குலதெய்வத்தை வணங்கினால் விபத்துகளை தவிர்க்க முடியுமா?

 

குலதெய்வத்தை வணங்கினால் விபத்துகளை தவிர்க்க முடியுமா?

 


  - ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.

 -  ALP  ஜோதிடர்.

 

அனைவருக்கும் வணக்கம்,

 நிறைய கஷ்டங்கள் ஒரு மனிதனுக்கு ஏற்படுது அப்படினாலோ அந்த கஷ்டங்களை தாங்கக்கூடிய வல்லமையை அந்த இறைவன் அருள வேண்டும் என்று பிராத்தனை பண்ணிக்கலாமே தவிர குலதெய்வத்தை கும்பிட்டா கஷ்டமே வராது என்பது அர்த்தமல்ல.

கர்மா:

மனுசனா பொறந்தா எல்லாருக்கும் கர்மா என்பது பேசும். அந்த கர்மாவுக்கான கஷ்டங்களும் இருக்கும். என்ன தெய்வங்கள் என்ன கும்பிடுறோம் வழிபடுகிறோம் மாலை போட்டு பாதயாத்திரைகள் போறோம் அப்படின்னா அந்த தண்டனையை நம்மளே வாலண்டியரா அனுபவிக்கிறோம் அப்படின்னு அர்த்தம். அப்ப அந்த  கஷ்டங்களுடைய தாக்கங்களும் வீரியங்களும் குறையும் அப்படிங்கறது தான் நம்ம புரிஞ்சுக்க வேண்டிய  விஷயம்.

 

இப்ப  சபரிமலைக்கு போறவங்களுக்கு எல்லாம் தெரியும். இந்த கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை அப்படின்னு சொல்லுவாங்க. அவ்வளவு கரடு முரடான பாதையில் நடக்கிறதே அவங்களுக்கு தண்டனை தான். அதை ஆன்மீகத்தின் வழியாக அவங்க வாலண்டியரியாக இன்பமாக ஏத்துக்கிறதுனால அந்த தண்டனை அவங்களுக்கு குறையுது.

பரிகாரம் :

அதனால பரிகாரம் என்பதும் அதுதான் நாம ஆலயங்களுக்கு போறோம்னா நமக்கு கஷ்டங்களை தாங்கக்கூடிய வல்லமையை கொடு அப்படின்னுதான் நம்ம பிரார்த்தனை பண்ணனும். அந்தக் கஷ்டங்களை நாம நாம முன்னாடியே புரிஞ்சு அதுக்கேத்த மாதிரி நம்ம நடந்துக்கிட்டாலே பிரச்சனைகள் வராமல் இருக்கும். வந்தாலும் அதை  சமாளிக்க கூடிய பக்குவம் இருக்கும்.

அதையும் மீறி சில செயல்கள் நடக்குதுன்னா அது இறைவன் செயல் அப்படின்னு விட்ரனும். நன்றி.

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/JVV0Tu-2OiQ?si=XlM6Uz0LVvayBo0C

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR