அட்சய ராசியும்! தசா புக்தியும்! பகுதி – 2
சாந்திதேவி ராஜேஷ்குமார்
மேம் :
அட்சய ராசியும்
தசா புக்தி பற்றியும் அட்சய லக்ன பத்ததி எனும் ஜோதிட முறையை உருவாக்கிய திரு.பொதுவுடைமூர்த்தி
அவர்கள் மற்றும் ALP ஜோதிட ஆசிரியர் திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார் அவர்களின் கலந்துரையாடலின்
விரிவான பதிவு.
பிறப்பின்போது இருந்த ராசியும்
தற்போதுள்ள ராசியும் வேறா!
ராசிபலன் பார்க்கும்போது ரிஷப ராசிக்கு
கோடிகளில் புரளும்! மிதுன ராசிக்கு ஓஹோ என்று இருக்கும் என்றெல்லாம் தலைப்பு இருந்தால்
தான் பார்க்கிறார்கள். எனவே இந்த காணொளிக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு 3 கோடிகள் கிடைக்கும்
என்று தலைப்பு வையுங்கள். ஒருவருக்கு பிறக்கும்போது ரிஷப ராசி ஆனால் இன்று ரிஷப ராசியே
இல்லையே என்பது தான் பிரச்சனை. உதாரணத்திற்கு தற்போது சந்திர தசா நடக்கிறது என்றால்
அது சிறப்பாக இருக்கும், ஜாக்பாட் தான். ஆனால் அதுவே சந்திரன் 8-இல் இருந்தால் நன்றாக
இருக்காது. எனக்கு சந்திர தசா தான் நடக்கிறது, நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்பார்கள்.
ஒருவருக்கு சந்திர தசா நடக்கும்போது மிக நல்லவரும் அவர் தான் மிகக் கெட்டவரும் அவர்
தான். சந்திர தசா நடக்கும் போது ஒரே நேரத்தில் ஜாக்பாட்டும் அடிக்கும் அதையே தூக்கிப்
போட்டு உடைக்கவும் செய்யும். எனவே சந்திர தசாவை நம்பவே முடியாது. அதுவே குரு தசா என்றால்
கூட நிதானமாக நல்லவற்றையும் கெட்டவற்றையும்
கொடுக்கும். அதுவே ராகு தசா என்றாலும் கூட பெரியளவில் ஓஹோ என்று கொடுத்தாலும் நிதானமாகத்
தான் கொடுக்கும். அது கையில் இருக்கிறது எனலாம். ஆனால் சந்திர தசா என்பது பூம்... என்று
கொடுக்கும். ஜீம்.. பூம்பா மாதிரி தான். தற்போது ரிஷப ராசி, சந்திர தசா நடப்பவர்களுக்கு
சனி பகவான் 11-இல், குரு பகவான் 2-இல், ராகு பகவான் 10-இல், கேது பகவான் 4-இல் என இருப்பதால்
சிறப்பாக இருக்கும். அதுவே, தற்போது ரிஷப ராசி ராகு தசா நடந்து ராகு 9-இல் இருந்தால் அவர் மொத்தமாக ஊரை விட்டு ஓடலாமா? இடத்தை
மாற்றலாமா? தொழிலை மாற்றலாமா என்று யோசனை செய்து கொண்டிருப்பார்.
விருச்சிக ராசியும்! ஏழரைச்
சனியும்!
ரிஷப
ராசியும் விருச்சிக ராசியும் தான் இப்போ ஆச்சரியமா இருக்கும். அதிலும், விருச்சிக ராசிக்காரர்களிடம்
கேட்டால் எனக்கு சனிப் பெயர்ச்சி முடிந்து நல்லா இருக்கும் என்பார்கள். ஆனால் ஏழரை
சனிப் பெயர்ச்சி முடிந்து இரண்டரை வருடங்கள் முடிந்து அடுத்து இரண்டரை வருடங்களும்
முடிந்துவிட்டது (கும்பத்திலிருந்து மீனத்திற்கும் பெயர்ந்துவிட்டார்). ஆனாலும் விருச்சிக
ராசிக்காரர்களுக்கு கஷ்டம் இருக்கும். இப்போது அவர்களுக்குப் பார்த்தால் சந்திர தசா
அல்லது செவ்வாய் தசா நடந்து கொண்டிருக்கும்.
அதுவும் பாடாய் படுத்தும். இப்போது கும்ப ராசி கும்ப லக்கினமாக இருந்தால் கடைசி இரண்டரை
வருடங்கள் சிரமமாய் இருந்தது என்பார்கள். முன்னர் ஏழரை சனியின் போது கூட நன்றாகத் தான்
இருந்தது. இப்போது தான் சிரமம் என்பார்.
அட்சய ராசிக்கு தசா / புக்தி
எப்படிப் பார்ப்பது?
கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்
கடகத்திற்கு அட்டமத்தில் சனி என்றாலும் கூட இப்போது சிம்மத்திற்கு அட்டமத்தில் சனி.
இப்போது தான் கடக ராசிக்கு, சுக்கிர தசாவோ / சூரிய தசாவோ நடந்தால் அட்டமத்தில் சனி
என்ற நிலையில் சிரமங்களைத் தரும். நாம் எந்த லக்கினப் புள்ளி போகிறதோ அதைப் பார்க்க
வேண்டும் என்று சொல்கிறோம். இப்போது குருவின் நட்சத்திரமான பூரட்டாதியோ, புனர்பூசமோ
போனால் குரு பெயர்ச்சியைப் பார்க்க வேண்டும் இல்லையென்றால் பார்க்க வேண்டியதில்லை.
அதுவே, பூசம் நட்சத்திரம் போனால் ஒன்பதில் சனி இருக்கிறார் நிச்சயமாக வேலையை விட்டு
நீக்கப்படும் சூழல் உள்ளது, எனவே பேசாமல் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்கச் சொல்ல
வேண்டும். தசா புக்திகளில் சனி தசாவோ / புக்தியோ / அந்திரமோ / அதி அந்திரமோ / சூட்சமமோ
/ அதி சூட்சமமோ நடந்தால் வேலை வாய்ப்புகளில், இடம் வாங்குவதில் தேவை இல்லாத பிரச்சனைகள்,
வம்பு வழக்குகள் வரும். இப்போது யார் ஜாதகமும் கையில் இல்லாமல் எப்படி குறிப்பிட்டு
சொல்கிறோம் என்றால், யாருக்கெல்லாம் சனி தசாவோ, சனி புக்தியோ நடக்கிறதோ வரக்கூடிய இரண்டு
வருட காலங்கள் நம்மை அறியாமல் அப்படி தான் நடக்கும். அட்டமத்து சனி கூட நன்றாக இருந்தது
இப்போது தான் பாடாய் படுத்துகிறது என்பார்கள். இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்
கடக ராசிக்கு இப்போது நன்றாக இருக்கு என்று, ஆனால் கடக ராசி இப்போது தான் சிம்ம ராசி
ஆகியிருக்கும் அட்டமத்தில் சனி! எப்படி நன்றாக இருக்கும்?
அதேபோல் தான் சுக்கிர தசா ஓஹோ என்றிருக்கும்
என்று எதிர்பார்த்திருப்பார்கள். எனது நண்பர் கூட சுக்கிர தசா ஒண்ணுமே செய்யாது என்றார்
அவருக்கு சுக்கிர தசா அருமையாக இருந்தது. எனக்கு கடக லக்கினம் 12-இல் சுக்கிரன் மறைந்து
இருக்கிறது, எப்படி கொடுக்கப் போகிறது என்று தெரியவில்லை என்றார். அதெல்லாம் நன்றாகத்
தான் இருக்கும் என்றேன். அவருக்கு ALP கன்னி லக்கினம் போகும் போது 10-இல் சுக்கிரன்
நன்றாகவே இருந்தது. அடுத்து துலாம் லக்கினம் 9-இல் சுக்கிரன் அதுவும் மிக நன்றாகவே
இருந்தது . இவர்கள் எது கெட்டது என்று நினைக்கிறார்களோ அதெல்லாம் நல்லதாகவும் எது நல்லது
என்று நினைக்கிறார்களோ அதெல்லாம் கெட்டதாகவும் மாறுகிறது. எனவே, மிகவும் கவனமாக இருக்க
வேண்டும்.
