நம்முடைய ஜாதகம் தான் நமக்கு வழிகாட்டி என்பதை உணர்த்திய ALP வகுப்பு.

 

நம்முடைய ஜாதகம் தான் நமக்கு வழிகாட்டி என்பதை உணர்த்திய ALP வகுப்பு.


வணக்கம் என் பெயர் சுந்தரமூர்த்தி. எனக்கு வயது தற்சமயம் 76 வயதாகிறது. நான் ALP லக்ன பத்ததி வகுப்பிற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே சேர வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சிகள் செய்து அது நடக்க முடியாமல் போனது காரணம் இந்த கம்ப்யூட்டர் விஷயங்கள் எப்படி சேருவது போறதுன்னு தெரியாத காரணத்தினால் தள்ளிப்போனது.

 

இப்பொழுது தற்சமயம் எனது மருமகள் மூலமாக இதில் சேர்வதற்கு எல்லா வித முயற்சிகளும் எடுத்து பணத்தை கட்டி  சேர்ந்தேன். இதற்கு முழு முதல் உதவியாக இருந்தது ALP ஜோதிட அலுவலக உதவியாளர் தமிழழகி அம்மா மிக மிக முக்கியமாக எனக்கு உதவி புரிந்தார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும்,   வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்குள் ஏற்பட்டு மாற்றங்கள் :

ஐயா, இந்த ஜோதிட வகுப்பில் சேர்ந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் என்னை பொறுத்தவரையில்,

·         நல்ல நிம்மதியான மனநிலையையும்

·         வாழ்க்கையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

·          எவ்வாறு பிறரை அணுக வேண்டும்

 என்ற பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களின் சிறப்பு பேச்சுகளினால் மிகவும் கவரப்பட்டு அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து அனுபவபூர்வமாக உணர்ந்தவன் நான் என்பதனால் இதை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

ஐயா அவர்கள் நீண்ட காலம் நன்றாக வாழ்ந்து இதைப்போன்று மக்களுக்கு எல்லாவித விஷயங்களிலும் பொதுவுடமை என்ற பெயருக்கு தகுந்தார் போல பொதுவாக நல்ல கருத்துக்கள் தெரிவித்து அவர்கள் மென்மேலும் சிறப்புடன் வாழ அருள் செய்யணும். இந்த அட்சய லக்ன பத்ததி பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்பதில் எந்தவிதமான வேறுபடும் இல்லை கருத்து வேற்றுமை இல்லை என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

இந்த வகுப்பில் நான் சேர்ந்த பிறகு என்னால் முடிந்தவரை சிரமப்பட்டு மிகவும் நன்றாக புரிந்து கொண்டு உள்வாங்கி இதை நான் மனப்பூர்வமாக கற்றுக்கொண்டுள்ளேன். இதில் இன்னும் சில குழப்பங்கள் எனக்கு இருந்தாலும் அதை நான் மறுபடியும் ரீ கால் பண்ணி மறுபடியும் ஞாபகத்துக்கு வரவழைத்து தினமும் தினமும் எழுதி பார்த்து கொண்டிருக்கிறேன். மேலும் பயிற்சி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஐயாவின் கருத்து உட்பட்டு செயல்பட்டு வருகிறேன் என்பதில் எந்தவித கருத்தும் வேறுபாடும் இல்லை.

 

இதற்கு கோச்சான பிரியதர்ஷினி அம்மாவுக்கும் எனது வணக்கத்தையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வகுப்பில் எடுத்த ஆசிரியர் பெருந்தகைகள் மிகவும் அன்பானவர்கள். நன்கு நம் மனதை அறிந்து நம்முடைய கேள்விகளுக்கு மிகப்பொறுமையாக பதில் அளித்து நம்மையும் அவர்களைப்போல் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பாக எங்களை கையைப்பிடித்து அழைத்து சென்ற அனைத்து குருமார்கள் ஆசிரியர்களுக்கும் இந்த நேரத்தில் எனது அன்பான வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

நான் இந்த வகுப்பில் சேர்ந்து நான்தான் வயதில் முதியவனாக இருப்பேன் என்று எண்ணுகிறேன். எனக்கு கேள்வி  இருந்தது என்ன கேள்வி  என்றால் இது என்னால் கற்ற கொள்ள முடியுமா? இந்த காலகட்டத்திற்கு நமக்கு தேவையா என்ற ஒரு எண்ணம் இருந்தது. அதை எல்லாம் மாற்றியவர்கள் அலுவலக உதவியாளர் மலர்வழி அம்மா என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. சேர்ந்தேன் கற்றுக்கொள்கிறேன், கற்றுக்கொண்டே இருக்கிறேன் ஐயாவின் வார்த்தைகளில் முயற்சி செய்து படிக்கிறேன்.

 

படிக்க படிங்கன்னு சொல்ற மாதிரி படித்துக் கொண்டிருக்கிறேன், கொண்டாடிக் கொண்டிருக்கிறேன், ரொம்ப மனமகிழ்ச்சியோடு இதை பதிவிடுகிறேன் அம்மா. இதில் என்ன தெரிந்துகொள்ள முடியும் என்பதால் நம் வாழ்க்கையில் பல கட்டங்களை கடந்து வந்திருக்கிறோம் இனி கடக்கவும் இருக்கிறோம். இதில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.

