விருச்சிக லக்னக்காரர்களே உங்கள் நட்சத்திரம் என்ன? இதுதான் உங்கள் வாழ்க்கை.
விருச்சிக லக்னக்காரர்களே உங்கள்
நட்சத்திரம் என்ன? இதுதான் உங்கள் வாழ்க்கை.
-
ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.
-
ALP ஜோதிடர்.
விருச்சிகம்
பொதுவா எப்படி இருக்கும் தேள் போல் கொட்டும் குணமுடையவங்கன்னு ஒரு சிலர்
சொல்லுவாங்க. பொறுமைக்கு உதாரணம் விருச்சிகம் அப்படின்னு சொல்லுவாங்க. இல்ல
இல்லங்க இது அவசரப்பட்டு முடிவு எடுத்து முடிவு எடுத்து இது வீணா போயிடுங்கன்னு
ஒரு சிலர் சொல்லுவாங்க.
ஏன்
அந்த செவ்வாயினுடைய குணத்தை இங்க பொருத்துவாங்க. ஆனா உண்மை என்ன தெரியுமா?
இந்த
விருச்சிகத்தில் செவ்வாய் மட்டும் இயங்கவில்லை அங்க இருக்க கூடிய விசாக
நட்சத்திரம்
, அனுஷ
நட்சத்திரம்,
கேட்டை நட்சத்திரம் இந்த மூன்றுமே அங்கு
இயங்குது.
இந்த
விசாகம் நான்காம் பாதம் இந்த மூன்று நட்சத்திர பாதங்கள் எப்படி இருக்கும் நம்ம
துலாம் லக்னத்தில் பார்த்திருக்கோம். இந்த விசாகம் நான்காம் பாதம் எப்படி
இருக்கும் தெரியுமா? ரொம்ப ரொம்ப மனசு சஞ்சலத்தோட உலகத்தில உள்ள ஒட்டுமொத்த
கஷ்டமும் எனக்கு மட்டுமே வந்தது என்ற மாதிரி ஒரு ஃபீலிங்கோட அவங்க எல்லாத்தையும்
உற்று நோக்குவாங்க.
இந்த
கடவுள் கூட ரொம்ப பக்தி இருப்பாங்க ஆனா கடைசி நேரத்துல இந்த கடவுள் கூட என்னை
கைவிட்டுருச்சு பாரு. இது எவ்வளவு பக்தியா இருந்தேன். எவ்வளவு எல்லாம் பிரார்த்தனை
பண்ணிக்கிட்டேன் இப்படி நீங்க பண்ணலாமா அப்படின்னு கடவுள் கிட்டயே முறையிடக்கூடிய
ஒரு தன்மை என்பது இந்த விசாகம் நாலாம் பாதத்திற்கு இருக்கும்.
அனுஷம்
நட்சத்திரம் :
அனுஷ
நட்சத்திரம் எப்படி இருக்கும்?
பொதுவா மகாலட்சுமிக்கு ரொம்ப
பிடித்தமான நட்சத்திரம் னா இந்த அனுஷ நட்சத்திரம் சொல்லுவாங்க. இந்த அனுஷம்
நட்சத்திரம் ஒன்றாம் பாதம் எப்படி இருக்குன்னு தெரியுமா? ரொம்ப நல்ல கர்ஜனையோட
ரொம்ப நட்சத்திரங்களிலேயே சனியோட நட்சத்திரங்கள்ல இந்த அனுஷம் நட்சத்திரம் ஒன்றாம்
பாதத்திற்கு ஒரு வேல்யூ இருக்கு.
அது
என்னன்னா ஒரு ஆளுமை திறம் இந்த ஒன்றாம் பாதத்துக்கு உண்டு. ரொம்ப
நேர்த்தியாக ரொம்ப நீட்டா எல்லாரையும் அரவணைத்து முதன்மையாக தலைமை தாங்கி ஒரு
விஷயத்தை செயல்படுத்தக்கூடிய ஒரு தன்மை இந்த அனுஷம் ஒன்னு கிட்ட இருக்கு.
அனுஷம்
நட்சத்திரம் இரண்டாம்
பாதம் ரொம்ப புத்திசாலித்தனமா காய் நகர்த்தி நமக்கு என்ன எங்கு இருந்து
லாபம் கிடைக்கும் நமக்கு எதன் மூலமா ஆதாயம் கிடைக்கும் நம்ம எப்படி எல்லாம்
தந்திரமா காய் நகர்த்தலாம்னு தெரிஞ்சு
ரொம்ப சாமர்த்தியமா செயல்படுத்தக்கூடிய ஒரு நட்சத்திரமாக இந்த அனுஷம் இரண்டாம்
பாதம் இருக்கும் சொல்லலாம். நன்றி.
வீடியோ
லிங்க்
:
https://youtube.com/shorts/KXPxxIsFHLs?si=AKx9h4wkFrQ7VoZK
Comments
Post a Comment