேர்கோட்டில் இருக்காது. வடக்கு தெற்குல நல்லா இருந்தா நல்லா இருக்கும்.

 இவர்களுக்கு உதாரணமா செவ்வாயும். சுக்கிரனும் பலமாய் இருந்ததுனா இன்னும் யோகத்தை கொடுத்திடும் இவங்களுக்கு.

 செவ்வாய், சுக்கிரன் என் ஜாதகத்துல நல்லா இருந்துச்சுன்னா தெற்கு வடக்குல திசைகள் அமையும். இல்ல சார் சுக்கிரன் வந்து மகரத்துல இருக்கு அப்படின்னா அது கிழக்கு திசையிலே வீடு அமையும். அந்த மாதிரி தான் கிரகங்கள் எங்க இருக்கு, ஒவ்வொருத்தருக்கும் உங்களுக்கு ஒரு கிரகம் ஒரு இடத்துல இருக்கும். எனக்கு ஒரு கிரகம் இருக்கும் அத வச்சு தான் நம்ம முடிவு பண்ண முடியும். இது பொதுவான நிகழ்வுகள்.

கன்னி ராசி :

கன்னிய பொறுத்த அளவுக்கு எப்பவுமே நல்லாதான் இருக்கும்.

துலாம் ராசி :

துலாம் ராசி பொருத்த அளவுக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் கிழக்கும் மேற்கும் தான். ரெண்டு இல்ல மூணு வீடு வச்சிருப்பாங்க. அதுல கிழக்கு மேற்கு வீட்டில் மட்டும் தான் தங்குவாங்க.

 தெற்கு வடக்கு வீட்டில் தங்கினா நாலு நாள் தான். நாலு நாள்ல ஏதாச்சும் ஒன்னு, இப்போ உதாரணமா 22 வயசு பொண்ணு இருக்குன்னு வச்சுக்கோங்க அந்த பொண்ணு வீட்ல லவ் பண்ணுவாங்க. லவ் மேரேஜ் தான் நடக்கும். இப்படி நிறைய விஷயங்கள் இதுல சொல்ல முடியும். இந்த துலா லக்னத்தில் அவ்ளோ பெரிய விஷயம் அதுல இருக்கு.

 தொகுப்பாளர் :

 அப்போ இன்கேஸ் இப்ப இவங்க இந்த மாதிரி தெற்கு வடக்குல ஒரு வீட்ல இருக்காங்க. அவங்க வீட்ல பசங்க இப்ப லவ் பண்றாங்க அப்படின்னா அவங்க வீடு மாறினார்கள் என்றால் அந்த லவ் போயிடுமா?

 ஐயா :

கண்டிப்பா மாறும். கிரக அமைப்பு வச்சில சொல்ல முடியும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஜாதகம் இருக்கும். இதே மாதிரி ஒரு ஜாதகம்.  இதே துலா ராசி இது மாதிரி வீடு வந்து பிரச்சனையா இருக்கு. உங்க வீட்டில உங்க பொண்ணு லவ் பண்ணுதா கேட்டேன். இல்ல என் பொண்ணு லவ் பண்ணவே இல்ல அப்படின்னாரு.

 ஏன்யா உங்க பொண்ண கூப்பிடுங்க. உங்க வீட்ல உங்க பொண்ணு இருக்குல கூப்பிடுங்க கேட்போம் அப்படின்னேன். இல்லைங்க என் பொண்ணு எனக்கு தெரியுங்க. எனக்கு தெரியாதாங்க அப்படிங்கறாங்க அப்பா அம்மா.

 உங்க வீட்ல தான் பொண்ணு இருக்குதுல்ல கூப்பிடுங்க அப்படின்னேன். கூப்பிட்டாங்க. கேட்டாங்க. கொஞ்சம் காரசாரமா தான் கேள்வி. அப்புறம் ஆமா அப்படின்னுச்சு.

 சார் வீட்டை மாத்தலாமா? மாத்துங்க. அதே மாதிரி தெற்கு வடக்கு வீட்டை மாத்தி, கிழக்கு மேற்கு வீட்டுக்கு வந்தேன். சூழ்நிலைகள் மாறிப்போச்சு கொஞ்சம். சூழ்நிலைகள் மாறினதும் அந்தப் பொண்ணு புரிஞ்சுகிட்டு.

