கோயிலுக்கு செல்லும்போது வீட்டில் சண்டை ஏற்படுவதற்கு காரணம் விதியா? கர்மாவா?

 

கோயிலுக்கு செல்லும்போது வீட்டில் சண்டை ஏற்படுவதற்கு காரணம் விதியா? கர்மாவா?

 

- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்

- ALP  ஜோதிடர் மற்றும் ஆசிரியர்.

 


கோவிலுக்கு போயிட்டேன். நடை  சாத்திரிச்சி, வெயிட் பண்ணி பார்க்கலாம்னு  இருக்கிறேன். ஒரு 3:30 மணிக்கு அந்த ஏரியாவுல ஒரு டெத் ஆயிடுச்சு. கோயிலை திறக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க.  இப்ப என்ன பண்ணுவீங்க?

 

இது விதி. அந்த விதிய வெல்றதுக்கு நம்மளால முடியாது. இங்க பரிகாரம் வேலை செய்யல. அப்ப இந்த விதி பயனை நாம் சந்தித்து தான் ஆகணும் அனுபவிச்சு தான் ஆகணும்.

 

அப்ப இந்த ஒரு காலம் நமக்கு ஒரு செயல் தடை ஆகுது நல்ல விஷயங்களை நம்ம பண்ண முடியலன்னா மறுநாள் ஒரு செயலை செய்கிறோம் என்று முக்கியமான செயல்கள்  செய்யணும்னு எண்ணி வச்சிருந்தோம்னா அதை கொஞ்சம் பிரேக் பண்ணனும்னு அர்த்தம்.

 

நாளைக்கு ஒரு விஷயத்தை நான் ஆரம்பிக்க போறேன். ஒரு இடத்தை பார்க்கலாம்னு போறேன். இல்ல ஒரு பிசினஸ் டீல் பண்ணலாம்னு போறேன். இல்ல ஒரு நல்ல விஷயத்தை ஒரு கடை திறக்கலாம்னு ஒரு கடை  காலியாயிருக்கு அந்தக் கடையை  பார்க்கலாம்னு  போறேன். கோவிலுக்கு போயிட்டு வந்து அந்த செயலை செய்யலாம்னு நெனச்சு கோயிலுக்கு போறப்போ, இந்த மாதிரி சிக்கல்களால் அந்த தெய்வத்தை நாம தரிசிக்க முடியாமல் போகுதுனா, அதற்கான அனுமதி நமக்கு கிடைக்கவில்லை என்று அர்த்தம். அந்த செயலை நாம் தள்ளி வைத்துவிட வேண்டும்.

 

அதுக்கப்புறம் நம்ம எப்ப கோவிலுக்கு நம்ம நினைச்ச உடனே போய் இந்த தரிசனம் பண்ணிட்டு ஒரு இடத்துக்கு போக முடியுதோ அன்னைக்கு அந்த காரியத்தை நம்ம செயல்படுத்திகிடலாம். அப்போ சூழ்நிலைகளை நம்ம உற்று நோக்கும்போது தான் பல விஷயங்களை அந்த பிரபஞ்சம் நமக்கு காமிச்சி கொடுக்கும்.

 

நம்ம இன்னைக்கு அதெல்லாம் இப்ப யாருமே பார்க்கிறது கிடையாது. இந்த சடங்கு சம்பிரதாயம்ங்கிற  பேர்ல இன்னைக்கு வந்து அது எல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்றோம்.

 

ஆனா  சயின்ஸ்  ஒவ்வொன்னையும் அப்ரூவல் பண்ணும்போது மட்டும் அடடா இதெல்லாம் நம்ம முன்னோர்கள் சொன்னது தானேனு  அதுக்கப்புறம் ஏத்துக்குறோம் அப்படி இருக்காதீங்க. காரணம் இல்லாம  எதுவுமே கிடையாது.

 

சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவம் கோடை கால  விடுமுறைக்கு ஊருக்கு போயிருக்கோம்.  ஊருக்கு போயிட்டு சென்னைக்கு வரணும்னு புறப்படுகிறோம். புறப்படும்போது காரை எடுக்கும் போது  கொஞ்சம் ஒரு 10 அடி கூட போயிருக்க  மாட்டோம் ஒரு நாய்க்குட்டி குறுக்க  வந்திருச்சு. பெரிய சேதம் எல்லாம் இல்ல. கால்ல லேசா அடிபட்டுருச்சு அது கத்திக்கிட்டு போயிடுச்சு.

 

அந்த இடம் ஒரு அறிகுறி அது இல்லையா, பைரவர் தானே அந்த நாய்ங்கறது. அப்ப ஏதோ ஒரு தடங்கல் இருக்குதுன்னு நாம புரிஞ்சி கொஞ்ச நேரம் ஒரு அரை மணி நேரமா ஒரு மணி நேரமோ கழிச்சு நாம  புறப்பட்டு இருக்கலாம்.  சரி அது தப்பிச்சு போயிருச்சேன்னு நாங்களும் கிளம்பி  வந்துட்டோம்.

 

வண்டி ஓட்டுன நண்பர் என்ன  பண்ணிட்டாரு   அவருக்கு ஒரு இடத்துல கண்ண கட்டிருச்சு. நாங்க யாருமே அதை கவனிக்கல. வண்டி ஸ்லிப் ஆகி ராங்க் வேல போய்கிட்டு இருக்கு. நல்ல வேலை எங்களோட நல்ல நேரம் ஏன்னா அந்த கால் மட்டும் அடிபட்டதுனால, அந்த ஒரு சின்ன ஜர்கோட நாங்க பிழைத்தது. இல்லாட்டினா அந்த பக்கம் ஒரு பள்ளம். எதுத்தாப்புல ஏதாவது ஒரு வண்டி வந்து இருந்தாலும் பைபாஸ் அது, எதுத்தாப்புல வண்டி வந்து இருந்தாலும் அது  அங்க முடிஞ்சது.

 

அங்க ஒரு விஷயம் அந்த ஒரு இன்சிடென்ட் நாம கொஞ்சம் லேட்டா கிளம்பியிருந்தா நடந்திருக்காதோ என்ற ஒரு எண்ணத்தை கொடுத்துச்சு.

 

அதனால சின்ன தாமதங்கள் நம்ம வெளியில புறப்பிடும்போது கால் தட்டும். ஏன் தட்டுது? நாம எப்போதுமே கவனமா தானே  நடப்போம். அது ஏன் அந்த பர்டிகுலர் காரியத்திற்கு கிளம்பும்  போது தட்டுக்குது என்றால் பிரபஞ்சம் ஒரு தடங்கலை நமக்கு கொடுக்குது. அப்ப அன்னைக்கு அமைதியா வீட்டில்  இருக்கிறது. கொஞ்சம் அந்த நேரத்தை கடத்தி அது ஒரு முகூர்த்த நேரம்னு சொல்லுவோம். அதாவது ஒரு செயல் நடக்குது என்றால் ஒரு முகூர்த்த நேரத்தை கடந்து நம்ம அந்த காரியத்தை செய்யலாமா தாராளமாக செய்யலாம்.

 

நாம ஒரு முக்கியமான இடத்துக்கு போவோம்  அப்ப பக்கத்து வீட்டு குழந்தை அப்பா போகாதப்பானு சொல்லும். அவங்க வீட்ல அப்பா கிட்ட சொல்லும். நன்றி.


வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/V-wmsz2lq2Y?si=r_N8vHaOKcF-79v9

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR