பணம் தேடி வரணுமா? அப்படி வந்த பணம் நிலையாக இருக்க இதை செய்யுங்கள்


 - ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.

 - ALP ஜோதிடர்.


அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். ALP ஜோதிடர், ஜோதிட ஆசிரியர் டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் மக்கள் போராடிட்டு இருக்கக்கூடிய ஒரு நிகழ்வு வந்து பண தேவை அப்படிங்கற ஒரு நிகழ்வுக்காக தாங்க.

 இரண்டாம் பாவகம் :

சரி இந்த பணம் நமக்கு வரணும் வந்த பணம் நம்ம கையில தங்கணும் அப்படின்னா என்ன பண்றது. நமக்கு பண தேவைகளை கொடுக்கக்கூடியது இந்த இரண்டாம் பாவகம்தான். அப்ப அந்த இரண்டாம் பாவகம்தான் நம்ம வருமானத்தை பற்றி சொல்லக்கூடியதாக இருக்கும்.

அப்ப இந்த வருமானம் எந்தெந்த லக்னத்திற்கு எல்லாம் லாக் ஆகும் அப்படிங்கறது பார்த்திடலாமா?

எப்படி இருந்தா எந்த அமைப்புல இருந்தா அந்த பிரச்சனைகளை தரும் அப்படிங்கறது நம்ம கொஞ்சம் கவனிக்கணும்.

ரிஷபம் :

 இந்த ரிஷப லக்னத்திற்கு பணத்தை தரக்கூடிய ஒரு கிரகமாக இருப்பது யாரு? புதன் பகவான் தாங்க. பொதுவா சுக்கிரன் எல்லாருக்கும் பணத்தை கொடுத்துட மாட்டார். இங்க ஒரு தெளிவு நமக்கு வேணும். இந்த சுக்கிரன் வந்து வசதி வாய்ப்புகளை கொடுக்க கூடியவராக இருந்தாலும், அந்த ரிஷபம்னு வரும்போது அவர் அந்த வீட்டுக்கே அதிபதியாக இருந்தாலும் அவர் கடன தான் அதிகமா கொடுப்பாரே தவிர அங்கு பணத்தை கொடுக்கணும்னா அதற்கு புதனுடைய அனுகிரகம் அப்படிங்கிறது கண்டிப்பா வேணும்.

இந்த சுக்கிரனும் புதனும் நல்ல அமைப்புல இருந்ததுன்னா இவங்கள அடிச்சுக்க ஆளே கிடையாதுங்க. சூப்பரா இருக்கும் இவங்களுக்கு. வாழ்க்கையில் ரொம்ப ஹார்டு வொர்க் பண்ணி வசதி வாய்ப்புகளை பெறக்கூடிய அமைப்பு உண்மையிலேயே இவங்களுக்கு உண்டு.

இப்ப இவங்க ஜாதகத்துல சுக்கிரனும் புதனும் எங்க இருக்கக்கூடாது தெரியுமா?

புதன் வந்து ரிஷப லக்னத்தை பொருத்த அளவுல துலாமில் இருக்க கூடாது. தனுசில் இருக்கக்கூடாது. ரிஷபத்தில் இருக்க கூடாது. இந்த இடங்களில் இருந்தால் லக்னத்தில் தானே இருக்காரு புதனும் சுக்கிரனும் நல்லா இருக்கும்ல அப்படின்னு நீங்க நினைக்கலாம்.

ஆனால் இரண்டாம் இடத்தினுடைய அதிபதி லக்னத்தில் இருந்தால் எவ்வளவு பிரச்சனையை தரும் என்று நீங்கள் ALP வகுப்புல வந்து படிச்சு பாருங்க. அப்ப தெரியும் உங்களுடைய பேச்சுனால பிரச்சினைகள், குடும்பத்தினால பிரச்சனைகள் எல்லாம் எவ்வளவு ஏற்படும் அப்படின்னு. அந்த லக்னத்தில் இருந்தாலும் ஜாதகர் அந்த வருமானத்தை சரியாக ஹேண்டில் பண்ண மாட்டாரு. அதனாலே அவங்களுக்கு பிரச்சனைகள் அப்படிங்கறது அதிகமாக ஏற்படும் அப்படிங்கிறத நம்ம புரிஞ்சுக்கணும். அதனால இந்த இடங்களில் இருந்தால் கண்டிப்பாக அவங்களுக்கு பிரச்சனைகள் அப்படிங்கறது அதிகமாக ஏற்படும்.

