பத்தாம் வகுப்பு படிப்பில் கவன சிதறல் ஏற்படாமல் இருக்க இதை செய்யவும்.
பத்தாம் வகுப்பு படிப்பில் கவன சிதறல் ஏற்படாமல் இருக்க இதை செய்யவும்
- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய
வாழ்த்துக்கள். பத்தாவது வரைக்கும் படிக்கணும் அவங்க படிப்புல தடைகள் இருக்கு என்ன
பண்ணலாம்? தினமும் 21 முறை தோப்புக்கரணம் போடணும். அதுவும் காது இப்படி கட்ட விரல்
காதுக்கு இந்த பக்கமா இருக்கணும். கையை மாற்றி வைத்து பிடித்து ஃபுல் செட்டிங்
உட்கார்ந்து 21 முறை ஒரே நாள்ல போட்டுறாதீங்க கால் வலிக்கும்.
முதன்முதலில் போடும்போது முதல்ல ஒரு 5 போடுங்க அதுக்கு
அப்புறம் 10 அடுத்து 15 போடுங்க அப்புறம் 20 போடுங்க அப்புறம் 21 தடவை கொண்டு
வந்து நிப்பாட்டிக்கோங்க.
இந்த 21 முறை தோப்புகரணம் போட்டுட்டு ஆரம்பக் கல்வி
நிலைகள்ல இருக்கிறவங்க சரஸ்வதி தேவியை மனதார வழிபாடு பண்ணிட்டு போய்
எக்ஸாம் எழுதினீங்கன்னா நல்ல மார்க் எடுக்கலாம்.
இந்த எக்ஸாம் எழுதுறதுக்கு நல்ல புது பேனாவா வாங்கிட்டு
இங்க் ஃபுல்லா எடுத்துக்கோங்க A4 சீட்ல ஒரு சீட் எடுத்துக்கிட்டு
நன்னிலம் பக்கத்துல பேரளம் கூத்தனூர் சரஸ்வதி கோவில் போயிட்டு, அங்க அந்த
பேனாவையும் பேப்பரையும் வச்சிட்டு மனசார பிரார்த்தனை பண்ணிட்டு அந்த பேனாவை வைத்து
எக்ஸாம் எழுதணும் சூப்பரா இருக்கும்.
அதுக்காக படிக்காம நான் சரஸ்வதி கோயில் போயிட்டு பேனா
வச்சு எக்ஸாம் எழுதினால் நான் பாஸ் பண்ணிடுவேனா கண்டிப்பா முடியாது. படிச்சது
மனசுல பதியனும்னு முதல்ல பிரார்த்தனை பண்ணிக்கிட்டு நீங்க படிக்கணும்.
தோப்புக்கரணம் போட்டுட்டு படிக்கணும். படிச்சிட்டு இந்த சரஸ்வதி தேவியை
வணங்கும்போது கூடுதலாக உங்களுக்கு ஞாபகத்திறன் மேம்படும் என்று சொல்லலாம். நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/wC1TY1oj_Io?si=ITGyyzPPbpoMYKVX
Comments
Post a Comment