ராமருக்கு உதவியது போல் நமக்கும் உதவுவார் ஸ்ரீ ஆஞ்சநேயர்
வீடியோ லிங்க் :
https://youtu.be/MzBthX2lJaQ?si=HfwE4Co3lG6EJYFJ
- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்.
- ALP ஜோதிடர்.
வணக்கம். சிலருக்கு அனுமன் ரொம்ப பிடிக்கும். யாரெல்லாம்
ஹனுமான் கோயிலை கும்பிடுவது ரொம்ப சிறப்பா இருக்கும். எப்போதுமே உங்களுக்கு
தெரியும் ஒரு செயல் ரொம்ப வெற்றியடையனும் இல்லைனா நினைத்த உடனே அந்த
இடத்துக்கு போகணும். நினைத்த காரியம் நினைத்த நேரத்தில் நடக்கணும் அப்படிங்கிறவங்க
இந்த ஹனுமான் வழிபாடு ரொம்ப சிறப்பு.
வார்த்தை ரொம்ப முக்கியம் :
ஏன்னா உங்களுக்கு தெரியும் அனுமானை உங்க வீட்டுல
வரவழைக்கணும் அப்படின்னா ஸ்ரீராம ஜெயம் வார்த்தை ரொம்ப ரொம்ப முக்கியம். அந்த
வார்த்தை சொல்ல சொல்ல ஹனுமான் நம்ம பக்கத்துல வந்து நிப்பாராம்.
கலியுக தெய்வம் :
கலியுகத்தில் வாழும் தெய்வம்னு சொல்லுவாங்க யாருன்னு
பார்த்தீங்கன்னா ஹனுமான். என்னன்னு பார்த்தீங்கன்னா எல்லா கடவுளும் திரேதா
யுகத்திலே தன்னுடைய அவதாரங்களை முடிச்சிட்டு அவங்க அவங்க மேலோகத்துக்கு போயிட்டு
இருந்தாங்க.
அப்ப ஹனுமார் சொன்னாராம் நான் மட்டும் வரமாட்டேன். ஏன்னா
இது ராமர் வாழ்ந்த பூமி. ராமர் மனிதனாக வாழ்ந்த பூமி. அந்த பூமியில்
நான் இருந்து தான் ஆகணும். நான் வரமாட்டேன் அப்படின்னு சொன்னாராம்.
ராம நாமம் :
எங்கெல்லாம் ராம நாமம் கேக்குதோ அந்த இடத்தில் எல்லாம்
நான் இருப்பேன். அந்த இடத்தில் ராம நாமம் எந்த இடத்தில உச்சரிக்கிறதோ ஜெபங்களாக
சொல்றாங்களோ, பிரார்த்தனையாக நடக்குதோ ஒலிக்குதோ அந்த இடத்துல ஹனுமன் வந்து
நிப்பாராம் அப்படிங்கறத ஐதீகம்.
புராணங்களை பார்த்தீங்கன்னா எல்லாருமே தன்னுடைய
அவதாரங்களை நிறைவேத்திட்டு போயிட்டப்போ. ராமர் மட்டும்தான் நான் இங்க இருப்பேன்
அப்படின்னு இருந்தாராம்.
அதே மாதிரி நினைத்த உடனே பலனை கொடுக்கக்கூடியது யாருன்னு
பாத்தீங்கன்னா, ஹனுமான். ஏன்னா நீங்க ஸ்ரீராம ஜெயம் என்கிற வார்த்தையை சொல்ல சொல்ல
உங்க பக்கத்துல ஹனுமர் வந்து நின்றுவாராம்.
ஒரு மந்திரம் :
நிஜமாவே உங்க வாழ்க்கையில பெரிய மாற்றம் நடக்கணும்
அப்படின்னா நீங்க உங்களுக்கு பிடித்த ஒரு மந்திரத்தை நான் சொல்லக்கூடியது
எளிமையா சொல்லக்கூடியது ஒரு மந்திரம் ஸ்ரீ ராம உள்ளன ஜெயம்.
ஸ்ரீ ராம் ராம் ராமேதி ரமே ராமே மனோரமே ।
ஸஹஸ்ரநாம் தத்துல்யம் ராமநாம் வராநநே ॥
இந்த மந்திரம் ஆனாலும் சரி. ஸ்ரீ ராம ஜெயம் மந்திரம்
ஆனாலும் சரி. ராமா ராமாங்கிற மந்திரம் ஆனாலும் சரி.
அந்த மந்திரத்தை சொல்ல சொல்ல அவர் நினைத்த செயலை அவர்
செய்ய வைப்பாராம். நம்ம புராணங்கள்ல படிச்சிருக்கோம் அதாவது திருடனை கூட வால்மீகி
ராமாயணமாக எழுதிய சரித்திரம் எல்லாருக்குமே தெரியும்.
அப்போ ராம நாமம் அப்படிங்கிறது எவ்வளோ பெரிய உயர் பதவியை
கொடுத்திருக்கு பாருங்க. அப்ப அவங்களுக்கே அப்படின்னா நாம நினைத்த செயலை அங்க
செய்ய வைக்குமானா கண்டிப்பாக செய்ய வைக்கும்.
ALP தனுசு லக்னம் :
உங்களுக்கு அட்சய லக்னம் தனுசு லக்னமாக இருக்குது.
அதுவும் மூலம் நட்சத்திரம் யாருக்கு போகுது. எனக்கு அட்சய லக்னம்
என்னுடைய வளர்ந்த லக்னம் ALP லக்னம்னு சொல்லக்கூடியது தனுசு லக்னம் மூலம்
நட்சத்திரம் நான்கு பாதம் யாருக்கெல்லாம் போகுதோ, 4 வருடம் 5 மாதம் 10 நாள் நீங்க
யாரை கெட்டியா பிடிச்சுக்கணும் அப்படின்னா ஸ்ரீ ராமரை
பிடிச்சுக்கணும்.
ஹனுமன் வழிபாடு உங்களுக்கு ரொம்ப விசேஷம். சிலர் வந்து
அனுமார் கோயிலுக்கு போவாங்க. போயிட்டு என்ன பண்ணுவாங்க அப்படின்னா வெண்ணெய்
வாங்கி சாத்தலாம். என்ன பண்ணுவாங்க சிலர் வெற்றிலை மாலை போடுவாங்க.
இந்த வெண்ணை வாங்கி கொடுக்கிறது ரொம்ப ரொம்ப விசேஷம். சுவாமியோட மார்பில்
வைப்பாங்க.
செந்தூரம் கதை :
சிலர் செந்தூரம் வாங்கி கொடுப்பாங்க. இந்த செந்தூரம்
வாங்கி கொடுப்பதற்கு தனி ஒரு கதைனு சொல்லலாம்.
என்னன்னு பார்த்தீங்கன்னா சீதா பிராட்டி
ஒரு தடவ என்ன பண்ணாங்களாம் ஹனுமன் முன்னாடி செந்தூரத்தை எடுத்து நெத்தில
இட்டுக்கிட்டாங்களாம். அப்ப கேட்டாங்களாம்
எதற்காக இந்த செந்தூரத்தை வைக்கிறீங்க தாயேன்னு கேட்டாங்களாம். அப்ப சீதா பிராட்டி
சொன்னாங்களாம் என்னுடைய கணவருடைய ஆயுள் விருத்திக்காக நான் இதை வைக்கிறேன் அப்படின்னு
சொன்னாங்களாம். அப்போ என் பகவானுடைய ஆயுள் விருத்திக்காக நீங்க இந்த இடத்துல
வைக்கிறீங்கன்னா, என் பகவானுடைய நான் என் உடம்பு முழுதும் வச்சுக்கிறேன்
சொல்லிட்டு செந்தூரத்து என்ன பண்ணுவாராம் ஹனுமான் உடம்பு புல்லா தரிசிப்பாராம்.
நீங்க பார்த்திருக்பீங்க ஹனுமான் கோயில்ல மொத்தம்
செந்தூரமாக இருக்கும். அது ஒரு வித்தியாசமான கலர்ல இருக்கும். அந்த
செந்தூரத்துக்கு அவ்வளவு மகிமை. நான், எனக்கு அனுமன் ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல
கூடிய நண்பர்கள் கண்டிப்பாக உங்கள் நெத்தியில செந்தூரம்.
சந்தனத்திற்கும் செந்தூரத்திற்கும் ரெண்டும் வித்தியாசம்
இருக்கு. அந்த செந்தூரத்தை உங்க நெத்தியில வச்சுக்கோங்க கண்டிப்பாக நினைத்த செயல்
அப்படிங்கிறது நடக்கும்.
குழந்தைகளுக்கு
செந்தூரம் வைத்தல் :
இந்த குழந்தைகள் படிக்கும் போது அவங்க படிக்கக்கூடிய
தன்மை கொஞ்சம் கம்மியா இருக்கும். ஞாபக மறதி அதிகமா இருக்கும். அதே மாதிரி
விளையாட்டுத்தனம் இருக்கும். படிப்புல வந்து கொஞ்சம் கவனம் இன்மை அவர்களுக்கு
அதிகமாவே இருக்கும்னு சொல்லலாம். இவங்களுக்கு எல்லாம் இந்த செந்தூரம் வைத்து
கொடுப்பது ரொம்ப விசேஷம்.
நீங்க எந்த கோயிலுக்கு அனுமார் கோயிலுக்கு போனாலுமே
துளசியும் சில இடங்களில் வெண்ணையும் தருவாங்க. வெற்றிலைல வெண்ணெயை வைத்து மடக்கி கொடுப்பது ஒரு பழக்கம்
சில கோயில்கள்ல இருக்கு.
நீங்க கொடுத்தீங்கன்னாலும் கூட அந்த வெண்ணையை சுவாமி
பாதத்தில் வச்சிட்டு திருப்பி தருவாங்க. அந்த திருப்பி வாங்கிட்டு வந்த வெண்ணையை
அந்தக் குழந்தைகளுக்கு காலையில் எந்திரிச்சு டெய்லி நாக்குல கொஞ்சம் ஒரு பின்ச்
எடுத்து தடவிட்டு வாங்க. உங்களுடைய படிப்பினுடைய தன்மை அதிகமாக இருக்கும்.
முயற்சி பாவகம் :
இந்த வெண்ணைக்கு, ஹனுமான் பாதத்தில் இருந்து
எடுக்கக்கூடிய வெண்ணைக்கு அவ்வளவு மகத்துவம். சுவாமி பாதத்துல வச்சு கொண்டு வந்து
கொடுக்கிறதுக்கு அவ்வளவு மகத்துவம்.
அந்த ஞாபக சக்தி அந்த முயற்சி அவர்கள்
செய்யக்கூடிய முயற்சி பாவகம் ரொம்ப ஊர்ஜிதமாக இருக்கும். அந்த குழந்தைகளுடைய ஒரு
செயல் அப்படிங்கிறது அதி வேகமாக இருக்கும். என் குழந்தை நல்லா தான் படிக்கிறான்
நல்லா தான் எல்லாமே செய்றான். ஆனால் ஏதோ ஒரு சோர்வா இருக்கிறான்னு
சொல்லக்கூடியவங்க இந்த வெண்ணையை காலையில் எந்திரிச்ச உடனே குழந்தைக்கு
கொடுத்துட்டு வாங்க. அவங்க வாழ்க்கையில நிறைய மாற்றங்கள் நீங்க பார்ப்பீங்கன்னு
சொல்லலாம்.
மகம் நட்சத்திரம் :
ஏன்னா இந்த மகம் நட்சத்திரம் போறவங்களுக்கு இது அதிகமாவே
இருக்கும் என்று சொல்லலாம். தன் மனசுல நினைக்கிறது அவங்க சொல்லுவாங்க. அதோட வேகம்
அப்படிங்கிறது அதிகமாக மாறும். மகம் நட்சத்திரம் அட்சய லக்னம் யாருக்கெல்லாம்
செல்கிறதோ என்னுடைய லக்னம் சிம்ம லக்னம் அதில் மகம் நட்சத்திரம்
போகுது நான் இந்த வெண்ணை சாப்பிடலாமா? என்றால் சாப்பிடலாம்.
அதே மாதிரி உங்க அப்பா கையில் இருந்து வாங்கி
சாப்பிடுவது ரொம்ப ரொம்ப விசேஷமா இருக்கும். அதை நீங்க செய்ய செய்ய கண்டிப்பா
மாற்றம் அப்படிங்கிறது இந்த
குழந்தைகளுக்கும் சரி பெரியவங்க இந்த படிக்கிற குழந்தைங்க கம்பெடேடிவ்
எக்ஸாம் எழுதுறவங்க அரசு வேலை எனக்கு வேணும் நினைக்கிறவங்க அனுமனை கெட்டியா
பிடிச்சுக்கோங்க.
உங்களை ஒரு இடத்தில் இருந்து தூக்கி கண்டிப்பாக மாற்றம்
அப்படிங்கிறது அவர் பண்ணுவாரானா பண்ணுவார். ஒரு வழி வகுத்து கொடுப்பாரானா
ராமருக்கு எப்படி பாலம் கட்டினாரோ உங்களுக்கு ஒரு பாதை நிரந்தர பாதை அப்படிங்கிறது
உங்களுக்கு செய்வார். மகம் நட்சத்திரம் போகக்கூடிய நண்பர்களுக்கு. ரொம்ப கெட்டியா
பிடிச்சுக்கோங்கன்னு சொல்லலாம்.
சரி, எல்லா ஹனுமான் கோயிலுக்கும் போகலாமான்னா எல்லா
ஹனுமான் கோயிலுக்கும் போகலாம். செந்தூரம் வாங்கி கொடுக்கலாம் வெண்ணெய் வாங்கி
கொடுக்கலாம்.
பரிகாரம் :
துளசி ஹாரம் சில நண்பர்களுக்கு துளசி ஹாரம் வாங்கி
கொடுக்க சொல்லுவோம்.
அவங்களுடைய லக்னத்துல அவங்க கிரகம் அனுசரிச்சு தான்.
சிலருக்கு துளசி விடு பூவாகவே கட்டாத துளசியா வாங்கி கொடுக்க சொல்லுவோம்.
அத போய் சுவாமி பாதத்தில் வைங்கன்னு சொல்லுவோம்.
அவருடைய கிரகம் அமர்ந்த நிலை அணுசரிச்சு தான் துளசிஹாரமா
அல்லது துளசி விடு பூவா அப்படிங்கிறத அங்க சொல்லுவோம்.
அதே மாதிரி சிலருக்குவெற்றிலை ஹாரம் வாங்க சொல்லுவோம்.
கணக்கு சிலருக்கு ஏழு வெற்றிலைன்னு சொல்லுவோம். சிலருக்கு 21 வெற்றிலை மாலை.
சிலருக்கு 51 வெற்றிலை மாலை. அவர்களுடைய ஜாதகத்துல அந்த கிரகம் எங்க இருக்குன்னு
பாத்துட்டு அதுக்கு அடுத்து சொல்லக்கூடிய பரிகாரம்.
ஏன்னா ஒரு செயலை செய்யும் போது அதுக்கு தகுந்த
எண்ணிக்கையில இல்லைனா தகுந்த காலத்தில் செய்யும்போது அது அதி வேகமாக நடக்கும்னு
சொல்லலாம்.
அஸ்வினி நட்சத்திரம் :
இந்த மேஷ லக்னம் அட்சய லக்னமாக செல்லக்கூடியவங்க அஸ்வினி
நட்சத்திரம் போறவங்க என்ன பண்ணனும்னா ரெண்டே ரெண்டு நெய் தீபம். ஹனுமர் கோயில்
எங்க இருக்குதோ ஆஞ்சிநேயர் சன்னதிக்கு போயிட்டு அங்க ரெண்டே ரெண்டு நெய்
தீபம் போடுங்க. நீங்க நினைத்தது கண்டிப்பாக நடக்கும்.
அந்த அஸ்வினி நட்சத்திரம் போறவங்களுக்கு தெரியும். இப்போ
எனக்கு அஸ்வினி நட்சத்திரம் போகுது. எனக்கு ஒரு பிரச்சனை இருக்குது.
அதுவும் மனம் சார்ந்த பிரச்சனை. திருமணம் ஆகாதவஙர்களுக்கு பார்த்தீங்கன்னா திருமண
உறவுலையும் சரி திருமணம் ஆனவங்க ஆகாதவங்க அப்படின்னா காதல் சார்ந்த பிரச்சனைகள்
அப்படின்னு இருக்கும்.
அப்ப நீங்க என்ன பண்ணனும்னா கண்டிப்பாக ரெண்டு நெய்
தீபம் அப்படிங்கிறது கண்டிப்பாக ஆஞ்சநேயருக்கு போட போட உங்களுக்குள் இருக்கக்கூடிய
கருத்து வேறுபாடுகள் போகும்.
என்னைக்கு இந்த ஆஞ்சநேயர் வழிபாடு பண்ணலாம்?
வியாழக்கிழமை அப்படிங்கிறது பண்றது ரொம்ப ரொம்ப சிறப்பு.
இந்த வியாழக்கிழமையில் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு பண்ண பண்ண உங்க வாழ்க்கையில்
மாற்றம் கிடைக்குமானா கண்டிப்பாக கிடைக்கும்னு சொல்லலாம்.
சரி நாங்க மட்டும் பண்ணா போதுமா வேற யாரும்
செய்யக்கூடாதா?
கும்ப லக்னம் , அட்சய லக்னம் போறவங்களுக்கு இரண்டாம்
திருமணத்திற்காக கால கட்டத்திற்காக சிலர்
வெயிட் பண்ணுவாங்க. நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு பண்ணலாம். அதே மாதிரி ஹனுமான் சாலிசா
கேளுங்க, படிங்க. ஒரு பத்து நாள் கேட்டீங்கன்னா அப்படியே மனப்பாடமாயிடும்.
தினமும் ஹனுமான் சாலிசா சொல்லிட்டே வாங்க. நல்லா
இருக்கும். ரொம்ப சிறப்பா இருக்குன்னு சொல்லலாம். அது சொல்ல சொல்ல உங்க
வாழ்க்கையில் மாற்றம் கண்டிப்பாக நடக்கும்.
எனக்கு அனுமன் சாலிசா தெரியும். நான் சொல்லிட்டு தான்
இருக்கேன். இன்னும் நிறைய சொல்லுங்க. ஒரு நாமத்தை உச்சரிக்கும் போது இத்தனை
எண்ணிக்கைனு அத சொல்லிட்டோம்னா அந்த கடவுள் நம்ம கூடவே இருப்பாராம்.
அது முன்னாடியே, இப்ப நான் ஒரு இடத்துக்கு போறேன்னா அந்த
செயல் நடக்குமா, நடக்காதா என்பது என் கடவுள் எனக்கு உணர்த்துவார் அப்படின்னு
சொல்லலாம். பொதுவாகவே இந்த ஆஞ்சநேயர் வழிபாடு ரொம்ப சிறப்பு. எங்க அப்படின்னா நாமக்கல்
போனீங்கன்னா போதும். நமக்கு ரொம்ப சிறப்பா இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு போய்
பண்ணிட்டு வரலாம்.
நம்ம சென்னைல பாத்தீங்கன்னா நங்கநல்லூர்
ஆஞ்சநேயர் ரொம்ப ரொம்ப விசேஷம்னு சொல்லலாம். அதே மாதிரி பாண்டிச்சேரியில்
ஆஞ்சநேயர் அவரும் ரொம்ப ரொம்ப விசேஷம்னு சொல்லலாம்.
எனக்கு ஒரு செயல் நடக்கணும். அது இந்த ஆஞ்சநேயர்
நடத்திக் கொடுப்பார். நான் அவர் சன்னதிக்கு வாரேன்னு நினைக்கக்கூடிய நண்பர்கள்
குறிப்பாக இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க. ரொம்ப விசேஷமானது. நீங்க அந்த
கோயிலுக்கு போகணும்னு நினைச்சாலே உங்க செயல் நடக்கும்.
உதாரணம் சொல்லனும்னா ஒரு நண்பர் ஒரு செயல் நடக்கணும்னு
சொல்லிட்டு அந்த ஆஞ்சநேயருக்கு பணம் எடுத்து வையுங்க. அந்த முதல் பணத்தை அந்த
கோயிலுக்கு போய் போடுங்க அப்படின்னு சொன்னோம்.
அவர் பெரிய பிசினஸ் மேன் அவரு. தொழில் அப்படிங்கிறது
அவருக்கு முடக்கமாக இருந்தது. அவருடைய லக்னம் மாற்றம் என்பது கரெக்டா இருந்தது.
கரெக்டா தகுந்த கால கட்டத்துல ஒரு தகுந்த செயல் செய்யும் போது அவருக்கு அந்த
வெற்றி கிடைச்சதானா கண்டிப்பா கிடைச்சது.
ஏன்னா அதற்கு முன்னாடி ஒரு வருடமாக அது ரெண்டரை வருஷம்னு
கூட சொல்லலாம். அந்த ரெண்டரை வருஷமாக அவர் நினைத்த வேலை நினைத்த செயல் நடக்கல.
அவர் செய்த தொழில் அப்படிங்கிறது தடங்கலாகவே முடக்கமாகவே இருந்தது. எதுவுமே அது
சரியா போகல.
இந்த காலகட்டத்தில் நான் சொல்லக்கூடியது மேஷ லக்னம்
அட்சய லக்னம் ஒருத்தவங்களுக்கு நடந்துட்டு இருக்கும்போது இந்த செயல் அவருக்கு
பிரச்சனையாக இருந்தது. அவருக்கு ரிஷப லக்னமாக மாறும்போது அவர்
செய்து வைத்த எல்லா பொருட்களுமே அவருக்கு செலவு ஆயிட்டுன்னு சொல்லலாம்.
அதாவது இம்போர்டெப்ஸ் சம்பந்த சம்பந்தப்பட்டது எல்லாமே
வந்து வாங்கிட்டு போயிட்டாங்க. அவ்வளவு ஒரு சிறப்பானது. அவர் பெரிய கோடீஸ்வரர்னு சொல்லலாம்.
தன்னுடைய செயல்கள் முடிந்த உடனே அவர் முதல்ல
போகக்கூடியது எங்கன்னு பாத்தீங்கன்னா நீம் கரோலி பாபா ஆசிரமத்தில் உள்ள
ஆஞ்சநேயர்.
இது எங்க இருக்குன்னு பாத்தீங்கன்னா ஹிமாலயத்துல
இருக்கு. உத்தரகண்ட் மாநிலத்துல நீம் கரோலி பாபா ஆசிரமம் இருக்கு. ரொம்ப ரொம்ப
விசேஷம். இங்க போயிட்டு அந்த ஆஞ்சநேயருக்கு அவருக்கு உண்டான
பணத்துல ஒரு பகுதி லாபத்தில் கிடைத்ததை ஒரு பங்கு அந்த ஆஞ்சநேயருக்கு அப்படிங்கிறத
அவரு நினைச்சுட்டு இருந்தாரு. கண்டிப்பாக அவருக்கு போய் கொடுத்துட்டு வந்தார்.
இவருக்கு மட்டும் கிடையாது.
குழந்தை பாக்கியம் :
ஒருத்தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாம இருந்தது.
அவங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்த உடனே முதல்ல போனது அந்த குழந்தைக்கு ஒரு
வயது முடிந்த உடனே போனது எங்க பாத்தீங்கன்னா அந்த நீம் கரோலி பாபா ஆசிரமம்
கஞ்சிதம்ங்கிற இடத்துல இருக்குது ஹிமாச்சல. அங்க போயிட்டு வந்ததுக்கு பிறகு
அவங்க வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். அந்த குழந்தைக்கும் சரி, அவங்க
குடும்பத்திலும் சரி.
ரொம்ப ஒரு மிடில் ஃபேமிலி அவங்க. இந்த பணம்ங்கிறது எடுத்து
வச்சாங்க. எனக்கு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் என் குழந்தையை இத்தனை நாட்களுக்கு
பிறகு நான் கொண்டு வரேன்னு சொல்லிட்டு. நீங்க நினைச்சாலே போதும் அந்த ஆஞ்சநேயர்
செய்ய வைப்பார்.
உங்க தூக்கத்தில் வந்து சில அறிகுறிகள் அப்படிங்கிறது
அவர் கொடுப்பாரானா கண்டிப்பாக கொடுப்பார். ஏன்னா அந்த ஆஞ்சநேயருக்கு அவ்வளவு
ஒரு மகத்துவம் அப்படிங்கிறது இருக்கு. அங்க போயிட்டு வந்தவங்க நிறைய பேர் நிறைய
மாற்றங்கள் என்பது நடந்திருக்கு.
நன்றி.
Comments
Post a Comment