 

ஜாதகம் என்பது நமக்கு ஒரு வழிகாட்டி தான். அந்த வழிகாட்டில் அடியில் இருந்து கொண்டு நம் கையைப் பிடித்து அழைத்துச்செல்கிறார். நம்முடைய பொதுவுடைமூர்த்தி ஐயா என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. நாம் வளர வேண்டும் நாம் உணர வேண்டும் வாழ்வில் இருக்கும் துயரங்களை நாமே உணர்ந்து அதற்கு ஏற்றார்போல் நடக்க வேண்டும் என்ற நல்ல அறிவுரைகளை இதன் மூலம் எடுத்துக்கூறும் ஐயா அவர்களுக்கு அவர் பெருந்தன்மையான எண்ணங்களுக்கு நான் தலை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்.

 

இந்த பயிற்சி வகுப்பில் நான் அறிந்து கொண்டவரை நான் ஒன்றுமே தெரியாமல் அடிப்படையே தெரியாத ஆளாக தான் இருந்தேன். இப்பொழுது இதில் சூட்சுமங்களையும் நல்ல விஷயங்களையும் எவ்வளவு நமக்கு எடுத்துக் கூற முடியுமோ கம்ப்யூட்டர்ல சொல்வாங்க  கண்ட்ரோல் பண்ணி செய்ற மாதிரி இந்த கண்ட்ரோல் விஷயங்கெல்லாம் சுருக்கமாக ஷார்ட் கட் ஆக இது இப்படி போது இது இப்படி போது இது நடக்காது போ இது நடக்கும்னு சொல்றது யாருமே சொல்லிக் கொடுக்க முடியாத விஷயங்கள் தான். ஐயா நல்லா சொல்லிக் கொடுத்திருக்காங்க. ஆசிரியர்கள் நன்றாக போதித்திருக்கிறார்கள். நாம் முடிந்தவரை அவர்கள் கருத்துக்களையும் எழுத்துக்களையும் நடைமுறைப்படுத்தி பார்க்கும் பொழுது நாம் வருங்காலத்தில் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் எப்படி உஷாராக இருக்க வேண்டும் எப்படி போனால் எப்படி நன்றாக இருக்கும் என்று தெரிவித்தற்கு நன்றியும் வணக்கங்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த வகுப்பு எனக்கு வெறும் பொக்கிஷமாகவும் என் வாழ்வில் பெரிய திருப்புனையவும் அமைந்ததில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஐயா அவர்களின் பொற்பாதங்களை வணங்கி நான் இந்த கருத்துக்களை வைக்கிறேன். அவர் சில விஷயம் சொல்லும்போது நூல்கண்டு பிடித்து அழுத்தி பாருங்க மத்தவங்க லைன கிராஸ் பண்ணாதீங்க நீங்க. எதும் தேவையில்லாதது சுமக்காதீங்க. உங்க வாழ்க்கையில எல்லாவிதமான காரணத்திற்கும் நீங்கள்தான் காரணம். அனைத்தும் நீங்கள் தான் அதிபதி நீங்களே செய்து விட்டு நீங்களே வந்தது என்று சொன்னால் எப்படி அர்த்தம் என்று கூறும்போது சிந்திக்க வைத்த வார்த்தைகள். மிகவும் சிந்திக்க வைத்த வார்த்தைகள்.

 

அந்த வார்த்தைகள் கேள்வியே புரியாம பதில் எங்கப்பா நீங்க சொல்றீங்க கேள்வியை முதலில் புரிஞ்சுக்கோங்க. அதுக்கு பிறகு பதில் ஆராய்ச்சி பண்ணுங்க. அந்த பதில் உங்களுக்குள் இருந்து எழும். நீங்க நல்ல எண்ணங்களோடு நல்ல சிந்தனைகளோடு எல்லோருக்கும் நன்றி கூறி வணக்கங்களைத் தெரிவித்து எல்லோரையும் மகிழவையுங்கள் நீங்களும் மகிழ்வாக வாழ வேண்டும் என்ற அர்த்தத்தோடு பொருளில்தான் அவர் எல்லாவற்றையும் சொல்லிக் கொள்கிறார் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

 

அவர் நல்ல எண்ணங்களுக்கு தலை தாழ்ந்து வணங்குகிறேன். அவரும் அவர் குடும்பத்தாரும் நீண்ட காலம் வாழ்ந்து உலக மக்களுக்கு நன்மை புரிய வேண்டும். யார் எது செய்தாலும் என்ன சொன்னாலும் நமக்கு கவலை இல்லை. குரு கற்றுக் கொடுத்ததே சிறந்ததே என்ற முடிவுக்கு நாம் வந்து விட்டோம் என்றால் அதுவே சிறந்த மந்திரம் ஆகும். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது போல் குருவின் வார்த்தையை மிஞ்சி வேற எந்த வார்த்தையும் சிறந்தது இல்லை என்பதை மனதிற்கு கொண்டு நாம் செயல்படுவோமானால் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட வகுப்பு என்பது நம் வாழ்வில் பலவித நன்மைகளும் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் நம்மை சுற்றி இருக்கிறவர்களுக்கும் தரும் என்பதில் எள்ளளவும் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை.

 

இது வாழ்க இது வளர்க இதன் மூலம் பயனடையும் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள் என்னுடன் சேர்ந்து பயணித்த சக மாணவர்கள் தோழிகள் தோழர்கள் அன்பர்கள் தாய்மார்கள் பெரியோர்கள் அனைவருக்கும் என் சிரம் சார்ந்த நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரும் நலமுடன் வாழுங்கள். எல்லோரும் வளமுடன் வாழுங்கள். எல்லோரும் அன்புடன் வாழுங்கள். குருவின் வார்த்தையை மதித்து திருவருட்செயலோடு இணைந்திருங்கள். நமக்கு தெரியாததை அவர் அருள் நமக்கு கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்கிறேன். வாழ்க வளர்க. நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள் அம்மா.

 

 

வீடியோ லிங்க் :

https://www.facebook.com/share/v/1c2zaDr22H/

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR