இது எல்லாத்துக்கும் அவசியமான கல்வி.

 

இது எல்லாத்துக்கும் அவசியமான கல்வி.

 

வணக்கம். என் பெயர் ஜெகதீஷ். இப்போ நான் டெல்லியில் இருந்து பேசுறேன். ALP அடிப்படை ஜாதகம் கிளாஸ்ல பிப்ரவரி 7ஆம் தேதி ஜாயின் பண்ணேன்.  அடிப்படை வகுப்பு நான் அட்டென்ட் பண்ணேன். இந்த வாய்ப்பு கொடுத்த பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும் என்னுடைய மானசீக குரு உமா வெங்கட் அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றி.

 


பெருசா ஒரு எதிர்பார்ப்பெல்லாம் இல்ல. ஒரு ஜாதகம் உமா அக்கா கிட்ட கேட்டேன் பார்க்கலாம் அப்படின்னு ஜாதகம் பார்க்கும்போது இதை நான் படிக்கலாமான்னு நான் சும்மாதான் கேட்டேன்.

 

உமா அக்கா என்ன சொன்னாங்க நீங்களும் படிக்கலாமே  ALP அடிப்படை ஜோதிட வகுப்பு இருக்கு நீங்க ஜாயின் பண்ணுங்க. இந்தாங்க இந்த லிங்க் இத பாருங்க. 64 வீடியோ இருக்கு. கிளாஸ் வர்றதுக்கு முன்னாடி இந்த வீடியோ பார்த்துட்டு அதுக்கப்புறம் வந்து ஜாயின் பண்ணுங்க சொன்னாங்க.

 

உமா அக்கா கிட்ட இதுவரைக்கும் சொல்லவே இல்ல அந்த 64 வீடியோவையும் ஃபுல்லாவே பார்க்கவே இல்லை. எந்ததும் பாக்காம வகுப்புல வந்து உட்கார்ந்தேன். இந்த வகுப்பு நடக்க நடக்க இதுல நான் தெரிஞ்சுகிட்ட விஷயங்கள் நிறைய.

 

நான் ஒரு நேஷனலிஸ்ட் பேங்க்ல ஸ்டாப் ட்ரெய்னிங் சென்டர்ல ஒர்க் பண்றேன். எங்களுடைய டீச்சிங் மெத்தடாலஜி வேற. நான் இங்க எம்ப்ளாயிஸ்க்கு டீச் பண்ணுகிறோம். இப்போ நான் ஒரு மாணவனா ஒரு வகுப்பில் உட்காரச்சில ஏஎல்பி யோட டீச்சிங் மெத்தடாலஜி ரொம்ப டிஃபரண்டா இருந்தது.

 

நான் 64 வீடியோ பாக்கலைங்குற ஒரு சின்ன கில்டினெஸ் இருந்தது. ஆனா கிளாஸ்ல உட்கார்ந்துக்கு அப்புறம் அது தேவையில்லை என்கிறது தெளிவா இருந்துச்சு. ஏன்னா இங்க இருக்கிற மெத்தட் இங்க இருக்குற கோர்சஸ் இங்க இருக்கிற ஆசிரியர்கள் சொல்லி கொடுக்கிற விதமே ஒரு டிஃபரண்டா நல்லா இருந்துச்சு.

 

படிச்சதே திரும்ப திரும்ப சொல்ல சொல்ல ஒவ்வொரு நாளும் முதல் நாள் நடத்துனது அடுத்த நாள் கண்டினியூட்டி. முதல் நாள் நடத்துன அடுத்த நாள் கண்டினியூட்டி. அன்னைக்கு நடத்துனது எண்ட் ஆப் தி கிளாஸ்ல மறுபடியும் ரிவைஸ். மறுபடியும் அடுத்த நாள் கிளாஸ்ல நேத்து நடத்துனது என்னவோ அதை நடத்திட்டு அடுத்தது.

 

இப்படி பண்ணதுல ஒரு கண்டினுட்டி இருக்குது நல்லா புரிஞ்சுக்க முடியுது. சோ அதுக்கு ரொம்ப ரொம்ப மிகப்பெரிய நன்றி. அனைத்து ஆசிரியர்களுக்கும் அனைத்து குருமார்களுக்கும் மிகப்பெரிய நன்றி.

 

இரண்டாவது, நான் புதுசு புதுசா நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன். ஏன்னா எனக்கு ஜோதிடம் என்ற விஷயத்துல பெருசா நம்பிக்கை இல்லாம இருந்துச்சு. இப்பதான் சின்ன சின்ன விஷயங்கள் அதுக்கப்புறம் கொஞ்சம் நம்பிக்கை வர ஆரம்பிச்சது. இந்த வகுப்பு அட்டென்ட் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம் இது பண்ணலாம் இந்த டைம்ல பண்ண கூடாதா செய்யலாமா என்கிற அளவுக்கு அனலைஸ் பண்ணியிருக்கேன். அந்த அளவுக்கு நானே என்ன டெவலப் பண்ணி இருக்கேன்.

 

இன்னும் டெவலப் பண்ணுவேன்னு நினைக்கிறேன். இதுக்கு உமா அக்காக்கு தான் பெரிய நன்றி சொல்லணும். ஏன்னா அன்னைக்கு உமா அக்கா கிட்ட பேசலனா இந்த கிளாஸ் அட்டென்ட் பண்றதுக்கு ஒரு வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கவே கிடைச்சிருக்காது. இது வாழ்க்கை பாடமா நான் எடுத்துக்கிறேன். ஏன்னா காலையில் 4:30 மணிக்கு எந்திரிச்சு அதுக்கப்புறம் கிளாஸ் அட்டென்ட் பண்ணி அவங்க சொல்றத கவனிச்சிட்டு வீட்டு பாடங்களை செஞ்சுட்டு ஒரு இன்ட்ரஸ்டிங்காவும் இருக்கு.

 

புதுசு புதுசா நிறைய விஷயம் கத்துக்கணும் இது முக்கியமான ஒரு தேவையான அடிப்படையான கல்வி. இது எல்லாத்துக்கும் அவசியமான கல்வி இது முன்னாடியே கிடைச்சு இருந்துச்சுன்னா நிறைய விஷயங்கள்ல கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கலாம். 

 

நிறைய பேர கொஞ்சம் அட்வைஸ் பண்ணி இதெல்லாம் பண்ண வேண்டாம் இதெல்லாம் செய்யாதீங்க சிக்கிக்குவிங்க இதெல்லாம் செய்யுங்க நல்லா இருப்பீங்க ஒரு வழிகாட்டுதலுக்கு யூஸ்புல்லா இருக்கும். ஆனா லேட்டா ஜாயின் பண்ணிட்டேன் என்று நினைக்கிறேன். பட் பெட்டர் லேட் தன் நெவர். இதுக்காக வாய்ப்பு கொடுத்த எனக்கு மேல இருக்கிற மிகப்பெரிய சக்திக்கும் இந்த வாய்ப்பு அளித்த அனைத்து குருமார்களுக்கும் என்னுடைய மானசிய குரு உமா அக்காக்கும் மிகப்பெரிய நன்றி. தேங்க்யூ.

 

வீடியோ லிங்க் :

https://www.facebook.com/share/v/1Zh6BQEN3b/

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR