இரண்டாம் பாவகமும், வருமானமும்

 இரண்டாம் பாவகமும், வருமானமும்

 


 - ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.

 - ALP ஜோதிடர்.

 

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். ALP ஜோதிடர், ஜோதிட ஆசிரியர், டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். நம் அன்றாட வாழ்க்கையில தினம் தினம் மக்கள் போராடிட்டே இருக்கக்கூடிய நிகழ்வு வந்து பண தேவை என்கிற நிகழ்வுக்காக தாங்க.

வருமானம் :

என்ன பிரச்சனைகள் இருந்தாலும் வருமானம் இல்ல அப்படின்னா மதிப்பில்ல மரியாதை இல்ல. சொந்த பந்தம் மதிக்காது. ஒரு அடிப்படை வசதிக்கு தேவையான ஒரு வாழ்க்கை வாழனும்னா அதுக்கு பணம் அப்படிங்கறது ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். இந்த பணத்தை தேடி ஓடாதவங்களே கிடையாது. சரி இந்த பணம் நமக்கு வரணும் வந்த பணம் நம்ம கைல தங்கணும் அப்படின்னா என்ன பண்றது?

பொதுவா பொருளாதாரத்தை தரக்கூடிய ஒரு பாவகம் நம் எடுத்துகிட்டோம்னா ரெண்டு பாவங்களை நம்ம கவனிக்கணும். ஒன்னு தொழில் இன்னொன்னு, இரண்டாம் இடம் வருமானம்.

இந்த தொழில் 10 அப்படிங்கற தொழில் பாவகமும் இரண்டு என்கிற வருமானத்தை தரக்கூடிய பாவகமும் ஒருத்தர்க்கு நல்ல நிலையில் அமைந்தது அப்படின்னா அவங்க கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவங்களுக்கு வேலையும் நல்லா இருக்கும். வருமானமும் நல்லா இருக்கும். அவங்க வாழ்க்கையில ஒரு நிம்மதியான ஒரு சூழ்நிலையில அவங்களால அனுபவிக்க முடியும்.

அதேபோல இந்த 2, 10 இந்த ரெண்டு பாவங்களும் அவங்களுக்கு நல்லா இல்ல அப்படின்னா அவங்க வாழ்க்கையில நிறைய கஷ்டங்கள் வேலை கிடைக்காது வருமானம் வராது வாழ்க்கையில் நிறைய அவமானங்களையும் பிரச்சனைகளையும் அவங்க சந்திக்க வேண்டியது இருக்கும். கடன் ஜாஸ்தியாயிரும். ஏன்னா செலவுக்கு காசு இல்லை என்றால் என்ன பண்ணுவாங்க கடன் வாங்கி தான் செலவு பண்ண வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்படி கடன் வாங்கி செலவு பண்ணும் போது அடுத்து என்ன ஆகும்? அந்த கடனை கட்ட முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுடுவாங்க. ஏன்னா வருமானம் வந்தா தானே கடன கட்ட முடியும். அதனால அந்த மாதிரியான சூழ்நிலையை அவங்க சந்திக்க வேண்டி இருக்கும்.

ஒரு சிலருக்கு தொழிலே இருக்காது. சொல்லிக்கிற மாதிரி வேலையும் இருக்காது. ஆனாலும் வருமானம் வரும். எப்படிங்க? வருமானம் வரும் அப்படின்னா அவங்களுக்கு வருமானத்தை தரக்கூடிய அந்த இரண்டாம் பாவகம் அப்படிங்கறது அந்த பாவகத்தினுடைய அதிபதி எந்த பாவத்தில் இருக்கோ அவங்க மூலமா அவங்களுக்கு வருமானம் நிச்சயமாக கிடைக்கும்.

உதாரணத்துக்கு சொல்லனும்னா இரண்டாம் பாவக அதிபதி ரெண்டிலே இருக்காருன்னா, ஜாதகரே சுயமாதான் அந்த வருமானத்தை தேடி ஓடணும்.  குடும்பத்தில் உள்ள நபர்கள் கொஞ்சம் அவர்களுக்கு பண தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவர்களாக அமைவார்கள்.

அதுவே மூன்றாம் பாவகத்துல இரண்டாம் பாவக அதிபதி சம்பந்தப்பட்டா கமிஷன் பேசிஸ்ல தான் அவங்க வருமானத்தை ஈட்ட முடியும். தரகு வியாபாரம் மூலமாகதான் அவங்க வருமானங்களை பெற முடியும். நிலையான வேலை வாய்ப்புகளும் நிலையான சம்பாத்தியமும் அவங்களுக்கு இருக்காது அப்படின்னு சொல்லலாம்.

அதுவே நாலுல இருக்கு அப்படின்னா வாடகை வருமானம். அவங்க ஏதாவது பில்டிங் கட்டி வச்சு இருப்பாங்க அல்லது வீடு வாடகைக்கு விட்டுருப்பாங்க. அந்த வாடகை மூலமாக அவர்களுக்கு வருமானங்களை பெறக்கூடிய ஒரு வாய்ப்பு அப்படிங்கறது கிடைக்கும். அப்படியும் இல்ல அப்படின்னா அம்மாவுடைய வருமானம் கிடைக்கும். அம்மா எப்படியாவது பணத்தை புரட்டி செலவுக்கு கொடுத்துடுவாங்க. அம்மா பணத்தை தரக்கூடியவங்களாக அமைந்துவிடுவார்கள் என்று சொல்லலாம்.

ஐந்தாம் இடத்தில் இருக்குன்னு வச்சுக்கோங்களேன் அந்த ஐந்தில் இருக்கும் போதும் அவங்க மனசுக்கு பிடிச்ச வருமானத்தை எதிர்பாப்பாங்க. நமக்கு இவ்வளவு வந்தா நல்லா இருக்கும்னு  ஆசைப்படுவாங்க. ஆனா அங்க வருமானம் இருக்குமானா இருக்காது.

அங்க மனசுக்கு பிடித்த நிலைகள் அமையாது. அப்போ ஒரு வேலை என்ன பண்ணும் இவங்களுக்கு ஒரு 45 வயசுக்கு மேல ஆயிட்டு. குழந்தைகள் வேலைக்கு போற அளவுக்கு ரெடியாயிட்டாங்க அப்படின்னா பிள்ளைகளால் வருமானம் தரக்கூடிய வாய்ப்புகளை கொடுக்கும்.

ஒன்னும் இல்லைங்க எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு ஒரு 40 - 45 வயசுல எல்லாம் வருமானம் சுத்தமா கிடையாது.

பொண்ணு ஒரே ஒரு பொண்ணு தான். அந்த பொண்ணு படிச்சு வேலைக்கு போய் அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை தான் அவங்க இன்னும் ஜீவனம் பண்ணி சாப்பிட்டுட்டு இருக்காங்க. அப்ப குழந்தைகளோட அமைப்பு படி அவங்களுக்கு அந்த பண தேவைகள் பூர்த்தியாகும் அப்படிங்கற நிலையை எடுத்துக்கலாம்.

அப்ப அதுவே அதுவே 2 ஆறுல இருக்கு அப்படின்னா கடன் வாங்குறது தான் அவங்களுக்கு பணமே. கடனை வாங்கி வாங்கி செலவு பண்ணலாம். அந்த கடனை கட்ட முடியாம அவஸ்தைப்பட வேண்டி இருக்கும். இந்த மாதிரி நிறைய மாட்டிக்கிட்டவங்க நிறைய இருக்காங்க. இன்னைக்கு வேலை கிடைச்சிரும். நாளைக்கு வேலை கிடைச்சிரும் அடுத்த நாள் வேலை கிடைச்சிரும். வாங்கின பணத்தை திரும்ப கொடுக்கலாம்னு அவங்களால கொடுக்கவே முடியாது. அப்ப இரண்டாம் பாவக அதிபதி 6 ல போய் உக்காந்துட்டா கடன் வாங்குவதின் மூலமாகத்தான் அவங்க அதிகமாக வருமானத்தை பெறக்கூடிய அமைப்பை கொடுத்திடும் அப்படின்னு சொல்லி இருக்கு.

அதுவே இரண்டாம் பாவகம் அதிபதி ஏழில் இருக்குன்னு வச்சுக்கோங்க, வாழ்க்கைத் துணை மூலமாக தான் வருமானம் இல்லைன்னா நண்பர்கள்கிட்ட வாங்கி செலவு பண்ணிக்குவாங்க. இதுதான் அவங்களோட நிலையாக இருக்கும்.

அதுவே இரண்டாம் பாவக அதிபதி எட்டில் இருக்காங்கன்னு வச்சுக்கோங்க, திடீர் பணம் அப்படிங்கிறது எதிர்பாராத ஒரு சூழ்நிலைகளில் அந்த வருமானம் வரக்கூடிய அந்த வருமானத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் இல்லிகளான பிசினஸ் இரண்டாவது தரமான பிசினஸ் மறைமுகமான பிசினஸ் மூலமாக அவங்களுக்கு வருமானத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகளை கொடுத்துடும்.

அதுவே 9 சம்பந்தப்பட்டிருக்கு அப்படின்னா அப்பா இருக்கிறது வரைக்கும் அப்பா தான் அவருக்கு வருமானத்தை கொடுக்கணும் அதுதான் அவருக்கு பாக்கியமே. இவர் வேலைக்கெல்லாம் போக மாட்டார். இவர் ஹாயா எனக்கு என்ன குறை நான் எதுக்கு வேலைக்கு போகணும் அந்த மாதிரி இருப்பார். அப்ப அந்த மாதிரி ஒரு அமைப்பு அங்க உண்டு.

அதுவே 10 ஆம் இடத்தோட தொடர்பில் இருக்கு அப்படின்னா அப்பதான் இரண்டாம் பாவகம் அதிபதி பத்தோடு தொடர்பில் இருந்தா மட்டும் தான் வேலை மூலமாக தொழில் மூலமாக அவர்களுக்கு வருமானம் அப்படிங்கறத பெற முடியும். இல்லனா வருமானம் பற்றாக்குறைகள் அவங்களுக்கு இருக்கும்.

இதுவே 11 இல் இருந்தது அப்படின்னு வச்சுக்கோங்க மூத்த சகோதரத்தின் மூலம் வருமானத்தை பெறக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. அங்கேயும் அந்த 11 அப்படிங்கறது அடுத்தவங்கல மகிழ்ச்சிப்படுத்தி அல்லது ஒரு டூரிஸ்ட் மாதிரி ஒரு கைடு மாதிரி அவங்க வொர்க் பண்ணி அதன் மூலமாக வருமானத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

அதுவே 12 ல் தொடர்பு இருந்தா வெளிநாட்டின் மூலமாக மட்டும்தான் வருமானம் கிடைக்கும். அலைச்சலுக்குரிய வருமானம் அப்படிங்கறது எடுத்துக்கணும்.

உங்க ஜாதகத்துல முக்கியமா இரண்டாம் பாவகம் நல்லா இருக்கா பாருங்க. அதை எப்படி தெரிஞ்சிக்கிறது? அதுக்கு தான் ALP ஜோதிடம் படிங்க பாருங்கன்னு கேட்கிறோம். நீங்க படிக்கிறீங்க பார்க்கிறீங்கன்னா கண்டிப்பா உங்க வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் நிச்சயமாக கிடைப்பதை உங்களால உணர முடியும்.

ஏன்னா நமக்கு எங்க போறது எப்படி போறதுன்னு தெரியாம நமக்கு எண்ணம் போல வாழ்க்கைங்கிற மாதிரி நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம். நமக்கு என்ன மனசுல தோணுதோ அதை செய்றதுன்னு அது எல்லாருக்குமே குருடாம்பாக்குல நூத்துல ஒருத்தருக்கு வேணா சக்ஸஸ் ஆகுமே தவிர அது எல்லாருக்குமே சக்சஸ் ஆகுமா கண்டிப்பா ஆகாது.

ஜாதகம் :

அதுக்கு என்ன பண்ணனும்னா ஜோதிடத்தை முதல்ல தெரிஞ்சுக்கோங்க. நம்ம வாழ்க்கையில என்ன எல்லாம் விதிக்கப்பட்டிருக்கு நம்ம தலையெழுத்துங்கறது ஜாதகம் தான். கண்டிப்பா படிங்க பாருங்க. கண்டிப்பா உங்க வாழ்க்கையில ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும். மீண்டும் இனியதொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி. வணக்கம்.

 

வீடியோ லிங்க் :

https://youtu.be/A8ISjnKMxgI?si=idbxZIB51CqF7EG1

 

Comments