ராகு கேது பெயர்ச்சி 2025
-
ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்
-
ALP ஜோதிடர்.
ஜோதிடம்
டிவி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் ALP
அஸ்ட்ராலஜர் டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். ஆவலுடன் எல்லாரும்
எதிர்பார்த்துட்டு வரக்கூடிய ஒரு விஷயம் என்னன்னா இந்த குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ,ராகு கேது பெயர்ச்சி. அதுல இன்னைக்கு
நாம பார்க்கக்கூடிய பதிவு ராகு கேது பெயர்ச்சி பற்றி.
ராகு
கேதுனாலே ஒரு பயம் கலந்த ஒரு பதட்டம் இருக்கும் அப்படின்னு சொல்லலாம்.
ஏன்னா ஜாதகத்தில் ராகு கேது நாகதோஷம் இருந்தா பிரச்சனை. கால சர்ப்பதோஷம் இருந்தா
பிரச்சனை.
இந்த
ராகு கேதுவும் சேர்ந்து இருக்கு அப்படின்னு ஒரு பயமுறுத்தல் தான் சமீப காலத்தில்
பார்த்துவிட்டு வாரோம். அந்த பயமுறுத்தல்கள் எந்த ராசினருக்கெல்லாம் தேவை. யாரெல்லாம் பயப்பட வேண்டாம் அப்படிங்கற
ஒரு நிகழ்வை நாம தெரிஞ்சுக்க போறோம்.
அப்போ
இந்த ராகு கேது தொடர்பான நிகழ்வுகள் பொதுவாக ஒவ்வொரு ராசிக்கும் எந்த மாதிரியாக
பெயர்ச்சியாகுது. அவங்களுக்கு என்ன விதமான பலன்களை இந்த ராகு கேதுக்கள் கொடுக்க
போறாங்கன்னு பார்க்கலாமா.
இந்த
ராகு கேது கெடுதல்கள் மட்டும்தான் பண்ணுவாங்களா?
கண்டிப்பா
இல்லைங்க. நல்ல விஷயங்கள் நிறையவே செய்வாங்க.
எப்படி?
நம்ம
நிறைய புராண காலகட்டங்கள்லயே கேள்விப்பட்டிருக்கோம். நம்ம நளபுராணம்
நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பீங்க. இந்த நளபுராணத்துல சனீஸ்வரனால நளனுக்கு துன்பங்கள் ஏற்படும்.
அப்போ அந்த துன்பத்திலிருந்து நளனை காப்பாற்றுவது யார் என்று பார்த்தா கார்க்கோடகன்
அப்படிங்கிற ஒரு நாகம் தான் காப்பாற்றும்.
அஷ்ட
நாகங்கள் :
அஷ்ட
நாகங்கள் அப்படின்னு சொல்லுவாங்க. அந்த அஷ்ட நாகங்களும் ராகு கேதுவின்
சொரூபங்களே அப்படின்னு சொல்லலாம்.
அப்ப இந்த கார்கோடகன்ங்கிற பாம்பு தான் அந்த சனீஸ்வரனின் தொல்லையில் இருந்து நளனை காப்பாற்றி, அவரை நீ விரும்பும் போது
நளனின் கஷ்டத்தை தாங்காமல் அந்த சர்ப்பம் தீந்திடும்.
தீண்டின
உடனே அவருடைய அழகான ஸ்வரூபம் அப்படிங்கிறது உரு கொளஞ்சி ஒரு கோரமான உருவை அவர்
எடுத்துருவார். அப்போ என்னைய இப்படி ஆக்கிட்டியே அப்படின்னு சொல்லி அந்த நளன்
வந்து கார்கோடகன் கிட்ட வேண்டும்போது அந்த கார்கோடகன் சொல்லும் இது ஒரு
காரணமாகத்தான்.
உன்னுடைய
நன்மைக்காகத்தான். நீ என்னையே காப்பாற்றி இருக்க நான் உன்னைய காப்பாற்ற வேண்டாமா?
