சுத்த ஜாதகம் ஆனால் திருமணம் தடையாக இருக்கிறது என்ன காரணம்?

 

சுத்த ஜாதகம் ஆனால் திருமணம் தடையாக இருக்கிறது என்ன காரணம்?

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

- ALP ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம்,

 

இரண்டு லக்னமும் 6, 8 இல்லாமல் இருந்தால் போதும். அதை மாதிரி இரண்டு நட்சத்திரங்களும் சஷ்டாஷ்டகமாக இல்லாமல் இருந்தால் போதும். திருமணத்தை தாராளமாக நடத்தி வைக்கலாம் என்பதுதான்.

ரஜ்ஜுப்பொருத்தம் :

சிலருக்கு ஏக ராசி ,ஏக லக்னம் என்பது எடுப்பாங்க. அங்கேயும் பிரச்சனை இருக்குமா? இருக்கும்.  ரஜ்ஜுப்பொருத்தம் என்பது அந்த இடத்துல இருக்காது என்பதை புரிஞ்சுக்கணும்.

 

பொண்ணு விசாக நட்சத்திரம் பையனும் விசாக நட்சத்திரம் ஆனால் பொண்ண முதல் பாகம் பையன் மூணாம் பாதம் நம்ம எடுத்து கல்யாணம் பண்ணி கொடுத்திடலாம்னு கொடுத்தாங்கன்னா அடுத்த தசா புத்திகள் மாற்றம் வரும்போது இவங்களுக்குள்ள பிரச்சனைகள் பிரிவுகளை கொடுக்குமா? கண்டிப்பாக கொடுக்கும்.

 

ஏன்னா இன்னைக்கு லக்னம் நல்லா இருக்குது நட்சத்திரம் நல்லா இருக்குது. ரெண்டு பேரும் ஏக லக்னம் ஒன்னு போல போயிரும் என்று நினைப்போம். ஆனால் சில நட்சத்திர புள்ளிகள் மாறும்போதும் கோச்சார கிரகங்கள் அவங்களுக்கு ரெண்டு பேருக்குமே ஆறு எட்டுல வரும்போது கண்டிப்பாக பிரச்சனை அதிகரிக்கும்.

 

ஒருத்தங்க ஒருத்தங்க விட்டுக்கொடுக்கக்கூடிய ஒரு மனப்பான்மையோ கொஞ்சோண்டு தாழ்ந்து போகக்கூடிய ஒரு தன்மையோ ரெண்டு பேருக்குமே இருக்காது. நீங்க திருமண பொருத்தத்திற்கு தயவுசெய்து பார்க்கும்போது சுத்த ஜாதகம் என்ற ஒரு கேட்டகிரியில மட்டும் பாக்காதீங்க.

 

இன்னைக்கு அவங்களுக்கு என்ன நட்சத்திர புள்ளி அந்த நட்சத்திர புள்ளியோட கால அளவுகள் எத்தனை அதே மாதிரி அந்த பெண்ணிற்கு ஏழாம் பாவகம் யார் அந்த பாவக கிரகம் என்பது அவர்கள் ஜாதகத்துல எந்த பாவகத்துல இருக்குது என்பதை தெரிந்து கொடுப்பது சிறப்பு.

இது பெண் ஜாதகத்து, ஆண் ஜாதகத்திற்கும் இதே மாதிரி பாக்கணுமா கண்டிப்பாக பார்க்கணும் என்று  சொல்லுவோம். நன்றி.

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/CLStZxHotPg?si=6KHZuwzqIRY0DYIP

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR