சிவனின் பரிபூரண அருளைப் பெற இந்த நாளில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்
- ஸ்ரீ குரு டாக்டர் சத்ய நாராயணன்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும் வணக்கம். நாம் இன்னைக்கு பேச போற விஷயம் என்னன்னா கார்த்திகை
மாசத்தில் வரக்கூடிய சங்காபிஷேகம்னு சொல்லப்படுகின்ற நிகழ்வுகள் ரொம்ப பிரசித்தமான
ஒரு விஷயம். கார்த்திகை மாசம் வந்தாலே சிவபெருமானுக்கு சங்காபிஷேகம்
செய்வார்கள். இந்த சங்காபிஷேகம் வந்த கதை என்ன? இதனால் நமக்கு என்ன பயன்?
அப்படின்னு ஒரு விஷயத்தை நம்ம பாக்க போறோம்.
எல்லாருமே என்ன பண்ணாங்கன்னா ஆக்சுவலா வந்து ஒரு
காலகட்டத்தில் வந்து தன்னுடைய பாவங்களை போக்குவதற்காக நிறைய பேர் துலாஸ்நானம்
பண்ணுவாங்க. துலாஸ்நானம் பண்ணி முடிச்ச உடனே முடவன் முழுக்கு அப்படிங்கிற அடுத்த
நிகழ்வு வந்துரும் கார்த்திகை மாசத்துல.
அப்ப முடவன் முழுக்குனு சொல்லப்படுகிற நேரத்தில
எல்லாருமே வந்து பாத்தீங்கன்னா நதிக்கரையில் போயிட்டு எல்லாமே வந்து ஸ்நானம் பண்ணாங்களாம்
குளிச்சாங்க. குளிச்ச உடனே வந்து பாத்தீங்கன்னா இந்த பாவங்கள் வந்து எங்க போகும்
அப்படின்னு பாத்தீங்கன்னா, இந்த பாவங்கள் இவ்வளவு பேர் குளிக்கிறார்களே அதனுடைய
பாவம் எல்லாம் போய்ட்டு ஒரு சங்கு கிட்ட போய் நின்னதாம். ஏன்னா குளத்துல தானே
சங்கு இருக்கும். சங்கு கிட்ட போய்
நின்னதாம் எல்லா பாவங்களையும் அது வாங்கி கிச்சாம் ஆக்சுவலா.
அப்ப வந்து இந்த சங்கு சிவபெருமான் கிட்ட
கேட்டதாம் இந்தப் பாவங்களை எல்லாமே வந்து பாத்தீங்கன்னா நான் வாங்கி
வச்சிருக்கேன். இந்தப் பாவங்களை வந்து நான் எப்படி கழுவுவது அப்படின்னு சங்கு
கேட்டதாம்.
அப்போ என்ன சொன்னாராம் சிவபெருமான், நீங்க வந்து
எல்லாருமே இந்த கார்த்திகை மாசம் வந்து இந்த சங்காபிஷேகம் அப்படின்னு ஒரு விஷயம்
நடக்கும். அந்த டைம்ல வந்து பாத்தீங்கன்னா சங்கு வினால் எனக்கு அபிஷேகம்
செய்வார்கள். நிறைய பேர் 108 சங்கு மூலமாக அபிஷேகம் பண்ணுவாங்க. எல்லா கோயில்களிலும்
சங்கு அபிஷேகம் அப்படின்னு ஒரு நிகழ்வு நடக்கும். ஆனா இதனுடைய கதை என்னன்னு
யாருக்கும் தெரியாது.
இப்ப என்ன
பண்ணுவாங்கனா அந்த சங்குல வந்து
அபிஷேகம் செய்வாங்க. அந்த சங்குல அபிஷேகம் செய்யும்பொழுது உன்னுடைய
பாவங்கள் தொலையும் அப்படின்னு சொல்லி இருக்காரு சிவபெருமான். அதனால்தான் அந்த சங்க
அபிஷேகம் அப்படின்னு ஒரு நிகழ்வு நடந்தது என்று சொல்லலாம்.
இந்த பிரணவத்திற்கும் இந்த சங்கு என்று
சொல்லப்படுகின்ற இந்த சங்குவிற்கும் சம்பந்தம் இருக்கு. பிரணவம் அப்படின்னு
சொன்னாலே ஓம் ன்னு சொல்லுவோம் எல்லாருமே தெரியும்.
ஓம் னுடைய
சொரூபமே எதுனா சிவபெருமான்தான்.
அருவமே இல்லாத ஒரு உருவம் என்று சொல்லலாம். அரூபம்
அப்படின்னு சொல்லலாம். சிவபெருமானே அப்படின்னு சொன்னாலே உருவமே இல்லாத ஒரு தன்மை.
