உங்கள் ஜாதகத்தில் சூரியன் பலமாக இருக்கிறாரா? பலவீனமாக இருக்கிறாரா?

 


 - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

 -  ALP ஜோதிடர்.

 

வணக்கம். அட்சய லக்னப் பத்ததி ஜோதிடர், ஜோதிட ஆசிரியர், ஸ்ரீ குரு உமாவெங்கட். இப்ப வந்து நவகிரகங்கள் என்ன செய்யும் அப்படிங்கற ஒரு கேள்வி எல்லாருக்குமே இருக்கும்.

நவகிரகங்கள் :

நவக்கிரகங்கள்ல முதன்மையானது யாருன்னு பாத்தீங்கன்னா சூரிய பகவான். ஒரு ஜாதகத்துல அவங்களுடைய வாழ்க்கையில சூரிய பகவான் எந்த விதமான வேலைகளை செய்வார் அப்படிங்கிறது எல்லாருக்குமே ஒரு கேள்விக்குறி இருக்கும்.

எல்லாரும் கேப்பிங்க அல்லவா எனக்கு எந்த கிரகம் வந்து பலமாக இருக்கிறது? எந்த கிரகம் பலவீனமாக இருக்கிறது?

இப்ப நாம சொல்லக்கூடிய சில தகவல்கள் மூலமாக உங்க ஜாதகத்துல எந்த கிரகம் பலமாக இருக்கிறது. அந்த பலமான கிரகத்திற்கு பரிகாரம் வேணுமானா தேவை கிடையாது.

நண்பர் நல்லா இருக்காரு. அவர போயி நம்ம வந்து நலம் விசாரிக்கிறதோ அவருக்கு வந்து ஏதாவது தேவைகள் அதாவது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எப்படி உபசரிப்போமோ அதே மாதிரி நன்றாக இருக்கக்கூடிய ஒரு நண்பரை உபசரிப்பது கிடையாது. அவருடைய நிகழ்வுகள் அங்க தானாகவே நடக்கும்னு சொல்லலாம் .

இப்ப பலம் இழந்த கிரகம் யாரு?

 அந்த கிரகத்திற்கு தான் பரிகாரம் அப்படிங்கிறது சொல்லலாம். இது நம்ம என்ன லக்னமாக இருந்தாலும் சரி, எந்த நட்சத்திர புள்ளிகள் போனாலும் சரி, இவர்களுடைய நிகழ்வுகள் இந்த மாதிரி அமையுமானா கண்டிப்பாக அமையும்னு சொல்லலாம்.

இப்போ உதாரணமாக நம்ம சூரியன் முதல் கடவுள் கிரகம்னு வச்சுக்கிடலாம். இந்த  சூரிய பகவான் ஒருத்தருக்கு ரொம்ப பலமாக இருந்ததுனா, அவருடைய ஆளுமை அதிகாரம் அப்படிங்கறது நன்றாக இருக்கும். அவர் பேசக்கூடிய பேச்சு அவர் பேச்ச நாலு பேர் கேட்கக்கூடிய தன்மை அப்படிங்கிறது அங்க நல்லாவே இருக்கும்.

அதே மாதிரி அவர் எங்கேயாவது ஒரு இடத்துக்கு போனாருனா அவரை சுத்தி நாலு பேரு 40 பேர் சூழ்ந்து கொள்ளக்கூடிய ஒரு தன்மை இருக்குமான அவருடைய ஜாதகத்தில் சூரியன் நன்றாக இருந்தது என்றால்  அந்த தனித்துவம் அப்படிங்கறது அவருக்கு தனியாகவே வரும். நம்ம அதை ஏற்படுத்தணும் அப்படிங்கறது கிடையவே கிடையாது.

அதே மாதிரி முதல் வரவேற்பு அப்படின்னு சொல்லுவோம். பூரண கும்பம்னு சொல்லலாம். பூரண கும்பம் மரியாதை அதே மாதிரி நம்ம கோவிலுக்கு போனா முதல் மரியாதை என்று சொல்வது. உதாரணமாக எங்கேயாவது ஒரு இடத்துக்கு போகும்போது அவருக்காக நாலு பேர் எந்திரிச்சு சேர விட்டுக் கொடுக்கிறது.

நான் அவருக்கு தேவையான பணிவிடைகள் யாராக இருந்தாலும் சரி அந்த செயல்கள் தானாக நடக்குது அப்படின்னா அவங்களுடைய ஜாதகத்துல சூரியன் நன்றாக இருக்கிறார் அப்படிங்கிறது அர்த்தம்.

இதுவே ஒரு ஜாதகத்துல சூரியன் பலம் இழந்து இருந்தாங்கன்னா அவர் எவ்ளோ தான் முன்னாடி வந்து செய்தாலும் அவரை பாராட்டுவதற்கோ திரும்பிப்  பார்ப்பதற்கோ ஆள் இருப்பாங்கனா கண்டிப்பாக இருக்க மாட்டாங்க. ஒரு ஜாதகத்துல சூரியன் பலமாக இருந்தார்னா அவர் தனித்துவம் அப்படிங்கறது தெரியும்.

உதாரணமா சொல்லனும்னா  அரசியல்வாதிகள் சொல்லலாம். உதாரணமா இந்த அரசியல்வாதிகளோ இல்லையென்றால்  மேலிடத்து யாராவது முதன்மையான ஆக்ட்ரஸ் அப்படிங்கிறது சொல்லலாம். இல்லனா நம்ம ஜெயலலிதா அம்மா அப்படிங்கறத சொல்லலாம். அவங்கள எல்லாம் பாத்தீங்க அப்படின்னா அவங்க வரும் போது  10 பேர் அப்படியே விலகி நிப்பாங்க. அரசியல்வாதிகள் வந்தாங்கன்னா 10 பேர் சூழ்ந்து நிப்பாங்க. ஆக்டர்ஸ் வந்தாங்கன்னா வந்தாங்கன்னா 10 பேர் செல்பி எடுப்பதற்காக  வருவாங்க. அவருடைய ஜாதகத்துல அந்த சூரியன் பலமாக இருந்தால் தான் அந்த தனித்துவம் அந்த முதன்மை துவம் அப்டிங்குறது ஒரு ஜாதகருக்கு கிடைக்கும் அப்படிங்கறதுல எந்த மாற்றமும் கிடையாது.

சரி, எல்லா இடங்களுமே இந்த சூரியன் பலம் இழந்தோ இல்லனா நன்றாக இருந்தாலும் இந்த தன்மை கிடைக்குமான்னா கண்டிப்பாக கிடைக்கும். இப்போ ஒரு அரசியல் கூட்டத்திற்கு தலைவராக இருக்கவும் ஒரு நபர் அப்படிங்கறது இருப்பாங்க. அதே மாதிரி கூலித்தொழிலாளி அப்படின்னு  ஒருத்தவங்க இருக்காங்க. அவர் கூட்டத்திற்கு அவர் தலைவராக இருப்பாங்க. அப்ப அவருடைய ஜாதகத்துல தான் இருக்கும் இடத்தில் அங்க முதன்மை துவம் அந்த ஜாதகருக்கு இருக்குமான இருக்கும்.

உதாரணமாக தான் நம்ம ஜோதிடத்துல சொல்லுவோம் தந்தை அப்படிங்கிறது சூரியன். அப்பா சொன்னாங்கனா ஒரு வார்த்தை சொன்னாங்கன்னா வீட்ல உள்ள அனைவரும் கேட்பது என்பது அங்கு இருக்கும். அதனாலதான் தந்தைக்கு உதாரணமாக சூரியன் அப்படிங்கறது முன் வச்சாங்க.

சரிங்க நீங்க சொல்ற மாதிரி சூரியன் எங்க ஜாதகத்துல இந்த அமைப்புலதான் இருக்குது. நாங்க எதை செஞ்சாலுமே எங்களால் அடுத்த லெவலுக்கு போகல எங்களால இத செய்ய முடியல அப்படின்னு யார் நினைக்கிறீங்களோ கண்டிப்பாக சூரியனுக்கு ப்ரீத்தி சொல்லலாம். இல்லனா சூரியனுக்கு தகுந்த பரிகாரம் அப்படிங்கிறது பண்ணனுமான பண்ணனும்.

பரிகாரங்கள் :

பரிகாரங்கிறது கண்டிப்பாக பண்ணனும். இந்த பரிகாரங்கள்ல முதல்ல சூரியன் யாருன்னு பாத்தீங்கன்னா சிவன் வழிபாடுனு சொல்லலாம். இந்த சிவன் கோயிலில் பிரதோஷ வேளைகளில் வழிபடுவது   அப்படிங்கறது சிறப்பு.

என்னால எதுவுமே முடியல நான் பிரதோஷ பூஜைகள் எல்லாம் போயிட்டேன் அப்படின்னு யாரெல்லாம் நினைக்கிறீர்களோ இந்த சிவன் கோவிலுக்கு  விபூதி அபிஷேகத்துக்கு நீங்க பொருள்கள் அப்படிங்குறது வாங்கி கொடுங்க. கண்டிப்பாக உங்களுக்கு பலன் கொடுக்குமான கொடுக்கும். உங்க வாழ்க்கைய மாற்றி தரக்கூடிய ஒரு தன்மை அந்த கர்ம வினைன்னு சொல்லலாம். நாம செய்த செயலுக்கு பலன் இல்லனா செய்த செயலுக்கு அந்த கர்மாவ அனுபவிக்கிறோம்னு சொன்னா அதிலிருந்து ஒரு தீர்வு அதிலிருந்து ஒரு விடை அப்படிங்கறது கிடைக்குமான்னா, கண்டிப்பாக இந்த சிவபெருமானுக்கு பிரதோஷ வேளைகளில் அந்த விபூதி அபிஷேகத்துக்கு பொருட்கள் வாங்கிக் கொடுப்பது அப்படிங்கறது சிறப்பு.

என்னால முடியாது ஒரு பத்து ரூபாய்க்கு விபூதி பாக்கெட் வாங்கி நீங்கள் சிவன் கோவிலில் போய் கொடுத்துட்டு வாங்க. அதுவே உங்களுக்கு மிகச்சிறந்த பலனை கொடுக்குமான கண்டிப்பாக கொடுக்கும். இல்ல என்னால செய்ய முடியும் அப்படின்னா ஒரு கிலோவோ 5 கிலோ விபூதி அபிஷேகம் என்பது சிவனுக்கு பண்ணிட்டே வாங்க. கண்டிப்பாக உங்களுக்கு சூரியனால் கிடைக்கக்கூடிய அந்த பிரதிபலிப்பும் அந்த ஆளுமை அந்த அரசாங்கம் சம்பந்தப்பட்டது. நிறைய பேருக்கு இந்த அரசாங்கத்தடைனு சொல்லலாம் அரசினாலும் எனக்கு அனுகூலம் இல்லைன்னு சொல்லலாம்.

நான் எங்கேயாவது போறேனா அங்க ரிஜெக்ட் ஆகி வருது அவங்களுக்கு எல்லாமே இந்த சூரியன் பலம் இல்லாமல் இருக்கிறது என்று சொல்லலாம். இவர்கள் இந்த பிரதோஷ வேளை வழிபாடு செய்வது திங்கட்கிழமை சிவன் கோவிலுக்கு போயிட்டு ரெண்டு தீபம் ஏற்றுவது. நீங்க நெய் தீபமா கூட இருக்கலாம். நல்லெண்ண தீபமா கூட இருக்கலாம். எந்த தீபம் வேணா ஏத்துங்க. கண்டிப்பாக நீங்க நினைத்த காரியம் அப்படிங்கறது அந்த சிவபெருமானால் அந்த சூரியனு சொல்லக்கூடிய கிரகத்தினால் கிடைக்குமானா கண்டிப்பாக கிடைக்கும்.

படிப்படியான முன்னேற்றம் அப்படிங்கிறது உங்க வாழ்க்கையில் வருமானா கண்டிப்பாக வரும்னு சொல்லலாம். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtu.be/xnK3V1ICPNI?si=HxuTfTM5yw5Xuyn2

 

 

Comments