 நான் சொன்னது ரெண்டு வருஷம் கழிச்சு, இந்தப் பொண்ணு இதே பையன விரும்புச்சுன்னா நீங்க கல்யாணம் பண்ணி வையுங்க.

 ஆனா ரெண்டு வருஷத்துல இந்த பொண்ணு, வீடு மாறின ரெண்டு வருஷத்துல அந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இந்த பையனும் வேண்டாம்னு சொல்லிட்டான். பையன் வெளிநாடு போயிட்டாரு. இந்த பொண்ணு படிக்க போயிட்டு. முடிஞ்சு போச்சு.

விருச்சிக ராசி :

இந்த விருச்சிக லக்னம் விருச்சிக ராசி பொறுத்த அளவுக்கு வாஸ்து சம்பந்தப்பட்ட இடம் அமையவே அமையாது எப்பயுமே. இது தெற்கு சொன்னா வடக்க தான் கெட்டும் வடக்கு சொன்னால் தெற்கு தான் கெட்டும்.

இது பொருத்த அளவுக்கு மேற்கு திசைகள் நல்லாவே இருக்கும் இவங்களுக்கு. கிழக்கு மேற்கு திசைகள் நல்லா இருக்கும்.

 மகர ராசி :

 மகரத்தைப் பொறுத்த அளவுக்கு தெற்கு வடக்கு நல்லாவே இருக்கும். ஆனா இவங்களுக்கு கிழக்கு மேற்கு தான் திசைகள் அமையும். ஆனா இவங்களுக்கு நேர்கோட்டில் அமையாது அப்படிங்கறது தான் மகரம்.

 தொகுப்பாளர் :

 நேர்கோட்டில அமையாதுனா என்னதுங்க?

 ஐயா :

 எப்படின்னா நேர் தெற்கு நேர் வடக்குல அமையாது. இப்ப வந்து பாத்தீங்கன்னா இப்போ ஒரு பிளாட் இருக்கும் இல்ல ஒரு அப்பார்ட்மெண்ட்ல என்ன பண்ணுவாங்க ஒரு வீடு கட்டி இருப்பாங்க. அவங்க வாசல்ல என்ன பண்ணி இருப்பாங்க அப்படின்னா தென் மேற்குல வெச்சிருப்பாங்க வாசல்.

 அதாவது 360 டிகிரியில 180 அப்படின்னா நம்ம சவுத்ன்னு எடுக்கணும்னா அது 180 இருக்காது 185 190  அந்த மாதிரி வாசல் வச்சிருப்பாங்க. தென்மேற்குல அந்த வாசல் வச்சிருப்பாங்க அதுதான் அப்படி அமையும்.

 நேர் தெற்குல நேர் வடக்குல இருக்காது. கிராசா இருக்கும். அந்த மனையும் சரி அந்த வாசலும் சரி, அப்படித்தான் இருக்கும்.

கும்ப ராசி :

கும்ப ராசி பொருத்த அளவுக்கு இவங்களுக்கு தெற்கு வடக்கு நல்லாவே இருக்கும். இவங்க வாஸ்து சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை சொல்லி கேட்பாங்க. நல்லா புரிஞ்சிக்கும். இவங்களுக்கு வீடு நல்ல மனை எல்லாம் அமையும்.

மனைவியோட ஜாதகத்தின் அடிப்படையில் தான் வாங்கணும் அப்படிங்கற மாதிரி ஒரு விஷயம் சொல்றாங்க இது உண்மையா?

தொகுப்பாளர் :

இப்ப பொதுவா வந்து மனை வாங்கணும் அப்படின்னா மனைவியோட ஜாதகத்தின் அடிப்படையில் தான் வாங்கணும் அப்படிங்கற மாதிரி ஒரு விஷயம் சொல்றாங்க இது உண்மையா?

 ஐயா :

கிடையாது. என் பேர்ல வாங்குறேன் அப்படின்னா நான் தான் பொறுப்பாளி. நான் தான் முடிவு செய்கிறேன். நான் தான் வாங்குறேன்னா எனக்கு தான் அந்த ஜாதகம் தான் பேசணுமே தவிர, என்னுடைய மனைவி பேர்ல வாங்கணும்னு எந்த இதுவும் கிடையாது.