திருமணப் பொருத்தம்!
திருமணப் பொருத்ததைப் பற்றி கேட்டீர்கள்.
இதற்கு முன்னால், அதைப் பற்றி காணொளியில் பேசியுள்ளேன். எல்லாப் பெற்றோர்களும் இன்று
இரண்டு பேரது படிப்பு, இரண்டு பேரது வருமானம் என்று தான் சிந்திக்கிறார்கள். மற்றதெல்லாம்
சிந்திப்பதில்லை. என் மகள் அல்லது மகன் இவ்வளவு படித்திருக்கிறார், இவ்வளவு சம்பாதிக்கிறார்
என்று பார்க்கிறார்கள். முழுக்க முழுக்க அவர்களது மனதையோ, அன்பையோ, பாசத்தையோ, புரிதலையோ
பார்த்தால் தான் புரியும்.
சாந்திதேவி ராஜேஷ்குமார்
மேம்:
மூன்று நாட்களுக்கு முன்னால் என்னிடம் ஒரு பெண் ஜாதகம்
வந்தது. அதில் பெண்ணுக்கு 36 வயதாகியும் திருமணமாகவில்லை என்று அப்பா தொலைபேசியில்
அழைத்து அழுகிறார். நான் ஜாதகத்தைப் பார்த்து படிப்பு குறைவாக உள்ள மாப்பிள்ளை தான்
அமையும் என்ற அமைப்பு உள்ளது. நான் கேட்டேன், வரன் வரவில்லை என்றெல்லாம் சொல்லாதீர்கள்,
நீங்கள் நன்றாகப் படித்த மாப்பிள்ளை வேண்டும் என்று பார்த்தீர்களா என்று கேட்டால் ஆம்
என்றார். அந்தப் பெண் மூன்று டிகிரி முடித்துள்ளார், எனவே நீங்கள் ஒன்று அல்லது இரண்டு
டிகிரி முடித்த மாப்பிள்ளையை பாருங்கள் என்று சொன்னேன்.
பொதுவுடைமூர்த்தி ஐயா:
அதை
விட்டு விட்டு மூன்று டிகிரி படித்த மாப்பிள்ளை தான் வேண்டுமென்றால் நீங்கள் என்ன வேலைக்காகவா
ஆள் எடுக்கிறீர்கள் என்று ஆச்சரியமாக உள்ளது. அந்த காலத்தில் ஆண் / பெண் இருவருமே அவ்வளவாக
படித்திருக்க மாட்டார்கள், ஏன் பள்ளிக்கூடம் கூட போயிருக்க மாட்டார்கள். இது தான் மணப்பெண்
இது தான் மணமகன் என்று கல்யாணம் செய்து வைப்பார்கள் மிக சந்தோசமாகவும் வாழ்ந்தார்கள்.
பையன் சம்பாதிப்பார், பொண்ணு வீட்டு வேலைகளைப் பார்ப்பார், நல்லபடியாக இருக்கும். அல்லது
பொண்ணு சம்பாதிக்கும் பையன் அவரவர் வேலையைப் பார்ப்பார் அதுவும் தனிகுடித்தனமாகவோ
/ கூட்டுக்குடித்தனமாகவோ சந்தோசமாகவும் இருக்கும்.
படிக்க்காத போதே சந்தோசமாக வாழ்ந்தார்கள்.
சாந்தி தேவி ராஜேஷ்குமார்
மேம்:
இன்று
பொருத்தமென்று பார்ப்பதே ஜாதகத்தைப் பார்க்காமல் அந்தஸ்தை மட்டும் தான் பார்க்கிறார்கள்.
பொதுவுடைமூர்த்தி ஐயா:
அதுதான்
எதிர்பார்ப்புகள் இன்று அதிகமாகிவிட்டது. படிப்பு ஓகே! எதிர்பார்க்கலாம், படிக்கலாம்,
வேலைக்கு போகலாம், ஆனால் ஒரு சில விசயங்கள் அப்படியே வரணும் என்ற எதிர்பார்ப்பு தான் பிரச்சனை. லக்கினத்தில்
சூரியன் இருக்கிறது என்றால் எனக்கு வரக்கூடிய மருமகள் / மருமகன் இப்படி வரணும் என்ற
எதிர்பார்ப்பு / கௌரவம் / அந்தஸ்து என்று அதெல்லாம் எதற்கு? அந்தப் பெண்ணையும் ஆணையும்
வாழ விடுங்கள். உங்கள் கௌரவத்தை விடுத்து, வசதி வாய்ப்பைப் பார்த்து பண்ண வேண்டும்.
எல்லா அதுவாகவே வராது. மணமகனின் மணமகளின் அம்மாவிற்கு எதிர்பார்ப்பு சிலவற்றை விட்டுக்
கொடுத்து மகளோ / மகனோ அவர்களுக்கு பிடித்த வரனை அமைக்க வேண்டும். திருமணப் பொருத்ததில்
ஜென்ம லக்னத்திற்கும், ஜென்ம ராசிக்கும் பொருத்தம் பார்க்கிறார்கள். 10 பொருத்தம் பார்க்கலாமா?
என்றால் பார்க்கலாம். ஆனால் இன்றைக்குள்ள நட்சத்திரத்திற்கு பாருங்கள் என்று தாண் சொல்கிறேன்.
தற்போது பெண்ணிற்கு நடக்கும் தசாவிற்கான நட்சத்திரத்தையும் தற்போது ஆணிற்கு நடக்கும்
தசாவிற்கான நட்சத்திரத்தையும் இணைத்துப் பொருத்தம் பார்க்கும் போது தான் 10 பொருத்தம்
எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
எளிமையாக்கப்பட்ட ALP திருமணப்
பொருத்தம்!
ALP
லக்னத்திற்கு ALP லக்னம் 6 / 8 ஆக வரக்கூடாது. திருமணப் பொருத்ததை மிகவும் எளிமையாகக்
கொண்டு வந்துள்ளோம். ஒரு பெண்ணோட ஜாதகத்தில் ஆண் எப்படி இருப்பார், அதே போல் ஆணுடைய
ஜாதகத்தில் பெண் எப்படி இருப்பார் என்று பார்க்க வேண்டும். இது இரண்டு குடும்பங்கள்
இருக்கிறது என்பது தான் பெரிய போராட்டம். அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமணத்தைப்
பொருத்தத்தைப் பொறுத்த வரை நட்சத்திரம், தசா / புக்தி, 10 பொருத்தம், படிப்பு, வேலை,
அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஒத்துப்போக வேண்டும், வீடு வசதி வாய்ப்பிருக்க வேண்டும்,
செட்டில்மெண்ட் ஆகியிருக்க வேண்டும், உயரம், அழகு என இவ்வளவு எதிர்பார்ப்புகள் உள்ளன.
இவை ஜாதகத்தில் இரண்டாம் இடத்து நட்சத்திரப் புள்ளி ஒன்றிலோ அல்லது எட்டாம் இடத்து நட்சத்திரப் புள்ளி ஏழிலோ இருப்பதால் படிப்பு, குடும்பம்,
பேச்சு மூலமாக திருமணத் தடையாகும்.
சாந்தி தேவி ராஜேஷ்குமார்
மேம்:
இதெல்லாம்
கூட ஏறுக்கொள்ளலாம், சமீபத்தில் பார்த்த ஒரு பெண் ஜாதகம், அந்த ஆண் கண்ணாடி அணிந்துள்ளார்
என அந்தப் பெண்ணே வரனை வேண்டாம் என்று சொல்லியுள்ளார்.
பொதுவுடைமூர்த்தி ஐயா:
இரண்டாம்
இடத்து நிகழ்வுகள் லக்னத்தில் இருந்தாலோ /
எட்டாம் இடத்து நிகழ்வுகள் இரண்டில் இருந்தாலோ கண்ணாடி அணிந்து தான் ஆக வேண்டும்.
இன்று லென்ஸ் வைத்து கண்ணாடி அணிவதை தவிர்க்கக் கூடிய கால கட்டத்தில் இதையெல்லாம் காரணம்
கூறி தவிர்த்தால் நல்ல வரனை விட்டுவிட்டு வயது அதிகமாகி உடன் இருந்தவர்க்கெல்லாம் திருமணமாகி
எதிர்பார்த்து எதிர்பார்த்து காலம் கடக்கும் போது இதில் செவ்வாய், குரு, ராகு, கேது,
சுக்கிரன், சனி என இந்த கிரகங்கள் 7-இல் இருக்கக் கூடாது என்று பார்த்தால் 12 கட்டத்தில்
வேறு எங்கு தான் கிரகங்கள் இருக்கும்?
இந்த நட்சத்திரங்களைப் பேசும் போது ஜோதிடர்களைப் பேசாமல் இருக்க
முடியாது. ஜோதிடத்தையும்
பேசணும், ஜோதிடர்களையும் பேசணும். சரி நீங்களும் ஜோதிடர் என்றால், ஆம் நாங்களும் ஜோதிடர்கள்
தான். நாங்கள் இருக்கிற அமைப்பை அப்படியே சொல்கிறோம். அதில் முடிவு எடுப்பது நீங்கள்
தான். சூரியன் இருந்தால் அப்பா, சந்திரன் இருந்தால்
அம்மா, புதன் இருந்தால் படிப்பு, செவ்வாய் இருந்தால் சகோதரன் / சகோதரி தான் முடிவு
எடுப்பார்கள். அக்கா தங்கைக்கு திருமணம் செய்த பின் தான் ஆண் திருமணம் செய்ய வேண்டும்
என்பது சரிதான். அது தான் இயற்கை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் லக்னத்தில்
செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷத்தால் திருமணம் நடக்கவில்லை. அக்காவிற்கோ / தங்கைக்கோ
என்ன வசதி வாய்ப்பிருக்கிறதோ அதற்கு தகுந்தது போல் திருமணம் செய்து வைக்க வேண்டும்.
அடுத்து
சுக்கிரன் இருந்தால் அழகாக இருக்கணும் என்றும், குரு இருந்தால் ஜோதிடர் ஒரு வரனை இந்த
வீட்டில் வசதி உள்ளது, இங்கு வசதி இல்லை எனவும், இந்த ஜாதகம் பொருத்தம் இல்லை / இந்த
ஜாதகம் பொருந்துகிறது என இப்படி பல கோணங்களில் திருமண வாழ்க்கையை இருபதிலிருந்து முப்பது
வயதிற்குள் விட்டு விட்டு போராடுவதாக அமைகிறது. ஏனெனில், இந்த தசா / புக்திகளின் பங்களிப்பு
உள்ளதா என்றால் இருக்கிறது தான். ராகு தசா நடக்கும் போது திருமணம் வேண்டாம். குரு தசா
நடக்கிறது திருமணம் செய்யலாம் என அதிக காலத்திற்கு தள்ளிப் போடுகிறார்கள்.
கேது தசாவும்! ஆண் குழந்தைப்
பேறும்!
சாந்தி தேவி ராஜேஷ்குமார்
மேம்:
கேது
தசா வந்தால் 7 ஆண்டுகளுக்கு திருமணம் வேண்டாம் என்கிறார்கள். 29 வயதில் ஒருவருக்கு
கேது தசா வந்தால் 36 வயதில் திருமண வரன் எங்கிருந்து அமையும் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.
பொதுவுடைமூர்த்தி ஐயா:
அப்படிப்
பார்த்தால், எப்போது திருமணம் செய்து, எப்போது குழந்தைப் பேறு பெற்று, எப்போது வளர்த்து
எப்படி படிக்க வைக்க முடியும்? இந்த கேது தசாவில் திருமணம் நடந்தவர்களுக்கு பிரச்சனை
இருக்கிறதா? பிரிவு இருக்கிறதா? ஜாதகத்தில் கேது எப்படி என்று தெரியவில்லை. ஆனால் கேது
நன்றாக இருந்தால் இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கிறது. அப்படி இல்லை என்றாலும் இரண்டு
ஆண் குழந்தைகள் பிறக்கிறது. எனவே, கேது தசாவில் திருமணம் செய்து வைக்கலாம். அதுவே,
கேது ALP-க்கு இரண்டு அல்லது எட்டில் இருந்தால் பார்த்து செய்ய வேண்டும். கேது தசா
நடகும் போது திருமணம் செய்தவர்களை ஆய்வு செய்து பார்த்தால் ஆண் குழந்தை இருக்கும்,
இரண்டில் ஒரு குழந்தையாவது ஆண் குழந்தை இருக்கும். அதனால் கேது தசாவை ஏன் விட வேண்டும்?
சுக்கிர தசாவும்! விவாகரத்தும்!
அடுத்து
சுக்கிர தசா நடக்கும் போது நன்றாக இருக்கும் என்பார்கள். சுக்கிர தசாவில் திருமணம்
செய்து எத்தனையோ விவாகரத்தும் ஆகியுள்ளது. ராகு தசாவில் திருமணம் செய்து சிறப்பாய்
இருப்பவர்களும் உண்டு. இந்தப் பெண் வந்த பிறகு
அடுத்தடுத்து வளர்ச்சியும் வரும்.
ராகு தசாவும்! வம்ச விருத்தியும்!
ராகு
மகாலட்சுமி போல அள்ளி அள்ளி பிரம்மாண்டத்தைக் கொடுக்கும். ஒரு சிலரோ ராகு தசாவில் திருமணம்
சரி வராது என்பார்கள். அனால் எத்தனையோ பேரின் வீட்டு பெண் பிள்ளைகள் ராகு தசாவில் திருமணமாகி
போன பின் அந்த வீடு / வம்சம் விருத்தியாகி செழிப்பு ஆகியுள்ளது.
சனி தசாவும்! காகக் கூட்டமும்!
அடுத்து
சனி தசா நடந்தால் திருமணம் ஆகாத் என்பார்கள். சனி தசா நடந்தால் உழைத்து உழைத்து குருவி
சேர்ப்பது போல் சேர்த்து வீடு / சொந்தம் / எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு உறவுகளோட
பயணிக்கும். பணம் காசு இல்லாவிட்டாலும், காகக் கூட்டம் போல பெரிய கூட்டம் இருக்கும்.
காகத்தையும் குயிலையும் ஒப்பீடு செய்து பேசுவார்கள். உண்மைலேயே எல்லோர்க்கும் குயிலைப்
பிடிக்கும் ஆனால் காகத்தைப் பிடிக்காது. அதே போல் சனி தசாவும் எல்லோர்க்கும் பிடிக்காது.
சனி தசா என்பது காகத்தைப்போல் நலது கெட்டது என்றால் அரவணைத்துப் போவது சனி தான். ஒன்றுமில்லை,
ஒரு சாதம் வைத்தால் உடனே 100 காகத்தை வா! வா! என்று கூப்பிடும். ஆனால் குயில் அப்படி
கூப்பிடவே கூப்பிடாது. தான் மட்டுமே சாப்பிடும். தன் முட்டையையே தன் கூட்டில் வைக்காமல்
சோம்பேறியாக குயில் இருக்கும். ஆனால் அது கூவும் அழகான ஓசைக்கு தான் குயில் கூவுது
என்று சொல்கிறோம். ஆனால் காகம் கூவுகிறது என்று அல்லாமல் கத்துகிறது என்கிறோம். அதன்
ஒலிகளை வைத்து நல்லது கெட்டதை முடிவு எடுக்கிறோம்.
சாந்திதேவி ராஜேஷ்குமார்
மேம் :
தன்னுடைய
முட்டையா என்று தெரியாவிட்டாலும் காகம் அடை காக்கும்.
பொதுவுடைமூர்த்தி ஐயா:
அது
தான் ஆச்சரியம்! ஒரு காகம் இறந்து விட்டால் 100 காகம் ஒன்று சேர்ந்துவிடும்.
சாந்தி தேவி ராஜேஷ்குமார்
மேம்:
அது
அப்படி அஞ்சலி செலுத்துகிறது! மக்கள் கூட இன்று அப்படியெல்லாம் செய்வதில்லை.
பொதுவுடைமூர்த்தி ஐயா:
ஒரு காகம் எப்படி அனைத்தையும் அரவணைத்து கூட்டமாக
சந்தோசமாக போகிறது அவ்வளவு அழகான நிகழ்வுகள் அந்த சனி தசாவிற்கு உள்ளது. கிரகங்களை
உறவுகளாகப் பாருங்கள்.
கெட்டது போல் நல்லது செய்யும்
செவ்வாய் தசா!
சாந்தி தேவி ராஜேஷ்குமார்
மேம் :
செவ்வாய்
தசா என்ன செய்யும் என்றும் சொல்லுங்கள்.
பொதுவுடைமூர்த்தி ஐயா:
அது
கரடு முரடாக இருக்கும். இந்த கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பார்கள்.
அந்த பெண்ணோ, ஆணோ துடுக்காகப் பேசினாலும் சரியாகப் பேசும். சரியாகப் பேசினால் நல்லது
தானே! திருமணத்திற்கு முன்பே பேசுவது சரி, அதை விடுத்து திருமணத்திற்கு பின் உங்கள்
வீட்டில் இதெல்லாம் செய்யவில்லை என்று பேசுவது தான் கஷ்டம். இன்னும் சில பேர் பைக்
வேணும் என்று வரதட்சணை கேட்கிறார்கள். இப்போது 60%-70% மாறிவிட்டது. இதே இருபது வருடங்களுக்கு
முன் எனக்கு இது வேணும், அது வேணும், சீர் வரிசை வேணும் என பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு
பெரிய போராட்டமாக இருந்தது. இந்தப் பெண் பேசும் போது வாய் துடுக்காகப் பேசுது என்பார்கள்.
செவ்வாய் தசா நடந்தால் அது அப்படி தான் பேசும், கோப்பபடும் தான். கோப்பப்பட்டாலும்
அந்த நேரத்தில் பேசிவிட்டு அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் இருக்கும்.
குரு தசாவும்! குறு குறுவென்ற
சிந்தனையும்!
அதுவே,
குரு தசா நடந்தால் அது சண்டையே போடாது ஆனால் கரு கருவென நச்சிக்கொண்டே இருக்கும். நீ
இப்படி பேசியதை மனதில் வைத்து என்றைக்காக இருந்தாலும் என! வார்த்தையைப் பாருங்கள் குறு
குறுவென என்றாவது காவு அறுப்பதிற்கு யோசித்துக் கொண்டே இருக்கும். அதனால் குரு மிகக்
கொடூரமானது. அது நல்ல இடத்தில் இருந்தால் தப்பித்துவிடும். இல்லையென்றால் பிரச்சனை
தான். செவ்வாய் படக்கென்று வட்டு ஒன்று துண்டு இரண்டென பேசிவிடும். ஆனால் குரு என்ன
பண்ணுவார்? நச நசவென யோசிக்க வைப்பார். இது எப்படி நல்ல குரு கெட்ட குரு என்று பார்ப்பது
ALP-யில் சொல்ல முடியுமே! குரு தசா என்பது நல்லதையும் செய்யும் கெட்டதையும் செய்யும்.
ஆனால் செவ்வாய் தசா கெட்டது செய்வது போல் நல்லது செய்துவிட்டுப் போகும் என்று நான்
சொல்வது திருமணத்தைப் பொறுத்த வரை மட்டும்.
புதன் தசாவும்! தாவும் மனப்போக்கும்!
அடுத்தது,
புதன் தசா என்ன செய்யும் என்றால் எவ்வளவு பலித்தாலும் வாங்கும், நல்ல பெண்ணாக வரும்
வரை பொறுத்துப் பார்க்கும், அதுவே அந்தப் பெண் முடியாது என்றால் ஒரு காலை பின் வைத்து
உடன் திருமணம் செய்து கொண்டு போகும். அழகு, படிப்பு, வசதி வாய்ப்பெல்லாம் ஒத்துப்போகி
ஒரு திருமணம் நிச்சயமாகிற தருணத்தில் அதை விட அழகு, வீடு, வசதி வாய்ப்பு, வெளிநாட்டு
வரன் என்று வந்தால் அந்த வரனைப் பார்க்கப் போகும். ஆனால் இரண்டாவதாகப் பார்த்த வரன்
தரப்பிலும் பேச ஆரம்பித்த உடன் இரண்டாவது பெண் இவரை அழகில்லை என கழட்டிவிடும். அப்படியாகும்
போது திரும்பவும் முதல் பார்த்த பெண்ணையே எங்கள் ஜோதிடர் பார்க்கச் சொன்னார் என பேச்சுக்கள்
வரும்படியாக நடக்கும். இதை விட்டுப் போனது அந்தப் பெண்ணிற்காக, அது அழகிற்காக மட்டும்.
நான் அடிக்கடி சொல்வது என்னவென்றால், அழகு, வேலை என்று பார்த்து திருமணம் செய்து ஆறு
மாதங்களில் அழகு பாதிப்படைவதோ , வேலை போகும் சூழலோ வந்தால் என்ன செய்வீர்கள்? என்று
தான். எனவே, வேலை இல்லை என்று வரனை தவிர்க்க வேண்டாம் அது தசா / புக்திகள் செய்யும்
மாயை. ராகு / கேது என அனைத்து தசாவிலும் நல்லதும் உள்ளது கெட்டதும் உள்ளது. உங்கள்
ALP லக்னத்திற்கு ராகு / கேது / செவ்வாய் எங்கு
உள்ளது என பாருங்கள். நன்றாக இருந்தால் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள். தசா
/ புக்திகள் ARP-க்கு தான் பார்க்க வேண்டும். ALP-க்கு ALP தசா / புக்தி பார்க்கணும்.
ARP-க்கு ARP பார்க்க வேண்டும். அவரவருடைய அமைப்பிற்கு / உங்களுக்கு எப்படி பார்க்க
வேண்டுமோ அப்படி பாருங்கள். ஆனால் ALP முறையில் இப்படி தான் பார்க்க வேண்டும் என்ற
அமைப்பை சொல்ல முடியும்.
சாந்திதேவி ராஜேஷ்குமார்
மேம் :
அட்சய
ராசிக்கு எப்படி தசா புக்திகளைப் பார்ப்பது என ஒவ்வொரு தசாவிற்குமே ஐயா விரிவாக சொல்லியுள்ளார்கள்.
இன்னும் அட்சய லக்னம், அட்சய ராசியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் எனில் அட்சய லக்ன
பத்ததி பாகம் – 2 புத்தகத்தை வாங்கிப் படிக்கும் போது புரியும். நன்றி!
வீடியோ லிங்க் :
https://youtu.be/rdY4A2NATPk?si=QjHjtRLG1tQx_Nie
Website: www.alpastrology.com
Contact:
9786556156 / 9363035656
Comments
Post a Comment