திருமண தோஷம் என்றால் இது மட்டும் தானா?

 திருமண தோஷம் என்றால் இது மட்டும் தானா?

 


 - ஸ்ரீ குரு  சாந்தகுமார்.

 - ALP ஜோதிடர்.

 

வணக்கம். நான் சாந்தகுமார், ALP அஸ்ட்ரலஜெர், சென்னையில் இருந்து. நாம ஏற்கனவே திருமண பொருத்தம் சம்பந்தமா ஏற்கனவே ஒரு வீடியோ பார்த்திருந்தோம். அதுல திருமண பொருத்தம் அப்படின்னா என்ன ஏன்? எதுக்கு பாக்கணும்? அது ஏன் ALP முறையில் பார்க்கணும்? அதுல நீண்ட காலத்திற்கு பார்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன அப்படிங்கறது பார்ப்போம்.

ஆனா திருமணம் ஆகாம நிறைய பேரு கஷ்டத்துல இருப்பாங்க.  அவங்களுக்கு அது தோஷமாக இருந்ததுனா அது எப்படி தோஷத்தை சரி பண்ணிக்கணும் அப்படின்ற விஷயத்தை இன்னைக்கு பார்க்க போகிறோம்.

தோஷம்னு ஒன்னுக்கு இல்லைங்க. திருமணத்திற்கான தடை அப்படிங்கறது மனுஷனாக உருவாக்குகிறது தவிர கிரகங்கள் தடுக்குறது இல்ல. ஆனா கிரகங்கள் ஒரு சில நேரம் சுட்டிக்காட்டுது. அது என்னன்னு தெரிஞ்சுக்க போறோம் அது எப்படி கையாளனும் அப்படிங்கிறதும் பார்க்க போறோம்.

இப்போ பார்த்தீங்கன்னா காலத்தே பயிர் செய் அப்படின்னு சொல்லுவாங்க. திருமண காலம் என்பது 21 லிருந்து 30 வரைக்கும். இந்த 21 லிருந்து 30 குள்ள திருமணம் நடக்கணும். எவ்வளவுக்கு எவ்வளவு லேட் பண்றோமோ அவ்வளவு திருமணத்திற்கான வாய்ப்புகளும் இந்த வாழ்க்கையும் ஒரு பக்குவம் இல்லாமலே போயிட்டு இருக்கும்.

அப்போ காலத்தை பயிர் செய்யும்போது அந்த திருமணத்தை காலத்திலேயே ஜாதகத்தில் தோஷம் இருக்கும் பட்சத்தில் அதை எப்படி கையாளனும் அப்படிங்கறத இன்னைக்கு பார்க்க போறோம்.

இப்போ ஜென்ம லக்னம் மீனம் என்று வச்சுக்குவோம். ஒரு 20 வயசு கடக்கும்போது அவருக்கு வந்து ALP ரிஷபத்தில் வர்றதா வச்சுக்குவோம். இந்த ரிஷப லக்னம் நடக்கும் காலத்தில் அவருக்கு ஏழாம் பாவகத்திற்கு விருச்சிகத்திற்கு அதிபதி செவ்வாய். இந்தச் செவ்வாய் துலாத்தில் இருக்கக் கூடாது தனுசில் இருக்கக் கூடாது. இந்த இரண்டும் திருமணத்திற்கான தடைக்கான அடையாளங்களாக காட்டப்படுகிறது.

அப்போ இந்த செவ்வாய் இந்த தடை உருவாக்குதானா?

 செவ்வாய் உருவாக்குவது இல்லை. ஜாதகர் உருவாக்குற விஷயம்தான். இதை கையாள முடியும் அப்படிங்கறதுதான் நம்ம சொல்றோம். இதை எப்படி கையாளனும் அப்படின்னு பாக்கணும்னா, இந்த ஜாதகருக்கு பக்கத்துல இருக்குற எல்லாரும் தெரிந்த சோர்ஸ் அத்தனையிலையும் தேடினாலும் இந்தப் பொண்ணுக்கு கிடைக்கவே கிடைக்காது.

ஏன் கிடைக்காது அப்படின்னா, துலாம் இருக்கும் செவ்வாய். நாம் முதலில் துலாம் செவ்வாய் மட்டும் பார்ப்போம். துலாம் செவ்வாய் இருக்கிற ஜாதகமா இருந்தா அந்த பெண்ணு இந்த இடத்தில் (விருச்சிகத்தில்) இருந்து 12 ஆம் இடத்தில் இருக்கு. உள்ளூரில் இல்லை வெளியூரில் இருக்கிறார் அப்படின்னு காட்டுது.

அப்போ வெளியூர்ல இருக்குற ஒரு பெண்ணை தேடி திருமணம் பண்ணார்னா அவருக்கு கரெக்ட்டா இருக்கும். வெளியூரோ வெளிமாநிலத்திலயோ இல்ல வெளிநாட்டிலையோ தேடினால் தான் இந்தப் பொண்ணு கிடைக்கும். இது லோக்கல்ல தேடுனா அது கிடைக்காதுனால இவருக்கு திருமண வாழ்க்கை தள்ளி போயிட்டே இருக்கும். இதுதான் நம்ம புரிஞ்சுக்க வேண்டிய விஷயமா இருக்கு.

அப்போ இந்த மாதிரி ஒரு பிரச்சனை வரும் பட்சத்தில் நம்ம பண்ணிக்க வேண்டிய விஷயம் எல்லாம் இதை வெளியூர்ல வெளிநாட்டில் வெளி தேசங்களில் நம்ம தேடுறோம்னா இந்த திருமணம் நடந்திடும்.

அடுத்தது பார்த்தீங்கன்னா சப்போஸ் செவ்வாய் தனுசில் இருக்கார் அப்படின்னா, இதுவும் ஒரு தோஷ ஜாதகம்னு சொல்லணும். ஆனா இந்த தோஷத்திற்கு பண்ண வேண்டியது என்னன்னா இந்த பெண் அவருடைய படிப்பு சம்பந்தப்பட்ட இடத்தில் செவ்வாய் இருக்கிறார். இந்த பொண்ணு கரடு முரடான பிரச்சனைகளை தினப்படி கையாளக்கூடிய வேலைக்கான படிப்பு படிச்சிருப்பாள் அப்படின்னு பார்க்கணும்.

தினமும் பிரச்சினையை கையாளக்கூடியது யார் யார் இருப்பாங்க போலீஸ், ஹாஸ்பிடலில் வேலை செய்பவர், கோர்ட்டில் வேலை செய்பவர், பண விபகாரங்களை கண்ட்ரோல் பண்ணக்கூடியவங்க இந்த மாதிரி விஷயங்கள் ஹாண்டில் பண்றவங்க எல்லாம் எட்டாம் பாவகம் சம்பந்தப்பட்டவங்க. அந்த மாதிரி படிப்பு படிச்சவங்களுக்கு அவங்கள திருமணம் பண்ணிக்கும்போது அவங்களுக்கும் இவருக்கும் திருமண வாழ்க்கை கொஞ்சம் சுமூகமா இருக்க போறது இல்ல. அதுதான் உண்மை.

ஆனா திருமணத்தை தள்ளி போடுறதுனால என்ன நடந்திட போறது இல்லை. அப்போ எல்லாம் சரியாகட்டும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னா இவங்களுக்கு அந்த மாதிரி சரியாய் கல்யாணமே நடக்காம தள்ளி போய் அதனாலயே திருமணம் நடக்காமல் வாழ்றவங்க நிறைய பேரை பார்க்கிறோம். இப்ப என்ன சொல்றோம் கரடு முரடான திருமண வாழ்க்கை  தான் இருக்கப் போகுதுன்னு புரிஞ்சாலும் அதை கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த மாதிரி பிரச்சனைக்கு அவங்க வேலையே பரிகாரமாக இருக்கும் பட்சத்தில் அதை உபயோகப்படுத்திக்க சொல்றோம்.

அந்த மாதிரி இருக்கும்போது அவங்க தினப்படிக்கு பிரச்சனைகளை கையாள்றதுனால அவர்களை திருமணம் பண்ணும் போது ஜாதகருக்கும் பிரச்சனைகளை இவங்களுக்கும் சரியா கையாண்டுட்டு அந்த திருமண வாழ்க்கை சுமூகமா அந்த பத்தாண்டுகளை கடந்து போயிட முடியும்.

10 ஆண்டுகள் கழிச்ச பிறகு அந்த வாழ்க்கை நல்லாதான் போகும் பாருங்க. அப்போ ஒரு தோஷம் பார்த்தோம்னா இந்த மாதிரி தோஷம்னா இது தோஷம் இல்ல. இது பிரச்சனைக்குரிய அப்படிங்கறது சுட்டி காட்டுதே தவிர அதற்கான தீர்வும் இருக்கு. திருமண வாழ்க்கை தள்ளி போடுறதுனால மட்டும் இந்த பிரச்சனைகள் சரியாயிடுமா சரியாகாது. இவரு இந்த திருமணம் பண்ணி காட்டாலும் இந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் இருப்பார். அதுதான் இது காட்டுது.

அப்போ திருமணம் பண்ணி அந்தப் பிரச்சனையை எதிர்கொள்றதுக்கும் திருமணம் பண்ணாமல் எதிர்கொள்வதற்கும்  வித்தியாசங்கள் இருக்குது இல்லையா. எப்படி இருந்தாலும் பிரச்சனை தான். அது திருமணம் பண்ணி அதை ஒரு கையாண்டு ஒரு பக்குவத்துக்கு வந்தாச்சுன்னா அதுக்கப்புறம் பத்தாண்டுகள் நல்லபடியா வாழ்வதற்கான வாழ்க்கை முறை கிடைச்சிருக்கு பாருங்க. அதுதான் நம்ம எடுத்துட்டு போக சொல்றோம்.

அப்ப அந்த மாதிரி வாழ்க்கை வாழனும்னா அலை ஓயறதுக்கு அப்புறம்தான் நான் குளிக்கப் போவேன் என்று சொல்ற கதை ஆயிடும். பிரச்சனைகள் இருக்கும் ஆனால் அதைத் தாண்டியும் நம்ம வாழ்க்கை எடுத்துட்டு போக முடியும்.

திருமணம் தடைக்கு மனிதர்கள் மட்டுமே காரணம். எந்த கிரகங்களும் இல்லை. கிரகங்களை பழிக்காதீர்கள். கிரகங்கள் எப்பொழுதுமே உங்களுக்கு வழி விட்டுக் கொண்டே இருக்கிறது. கிரகங்களால் உங்கள் வாழ்க்கையில் எந்த தடைகளும் வருவதில்லை. நீங்கள் செய்த வினைகளுக்கான சுட்டிக்காட்டுதல் மட்டுமே அது காட்டப்படுகிறது. அதை நீங்க சரி பண்ணிக்கும்போது அது கையாளும் போது உங்களுக்கான வாழ்க்கை உங்க கையில் எப்பவுமே இருக்கு. நன்றி. வணக்கம்.

வீடியோ லிங்க் :

https://youtu.be/BnJOfq1md44?si=5Ism8PpcJllXInyG

 

 

Comments