 அந்த மனை ஆள்பவள். மனைவிங்கிறது மனையை ஆளக்கூடியவள். அப்படிங்கறதுனால மனைவி பெயரில் வாங்குங்கன்னு ஒரு ஐதீகம் சொல்லுதே தவிர அப்படிலாம் ஒன்னுமே கிடையாது. எல்லாமே ஆண்கள் பேரில வாங்கலாமா நீங்க வாங்கலாம். யார் வாங்குறாங்களோ அவங்க பேரு தான் அவங்க வேலை செய்யும். எனக்கு அமைப்பு நல்லா இருந்தா என் பெயரில் வாங்குவோம். என்னுடைய மனைவி ஜாதகம் நல்லா இருந்தா என் மனைவி பேர்ல வாங்கக்கூடிய அமைப்பு நல்லா இருக்கும். ஜாதகத்தை பார்த்துட்டு முடிவு பண்ணிக்கோங்கன்னு சொல்லிடுவோம்.

 தொகுப்பாளர் :

 இப்போ ஒரு வீட்ல திடீர்னு ஏதோ ஒரு அசுபகரமான நிகழ்ச்சி வந்து நடந்துருச்சு அப்படின்னா ஒரு இறப்பு எடுத்துக்கலாம். அதுக்கு அப்புறமா அந்த வீட்ல அந்த குடும்பம் வசிக்கலாமா? இல்லேன்னா அந்த வீடு வந்து மாறி போகணும் அந்த மாதிரியா?

ஐயா :

அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. அது 16 நாள் வரையில அந்த நிகழ்வு இருக்குமே தவிர மத்தபடி எல்லாம் அதெல்லாம் தொடர்ச்சியா அந்த விஷயத்தை வாழ்ந்துட்டு தான் இருக்காங்க. அந்த மாதிரி எல்லாம் மாறியெல்லாம் போகக்கூடாது.

 தொகுப்பாளர் :

இல்ல தானா இறப்பு அப்படிங்கறது ஓகே.

 ஐயா :

அசுப இறப்புகள். தூக்கு போட்டு தற்கொலை பண்ணிக்கிறது அந்த மாதிரி. ஒரு 16 நாள் வரைக்கும் அந்த தாக்கங்கள் அதிகமா இருக்கும் அதுக்காக இதெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. அப்படியெல்லாம் பார்த்தா நிறைய வீடுகளில் துர்மரணங்கள் இருக்கு. அத பத்தி ஒன்னும் இது பண்ண வேண்டியது இல்லை.

 தொகுப்பாளர் :

 இப்போ வாஸ்து குறைபாடுகள் எல்லாம் ஒரு இடத்துல இருக்கு அப்படின்னா இப்ப வந்து ஆமை பொம்மை வைத்து விடலாம். பெரிய பெரிய கண்ணாடி எல்லாம் வப்பாங்க அந்த மாதிரி எல்லாம் வச்சோம்னா இந்த வாஸ்து குறைபாடுகள் வராது அப்படின்னு எடுத்துக்கலாமா?

 ஐயா :

 நீங்க வாங்கி வச்சு எத்தனை பேர் வாழ்க்கை மாறி இருக்கு?

 தொகுப்பாளர் :

 ஆனா வாங்கி வச்சிருக்காங்க.

 ஐயா :

 அதுதான் கேட்கிறேன். என்கிட்ட ப்ரூப் வேணும்னு நான் கேட்பேன். நான் ALP அப்படின்னு சொல்றேன்னா ஒரு நூறு ஜாதகத்தை உங்க முன்னாடி போட்டு வைப்பேன். நான் வந்து ஒரே ஜாதகத்தை ஏன் ஜாதகத்தை மட்டும் இல்ல எனக்கு வேண்டியவங்க  ஜாதகத்தை மட்டுமே போட மாட்டேன்.

 ஏன்னா உங்க ஜாதகம் அங்க படிக்கக்கூடிய நண்பர்களுடைய ஜாதகம் மட்டும்தான் அங்க பதிவு பண்ணுவோம். யார் பேரையும் அங்க குறிப்பிட மாட்டோம். யார் பேரும் தேவையில்லை.

 அதே மாதிரி வாஸ்துல வாங்கி பொம்மை வச்சேன். என் நண்பர் ஒருவர், மிகப்பெரிய வாஸ்து நிபுணர். பெரிய நிபுணர். பெயர் சொன்னால் யாருக்கு வேண்டும் என்றாலும் தெரியும்.

