தோஷம் வாழ்நாள் முழுவதும் தோஷமாக இருக்குமா அல்லது யோகத்தை கொடுக்குமா?

 

தோஷம் வாழ்நாள் முழுவதும் தோஷமாக இருக்குமா அல்லது யோகத்தை கொடுக்குமா?

 

 - ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.

 - ALP ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம்,

ஒரு பிறந்த ஜாதகத்தில் ஒரு கிரகம் ஒரு இடத்தில் நின்றதுனா உதாரணத்திற்கு ஒரு பிறப்பு ஜாதகத்தில் லக்னத்தில் ராகு 7 ல கேது இருந்து ராகு கேது தோஷம் இருக்கு அப்படின்னு ஒருத்தர் சொல்லிடறாங்க.

 

இன்னும் சில ஜாதகங்கள் என்ன பண்ணுது இந்த ராகு கேது குள்ள இன்க்ளூடிங் லக்னம், நட்சத்திரம், ராசி  முதற்கொண்டு எல்லாமே ராகு கேதுக்குள்ள அடக்கமாயிடுச்சு. அது கால சர்ப்ப தோஷம் ஆயிடுச்சு அப்படின்னு சொல்றது உண்டு.

 

அடுத்து பித்துருக்களுடைய சாபம் இருக்கு. பித்ரு தோஷம் இருக்கு. கன்னி சாபம் இருக்கு இப்படின்னு நிறைய வகையான ஒரு தோஷங்கள் அஷ்ட தோஷங்கள் அப்படின்னு சொல்லலாம். அப்படி அந்த தோஷங்கள் வந்து எப்போதுமே நமக்கு ஒரு லைஃப் டைமும் பிரச்சனைகளை தந்துக்கிட்டுதான் இருக்குமா?  அதுக்கு பரிகாரமே கிடையாதா? அதுக்கு தீர்வு என்பதே கிடையாதா.? அப்படின்னா இது வந்து பிறப்பு லக்னத்தை வைத்து அவ்வளவு தான் புரிஞ்சுக்க முடியும் நம்மளால.

 

ஆனா  நம்மளுடைய ALP லக்னம் வயது மாறுதில்லையா எல்லா காலகட்டங்கள்லயும் நம்மளுடைய தேவைகள் ஒரே மாதிரி இருக்கிறது இல்லை. நம்ம செய்யக்கூடிய தவறுகளும் ஒரே மாதிரி இருக்கிறது இல்ல அல்லவா அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய தண்டனை மாறிக்கிட்டே இருக்கும் அப்படிங்கறது முதல்ல நம்ம புரிஞ்சுக்கணும்.

ஒரு குழந்தை ஒரு தப்பு செய்யுது ஒரு பொருளை கீழே போட்டு உடைஞ்சிருச்சு அப்படின்னா அந்த பொருளை தான் நீ எப்போதுமே கீழ போட்டு உடைக்கும் அப்படிங்கறது அர்த்தம் இல்ல.

இப்ப இன்னைக்கு ஒரு பொருளை கீழே போட்டு உடைச்சி இருக்கலாம். நாளைக்கு அடுத்தவங்கள அடிச்சிருக்கலாம் அதுக்கு கொஞ்சம் கால கட்டங்களில் திட்டி இருக்கலாம் இப்படி அவங்களுடைய பொருளாலோ உடலாலோ மனதாலோ அவங்க வருத்தங்களை அனுபவிக்கிறாங்க. அந்த தண்டனைகளினுடைய நிகழ்வுகள் அதே மாதிரி தான் மாறிக்கிட்டே இருக்கு.

பணம் கஷ்டம் அப்படிங்கிறது ஒரு காலகட்டங்களில் ஏற்படுது இந்த பணக்கஷ்டம் இல்லங்குறப்போ உடல் ஆரோக்கியத்துனால கஷ்டங்கள் அப்படிங்கறது ஒரு காலகட்டங்களில் ஏற்படுது. இந்த ஆரோக்கியமும் நல்லா இருக்கு அப்படிங்குறப்போ வேலையில்லாததுனால கஷ்டங்கள் அப்படிங்கறது ஏற்படுது.

அப்போ காலங்கள் மாற மாற நம்மளுடைய தேவைகளும் நம்ம செய்யக்கூடிய செயலினுடைய விளைவுகளும் வேற வேற தான் இருக்கு. அப்போ அதற்கான தண்டனையும் நமக்கு வேற வேற தான் கிடைக்கும். ஒரே மாதிரி கிடையாது. வாழ்நாள் முழுவதும் நமக்கு தண்டனை என்பது ஒரே தண்டனை கிடையாது. நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/MJ6I3Xh5Edc?si=lQxCs2AJJGl-Fhlz

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR