ராசி கல்லில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள்.

  ராசி கல்லில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள்




வீடியோ லிங்க் :

https://youtu.be/2KnFo6j73ZU?si=Arin2UnUx7A6B1Wd


- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்

- ALP ஜோதிடர்.

 

வணக்கம் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமாவெங்கட்.  ஒரு நபர் கேட்டாங்க ராசி கல் வந்து யார் போடலாம்? யார் போடக்கூடாது. அவங்களுடைய கேள்வி என்னன்னு பாத்தீங்கன்னா நான் வைர மூக்குத்தி போடலாமா அப்படிங்கறது அவங்களுடைய கேள்வி.

வைர மூக்குத்தி என்கிறது எல்லாருமே போடலாம். எல்லா பெண்களுமே போடலாம். ஏன்னா  அதோட கல்லின் அளவு அப்படிங்கறது சின்னதா இருக்கும் தாராளமாக அவங்க அணியலாம். இந்த வைர மூக்குத்தி பிளஸ் அதுல ஒரு மோதிரம் அணியும்போது மட்டுமே இந்த ஜாதகருக்கு அந்த வைரம் அப்படிங்கறது எந்த அளவுக்கு அணியலாம் அப்படிங்கறது தெரிஞ்சிட்டு போறது சிறப்பு.

கிரகங்கள் பொருத்தவரை :

கிரகங்கள் பொருத்தவரைக்கும் எல்லாருமே இந்த கற்கள் அப்படிங்கறதுக்கு ரொம்ப இம்பார்டன்ட் கொடுக்குறாங்க இந்த காலகட்டத்துல. இப்போ வெளிநாட்டவரை பாத்தீங்கன்னா நிறைய பேர் வந்து அந்த ஜெம்ஸ்டோன்ஸ் போடறது அவங்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது.

அவங்க வாழ்க்கையில ஜாதகம் கேட்கும் போது என்ன ராசி கல் அணியலாம் அது வந்து எந்த அளவுக்கு எனக்கு பயன்படும் அப்படிங்கறது அவளுடைய கேள்விகளாகவே இருக்குது.

முன்னாடி சொன்ன மாதிரி தான் வைரம் பொருத்தவரைக்கும் மூக்குத்தி மட்டுமே எல்லா பெண்களுக்கும் அதாவது பெண்கள் எல்லாருமே அணியலாமானா அணியலாம். அதனுடைய கல்லின் அளவு ரொம்ப சின்னது.

இப்ப நான் ஒரு ஜெம் ஸ்டோன் போடறேன் அப்படின்னா என்னோட உடல் எடையின் இப்ப ஒரு 60 கிலோ ஒரு நபர் இருந்தார்னா, அந்த 60 கிலோவுக்கு 20 கிலோவுக்கு  ஒரு கேரட் அளவு அப்படிங்கறது  போடணும். இப்ப இந்த ஒரு நபர் ஒரு கல் போடுறாரு ராசி கல் அப்படின்னா அறுபது கிலோவுக்கு மூணு கேரட் கல் அணியலாம். அதுதான் அவருக்கு தகுந்த அந்த ஜெம்ஸ்டோன்சோட அந்த பவர் அப்படிங்கறது அவருக்கு கிடைக்கும். அதை போடுவதனால் அவருக்கு நன்மை ஏற்படுமா கண்டிப்பாக ஏற்படும்.

இப்ப யாரெல்லாம் இதை போடலாம் அப்படிங்கிற ஒரு கேள்வி. நம்ம ஜாதகத்துல இந்த ஜெம்ஸ் ஸ்டோன்ஸ் யாரெல்லாம் போடலாம். இப்ப நம்ம பார்த்தோம்னா ஒருத்தங்களுக்கு பிறந்த நட்சத்திரம் பிறந்த நட்சத்திரங்கள் அடிப்படையில் தான் நீங்க வந்து ராசி கற்கள் அப்படிங்கறதுதான்  எல்லாருமே போடுறாங்க.

மிருகசீரிஷம் நட்சத்திரம்:

ஒருத்தங்க மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்திருக்காங்க அவங்க ஜாதக பாத்தீங்கன்னா தற்போது அவர்களுக்கு என்ன தசா புத்தி போதுன்னா சனி திசை போகிறது. என்னுடைய தொழிலுக்காக நான் இதை போடுறேன் அப்படிங்கற மாதிரி சொல்றாங்க.