இதுக்கு என்ன பரிகாரம்?

இதற்கு என்ன தீர்வு அப்படின்னா இவங்க கொய்யாப்பழத்தை தானமாக நிறைய பேருக்கு கொடுக்கணும். நான் கொய்யாப்பழத்தை தானமாக கொடுத்துவிட்டு இவங்க ஆலயம் என்று போயிட்டு வழிபாடு பண்றாங்கன்னா அவங்க பக்கத்துல உள்ள பெருமாள் கோயில்கள்ல அந்த பெருமாள் கூட இரண்டு சொரூபங்களில்ல அல்லது ஒரு சில ஆலயங்கள்ல சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து இருப்பாங்க. அந்த மாதிரி இருக்கக்கூடிய அந்த இரட்டை தெய்வங்களாக சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து இருக்கக்கூடிய ஆலயங்கள் போறீங்க அப்படின்னா அது ரொம்ப விசேஷமா இருக்கும்.

அந்த ஆலயங்கள் அல்லது ஸ்ரீதேவி பூதேவி. ஸமேதராக பெருமாள் இருப்பார் இல்லையா நின்ற திருக்கோலத்தில் இருப்பார் இல்லையா அந்த பெருமாளையும் நீங்க வழிபாடு செய்யலாம். துளசி மாலை சாற்றி வழிபாடு செய்யுங்கள். உங்களுக்கு பணம் கையில தங்குமம் அப்படிங்கறத நீங்க புரிஞ்சுக்கணும்.

இந்த ரிஷபத்தை பொறுத்த அளவுல இவங்க சில செயல்களை செய்யக்கூடாது அப்படின்னு சொல்லலாம். ஏன்னா சுக்கிரன் அழகா கிரியேட்டிவ்வா பண்ணுவாங்க அப்படின்னு சொல்லலாம். அதை வந்து ரொம்ப கவனமா பார்த்து பண்ணனும் அவங்களுக்கு அந்த தொழில் சார்ந்த நிலைகள் அப்படிங்கிறது திருப்தியை தராத ஒரு சூழ்நிலையும் ஏற்படுத்திடும். அதனால இவங்க இந்த பெருமாளை வழிபடும் போது அவங்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றங்கள் அப்படிங்கறது நிச்சயமாக கிடைக்கும்.

மிதுன லக்னம் :

 மிதுன லக்னத்திற்கு பணம் தேவைகள் அப்படிங்கிறது என்ன மாதிரியான ஒரு தேவைகளை ஏற்படுத்தும் அப்படின்னா மிதுனத்திற்கு பணத்தை தரக்கூடியவர் யாரா இருப்பார்னா சந்திர பகவான் தாங்க வருமானத்தை தரணும். 

ஏன்னா அவர்தான் அந்த வருமானத்தை தரக்கூடிய பாவகத்தின் அதிபதியாக மாறுகிறார். அப்ப அந்த சந்திரன்னாலே நம்ம என்ன நினைப்போம் ஏற்ற இறக்கமான வருமானங்கள் அப்படினு நினைப்போம் இல்லையா. இந்த ஏற்றம் இறக்கமான வருமானத்தை தரக்கூடியவர் சந்திர பகவான். சில இடங்களில் இருந்தால் இந்த மிதுனத்திற்கு பண தேவைகளை கொடுக்காது அப்படின்னு சொல்லலாம்.

அப்போ இந்த சந்திரன் எங்கெங்கெல்லாம் இருக்கக்கூடாது தெரியுமா?

