ALP வகுப்பபால் எனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள்.
ALP வகுப்பபால் எனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள்.
அனைவருக்கும் வணக்கம்,
என் பெயர் சத்யா. என்னுடைய சொந்த ஊர் சென்னை. நான் இப்ப
இருக்கிறது USA ல டெக்ஸாஸ் என்ற ஸ்டேட்ல இருக்கேன்.
எனக்கு ஜோதிடத்தை பத்தி சொல்லணும் என்றால் பெருசா
எனக்கும் ஜோதிடத்துக்கும் எந்த ஒரு கனெக்ட்டுமே கிடையாது. பொதுவா சொல்லணும்னா இப்ப
திருமணம் பாக்குறாங்க பொருத்தம் பாக்குறதுக்கு அப்படித்தான் போவாங்க. அட் தி சேம்
டைம் அது எனக்கு வெறுக்கும் என்றும் சொல்ல முடியாது. சோ ரொம்ப நியூட்ரல் மாதிரி
தான் நான் இருந்தேன்.
எனக்கு எப்போ ஜோதிடம் இன்ட்ரோடியுஸ் ஆச்சு பாத்தீங்கன்னா
என்னுடைய ஆபீஸ் நண்பர் ஒருத்தர் அவர் ஜோதிடம் படிச்சுருக்காரு. எங்களுக்கும்
ஜோதிடம் பாருங்கள் என்று சொல்லி விளையாட்டாக நாங்க பார்க்க ஆரம்பிச்சோம்.
அப்ப அவர் சொல்லும்போது எனக்கு சொன்னாரு உங்களுக்கு
அடுத்து 10 இயர்ஸ் உங்க லைப்ல ரொம்ப கஷ்டப்படுவீங்க. அதாவது உங்க லைஃப் டைம்ல ஒரு
டப்பஸ்ட் பீரியட்னா இதுதான் சொல்லலாம். அதுக்கப்புறம் நல்லா இருக்கும் என்ற மாதிரி
சொன்னாங்க. அப்படியா சரி ஓகே என்று சொல்லிட்டு வந்துட்டேன்.
அந்த டைம் எனக்கு அஷ்டம சனி நடக்குது அதுக்கப்புறம்
கண்டக சனி நடக்குது அந்த மாதிரிலாம் சிலது சொன்னாரு. பிகினிங் 2 இயர்ஸ் உங்களுக்கு
பாஸ் ஆயிருக்கும். அது ஸ்டார்டிங்ல உங்களுக்கு பெருசா தெரிஞ்சு இருக்காது. இதுக்கு
அப்புறம் உங்களுக்கு தெரியும் சொன்னார்.
அவர் சொல்லி கொஞ்சம் மாசத்துலயே எனக்கு ஹெல்த் இஸ்யூ
மாதிரி ஸ்டார்ட் ஆச்சு. பெரிய தலைவலி கன்டினியஸா 2 to 3 மந்த்ஸ்
ஆச்சு. அதுக்கப்புறம் யோகா கிளாஸ் போனேன் அங்க எனக்கு அதுக்கான சொலுஷன் நல்லா
இருந்தது. அதுக்கப்புறம் அதை அப்படியே கண்டினியூ பண்ண ஆரம்பிச்சிட்டேன்.
நான் ஜோதிடம்னு பிலீவ் பண்ணது அதான். அந்த இடத்துல அவர்
எனக்கு சொல்லும்போது ஓகே இதுதான் அவருக்கு தெரிஞ்சிருக்கு போல இருக்கு என்று நான்
ஆமாப்பா நீ சொன்னது கரெக்ட்டா இருந்துச்சு என்றேன்.
அவருடைய எக்ஸ்பீரியன்ஸ் அவர் ஷேர் பண்ணும் போது என்ன
சொன்னார் என்றால் ஒருத்தர் கிட்ட போகும்போது ஒரு பலன் சொல்லுவாங்க ஒரு பரிகாரம்
சொல்லுவாங்க. இன்னொருத்தர் கிட்ட போவேன் இன்னொரு பரிகாரம் அந்த மாதிரி எல்லாம்
சொல்லுவாங்க. ஒரு பத்து பேர் கிட்ட போயிருப்பேன் எல்லாரும் சொன்னதும் பண்ணேன் நான்
பட் எனக்கு எதுவுமே சரியா நடக்கல.