 எதார்த்தமா அவங்க வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தாங்க போயிருந்தேன். நிறைய ஸ்டார் நிறைய விஷயங்கள் வச்சிருந்தாரு. ரொம்ப என்னை எல்லாம் ரொம்ப நல்ல மாதிரி நல்ல மரியாதை.

 நான் சொன்ன இந்த மாதிரி பேசிட்டு இருக்கும்போது அவருடைய ஜாதகத்தையும் கொடுத்து அவருடைய பையனோட ஜாதகத்தையும் கொடுத்து என்கிட்ட ஜாதகம் பார்த்தார். சார் இவ்வளவு விஷயம் மாத்திருக்கணுமே சார் ஏன் சார் மாத்த முடியல?

 இவ்வளவு விஷயம் பண்ணிட்டாரு அவரு தமிழ்நாட்டிலேயே பெரிய வாஸ்து நிபுணர் அவரு. எல்லா மாத்தியாச்சுல. ராமர் பொம்மை வச்சாச்சு. என்னென்னமோ பொம்மை நிறைய இருக்கு. அதெல்லாம் மாற்ற முடியாது.

 என் ஜாதகம் நல்லா இருந்துச்சுன்னா நான் என்ன பண்ணுவேன் அப்பதான் வாங்கி வைக்க முடியும். நீங்க நல்ல நேரம் வரும்போது நீங்க வாங்கி வைங்க. அது ஒரு சந்தோசமா இருக்கும்.

 நாங்களே என்ன பண்ணுவோம் ஒரு உதாரணமா செட்டியார் பொம்மைன்னு சொல்லு அந்த பொம்மையை வாங்கி வாசல் பக்கத்துல வைப்போம். அது நல்லதா? நல்லது. இந்த மாதிரி என் நேரம் நல்லா இருக்கும்போது வாங்கி வைங்க. இந்த இடத்துல வைங்க இந்த இடத்துல வைக்காதீங்க.

 இந்த பொம்மை இருந்துச்சுன்னா எடுங்கன்னு சொல்லுங்க சில ஜாதகத்துல.

 தொகுப்பாளர் :

 செட்டியார் பொம்மை வாங்கி வைப்பாங்களா? அது நவராத்திரி விழால வைப்பாங்க தெரியும்.

ஐயா :

வைப்பாங்க. வீட்லயும் வைப்பாங்க. வீட்லயும் வைக்கக் கூடிய அமைப்புகள் இருக்கு. பண அறையில வைக்கலாம். தென்மேற்கு மூலையில வைக்கலாம். வடகிழக்கு மூலையில வைக்கலாம். உயரமா வைக்கணும். அது எப்பயும் வைக்கலாம் எல்லாரும். இந்த மாதிரி பொம்மைகள் வைக்கலாம்.

ஆனா நம்ம என்னன்னா20 நம்ம என் நேரம் ஜாதகம் ஓரளவு மேட்ச் ஆகுது இந்த 2022 , 2023, 2024, 2025 மேட்ச் ஆகுது. அப்ப நீங்க வாங்கி வைங்க. பணமே வராதுன்னு இருக்கு. நீங்க பணம் பொம்மையை வாங்கி வச்சா வந்துருமா?

 பஸ்ஸே வராது. என் ஜாதகத்துல பஸ் வராதுன்னு இருக்கு. நான் போய் நின்னுட்டா பஸ் வருமா என்ன? அவ்வளவுதான். இப்படித்தான். 8:30 மணிக்கு தான் பஸ் வரும்னா 8:30 மணிக்கு போங்க பஸ்ல ஏறலாம்.

 நான் அதுக்காக வந்து 6:30 மணிக்கு கிளம்பிட்டேங்கறதுக்காக ரோட்ல போய் ரெஸ்டார்ல நிக்குறேன்னா பஸ் எப்படி வரும்? வராதுங்க. 8:30 மணிக்கு தான் பஸ் வரும். அதுவரை பொறுமையாக தான் இருக்கணும். காலம் தான் மருந்து காலம் தான் பதில் அதுதான் ஜாதகம்.

படிக்கட்டுகள் :

தொகுப்பாளர் :

 இப்ப வந்து சில வீடுகள்ல படிக்கட்டுகள் நம்ம இப்ப வந்து வீட்டுக்கு வெளியே வைக்கிறது இல்லன்னா ஒரு கார்னர்ல இந்த மாதிரி வைக்கிறோம். பழைய காலத்துல படங்கள்ல காமிக்கிற வீடுகள்ல பெரிய பங்களா வீடுகளா இருக்கும். நடுவுல வந்து அந்த படிக்கட்டுகள் எல்லாம் வச்சு அப்படி பார்க்கவே லுக்கா வச்சிருப்பாங்கல, அந்த மாதிரி படிக்கட்டுகள் வைக்கிறதுக்கு காரணம் இருக்கா?

 ஐயா :

வைக்க கூடாது. வைக்க கூடாதுங்கிறது தான் என்னுடைய கணக்கு. அந்த காலத்துல வச்சுட்டாங்க அது எதுக்கு என்ன காரணம் என்று எல்லாம் தெரியாது. ஆனால் வைக்கக்கூடாது.

 ஏன்னா அந்த மாதிரி 100க்கும் மேற்பட்ட வீடுகள்ல நாம பார்க்கும்போது அந்த வீட்ல சுபிட்சம் அப்படிங்கற விஷயமே சந்தோஷம் அப்படிங்கற விஷயமே இல்ல. எல்லாம் பெரிய பெரிய பங்களா வீடுங்க.

 ஆனால் சந்தோஷம்னா இந்த மாதிரி இல்ல பணம் இருக்கு பதவி இருக்கு ஆனா அங்க முழுமையா ஒரு சந்தோஷம்னா எதிர்பார்த்த மாதிரி இல்லை. அதுக்காக அது மாதிரி வைக்காதீங்க. எப்பயும் வீட்டுக்குள்ள படியே மேக்சிமம் வைக்காதீங்கன்னு நாங்க சொல்லுவோம்.

 அது படி வச்சாலும் அது ஓரமா வைங்க. அதுவும் பாத்தீங்கன்னா ரவுண்டு படி தான் நாம வைப்போம். மடக்குப் படி கூட ஓகே. ரவுண்டு மாதிரி படி வைக்கும் போது ரொம்ப கவனமா வைக்கணும். அது ராகு கேது அம்சமா வந்துரும். அதனால கவனமா வைங்க அப்படின்னு சொல்லுவோம்.

 ஒரு சட்டமன்ற உறுப்பினர் வீட்ல அப்படித்தான் வைத்தார் படி. நான் சொன்னேன் இந்த மாதிரி படி வைக்காதீங்க அப்படின்னு சொன்னேன். அதுல இல்ல வச்சிருவோம் அப்படின்னாரு.

 நான் சொன்னேன் இந்த தடவை எம் எல் ஏ அடுத்து சீட்டே கிடைக்காது அப்படின்னேன். அடுத்து சீட்டே கிடைக்கல. அவர் ஜாதக அமைப்பு அப்படித்தான் இருந்துச்சு. வீட்ட பார்த்து சொல்லல. ஜாதக அமைப்பு இருந்துச்சு. படி வைக்காதீங்கன்னு சொன்னேன். இல்ல இல்ல இந்த வீட்டுக்கு இப்படி வச்சா தான் அழகா இருக்கும் சொன்னாரு. அழக பார்க்காதீங்க இப்படியே பார்த்து பார்த்து தான் வீணா போயிடுவிங்கன்னு சொன்னேன். போயிட்டாரு. இப்ப பாத்தீங்கன்னா ரொம்ப லோவா இருக்காரு. ரொம்ப வருத்தமா இருக்கு.

 பறவைகள் வளர்கிறதுனால வாஸ்து வந்து ஏதாவது கொஞ்சம் சப்போர்ட் பண்ணுமா? நமக்கு ஏதாவது நல்லது நடக்குமா?

 தொகுப்பாளர் :

 சார் இப்போ சில இடங்கள்ல வீடுகளுக்குள்ள வந்து தண்ணி விழுந்துட்டே இருக்குற சத்தம் கேக்கணும் மீன் தொட்டி வச்சிருப்பாங்க மோட்டார் வச்சு தண்ணி விழுந்துட்டே இருக்கணும் சில இடங்களில் பறவைகள் சத்தம் கேட்டுட்டே இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டு இந்த லவ் பேர்ட்ஸ் வளர்க்கிறது இந்த மாதிரி எல்லாம் வைப்பாங்க இல்லையா சோ வீட்ல வந்து பறவைகள் வளர்கிறதுனால வாஸ்து வந்து ஏதாவது கொஞ்சம் சப்போர்ட் பண்ணுமா? நமக்கு ஏதாவது நல்லது நடக்குமா?

