ஒரு குடும்பத்தில் இருவருக்கும் ஒரே லக்னம் செல்லும் போது பலன் எப்படி இருக்கும்?
- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி
ராஜேஷ்குமார்.
- ALP
ஜோதிடர்.
அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய
நாளாக அமைய வாழ்த்துக்கள். ஏஎல்பி ஜோதிடர், ஜோதிட ஆசிரியர் சாந்திதேவி
ராஜேஷ்குமார். ஒரு நண்பர் கேள்வி கேட்டாரு ஒரு வீட்ல அண்ணன் தம்பி ரெண்டு
பேரும் ஒரே லக்னமாக இருக்காங்க. அப்ப அதனால எதுவும் பாதிப்பு தருமா?
ஒரே லக்னம் ஒரே ராசி ஒரு இடத்துல இருக்க கூடாதுங்குறாங்க. இது
அண்ணன் தம்பியை வச்சு கேட்டிருக்காங்க. இன்னும் நிறைய பேர் அப்பாவுக்கும்
பையனுக்கும் ஒரே லக்னமா இருக்கு. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் ஒரே லக்னமா இருக்கு
அப்படிங்கற கேள்விகள் நிறையவே இருக்கு.
ஒரு குடும்பத்தில் ஒரே லக்கனத்திலேயே ஒரே
ராசிலையோ ரெண்டு பேர்கள் இருந்தால் அது பிரச்சனைகளை தருமா? நல்லது நடந்தா நன்மைகள் கண்டிப்பாக நடக்கும்.
கஷ்டங்கள் வந்தால் கெடுதல் ஜாஸ்தியாகவே நடக்கும் இது ஒரு பக்கம்.
அடுத்து இந்த ரெண்டு பேரும் ஒரே லக்னமாக
இருந்தாலும் நம்ம அட்சய லக்னத்தில் நட்சத்திர புள்ளிகள் அப்படிங்கறது மாறும். அந்த நட்சத்திரப் புள்ளியும் மாறலங்க. இப்ப
ஒருத்தருக்கு திருவாதிரை நட்சத்திரம் இன்னொருத்தருக்கும் திருவாதிரை
நட்சத்திரம் போகுது. ஒருத்தருக்கு ராகு 11 ல் இருக்காரு. ஒருத்தருக்கு ராகு 8 ல்
இருக்கார். இப்போ இது வந்து அவங்களுக்குள்ள எப்படி பிரச்சனைகளை தரும்? அதுல
ஒருத்தருக்கு தான் பிரச்சனையை தருமே தவிர ஒருத்தருக்கு யோகமா தான் இருக்கும்.
ஆனா இவங்க ரெண்டு பேரும் பழகுறதுல எப்படி
இருப்பாங்க?
கண்டிப்பா எட்டுல யாருக்கு ராகு இருக்கோ
அவர் சண்டக்கோழி மாதிரி சிலுத்துக்கிட்டுதான் திரிவாரு. அவர் வந்து மத்தவங்களோட
டார்கெட் பண்ணிக்கிட்டு தான் இருப்பார். பிரச்சனைகளை பண்ணிட்டு தான் இருப்பாரு.
அவரால ஒரு இடத்துல ஓய்ந்து இருக்கவே முடியாது. அமைதியாக இருக்க மாட்டாரு.
சுத்திகிட்டு தான் இருப்பாரு. ஏதாவது வம்பு இழுத்துகிட்டே இருப்பார்.
அப்ப நல்லா இருக்கிற இவருக்கும் இந்த
நல்லா இல்லாத இவரு இடைஞ்சல்கள் கொடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. அவர்
ஜாதகத்துல ராகு நல்லா தான் இருக்காரு. பட்
இடைஞ்சல் வரக்கூடாது. ஆனா நல்லா இல்லாத ராகு அதே வீட்ல இருக்கும்போது அவங்க
கூட அது ஒற்றுமை இல்லாத ஒரு சூழ்நிலைகளை ஏற்படுத்தும்.
அப்ப என்ன பண்ணலாம் அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ஒரே லக்னமா
வரும்போது அல்லது ஒரே ராசியாக வரும் பொழுது ஒரே நட்சத்திரங்களாக வரும் போது அது
தாய் தந்தைக்கு இருந்தாலும் சரிஅல்லது பிள்ளைகளுக்கும் தாய் தந்தைக்கும் இருந்தாலும் சரி, ஒரே சிஸ்டர்ஸ்
சகோதரிகளுக்குள்ள இருந்தாலும் சரி என்ன பண்ணனும்னா ஒருத்தர ஏதாவது ஒரு கோயிலுக்கு
தத்து கொடுத்துடனும்.
இல்ல ரெண்டு பேருக்குமே நல்லா இல்ல
அப்படிங்குற பட்சத்தில் ரெண்டு பேரையும் ஒரே கோவிலுக்கு தத்து கொடுக்காதீங்க.
இரண்டு வெவ்வேறு கோவிலுக்கு தத்து கொடுத்து
வாங்கிக்கங்க. இப்படி தத்து
கொடுத்து வாங்குவதன் மூலம் அவங்க அந்த ஒரே வீட்ல இருந்தாலும் அவங்களுடைய தாய்
அப்படிங்கிற அந்த தத்து கொடுக்கப்பட்ட குழந்தையின் உடைய தன்மைங்கிறது
வேறாக மாறதுனால கொஞ்சம் அதனுடைய தாக்கங்களும் பாதிப்புகளும் குறைவதை
நம்மளால பார்க்க முடியும்.
அதனால கண்டிப்பா இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிறைய பேரு இந்த கேள்வியை கேட்டிருக்காங்க.
அதற்கான பதில் தான் இது. அதே மாதிரி தசா புத்திகள் ஒன்னா நடக்குது
அது பாதிப்பை தருமா அப்படின்னு கேட்டு இருக்காங்க அவங்க தசா புத்திகள் ரெண்டு
பேருக்கும் எப்படி இருக்கு? ரெண்டு
பேருக்குமே நல்லா இருந்துச்சுன்னா ரொம்ப
ஒற்றுமையா நல்லாத்தான் இருப்பாங்க. அவங்களுக்கு பொருளாதாரமும் ரொம்ப
நல்லா இருக்கும்.
ரெண்டு பேருக்கும் அந்த தசாநாதனும் புத்திநாதனும் சரி இல்லாம
இருக்குனா மட்டும் தான் அவங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனைகள் வரும் அதனால
அதை புரிஞ்சு அதை தவிர்ப்பதற்கான வாய்ப்புகளை நாம விலகி இருக்க சொல்றதுதான்
அதற்கான பரிகாரம் ரெமடி அத கொஞ்சம் பாத்துக்கங்க. மீண்டும் இனியதொரு நிகழ்வில்
சந்திப்போம். வணக்கம்.
வீடியோ லிங்க் :
https://youtu.be/tUSOaMdYWHo?si=dUphmIVlIWM7Gjca
Comments
Post a Comment