சரி ஏன் எல்லாரும் ஒண்ணு ஒண்ணு சொல்றாங்க?
நம்மளே அதுல என்னதான் இருக்குன்னு கத்துக்கலாம் என்று
சொல்லிட்டு அவரே ஒன்றரை வருஷம் ஜோதிட கிளாஸ் போய் நான் படிச்சிட்டு அதுக்கப்புறம்
நானே எனக்கு பிராக்டீஸ் பண்ணப்போ எனக்கு
கரெக்ட்டா இருந்துச்சு அப்படின்னு சொன்னாரு. ஒன்றரை வருஷத்துல கத்துக்க முடியுமா
என்று ஒரு ஆச்சரியம். சரி இப்போ நான் கத்துக்கணும்னு நினைச்சா ஒன்றரை வருஷத்துல
கத்துக்க முடியுமா கேட்டேன். அவரு என்னுடையதை பார்த்துட்டு உங்களால இப்ப படிக்க
முடியாது. உங்களுக்கு புதன் திசை ஆல்ரெடி முடிஞ்சிருச்சு அதனால நீங்க இப்ப
படிக்கிறது உங்களுக்கு வராது சொல்லிட்டார்.
நான் யோகா பண்ணிட்டு இருந்தேன்ல அங்க ஒரு ஆசிரியர்
ஒருத்தவங்க அவங்க ALP ஜோதிடம் படிச்சிட்டு இருக்காங்க.
அவங்க எனக்கு சொன்னாங்க நீங்க நிறைய விஷயம் ரொம்ப இன்ட்ரெஸ்ட்டா படிக்கிறீங்க
தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறீங்க உங்களுக்கு இது நல்லா இருக்கும். நீங்க இத
கத்துக்கோங்க என்று சொன்னாங்க. அதுக்கப்புறம் ஓகே பார்க்கலாம் என்று சொன்னேன்.
அவங்க இதுக்கு 2 to 3 டைம்ஸ் என்ன பாலோவ் பண்ணிட்டு
இருந்தாங்க. நீங்க அந்த காண்டாக்ட் எல்லாம் குடுத்துட்டு அதுல ஜாயின் பண்ணிங்களா
அப்படி எல்லாம் கேட்டாங்க. அதுக்கப்புறம் நான் கிளாஸ் ஜாயின் பண்ணேன்.
இந்த கிளாஸ் படிக்கும்போதே நண்பர் சொன்னார் இல்லையா
உங்களுக்கு புதன் திச போயிடுச்சு உங்களுக்கு ஜோதிடம் வராது சொன்னார் இல்லையா,
எனக்கு அந்த எண்ணம் மைண்ட்ல இருந்துச்சு. ஃபர்ஸ்ட் நாள் பேசும்போது அறிமுக வகுப்பு
அப்பவே ஜோதிட குரு பொதுவுடைமூர்த்தி ஐயா சொன்னாரு உங்களுக்கு புதன் திசை
போயிடுச்சு படிக்க முடியாது சொன்னாங்கல இப்ப நீங்க படிக்க வந்து இருக்கீங்களே
எப்படி வந்தீங்க சொன்னாரு. எனக்கு எந்த அளவுக்கு இது ஆகுதுன்னு சொல்லி இன்னமும்
இருக்குன்னு அவர்கிட்ட சொன்னேன். ஓகே நல்லா படிங்க அப்படின்னு சொன்னார்.
அதுக்கப்புறம் எங்களுக்கு கிளாஸ் ஆரம்பிச்சது. அந்த
கிளாஸ்ல பாத்தீங்கன்னா ஜோதிடத்துல 12 கட்டம் இருக்குது 27 நட்சத்திரங்கள் இருக்கு.
அதோட கர்மபலன் வந்து கிரகங்கள் வழியா நட்சத்திரங்கள் வழியா நடக்கும் என்பது
வரைக்கும் தான் என்னுடைய புரிதல். மத்தபடி ஒவ்வொரு பாவகமும் நம்ம மனித உடலோடு எந்த
உறுப்போட இருக்கு எந்த உறவோடு தொடர்புடையது அந்த ஒவ்வொன்னுக்கும் உள்ள பாவகங்கள்
பாவகத்தை எப்படி கனெக்ட் பண்ணுவது ஒவ்வொருத்தருக்குமான அதிபதிகள் யாரு. அதாவது
அந்த 12 வீட்டுக்கும் யாரு அதிபதிகள், அந்த 27 நட்சத்திரத்துக்குமான அதிபதிகள்.
ஒவ்வொரு நட்சத்திர பாவகமும் எப்படி இந்த 108 மந்திரம்
சொல்லி கனெக்ட் பண்ணி வர்றது அந்த மாதிரி ஒவ்வொரு விஷயமும் சொல்லிக் கொடுத்துட்டு
அடுத்து மூவ் ஆகுறது கிடையாது. அது உங்க மைண்ட்ல ரிஜிஸ்டர் ஆகி பதிகிறது வரைக்கும்
உங்களை விடுவது கிடையாது. ரிப்பீட்டடா அவங்க எடுக்குறாங்க. ஃப்லோல எழுதி எழுதி அது
டீஃபால்ட்டா உங்க மைண்ட்ல உட்கார்ந்திரும். அந்த அளவுக்கு தரவா சொல்லி
கொடுக்குறாங்க.
பெஸ்ட் டீச்சிங் மெத்தடுன்னு சொல்லுவேன் நானு. அவ்வளவு
அழகா அங்க இருந்த அத்தனை பேருக்கும் அவங்க மைண்ட்ல நின்னு இருக்கும். இன்னொரு
பியூட்டி என்னன்னா ஒருத்தருக்கு எப்படி
பிராக்டிஸ். .பண்ணனும் என்பதும் ஒரு ஃபார்முலா மாதிரி போட்டு
கொடுத்துட்டாங்க. ரூல்ஸ்ன்னு சொல்லிக் கொடுத்து கீ வேர்ட் மாதிரி நம்ம ஐயா
கொடுத்து இருக்காங்க. தி பெஸ்ட் வே என்று சொல்லுவேன் நான்.
எல்லாருக்கும் ஈஸியான வே ல அவங்களுக்கு கன்வே பண்ற
விதமாக ரொம்ப நல்லா கொடுத்து இருந்தாங்க. இந்த ஜோதிடத்தை எப்படி யூஸ் பண்ணனும்
ஒவ்வொரு இதுக்கும் சொல்லி சொன்னாங்க. எண்ட் ஆஃப் தி கிளாஸ் எல்லாருமே ரொம்ப பீல்
பண்ணி பேசுனாங்க ஃபீட்பேக் கொடுக்கும் போது. எனக்கு அப்பதான் தோணுச்சு தெய்வமே
இவ்வளவு நாள் நீங்க எல்லாம் எங்க இருந்தீங்க என்பது போல ஒரு பூரிப்பு மனசுக்குள்ள
இருந்து எங்களுக்கு வந்துச்சு.
கர்மா என்று ஒரு கிளாஸ் எடுத்தாங்க. அந்த கர்மா கிளாஸ்
நித்யா மேம் எடுத்தாங்க. அவங்களுடைய வாய்ஸ்சும் அவங்க எடுத்த விதமும், என்னை அழ
வெச்ச கிளாஸ் அப்படின்னா கர்மா கிளாஸ் சொல்லுவேன். நான் ரொம்ப போல்டா இருப்பேன்
ஆனா கொஞ்சம் எமோஷனலும் எனக்குள் இருக்கும். அவங்க ஃபீட்பேக் பேச சொல்லும்போது நான்
ஃபர்ஸ்ட் ஆன் பண்ணிட்டேன் எப்படியாவது பேசணும்னு சொல்லிட்டு. ஆனா அங்க பேசினவங்க
எல்லாருமே அழுதுட்டே பேசுனாங்க.
என் டர்ன் வரும்போது நான் என்னுடையதையும் உடைச்சு நான்
அப்படி அழுதேன். என்னால பேச முடியாம இருந்தாலும் அவங்களுக்கு அன்னைக்கு தேங்க்ஸ்
சொல்லணும் சொல்லிட்டு சொன்னேன். அந்த கர்மா கிளாஸ் எப்படி ஜோதிடத்தோட கர்மா எப்படி
கனெக்ட் ஆகுது என்ற விஷயம் எனக்கு தெரிஞ்சு அந்த கிளாஸ் அன்னைக்கு அட்டென்ட்
பண்ணவங்க யாருமே அவங்க செய்ற எந்த தவறையும் திருப்பி ரிப்பீட் பண்ண மாட்டாங்க.
எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணி இருப்பாங்க.
என்னோடதுல எனக்கு அது தெரியும் ஆனா நான் சில இடத்தில்
நான் மிஸ் பண்றேன் அப்படின்னு இருந்த எல்லாமே
அன்னையிலிருந்து ஸ்டாப் பண்ணிட்டேன். இதுக்கு அப்புறம் என்னுடைய உறவுகளோட
யாரு கிட்ட பேசினாலும் என்னோட தன்மையை நான் மாத்த கூடாது என்ற எண்ணத்தில் நான்
ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கேன்.
அம்மா அப்பா
உறவுகள் எல்லாமே சொல்றேன். புரிதல் எனக்கு ரொம்ப ஸ்ட்ராங்கா பதிஞ்சது
என்றுதான் நான் சொல்லுவேன்.
எனக்கு இன்னொரு இது நம்ம குரு பொதுவுடைமூர்த்தி ஐயா
இருக்கிறார் இல்லையா அவருடைய ஒவ்வொரு சிந்தனையுமே ரொம்ப டிஃபரண்டா இருக்குது. அப்ப
அந்த கிளாஸ்ல ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கீப் பாயிண்ட்ஸ் மாதிரி ரத்தின சுருக்கம்
சொல்லுவாங்க இல்லையா அந்த மாதிரி ஒவ்வொரு இதுலயும் ஒவ்வொரு கிளாஸ்லையும் நமக்கு
கிடைக்கும்.
நீங்க ஒரு இடத்துக்கு போறீங்க நிறைய விஷயம் இருக்கும்.
ஆனா ஒரு பர்டிகுலர் இது மட்டும் உங்க பார்வையில அது உங்களை ஈர்ப்பது மாதிரி
இருக்கும். அது ஏன்? அப்படின்னு நீங்க என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா என்று
ஒரு விஷயம் சொன்னாங்க.
சோ எனக்கு அதை கேட்கும் போது அந்த கேள்வி உங்களுடைய மூளை
கிட்ட கேளுங்க அதுக்கான ஆன்சர் உங்களுக்கு கிடைக்குதா பாருங்க. ஆன்சர் கிடைக்கிற
வரைக்கும் கேட்டுட்டே இருங்க சொன்னாங்க. எனக்கு உள்ளுக்குள்ள இருந்து ஒரு கொஸ்டின்
வந்துகிட்டே இருந்துச்சு. என்னன்னா நான் ஏன் இங்க இருக்கேன். எனக்கு ஏன் இந்த
ஜோதிடம் படிக்கணும் என்ற எண்ணம் எனக்கு ஏன் வந்துச்சு. எனக்கு அவங்க ஆசைய
சொன்னாங்க அவங்க சொன்ன போது எனக்கு ஓகே பிரபஞ்சம் ஏதோ ஒரு ரீசனுக்காக எனக்கு இதை
என் கையில கொடுக்கணும்னு நினைக்குது. நான் அதை வாங்கணும் என்று நினைச்சுட்டு நான்
சந்தோஷமா கிளாசுக்கு வந்துட்டேன்.
பட் எனக்கு ஏன் இங்க வரணும் தோணுச்சு நான் ஏன் இங்க
வந்தேன். என்னை என்ன ரீசனுக்காக கடவுள் இந்த இடத்துல உட்கார வைத்திருக்கிறார் என்ற
கேள்விக்கான பதில் எனக்குள்ள கேட்டுகிட்டே இருப்பேன்.
தெரிஞ்சவங்க ஒருத்தர் மூலமா ஒருத்தர் ஜாதகம் என் கைக்கு
வந்தது. அவங்க இதை பார்த்து சொல்லுங்க என்று சொன்னாங்க. ஏன்னா நான் ப்ராக்டிஸ்
பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்படிங்கும் போது அவங்க சரி ஓகே நீங்க பாப்பிங்களா
பாருங்க சொன்னாங்க. நான் பேசிக் தான் முடிச்சு இருக்கேன் நான் பாக்குறேன் என்றேன்.
இருந்தாலும் எனக்கு அவங்க பேசும்போது கொஞ்சம் படபடப்பா
பேசினாங்க. ஃபேமிலில சம் ப்ராப்ளம் அப்படின்னு சொன்னாங்க. படபடப்போட அவங்க
பேசும்போது அப்படியே எனக்கு தொத்திக்கிட்ட மாதிரி ஆயிடுச்சு. ஏன்னா இதுவரைக்கும்
நான் எல்லோருடையுதும் வாங்கி நானாவே எழுதி பாத்துப்பேன் எப்படி சொல்றதுன்னு
பிராக்டிஸ் பண்ணிப்பேன். பட் யார்கிட்டயும் நான்
பேசி சொல்லல. சோ எனக்கு லைவா ஒருத்தவங்க அவங்க ரொம்ப ரியலா பிரச்சனைக்காக
ஒரு ஜோதிடர் கிட்ட எப்படி போவாங்களோ அந்த மாதிரி என்கிட்ட கேட்கும் போது எனக்கு அப்பதான்
ஞாபகம் வருது, ஆசிரியர்கள் கிளாஸ் எடுக்கும்போது சொல்லுவாங்க.
ஒரு ஜோதிடருக்கு வாக்கு சித்தி இருக்கணும். அவங்க
அதற்கான பயிற்சி ரெகுலரா பண்ணனும் நீங்க தவறா ஒரு விஷயம் சொல்லிட்டீங்கனா அது
உங்களுக்கு வார்த்தை ஆனா அது கேக்குறவங்களுக்கு வாழ்க்கை. அந்த வார்த்தைக்கான
ரெஸ்பான்சிபிலிட்டி நீங்க எடுக்கணும் என்று சொல்லுவாங்க.
இது எனக்கு ஞாபகம் வந்ததுனால எனக்கு ஒரு பயம்
வந்துருச்சு அதுக்கப்புறம் எங்க கோச்சு காயத்ரி அம்மா கிட்ட பேசினேன். நான்
சொன்னதை ஓரளவு கரெக்டுதான் இதுல இன்னும் சில விஷயங்களை ஆட் பண்ணி சொன்னா
அவங்களுக்கு திருப்தியா இருக்கும்னு அவங்களும் அவங்களோட பலனை சொன்னாங்க. நான்
அதுக்கப்புறம் அந்த பாயிண்டை போயி அவங்க கிட்ட பேசினேன்.
ஜாதகம் என்கிட்ட கொடுக்கும்போது அவங்க உங்க மூலமா எங்க
வீட்டுக்கு ஒரு ஒளி கிடைக்கும் நான் நம்புறேன்.
நீங்க பாத்துட்டு சொல்லுங்க சொன்னாங்க. எனக்கு அந்த வார்த்தை ஏதோ
உள்ளுக்குள்ள ஒரு மாதிரி இருந்துச்சு.
அப்ப நான் பேசும்போது அவங்க ஃபுல்லா கேட்டாங்க. நான் சொன்ன
விஷயங்கள் எல்லாமே ஆமா கரெக்டா தான் இருக்கு. எப்போ எங்களுக்கு டைம் மாறும் எப்போ
இந்த நிலை மாறும் அந்த மாதிரி இந்த நிலை அந்த மாதிரி பேசுனாங்க. ஆத்மார்த்தமா
பேசுவாங்கன்னு சொல்லுவாங்கல அந்த மாதிரி பேசுனாங்க. அந்த அம்மா என்கிட்ட
பேசும்போது கடவுள் நேர்ல வந்து பேச முடியாது. உங்க மூலமா என்கிட்ட பேசுற மாதிரி
தோணுது மா அப்படின்னு சொன்னாங்க.