உன்னை
காப்பாற்றுவதற்காக தான் நான் இந்த நிகழ்வை பண்ணினேன். நீ எப்போது விரும்புகிறாயோ
அப்போ உன்னுடைய சுய உருவுக்கு நீ வந்துடுவ அப்படின்னு சொல்லி ஒரு ஆடையை கார்கோடகன்
கொடுக்கிறார்.
அப்போ
ஒரு கல்லுக்குள்ள ஈரம்னு சொல்வாங்க பாருங்க.
எந்த கிரகத்தையும் சபிக்காதீங்க பழிக்காதீங்க. நீ
நல்லவன் இல்ல நீ நல்லதே பண்ண மாட்ட அப்படின்னு ஒரு கிரகத்தை சொன்னால் கோபம் வருமா வராதாங்க.
அப்போ
எந்த ஒரு கிரகமுமே நம்மளோட செயல்ல தான் அங்க பிரதிபலிக்கிறது. அவங்களுக்குனு
தனியா நம்ம மேல காழ்ப்புணர்ச்சியோ விருப்போ வெறுப்போ எதுவுமே கிடையாது. அப்போ
அவங்க என்ன பண்றாங்க நம்ம செயல்களோட பிரதிபலிப்பாக அங்க என்ன கொடுக்கணும்னு
இருக்கோ அதை கொடுக்க அவங்க கடமைப்பட்டவங்க.
இப்போ
நம்ம தப்பு செய்றோம் அரசாங்கம் நம்ம தண்டிக்கிது அப்படின்னா அதுக்காக அரசாங்கம்
கெட்டவங்கன்னு அர்த்தமா? அப்போ அந்த பலன்கள் நாம செய்றோம் நமக்கு தண்டனை அரசாங்கம்
கொடுக்குது அப்படிங்கிறத முதல்ல புரிஞ்சிக்கணும்.
அதனால
கிரகங்கள் நம்மல தண்டிக்கிறாங்கனா அவங்க நீதிபதிகளாக இருந்து நம்ம செய்த தவறுக்கு
தண்டனை கொடுக்கிறார்கள் அப்படிங்கிற ஒரு புரிதல் முதல்ல வேண்டும். அதனால்
கிரகங்களை பழிக்காதீங்க.
பெயர்ச்சி
பலன்கள்
:
நம்ம
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த ராகு கேது என்றாலே
யாரும் பயப்படாதவர்கள் யாரும் இல்லை. இந்த ராகு கேது கஷ்டங்களை மட்டும்
தரக்கூடியவர்கள் அல்ல நன்மைகளின் தருபவர்கள். நாம செய்த பாவ புண்ணியங்களுக்கு
தகுந்த பலா பலன்களை வைத்திருந்து நமக்கு பண்ணக்கூடியவர்கள் இந்த ராகு கேது. நாம்
புண்ணியம் செய்திருந்தால் புண்ணியம் கிடைக்கும். கஷ்டங்கள் செய்திருந்தால்
கஷ்டங்கள் தான் கிடைக்கும்.
இப்படிப்பட்ட
ராகு கேது எங்கு பெயர்ச்சி ஆயிருக்கார் என்றால் இப்ப வரைக்கும் உங்கள் ஜென்மத்தில்
கேது பகவான் ஏழாம் வீட்டில் இருந்த ராகு பகவான் 12ஆம் வீட்டில் மாறி உள்ளார்.
இங்கு ராகு ஆறாம் இடத்திற்கு வந்துள்ளார்.
இந்த
ஆறு பன்னெண்டில் ராகு கேதுக்கள் இருப்பது நல்லதா அப்படின்னு சொல்லி கேட்டா
ஒரு வகையில நல்லது பல வகையில கஷ்டம். என்னங்க ஒன்னு நல்லா இருக்குன்னு
சொல்லுங்க இல்லை கஷ்டம்னு சொல்லுங்க. என்னங்க ரெண்டும் சொல்றீங்க. இரண்டுமே தாங்க
நடக்கும்.
