இரண்டில் சனிபகவான் இருந்தால் பண வரவு தடை ஏற்படுமா?
- திரு. சி. பொதுவுடைமூர்த்தி ஐயா.
- ALP ஜோதிட முறையை உருவாக்கியவர்.
அனைவருக்கும்
வணக்கம். இந்த நாள் இனிய நாள். வாழ்வில் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும்.
சார் அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில் ஏஎல்பி லக்னத்திற்கு ரெண்டுல சனி பகவான்
இருந்தால் அது தோஷமா? அப்படின்னு ஒருத்தர் கேட்டிருக்காங்க. 12 கட்டம் ஒன்பது
கிரகங்கள்.
இந்த
கிரகங்கள் இங்க இருந்தா இந்த கிரகங்கள் இங்க இருந்தால் அதனுடைய வேலையை
அந்தந்த இடத்தில செய்யுமே தவிர தோஷம் என்கிற வார்த்தை நம்ம வந்து தடை
அப்படிங்கிறது வேணா எடுத்துக்கலாம்.
அடுத்தது
இன்னொருத்தர் அதே கேள்வி கேட்டிருக்காரு ரெண்டுல சனி இருந்தால் பணம்
தடை ஆகுமா சார் அப்படின்னு கேட்டிருப்பாங்க. பணம் அப்படிங்கிறது ஒரு
பொருள் சார்ந்த விஷயம்.
உளவியல்
ரீதியாகவும்,அறிவியல் ரீதியாகவும் :
இப்போ
உதாரணத்துக்கு இது உளவியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் நம்ம பார்க்கணும்.
ஏன் அப்படின்னா உழைப்பு அப்படிங்கிறது என்னுடையது. முயற்சி என்பது என்னுடையது.
நான் முயற்சி பண்றேன் நான் ஒரு வேலை செய்றேன்.
நான்
முயற்சி பண்றேன் நான் வந்து உதாரணத்துக்கு நான் ஏதோ ஒரு தொழில் செய்றேன். நான்
தொழில் செய்யும் போது அந்த தொழில் செய்தால் தான் எனக்கு வருமானம் கிடைக்குமே தவிர,
ஏன் அப்படின்னா ரெண்டுல சனி இருக்கறதுனால பேச்சு சரியா பேச மாட்டார்.
என்ன
பண்ணுவார் அப்படின்னா பேசலாமா பேச
வேண்டாமா? இல்ல இது வேணுமா? இது வேண்டாமா? இது சொல்லாமா? சொல்ல கூடாதா? இது
முடியுமா? இது வந்து நம்ம சொன்னா தப்பா போயிடுமோ? அப்படின்னு ஆயிரம் ஆயிரம்
நிகழ்வுகளை வந்து அந்தப் பேச்சை தனக்குத்தானே
சுருக்கிக்கும்போது என்ன பண்ணனும் அப்படின்னா ஒரு பொருள் விக்கணும். இல்ல
ஒரு இடத்துல ஒரு விஷயம் பேசணும்.
ஒரு
10 பேர் வேலை செய்ற இடத்துல பேசினா தான் அந்த விஷயம் அழகா
இருக்கும். பேசல தனக்கு தானே இது இப்படி செய்யலாமா இது இப்படியும் செய்யலாம் இது
இப்படியும் செய்ய முடியும் இது இப்படியும் செய்யலாம் அப்படின்னு அந்த மேனேஜர்
கிட்டையோ அட்மின்ட்டையோ, ஒரு விஷயத்தை பேசும்போது அழகா இருக்கும்.
இல்ல
இல்ல அது அப்படியே கொடுத்தது நம்ம பாத்துட்டு இருந்தோம்னா அது வேலையே கிடையாது.
தனக்கு தானே இதுக்கு பெஸ்ட்டா யோசிக்கணுமா இதை இப்படி கூட செய்யலாம்னு
நினைக்கிறோம் சார். இது இப்படி செய்யலாமான்னு அவர் கேட்கும் போது, பேசினா ஏதாவது
குறை வந்துருமா அப்படின்னு இருந்தா அது நாளடைவுல தனக்கு தானே ஒரு பின்னடைவை
கொடுக்குமா ஒரு மனிதருக்கு கொடுக்கும்.
ரெண்டுல
சனி பகவான் இருந்துச்சுன்னா ஏதோ வந்து இதுக்கு ஏதோ பொருளுக்கும் பணத்துக்கும்
பேசுனதுக்கும் பேசாம இருக்கிறதுக்கும் ஒரு காரணமும் சொன்னா கரெக்ட். ஆனால் பணம்
வருவது தடையா இருக்குமானா நான் பேசுறேன் நான் சரியா பேசலை நான் சரியா இயங்கல நான்
சரியா வந்து அதை செயல்படுத்த முடியல. அப்போ அது ஆட்டோமேட்டிக்கா எனக்கு என்ன
பண்ணுது ஒரு மிகப்பெரிய பலகீனத்தை கொடுக்குதானா பலகீனத்தை கொடுக்குது.
சும்மா
எப்ப பார்த்தாலும் வந்து ரெண்டுல ஒரு கிரகம் இருந்துச்சுன்னா இதுவே புதன்
இருந்துச்சுனா பேசிட்டே இருப்பார். மேஷ லக்னம். மேஷ லக்னத்திற்கு ஒன்றுக்கு
எட்டுக்கும் உடைய செவ்வாய் ரெண்டுக்கும் ஏழுக்கும் உரிய சுக்கிரன்
மூன்றுக்கும் ஆறுக்கும் உரிய புதன் நாலுக்கு உடையவர் சந்திரன் அஞ்சுகுறியவன்
சூரியன்.
ஏன்னா
ஆதிபத்தியத்தை பேசும்போது 5 உரியவர் சூரியன் 9,12க்கு உரியவர் குரு 10, 11
உரியவர் சனி பகவான் அப்படின்னு அந்த புதன் வந்து எப்படின்னா கணக்காவும்
பேசும் அடுக்காவும் பேசும் அதே சுக்கிரனும் இருந்தால் நளினமா பேசும் குருவா
இருந்தா அளந்து ஓரளவுக்கு வந்து எது பேசணும் எது பேசக்கூடாது எது சொல்லணும் எது
சொல்லக்கூடாது. ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் ஒரு அளவீடு பண்ணி ரொம்ப
பொறுமையா இப்ப நான் ஒரு தடவை ஒரு விஷயத்தை சொல்கிறேன் அப்படின்னு அந்த குரு அந்த
மாதிரி ஒரு இடத்தில் பேசும்.
சூரியனா
இருந்தா பேசவே பேசாது. சந்திரனா இருந்தா ரொம்ப வேகமா பேசிட்டே இருக்கும். அப்ப
ரெண்டுல சனி பகவான் இருந்தா பேசவே பேசாது. பேசினாலும் அது என்ன பண்ணும் அது
சொல்றதெல்லாம் மாறி மாறி சொல்லும்.
இப்ப
வந்து உண்மையை தான் சொல்லுவாரு ஆனா அவரு பொய் சொல்ற மாதிரி இருக்கும். இவர் பொய்
சொல்ற மாதிரி இருக்கே. இவர் சந்தேகப்படுற மாதிரி இருக்கு. இவர் உண்மையிலே அவருக்கு
ஏதாவது சின்னதா தவறு செஞ்சிருப்பார். அதை மறைப்பதற்கு சாதாரண ஒரு வார்த்தையை
சொல்லும் போது அது பெரிய பொய்யா மாறி அது சங்கடத்தை கொடுத்து அது தேவையில்லாத
பிரச்சனையை கொடுக்குமா கொடுக்கும்.
ஒருத்தருக்கு
ரெண்டுல சனி பகவான் இருந்தா வருமானத்திற்கு எல்லாமே வருமானத்தை கொடுக்கும். வருமானத்தை
கொடுக்காதுன்னு கிடையாது. ஆனால் வருமானத்தை கொடுத்தாலும் ஜாதகம் நிகழ்வுகள்ல ஒரு
பலவீனத்தை கொடுக்குதானா கொடுக்குது.
ஏன்னா
ஒரு இடத்துல எதை எப்போ எப்படி பேசணும் தெரியாம எதை எப்படி எப்ப செய்யணும் தெரியாம
அதை எங்க சொல்லணும் தெரியாம அது வந்து சில இடத்தில் சொல்லணும் சில இடத்தில்
சொல்லக்கூடாது. சில இடத்துல பேசணும் சில இடத்தில் பேசக்கூடாது. இந்த புரிதல் வந்து
அவருக்கு வரணும். இந்த புரிதல் வந்துச்சுன்னாலே பலம். கண்டிப்பா சனி பாகவானுக்கு
வந்து யோகத்தை தான் கொடுப்பாரே தவிர ஏன்னா பணத்துக்கும் சனி பகவானுக்கும் ரொம்ப
நெருங்கிய தொடர்பு. அது இல்லன்னு சொல்லல.
ஆனாலும்
இரண்டில் இருக்கிற சனி பகவான் மட்டுமே காரணம் அப்படிங்கறது தான் எல்லாருமே சொல்றது
ரெண்டுல சனி பகவன் இருக்குன்னு நீங்க எல்லாம் பயப்பட வேண்டாம். அதே மாதிரி ரெண்டுல
குரு இருந்தா மட்டும் நிறைய பணம் வந்துரும் நினைக்காதீங்க.
ரெண்டுல
குரு இருந்தாலும் அதைவிட ரொம்ப சனி பகவானாலும் ஒரு சோம்பேறித்தனத்தை கொடுக்கும்.
அதுவே குருவா இருந்தால் ஒரு விதமான தயக்கத்தையும் பயத்தையும் கொடுக்கும்.
தயக்கம்னா ரொம்ப பேசுறதே தயங்கி தயங்கி
கேட்கலாமா வேண்டாமா கேட்கலாமா வேண்டாமா? அது ஒரு தயக்கத்தை கொடுக்கிறது ரொம்ப ஒரு
பலவீனத்தை ஒரு மனிதனுக்கு கொடுப்பது இந்த குரு பகவான்.
எப்பவுமே
வந்து ஒரு விஷயத்தை சொல்றது, வருமானம் என்பது ஒரு பகுதி. ஆனா நான் வந்து ஒரு செடி
நல்லா இருந்ததுன்னா அந்த செடியில் இருக்கிற பூ நல்லா இருக்கும். மரம் நல்லா
இருந்ததுனா அந்த மரத்தில் உள்ள காயோ கனியோ நல்லா இருக்கும்.
அந்த
மரம் அப்படிங்கிறது வாழ்க்கையில் வந்து முழுக்க முழுக்க நான் இப்பயும்
சொல்றது வேலையும் தொழில் தான். அது நல்லா இருந்தாலே இரண்டாம் வீடு எதார்த்தமாவே
வருமானத்தை கூட்டிடும். வருமானத்தை எதிர்பார்த்த விட கூட அதிகமா கொடுக்குமே தவிர
தயவு செய்து இரண்டாம் வீட்டில் ஒரு கிரகம் இருந்துச்சுன்னா அதை நோக்கிய பயணங்கள்
அதை நோக்கிய சிந்தனைகள் நமக்கு அதிகமா இருக்கும். தயவு செய்து சனி பகவான்
இருக்குங்கிறதுக்காக பேசாம இருக்க வேண்டாம். சனி பகவான் இருக்கும்போது நீங்க வந்து
சொல்ற விஷயங்களை ஆமா இதை இப்படித்தான் இருந்துச்சு இப்படித்தான் உடச்சுச்சு
அப்படின்னு நேரடியாவே ஒத்துக்குறதுக்கு வாங்க. தயக்கம் வந்து பேசாம இருக்கறதுனால
இங்க எதுவுமே நடக்கப்போவதில்லை. ரெண்டுல சனி பகவன் இருந்தா தோஷம்னு யாரும் நினைக்க
வேண்டாம். கண்டிப்பா உங்களுடைய வாழ்க்கையிலும் நல்லது கெட்டது இருக்கும். காலங்கள்
மாறும் போது உங்க வாழ்க்கை மாறும். ரொம்ப சந்தோஷம். நன்றி. வணக்கம்.
வீடியோ லிங்க் :
https://youtu.be/AzHJVTx_v10?si=8ww7PsugwdoP-pU1
Comments
Post a Comment