எனக்குள்ள இருந்த அந்த கேள்விக்கான பதில் இதுதான் இன்று
தோணுச்சு. முகம் தெரியாத ஒருத்தவங்க என்கிட்ட வந்து பேசுறாங்க. நான் சொல்ற
வார்த்தையை நம்பி என்னுடைய வாயிலிருந்து வர்ற வார்த்தைகள் கடவுள் சொல்ற
வார்த்தையாவே நம்புறாங்க என்றால் ஜோதிடம் எவ்வளவு இம்பார்டன்ட். நாம சாதாரணமா நம்ம
பேசுறதா நினைக்கிறோம் அப்படி கிடையாது. அது கடவுள் நமக்குள் இருந்து
வெளிப்படுத்துற விஷயம். அப்ப குரு நமக்குள்ள இருந்து அவங்களுக்கு சொல்ற விஷயம் அது
அப்படிங்கும் போது அதை உணர்ந்து நாம இன்னும் பயிற்சி பண்ணனும் என்று எனக்குள்ள
இன்னும் ஸ்ட்ராங்கா அந்த எண்ணம் வந்தது. ஓகே இந்த ரீசனுக்காக கடவுள் என்னை இங்கே
உட்கார வச்சிருக்காரு என்று தோணுச்சு.
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை
சந்தோஷப்படுத்தி அந்த சந்தோஷத்துல நம்ம சந்தோஷப்படணும் சொல்லுவாங்க இல்லையா,
எனக்கு அந்த ஒரு ஹாப்பினஸ் அந்த அம்மா கிட்ட பேசும் போது நான் நேத்து ஃபீல்
பண்ணேன். அதை நான் இங்க ஷேர் பண்ணிக்கிறதுல எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்குது. இந்த
சந்தோஷத்தை கொடுத்த நம்மளுடைய குரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும் பாடம்
எடுத்த வகுப்புகளை எடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் ரொம்ப நன்றி.
என்னுடைய ஸ்பெஷல் தேங்க்ஸ் டு என்னுடைய கோச் காயத்ரி
மேம். அவங்கள பத்தி நான் சொல்லியே ஆகணும். கால் பண்ணலாமா என்று தான் கேட்பேன்.
எங்கேயோ வெளியே இருக்காங்க என்றால் கூட 5 மினிட்ஸ் மா 10 மினிட்ஸ் மா இம்மிடியட்டா
மெசேஜ் அனுப்பி விடுவாங்க.
நான் கால் பண்ணினா நான் அவங்க டைம் ரொம்ப நேரம் எடுத்துப்பேன். அதாவது எடுத்துக்கணும் நினைக்கிறது கிடையாது. அந்த கான்வர்சேஷன் அப்படி ஒன் ஹவர் வரைக்கும் எல்லாம் போயிருக்கு எங்களுக்கு. அடிக்கடி நான் பேசி இருக்கேன். அவுங்க எப்பவுமே என்னடா இந்த பொண்ணு இவ்வளவு நேரம் பேசுறாளே அப்படி எல்லாம் முகம் சுளிச்சதே கிடையாது. அவங்க ரொம்ப பொறுமையா ரொம்ப டீடைல் டா ஓகே நீங்க கேட்டுட்டீங்க உங்களுக்கு அதை புரிய வைக்கணும் சொல்லிட்டு ரொம்ப டீடெயில்டா எக்ஸ்பிளைன் பண்ணுவாங்க. என்னுடைய கோச் காயத்ரி மேம்க்கு ரொம்ப ரொம்ப நன்றி மேம். உங்களுடைய இந்த சர்வீஸ் இன்னும் நிறைய பேருக்கு கிடைக்கணும். வாழ்க வளமுடன். நன்றி.
வீடியோ லிங்க் :
https://www.facebook.com/share/v/1KnHKJW16Y/
Comments
Post a Comment