அவங்களுடைய லக்னம் உதாரணமாக நான் சொல்லக்கூடியது மேஷ லக்னமாக இருக்குது. நான் சொல்லக்கூடியது அட்சய லக்னத்திற்கு மட்டுமே. அட்சய லக்னத்திற்கு மேஷ லக்னமாக இருக்குது. இப்ப நம்ம லக்னத்திற்கு பிரச்சனை கிடையாது. ஆனால் அந்த ராசி கல்லுக்கு அந்த மேஷ லக்னத்திற்கு தொழில் ஸ்தான அதிபதின்னு சொல்லக்கூடிய சனி பகவான் பத்திற்கும் 11க்கும் அதிபதி லாப ஸ்தான அதிபதியும் அவர்தான்.

அப்ப அவருக்கு சனி திசை நடக்ககும் போது  சனிபகவான் அவருடைய ஜாதகத்துல 11ஆம் இடத்தில் கும்ப ராசியிலே அவர் அமர்ந்தாலுமே இதை இவர் போடுறதுனால இவருக்கு பிரச்சனைகள் வருமா கண்டிப்பாக தொழில்ல ஒரு பேரிழப்பு இந்த ஜாதகருக்கு ஏற்படும்.

நீங்க ராசிக்கல் போடும் போது உங்களுடைய கிரக அமைப்பின்படி தான் அந்த ராசிக்கல் அப்படிங்கறது போடணும். அதே மாதிரி உங்களுடைய எடையின் அளவில எந்த அளவு போடலாம் அப்படிங்கிறத கரெக்ட்டான அந்த எடை உள்ள கற்களை போடுவதனால் மட்டும்தான் உங்களுக்கு அதோட பவர் அதவிட அதோட தன்மைகள் அப்படிங்கறது உங்களுக்கு பயன்படும்ன்னு சொல்லலாம்.

 

இப்ப இந்த ஜாதகர் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்து அவங்களுக்கு சனி திசை நடக்கிறதுனால அவங்க என்ன பண்ணாங்க மேஷ லக்னத்திற்கு பத்துக்கும் 11க்கும் அதிபதி சனி பகவான். அப்ப அந்த தொழில் விருத்திக்காகவும் லாபத்திற்காகவும் அவர் சனி பகவானோட கல்ல போட்டாரு. சனி பகவான் அவருக்கு எங்க இருக்கிறார் என்றால் அவருடைய ஜாதக அமைப்பின்படி அவருக்கு கும்ப லக்னத்திலேயே இருக்கார்.

இந்த கல்ல போட்ட உடனே அவருக்கு தொழில்ல நஷ்டமும் இருந்த தொழிலும் போயி ஒரு பெரும் பிரச்சனைக்கு ஆளாகி ஆவணி மாதத்தில் பிறந்த ஜாதகர் ரொம்ப சிறப்பா இருந்தது. ஏன்னா அந்த ஜாதகருக்கு பெரும் கடன் அப்படிங்கறதும் ஏற்பட்டு அவருக்கு அந்த தொழிலை விட்டு அந்த ஊரைவிட்டு போகக்கூடிய ஒரு தன்மை.

தலைமறைவான வாழ்க்கை அப்படிங்கிறது அந்த கல் அணிந்ததனால் அந்த ஜாதகருக்கு ஏற்பட்டதா கண்டிப்பாக இருந்தது.

ஒரு ராசி கல் போடுறோம்  அப்படின்னா அவர் எது சார்ந்த கல்கள் போடணும். அவர் போட்டது சனி பகவானுடைய இந்திர நீலக்கல்  அப்படிங்கிறது அணிஞ்சாரு. இதனால் அவருக்கு பாதிப்பு பெரும்பாதிப்புன்னு சொல்லலாம். அவர் தலைமறைவான வாழ்க்கை இல்லன்னா ஜெயிலுக்கு போகக்கூடிய ஒரு தன்மை அந்த ஜாதகருக்கு இருக்குதானா கண்டிப்பாக இருக்குது .

இந்த லக்னம் அனுசரித்தும் இந்த தசாபுக்திகள் அனுசரித்தும் கல் அணியும் போது அந்த கல் உங்களுக்கு எந்த அளவுக்கு பயன்படும் அப்படிங்கறத தெரிந்த அணிவது ரொம்ப விசேஷம்.

ரிஷப லக்னம் :

என்னுடைய நண்பர் ஒருத்தங்க வைரம் போடுறேன்னு சொல்லிட்டு போட்டாங்க. அது நம்ம சொல்ற மாதிரி மூக்குத்தி கல்லு அதே மாதிரி மோதிரம் கம்மல் எல்லாமே சேர்த்து அவங்களுக்கு போடக்கூடாது. அவங்களுடைய லக்னம் பாத்தீங்கன்னா ரிஷப லக்னமாக இருந்தது. அப்ப இந்த ரிஷப லக்னக்காரர்களுக்கு வைரம் அப்படிங்கிறது சிறப்பாக இருக்குமா சிறப்பாக இருக்காது.

அவங்களுக்கு என்ன பண்ணுது வண்டில போகும்போது ஒரு சின்ன ஆக்சிடன்ட் ஆகி அந்த வண்டி அப்படிங்கறது சேதமடைந்தது புது வண்டி. ஆனா காலம் கடவுள் புண்ணியத்துல அவங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

ஆனால் அவங்களுக்கு அந்த கல் போட்ட ஒரு 45 நாள் கழித்து தான் அந்த ஒரு செயல் அப்படிங்கறது ஆரம்பிக்கும். இப்போ ஒரு கல்ல இன்னைக்கு நான் போடுறேன் நாளைக்கு அது எனக்கு பலம் தருமானா கண்டிப்பாக கிடையாது. ஏன்னா ஒரு கல் அப்படிங்கிறது ஒரு மண்டலம் கழிச்சு தான் நமக்கு அதோட பலனை நமக்கு அது திருப்பித் தரும். எனக்கு உண்டான தாக்கம் அப்படிங்கிறது அது செய்யும்.

 

இந்த ஜாதகர் அந்த கல் அணிந்து இத்தனை நாள் கழிச்சு அவருக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டதா கண்டிப்பாக ஏற்பட்டது. அதுக்கப்புறம் அந்த கல்லோட இத மாத்திட்டாங்க. இப்போ தற்போது அவர் ஜாதகத்தை பார்த்த பிறகு தான் தெரிந்தது. அவருடைய லக்னம் அப்படிங்கறது ரிஷப லக்னம். ரிஷப லக்னத்திற்கு வைரம் அப்படிங்கறது போட்டதுனால இவருக்கு அந்த பிரச்சனை. அந்த வண்டி வாகனங்களில் விபத்து அப்படிங்கறது இருந்தது. அந்த புதிதாக வாங்கப்பட்ட வண்டி அப்படிங்கறது சேதம் அடைந்தது.

இந்த வைரம் போட்டதுனால தான் இவங்களுக்கு அந்த பிரச்சனையானா கண்டிப்பாக வைரம் அணிந்ததால்  தான் இது பிரச்சனை.

கேட்டை நட்சத்திரம் :

இது வேற ஒருத்தங்களுக்கு சொல்லலாம்னா ஒருத்தங்களுக்கு கேட்டை நட்சத்திரம் போயிட்டு இருக்குது. இப்போ இவங்களுக்கு சூரிய திசை நடக்குது. அவங்க பிறந்தது பாத்தீங்கன்னா ஆகஸ்ட் மாதத்தில். இப்ப இந்த சூரிய திசைக்கு இந்த சூரியனோட கல் அணிவதனால் அந்த ஜாதகருக்கு பாதிப்பு இருக்குமா கண்டிப்பாக பாதிப்பு இருக்கும்.

ஏன்னா நான் நட்சத்திரத்தோட கல் போடுறேன் தசா புக்தியோட கல் போடுகிறேன். அந்த தசா புக்தி எங்க இருக்குது இவகளுடைய லக்னம் என்னது அந்த தசா புக்தி எந்த இடத்தில் இருந்து நடத்துறது இந்த

சூரியனோட கல் அவருக்கு தாக்கம் தருமா?

அரசியல்வாதிகளுடன் தொடர்புகள் இருந்த நபர் தற்போது எந்த ஒரு இடமும் இல்லாமல் ஒரு தாழ்ந்த நிலைக்கு சில மிஸ் கம்யூனிகேஷன் கம்யூனிகேஷன் ப்ராப்ளத்தினால அவருக்கு அந்த வேலை மாற்றம் அப்படிங்கறது ஏற்பட்டது. அவருடைய லக்னம் பாத்தீங்கன்னா கும்ப லக்னமாக இருந்தது. அப்போ அந்த திசை அப்படிங்கறது நம்ம போடக்கூடிய கல் சூரியனுடைய ஏழாம் அதிபதி கும்ப லக்னத்திற்கு ஏழாம் அதிபதி சூரியன். ஏழுலயே இருக்காங்க. அப்ப அந்த அரசியலில் சமூகத்தில் நல்ல அந்தஸ்து ஏற்படணும் என்று அவர் போட்டாரு. போட்ட உடனே அந்த மூன்று மாதத்திற்கு பிறகு அவர் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் அப்படிங்கறது அதிகமாக இருந்தது.

என்னுடைய லக்னமும் ராசி கல் தன்மையும் :

ஒரு கல் அணியறோம்னா என்னுடைய லக்னத்திற்கு என்னுடைய வளரும் லக்னத்திற்கு என்னுடைய அட்சய லக்னத்திற்கு நான் இந்த கல் அணிவதால் எனக்கு பிரச்சனையை கொடுக்குமா அப்படிங்கறத தெரிந்து செய்வது மிக மிக சிறப்புன்னு சொல்லலாம்.

இந்த அட்சய லக்னம் நான் எப்படி தெரிஞ்சிக்கிறது அப்படின்னு சொல்லக்கூடிய நண்பர்கள் பிளே ஸ்டோர்ல போய் ALP  சாஃப்ட்வேர்னு  போட்டீங்கன்னா ALP அப்படிங்கிறது பதிவு பண்ணீங்கன்னா உங்களுக்கு சாஃப்ட்வேர் வரும். அது ஃப்ரீ சாப்ட்வேர்.

அதுல உங்களுடைய பிறந்த தேதி , பிறந்த நேரம், துல ஜெனரேட் பண்ணீங்கன்னா உங்களுடைய சார்ட் அங்க இருக்கும். உங்களுடைய பிறந்த லக்னம் அங்க கொடுக்கப்பட்டிருக்கும். தற்போது உங்களுக்கு என்ன லக்னம் அப்படிங்கறது ALP அப்படிங்கிறது  கொடுக்கப்பட்டிருக்கும். அதுல என்ன நட்சத்திர புள்ளி அப்படிங்கறது கொடுக்கப்பட்டிருக்கும்.

அட்சய ராசி :

இப்பொழுது என்ன நட்சத்திரம் என்ன லக்னம் உங்களுக்கு  இயங்குது அதே மாதிரி அட்சய ராசி உங்களுக்கு எந்த இடத்தில இருக்குது தெரிந்து அந்தக் கல் அணிவது உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று சொல்லலாம்.

இன்னொரு ஜாதகம் பார்த்தீங்கன்னா ஒருத்தவங்களுக்கு குரு திசை நடக்கிறது. அந்த குரு பகவான் அவங்களுக்கு எங்க இருக்கிறார் என்றால் கும்ப ராசியில் இருக்கிறார். இந்த ஜாதகருக்கு குரு பகவான் நல்லா இருக்கும். ஒரு லாபத்தை கொடுக்கும் ஒரு சந்தோஷத்தை கொடுக்கும் அவர் நினைச்சாரு.

 

ஆனா இவங்களோட லக்னம் பிறந்த நட்சத்திரம் பாத்தீங்கன்னா இவங்களுக்கு  கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். அந்த குரு திசை இவருக்கு கடக ராசியில் இருக்குது. அப்ப இந்த கடக ராசில இருந்து குரு தச நடத்தும்போது கும்ப ராசியில் உட்கார்ந்து இருக்கிற குரு பகவான் இவங்களுக்கு ஒரு அழுத்தத்தை கொடுப்பார் என்றால் கண்டிப்பாக ஒரு அழுத்தத்தை கொடுப்பார்.

ஏன்னா அட்சய ராசி எங்க இருக்குது அந்த நான்கு வருடத்தில் அவர்   இருந்த பெரிய பொருளாதாரத்தையும் செய்த பிசினஸ்லையும் குழந்தைகள்னால  ஒரு ஒரு பெரிய பாதிப்பு அவருக்கு ஏற்பட்டதானா கண்டிப்பாக ஏற்பட்டது. இவ்வளவுமே இந்த குரு பகவான் செய்ய வைப்பார் என்றால் கண்டிப்பாக செய்ய வைப்பார். ஒரு பெரும் பணம் இழப்பு இந்த ஜாதகருக்கு ஏற்பட்டது.

அந்த குரு பகவான் உடைய கல்லை அந்த நான்கு வருடங்களும் நான்கு வருடங்கள் கூட கிடையாது. அணிந்த இரண்டு வருஷத்திலேயே வாழ்க்கையில அவ்வளவு பெரிய ஒரு மாற்றம் அப்படிங்கறது அவருக்கு நடந்தது உண்மை. ஏன்னா அவருடைய வளரும் லக்னத்திற்கு என்னுடைய அட்சய ராசிக்கு என்னுடைய தசா புத்திக்கு நான் எந்தக் கல்லை அணிந்தால் எனக்கு சிறப்பாக இருக்கும். எதற்கு அது எனக்கு நல்ல பலன் கொடுக்கும். தெரிந்து செய்வது அப்படிங்கறது சிறப்பு.

நம்ம சிறு சிறு செயல்கள் ரொம்ப பக்குவமா பார்த்து செய்யறோம். ஆனா பெரிய பெரிய விஷயங்கள் செய்யும் போது ஒரு சின்ன நிகழ்வுகளால அத வந்து மிஸ் பண்ணிடுறோம். சோ நண்பர்கள் எந்த ராசிக்கல் அணிந்தாலுமே எத்தனை காலம் அந்த ராசிக்கல் அணியலாம். என்னுடைய ராசிக்கு அந்த கல் எனக்கு ஏதுவாக இருக்குமா? நான் அணிந்தால் எந்த பிரச்சினையும் இருக்காதா? அப்படிங்கறது தெரிந்த அணிவது சிறப்பு.

எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

அதே மாதிரி எந்த ஒரு பொருளையுமே நம்ம பயன்படுத்தும்போது ஒரு ஆறு மாசத்துல ஒரு 41 நாள் அதாவது ஒரு நாள் மாட்டி அத கழட்டி ஒரு டப்பால அலம்பிட்டு ஒரு டப்பாலயோ விபூதிக்குள்ளேயே வைக்கிறது அப்படிங்கறது சிறப்பு.

இப்ப அதோட தன்மைகள் வெளிப்படுத்துறதுக்காக இப்போ ஒரு கயிறு கட்டறாங்க அப்படின்னா கருப்பு கலர்ல ஒரு நூல் கட்டுறோம். நூலோட கால அளவு பாத்தீங்கன்னா 41 நாள். ஒரு மண்டலம் மட்டும்தான். அதுக்கப்புறம் அந்த நூலோட வேல்யூ இருக்குமானா இருக்காது. மறுபடியும் கோயில போய் புதிய நூலாக வாங்கி நம்ம தான் கட்டறோம்.

அதே மாதிரி கழுத்துல ஒரு தாயத்து போடுவாங்க அந்த தாயத்து போட்டீங்கனாலுமே அந்த தாயத்தோட அளவுன்னு பாத்தீங்கன்னா அதுல உள்ள உள்ள எதற்காக போட்டாலும் சரி சிலர் வந்து இந்த வித்தியாக்ஷத்திரம் சொல்லுவாங்க. அதை எழுதி போட்டாலும் சரி ஸ்ரீ சக்கரம் எழுதி வைத்திருந்தாலும் சரி அந்த கால அளவு பாத்தீங்கன்னா ஒரு வருடம் மட்டுமே. அதுக்கப்புறம் உள்ள உள்ள அந்த தகட்ட எடுத்துட்டு புதிய தகடு எழுதி அதை கழுத்துல அணிவதாக ஒரு சம்பிரதாயம்.

அதே மாதிரி நம்ம அணியக்கூடிய ராசிகல் அப்படிங்கறது ஒரு மாதத்திற்கு ஒரு நாளாவது நம்ம கழுத்தில் இருந்தோ, கையில இருந்தோ அதை அவிழ்த்து ஒரு அடைக்கப்பட்ட ஒரு இடத்தில சிலர் வந்து இந்த ஒரு டப்பாக்குள்ள அடைச்சு வைப்பாங்க அதுவும் விபூதி டப்பாக்குள்ள அடைச்சு வைக்கிறது அப்படிங்கறது அதோட தன்மைகளை பின்னையும் வலுப்படுத்திக் கொள்வதற்கு. இதை செய்து வந்தால் கண்டிப்பாக மாற்றம் அப்படிங்கிறது இருக்கணும். யார் செய்யணும்? எந்த நேரத்துல செய்யணும் எத்தனை நாள் அது உங்களுக்கு பயன்படும் அப்படிங்கறத தெரிந்து செய்வது அப்படிங்கறது சிறப்பு. மீண்டும் ஒரு வீடியோவில் சந்திப்போம்.

நன்றி.


Comments