விளக்கு ஏற்றும் போது பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் சேர்ப்பது பயன் தருமா?

 

ிளக்கு ஏற்றும் போது பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் சேர்ப்பது பயன் தருமா?

 

 - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

 - ALP ஜோதிடர்.

 


தொகுப்பாளர்:

 

விளக்கேத்தும்போது சில பேர் பச்சை கற்பூரம் போடுங்க ஏலக்காய் போடுங்கன்னு சொல்றாங்க அது எந்த அளவுக்கு பயன் தரும் மேம்.

 

உமாவெங்கட் மேம்:

 

பச்சைக்கற்பூரம் , ஏலக்காய் ,சிலர்  கற்கண்டு போட்டு விளக்கு ஏத்துவாங்க. சிலர் விளக்குக்கடில அஞ்சு ரூபா வச்சு விளக்கு ஏத்துவாங்க. அது அவரவர்கள் எதற்காக செய்றாங்களோ தெரியாது. ஆனால் விளக்குக்குள்ள ஒரு கற்கண்டு பச்சை கற்பூரம் என்பது போட்டு விளக்கு ஏற்றலாமா? ஏற்றலாம்.

வீட்டுக்குள் ஒரு மாற்றம் வர :

அதோட நறுமணம் வீடு முழுதும் நல்லா வியாபித்து இருக்கும் என்று சொல்லலாம். நிறைய மாற்றத்தை உங்களுக்குள் அது கொண்டு வரும். இப்ப சண்டை போட்டு ஒருத்தவங்க வீட்டுக்குள்ள வராங்க கணவராக இருந்தாலும் சரி, குழந்தையா இருந்தாலும் சரி மனக்கசப்போடு வரும்போது அந்த நறுமணத்தை வச்சு அவங்களுடைய மனமாற்றம் என்பது இருக்கும். கோபம் என்பது தணிந்து வீட்டில் ஒரு சந்தோஷ நிகழ்வை அமைதியான ஒரு தன்மையை கொண்டு வரும்.

 

நிறைய பேர் மெடிடேஷன் பண்ணுவாங்க, ஸ்லோகம் சொல்லுவாங்க, மனம் அவங்களுக்கு அலைபாயும் இந்த விளக்கு இந்த விளக்கின் மூலமாக வெளிப்படக்கூடிய அந்த நறுமணம் என்பது இவர்களுக்குள் ஒரு அமைதியையும் ஒரு சாந்தத்தையும் ஒரு தனி தெய்வத்தோடு லயித்து இருக்கக்கூடிய ஒரு தன்மை கண்டிப்பாக கொண்டுவரும் என்று சொல்லலாம். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/7aq_y9MmY20?si=PGcz9gjq34MXQm1c

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

ஆதிபத்தியம் vs காரகத்துவம் – எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? ALP ஜோதிட ரகசியம்!