 ஐயா :

 பண்ணாது பண்ணாது பண்ணாது. அது அசுபம் தான் நடக்கும். நல்லாவே இருக்காது. மேஷ ராசி , மிதுன ராசி,சிம்ம ராசி , துலாம் ராசி இந்த நாலு ராசிக்காரர்கள் இதை வைக்கவே கூடாது. வச்சாலும் நல்லா இருக்காது. இதை வச்சீங்கன்னா அவங்க வீட்ல என்னைக்குமே சந்தோஷம் இருக்காது.

 அது எப்படி மீன் சுத்திட்டே இருக்கோ அது மாதிரி வாழ்க்கை சுத்திட்டே தாங்க இருக்கும் நாங்க இதுவரைக்கும் ALP ல படிச்சவங்க அத்தனை பேரும் வீட்ல மீன் வளர்க்கவே கூடாதும்போம்.

வளர்த்து வெளில வச்சுக்கோங்க வீட்டுக்குள்ள வச்சுக்காதீங்க.

தொகுப்பாளர் :

 வாஸ்து மீன் சார்.

 ஐயா :

 தயவு செஞ்சு வளர்க்கவே வளக்காதீங்க. நீங்க உதாரணத்துக்கு பத்து வருஷத்தை அனலைஸ் பண்ணி பாருங்க. நீங்க இந்த வீடியோ பாக்குறாங்கல மீன் தொட்டி வச்சோம் சார் நாங்க நல்லா இருக்கோம்னு சொல்ல சொல்லுங்க. ஓகே பரவால்ல அவ்வளவு தான் சொல்லுவாங்க.

 அதே மீன் தொட்டி இல்லாதவர்கள் வீட்டில, வச்சு பாருங்க ALP ல யாராவது ஒருத்தர் வீட்டுல மீன் தொட்டி இருக்குதா பாருங்க வைக்க மாட்டாங்க.

 நாங்க பரிகாரமா சொன்ன விஷயங்கள் அத்தனையுமே நாங்க ரியல் லைப்ல பார்த்த விஷயம். அப்போ அத ஒரு கூண்டுக்குள்ள போட்டு அடைக்கிற மாதிரி.

 இப்போ நாய் வளர்க்கலாம் சொல்லுவோம் பூனை வளர்க்கலாம் சொல்லுவோம். ஆனா அதுவே கிளி வளர்க்க கூடாது. கிளியை கூண்டுக்குள்ள அடைப்பாங்க. அதையே அடைக்கிறீங்க. அழகுக்கு வைக்கிறீங்களா வெளியே வையுங்க.

 ஒரு ஹோட்டல் வைக்கிறாங்க பொதுவன்றின ஒரு இடத்துல வைக்கிறாங்க. நல்லா இருக்கும்.

ஆனா வந்து வீட்ல வளர்க்காதீர்கள். அது வந்து வாழ்க்கை சுத்திட்டே இருக்கும் அப்படின்னு சொல்லுவோம். அதுவும் குறிப்பா மேஷம் , மிதுனம் , சிம்மம் , துலாம் இந்த நாலு ராசிக்காரர்கள் நாலு லக்னக்காரங்க வைக்கவே கூடாது. வச்சாங்கன்னா அவங்க வாழ்க்கை அப்படியே தான் இருக்கும். நீங்க எழுதி இந்த வீடியோ பின்னாடி பதிவு பண்ண சொல்லுங்க.

தொகுப்பாளர் :

 வாஸ்து சார்பா நிறைய விஷயங்கள் உங்ககிட்ட கேட்டுட்டே இருக்கோம். இதே போல இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு அத நம்ம அடுத்த ஒரு எபிசோட்ல தொடர்ந்து பேசலாம்.

நன்றி


வீடியோ லிங்க்: https://youtu.be/HBvL_J2TE6k?si=YLwSoJYf7nXQhFVe

www.alpastrology.com

ALP ASTROLOGY OFFICE: 9363035656 / 9786556156

Comments