கார்த்திகை மாதம் முழுவதும் இதை தவறாமல் செய்தால் கல்வி,  திருமணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.


 

- ஸ்ரீ குரு டாக்டர் சத்திய நாராயணன்.

- ALP ஜோதிடர்.

 

அனைவருக்கும் வணக்கம். இன்னைக்கு நம்ம பேச போற விஷயம் என்னன்னா கார்த்திகை மாதத்தினுடைய நிறைய பலன்கள் கார்த்திகை மாதத்தில் இருக்கு. அது சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை தான் நம்ம பேசப்போறோம் இன்னைக்கு.

நிறைய பேருக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் பிரச்சனையா இருக்கு. விவாகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் பிரச்சனையா இருக்குது. இந்த படிப்பும் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயமும் எனக்கு சாதகமாக வரவேண்டும். நான் என்ன சார் பண்றது? அப்படின்னு நிறைய பேர் கேள்வி கேப்பாங்க. அதே மாதிரி எனக்கு நோய் நொடிகள் அதிகமாக இருக்கிறது. இந்த நோய்நொடிகள் தீருவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

இந்த காலகட்டம் நோயை ஒழிப்பதற்கு உண்டான தன்மையே இந்த கார்த்திகை மாதத்தில் இருக்கானா இருக்குன்னு சொல்லலாம்.

எப்படி?

கார்த்திகை மாசம் முழுவதுமே எனக்கு தெரிந்த பல வீடுகளில் கார்த்திகை மாசம் ஃபுல்லாவே வந்து பாத்தீங்கன்னா மூன்று நாள் பரணி தீபம் எல்லாம் சொல்லுவோம். அது இல்லாம பாத்தீங்கன்னா இந்த கார்த்திகை மாதம் ஃபுல்லாவே வீட்ல வாசல்ல விளக்கு ஏத்தணும். இந்த விளக்கு ஏத்தணும் அப்படின்னா நம்மளுடைய வாழ்க்கைல செல்வ செழிப்புன்ற விளக்கு எரியுமா? கண்டிப்பாக எரியும் சொல்லலாம்.

அதே மாதிரி அறியாமை அப்படின்ற இருட்டு நம்மளோட வாழ்க்கையில இருந்து ஒழியும்னு சொல்லலாம். ஒரு விளக்கு கொளுத்தினாலே டெய்லி ஹோமம் பண்ணோம்னா என்ன கணக்கு இருக்கோ அதுக்கு ஈகுவலான்டா பவர் அதுல இருக்கானா இதுல இருக்கு .

வாஸ்து :

அதுல முக்கியமா நம்ம வாஸ்து சம்பந்தப்பட்ட விஷயங்கள்லாம் வரும் போது நம்ம என்ன சொல்லுவோம் பார்த்தீங்கன்னா, வாசல்ல ஒரு விளக்கு வைங்கன்னு சொல்லுவோம். அதுவும் முக்கியமாக இந்த கார்த்திகை மாசம் அப்படின்னு சொன்னாலே கண்டிப்பாக நாம் வந்து இந்த கார்த்திகை மாசம் முழுவதுமே விளக்கு கொளுத்துவது முக்கியம்.

அது இல்லாம இந்த மாசத்துல துளசி கல்யாணம் அப்படின்னு ஒரு நிகழ்வு இருக்கு. அதாவது பெருமாளுக்கும் துளசித் தாயாருக்கும் திருமணம் நடந்த காலமே கார்த்திகை மாதம்தான்.

அது பெருமாள் என்ன பண்ணாராம் சாளக்கிராம உருவத்தில் வந்தாராம். சாளக்கிராம உருவத்துல வந்து துளசி கல்யாணம் என்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று சொல்லலாம். வளர்பிறை துவாதசி அன்னைக்கு இந்த துளசி திருமணம் அப்படின்ற நிகழ்வு நடந்ததுன்னு சொல்லுவோம்.

நம்ம வீட்ல வந்து ஒண்ணுமே இல்ல சார் எனக்கு எதுவுமே தெரியாது சார் நான் என்ன சார் பண்றது? துளசி செடியை வீட்டில் வைங்க. வீட்ல வச்சிங்கன்னாலே பாத்தீங்கன்னா ஞானம் சம்பந்தப்பட்ட அறிவு சம்பந்தப்பட்ட புத்தி சம்பந்தப்பட்ட இன்டூஷன்னு சொல்லுவோம். சில இடத்தில் இண்டூஷன் சொல்லப்படுகிற விஷயங்கள் சில விஷயங்கள் எனக்கு தோணுது. அது நடக்குமோன்னு தோணுதுன்னு சொல்லுவோம் இல்லையா அந்த இண்டூஷன் சொல்லப்படுகிற நிகழ்வுகள் பாத்தீங்கன்னா இந்த துளசி செடிய வச்சாலே வரும்னு சொல்லலாம். அதனாலதான் பெருமாள் கோவில் எல்லாம் பாத்தீங்கன்னா துளசி தீர்த்தமாக கொடுக்கிறார்கள்.

ஏன்?

 அப்படின்னா துளசி தீர்த்தம் அப்படின்றது அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் விருத்தியாகறதுக்கு மட்டும் கிடையாது. ஞானம் சம்பந்தப்பட்ட விஷயங்களும் வருவதற்காகவும் அந்த விஷயம் கொடுப்பாங்களா கொடுப்பாங்க. அந்த இண்டூஷன் ஏதோ ஒரு நிகழ்வு தோணும் நமக்கு. அதனால அந்த பெரிய பிரச்சனைல இருந்து நம்ம காப்பாற்றப்படுகிறோம்அப்படிங்கிற ஒரு நிகழ்வு இருக்கானா இருக்குன்னு சொல்லலாம்.

எப்போதுமே கார்த்திகை மாசம் எனக்கு தெரிந்த பெரியவர் ஒருத்தர் இருக்காரு. கார்த்திகை மாசம் சொன்னாலே துளசி தீர்த்தம் சாப்பிடனும் சார் அப்படின்னு சொல்வார். அவர் என்ன பண்ணுவாரு பாத்தீங்கன்னா ஒரு செம்பு இருக்கு இல்லையா பித்தளை செம்புல வந்து துளசி செடியை போட்டு வச்சு தண்ணி ஊத்தி வச்சிருவார். அந்த தண்ணியே குடிச்சிட்டு இருப்பார்.

பெருமாள் கோயில்ல மட்டும் நம்ம துளசி தீர்த்தம் வாங்குறது முக்கியம் கிடையாது. நம்ம தண்ணியே வந்து துளசி இலையை போட்டு நம்ம குடிக்கிறதே வந்து பெரிய ஒரு விசேஷமான நிகழ்வுன்னு சொல்லலாம்.

அதனால அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் விருத்தி ஆகுவதற்கு உண்டான தன்மைகள் கொடுக்கும் சொல்லலாம். இந்த துளசி கல்யாணம் அப்படிங்கற விஷயம் இந்த காலகட்டத்துல ரொம்ப பேமிலியாரான விஷயம்தான். பெருமாளுக்கு உகந்த ஒரு காலகட்டம் அப்படின்னு சொல்லலாம்.

இந்த துளசி கல்யாணமும் நிறைய பெருமாள் கோவிலில் பண்ணுவாங்க. இதை போயி கலந்து கொண்டாலே விசேஷமான நிகழ்வு இருக்கக்கூடிய தன்மை இருக்குமா இருக்கும். விரதம் இருந்து பெருமாளை வழிபட்டாலே இந்த காலகட்டத்தில் சுகமா இருக்கக்கூடிய தன்மை இருக்குமா? இருக்கும்னு சொல்லாம்.

அதே மாதிரி ஹயக்ரீவர் வழிபாடு அப்படின்ற ஒரு விஷயம் இந்த காலகட்டத்தில் உகந்த காலகட்டமே இந்த காலகட்டம்தான். இதெல்லாம் பெரிய ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்பு படிக்கிறாங்க அப்படின்னாலும் சரி படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்லா வரல சார். புத்தி சம்பந்தப்பட்ட விஷயங்கள் சரியா கோ ஆபரேட் பண்ண மாட்டிக்குது. உட்கார்ந்து ஒரு இடத்துல படிக்க மாட்டேங்கிறான். இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் ஸ்ரீமுஷ்ணம் சொல்லப்படுகிற வராக மூர்த்தி வழிபாடும் சரி, ஹயக்ரீவர் வழிபாடும் சரி, அதே மாதிரி இந்த துளசி கல்யாணம் சொல்லப்படுகின்ற நிகழ்வும் சரி, இந்த காலகட்டத்தில் நிறைய துளசி தீர்த்தத்தை இந்த காலகட்டத்தில் கொடுக்கணும்.

இந்த மாதிரி நம்ம குழந்தைகளுக்கு கொடுக்கும்போது படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதே மாதிரி நிறைய பேருக்கு திருமணம் ஆகல என்பவருக்கு திருமணம் ஆகக்கூடிய தன்மைங்கிறது இருக்குமானா இருக்கும்னு சொல்லலாம். வாய்ப்புக்கு நன்றி. அடுத்த நிகழ்வில் சந்திப்போம். நன்றி. வணக்கம்.

 

வீடியோ லிங்க் :

https://youtu.be/PPLFTZWe1o4?si=2hdFEWuzCdw0D6jC

 

Comments