இந்த சந்திர பகவான் இந்த ஜாதகத்திற்கு நம்ம பொதுவா எடுத்துக்குறோம் அப்படின்னா இந்த மிதுன லக்னத்திற்கு விருச்சிகத்தில் இந்த சந்திரன் இருக்கக்கூடாது. மகரத்தில் இந்த சந்திரன் இருக்கக்கூடாது. அப்படி இருக்கிறாங்க அப்படின்னா இவங்களுக்கு கண்டிப்பா நல்ல பலன்களை தராது.  அந்த வருமானத்தை இந்த ஜாதகரால  பெற முடியாது அப்படிங்கற ஒரு நிலை இருக்கும்.

அப்ப இவங்க என்ன பண்ணனும் அப்படின்னா இவங்க மாவிளக்குனால தீபம் போட்டு பக்கத்துல உள்ள அம்பாள் கோயில்களுக்கு போயிட்டு வந்தாலே போதும். இவங்களுக்கு பணவரவு பண தேவைகள் அப்படிங்கிறது பூர்த்தியாகும் அப்படின்னு சொல்லலாம். அப்போ இந்த பண தேவைகளை அவங்க பெறுவதற்கு அருகில் உள்ள அம்பாள் கோயிலுக்கு போயிட்டு மாவிளக்கு போட்டு வழிபாடு பண்ணனும்.

கடக லக்னம் :

 இந்த கடக லக்னத்திற்கு பண பிரச்சினைகள் அப்படிங்கறது என்ன காரணத்தினால் ஏற்படும்னா இரண்டாம் அதிபதி சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் இவங்களுக்கு கண்டிப்பா பண பிரச்சினைகள் அப்படிங்கிறது வரும்ங்க. அதிலும் குறிப்பாக சூரியன் வந்து சில இடங்களில் இருக்கக்கூடாது.

ஏன்னா கடக லக்னத்தை பொறுத்த அளவுல வருமானத்தை தரக்கூடிய சூரிய பகவான் கடக லக்னத்திற்கு, தனுசிலோ அல்லது கும்பத்திலேயோ இந்த சூரிய பகவான் இருந்தா அந்த பண வரவு என்பது அவங்களுக்கு பாதிக்கப்படும். ஜாதகராக அந்த பணத்தை அனுபவிக்க முடியாது அப்படிங்கற ஒரு சூழ்நிலை ஏற்படுத்தும்.

இப்ப இவங்க என்ன பண்ணனும்?

 இந்த பணம் தேவைகள் அவங்களுக்கு பணம் கிடைக்கணும் அப்படின்னா இவங்க என்ன பண்ணனும் அப்படின்னா, சிவன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமையில ராகு காலத்துல நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை பண்ணிக்கிறாங்கன்னா அவங்களுக்கு ஓரளவுக்கு பணம் தேவைகள் கொஞ்சம் பூர்த்தியாகும் அப்படின்னு சொல்லலாம்.

சிம்மம் :

 இந்த சிம்ம லக்னத்திற்கு இந்த பணத்தேவைகள் பூர்த்தியாகணும். பணம் வந்து கையில தங்கணும் அப்படின்னா அவங்களுக்கு வருமானத்தை யார் கொடுப்பாங்க? சிம்ம லக்னத்தை பொறுத்த அளவுல புதன்தான் வருமானத்தை கொடுக்கக் கூடியவராக இருப்பார். அப்ப இந்த புதன் வருமானத்தை தர்றாரு அப்படின்னா நல்ல இடங்கள் இருக்கணும்.

முக்கியமா இந்த இடங்களில் இருந்த புதன் வருமானத்தை கொடுக்க மாட்டார். அப்போ புதன் எந்த இடத்தில் இருக்கணும்? சிம்ம லக்னத்திற்கு மகரத்துலையோ அல்லது மீனத்துலையோ புதன் இருக்காரு அப்படின்னா கண்டிப்பாக வருமானத்தை அவரால் கொடுக்க முடியாது. கொடுத்தாலும் ஜாதகராக பயன்படுத்திக்க முடியாது. எங்க இருக்குன்னு தேடுவாரு.

அதுக்கு சின்னதா ஒரு உதாரணம் சொல்லலாம். ஒரு கண்ணு தெரியாதவர் ஏதோ ஒரு நல்லது செய்றார். அந்த நல்ல பலனுக்கு மெச்சி அந்த சன்னியாசி என்ன பண்றார் தான் வச்சிருந்த திருவோட்டை கொடுக்கிறார். அந்த திருவோட்டை வாங்கினதுக்கு அப்புறம் இத வச்சு நீ வாழ்நாள் பூரா வசதியா வாழக்கூடிய அமைப்பை இத வச்சிருந்தா கிடைக்கும். இதை வைத்து நீ பொழைச்சுக்கோன்னு அந்த திருவோட்டை கொடுத்துட்டு போயிறார்.

இந்த கண்ணு தெரியாதவர் என்ன பண்றாரு இந்த  திருவோடு தானே இந்த திருவோடுல அப்படி என்ன இருக்கப்போகுது சரி இந்த திருவோடுல நம்ம பிச்சை எடுத்துக்கலாம் அப்படின்னு பிச்சை எடுக்கிறார். ஆனால் தெரியாம வந்த வழிப்போக்கர் அதை பார்த்துட்டு அது தங்க திருவோடுங்கறத புரிஞ்சிக்கிறார். அவர் வந்து உனக்கு நான் பைசா தாரேன் இந்த திருவோடு எனக்கு கொடுத்துடு சொல்றார். இன்னைக்கு வந்து பணம் கிடைச்சா போதும்ட்டு அந்த திருவோடு அவர் கொடுத்துவிடுகிறார்.

அப்போ சாமி வரம் கொடுத்தாலும் கூட சில நேரங்களில் நம்ம வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வோ, அதை பார்க்கவும் மாட்டோம். அது நம்மளால பயன்படுத்திக்க தெரியாது அப்படிங்கிறது இந்த நிகழ்வில் இருந்து நம்ம புரிஞ்சுக்க முடியுது. அப்ப என்ன பண்ணனும் ஒரு ஜோதிடம் அப்படிங்கிற நிகழ்வு நம்ம படிக்கிறோம் நம்ம பார்க்கிறோம் அப்படின்னா அதுல நமக்கு என்ன இருக்கு நமக்கு கிடைக்குமா கிடைக்காதா? எப்ப கிடைக்குமா அப்படிங்கறத நம்மளால கண்டிப்பா புரிஞ்சுக்க முடியும்.

இந்த புதன் வந்து இந்த இடங்களில் இருந்தா நம்ம என்ன மாதிரியான தெய்வங்களை வழிபட வேண்டும் அப்படின்னா பொதுவா இந்த ஸ்வர்ண அப்படின்னு பெயர் இருக்கும் அந்த சொர்ண கணபதி ஆக இருக்கட்டும் சொர்ண லட்சுமி ஆக இருக்கட்டும் சொர்ணபுரீஸ்வரராக இருக்கட்டும் அல்லது சொர்ண பைரவராக இருக்கட்டும் சொர்ணம் தங்கம்னு சொல்லக்கூடிய பொன் வைத்த நாதன்னு கூட இருக்கும். அந்த மாதிரி ஆலயங்களுக்கு போயிட்டு அவங்க வழிபாடு பண்றாங்க அப்படின்னா கண்டிப்பா இந்த சிம்ம லக்னத்திற்கு பணம் வருவதற்கான வாய்ப்புகளை அது ஏற்படுத்திக் கொடுக்கும்.

பணம் கையில தங்கும். வருவதற்கான வழிகள் கிடைக்கும் அப்படின்னு கூட சொல்லலாம். மீண்டும் இனியொரு நிகழ்வில் சந்திப்போம் நன்றி. வணக்கம்.

 

வீடியோ லிங்க் :

https://youtu.be/WYNuDcO7o3w?si=RXTSzysRNsVJs2K-

 

 

Comments