வைப்ரேஷன். இந்த சங்கு வந்து காதுல வச்சு பாத்தீங்கன்னா சங்கு காதுல ஓம் என்ற ஒலி ஒலிக்கும். அப்போ
ரெண்டுத்துக்குமே பிரணவம் அப்படிங்கிற ஒரு
நிகழ்வு இருக்கா சம்பந்தம் இருக்கா சம்பந்தம் இருக்குனு சொல்லலாம்.
அது இல்லாம இந்தச் சங்குக்கு இன்னொரு விஷயமும் இருக்கு.
சங்கு அப்படின்னு சொன்னாவே அது யாருகிட்ட இருக்கும். மகாவிஷ்ணு கிட்ட இருக்கும்.
அது வந்து மகாலட்சுமியினுடைய சொரூபம் தான் சங்கு. இப்போ இந்த சங்காபிஷேகத்தை
பார்ப்பதனாலே சங்காபிஷேகத்தில் கலந்து கொள்வதனாலே இல்ல அதுக்கு தேவையான பூஜை
சாமான்களை வாங்கி கொடுத்தாலே வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு லட்சுமினு
சொல்லப்படுகின்ற சங்குகளுடைய தன்மை இருக்கில்லையா லட்சுமி கடாட்சம் எல்லாருக்கும் கிடைக்க கூடிய
தன்மையே இருக்குமா இருக்கும்.
சூட்சமம் :
அது இல்லாம ஓம் என்ற பிரணவ மந்திரத்தினுடைய சூட்சமம்
என்ன அப்படின்னா ஞானம்ன்னு சொல்லப்படுகின்ற ஒரு விஷயம். நம்ம சப்கான்சியஸ் மைண்ட்
என்ன பண்ணுது பாத்தீங்கன்னா நம்மளை வழிநடத்துதுன்னு சொல்லுவோம். அதுதான் சொல்லுது.
இங்க போலாம். இங்க போக கூடாது. இந்த கோயிலுக்கு போகலாம். இந்தக் கோயிலுக்குபோக
வேண்டாம். நம்ம தூங்கலாம். தூங்க கூடாது. எழுந்துக்கலாம் எழுந்துக்க கூடாது. இந்த
எல்லா நிகழ்வும் நடக்கக்கூடிய தன்மையே பார்த்தீங்கன்னா என்ன நிகழ்வு நடக்கும்
அப்படின்னு பார்த்தீங்கன்னா முக்கியமாக இந்த சப்கான்சியஸ் மைண்ட் நம்முடைய
சப்கான்சியஸ் மைண்டை கிளியர் பண்ணனும் அப்படின்னா சங்காபிஷேகத்தில் கலந்து கொள்ளவதாலே பிரணவ
மந்திரமே வைப்ரேஷன் தானே. இந்த வைப்ரேஷனே வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு வந்து ஞானம்
அப்படின்னு ஒரு விஷயத்தை சொல்லுமான்னா சொல்லுன்னு சொல்லலாம்.
அப்போ அந்த ஞானம் நம்ம பெறவேண்டும் அப்டின்னு சொன்னா
சங்காபிஷேகத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். நம்ம சங்கு தீர்த்தத்தினால்
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கிறார்கள் என்றால் அதில் கட்டாயம் கலந்து கொள்ள
வேண்டும். அப்படின்னு ஒரு நிகழ்வு இருக்கா இருக்குன்னு சொல்லலாம்.
அதனால இந்த கார்த்திகை மாசம் நடக்கக்கூடிய
சங்காபிஷேகத்தில் கலந்து கொள்வதனால் இரண்டாவது ஒரு விஷயம் பூஜை சாமான்கள் அங்க
அபிஷேகத்துக்கு தேவையான பால் பழம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பூஜை சாமான்கள்
எல்லாமே வாங்கி கொடுங்க. உங்க கர்மங்கள் போவதற்கு உண்டான எல்லா நிகழ்வும் இங்கே
இருக்கானா இருக்கும்.
சங்கு அபிஷேகம் செய்வதால் அந்த சங்குனுடைய சாபமே
போச்சுன்னு சொல்றாங்க. அதனால அந்த சங்குன்னுடைய அனுக்கிரகம் அப்படின்னு
சொல்லப்படுகின்ற மகாலட்சுமியின் அனுகிரகம் நமக்கு கிடைக்க வேண்டும் அப்படின்னு
சொன்னா சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டாலேயே நமக்கு எல்லாவிதமான செல்வங்களும்
கிடைப்பதற்கு உண்டான எல்லா வாய்ப்புகளும் இருப்பதற்கு உண்டான தன்மை இருக்குமானா
இருக்கும் னு சொல்லலாம். அடுத்த நிகழ்வில் சந்திப்போம். நன்றி. வணக்கம்.
வீடியோ லிங்க் :
https://youtu.be/EGWQeJsLXKo?si=n0w9KQBho-7g9DXo
Comments
Post a Comment