அது
எப்படி நம்ம பயன்படுத்த போகிறோம் என்று வைத்து நல்ல வளன்களாக பயன்படுத்திக்க
முடியுமா? இல்ல அசுப பலன்களாக
பயன்படுத்திக்க முடியுமா? அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்க போறோம்.
இப்போ
ராகு ஆறில் இருக்கார்னு வச்சுக்கோங்க. பெரிய கடன் வாங்க வைக்கும்.
கூப்பிட்டு கொடுப்பாங்க.
ஒன்னும்
இல்ல சமீபத்துல எனக்கு ஒரு போன் கால் வந்தது பேங்க்ல இருந்து ஃப்ரீ அப்ரூவல் லோன்
சங்சன் ஆயிடுச்சு நீங்க எடுத்தே ஆகணும். இப்ப எனக்கு எடுக்க வேண்டிய அவசியம்
ஏற்படல அதனால எனக்கு இப்ப வேண்டாம். எனக்கு பெரிய லோன் தான் வேணும்னு
எதிர்பார்த்துகிட்டு இருக்கேன். அதனால அப்புறம் வாங்கிக்கிறேன் சொன்னேன். இல்லை
இல்லைங்க எப்படி சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிற கதையா. இல்ல இல்ல இது
ரொம்ப ரொம்ப ஃப்ரீ தான் நீங்க வந்து வாங்கிக்கோங்க உங்களுக்கு ரொம்ப சலுகைல
கிடைக்குது. அது அப்புறம் நீங்க கேட்கும் பொழுது கிடைக்காது. நீங்க பெரிய லோன்
எடுக்கணும்னா அது சிவில் ஸ்கோர் ஏற்றிவிடும் அதனால் கண்டிப்பாக நீங்க
வாங்கிக்கோங்க உங்களுக்கு நல்லா இருக்கும் என்று சொன்னார்கள்.
நான்
வேண்டவே வேண்டாம் என்று சொன்னேன். சரின்னு வச்சிட்டாங்க. அப்பா
விட்டுட்டாங்களேன்னு நினைச்சேன். அடுத்து போன் பண்றாங்க கடன் அட்டை உங்களுக்கு
ஃப்ரீயா வாழ்நாள் ஃபுல்லா லைஃப் டைம் ஃப்ரீயா வாங்கிக்கலாம். 40 ஆயிரம் அதுல
எலிஜிபில் இருக்கு நீங்க வாங்கிக்கோங்க அப்படின்னு கூப்பிடறாங்க.
என்னடா
இது வம்பு கூப்பிட்டு கொடுக்கிறார்களே அப்படின்னு நெனச்சு நம்ம ஆசைப்பட்டு
வாங்கினோம்னா அந்த அவஸ்தைகள் நாம தான்
சந்திச்சு ஆகணும்.
அப்போ
இந்த கடன் என்பது நம்மளை தேடி வரும். பெரிய அளவில் வரும்.
நம்மளுக்கு ஆசை காட்டும் அந்த ஆசையில் மயங்கி கடனை வாங்கிட்டோம்னா நம்ம சும்மா
இருப்போமா எங்க போனாலும் தேய்க்க சொல்லும். அதில் கடன் ஏத்த சொல்லும். அதைக் கட்ட
முடியாமல் மறந்திடுவோம் இல்ல விட்டுடுவோம். பெனால்டி கட்டனும் அதற்கு போடணும் அப்புறம்
அதை டிஆக்டிவேட் பண்ண ஓடணும். இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க
வேண்டிருக்கும்.
சரி
இது ஒரு பக்கம் இருக்கட்டும் வச்சுக்கோங்க. 12 ல் போய் கேது உட்கார்றார்.
இந்த லக்னத்தில் இருந்ததை விட 12 இல் இருக்கிறது ஓரளவு கொஞ்சம் பரவாயில்லைன்னு
சொல்லலாம். இந்த வெளிநாடு தொடர்பானா முயற்சி எடுக்கிறேனா அந்த முயற்சில
கொஞ்சம் தடைகள் தாமதங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகளை கொடுக்குமானா
கண்டிப்பாக கொடுக்கும்னு சொல்லலாம்.
ஏனென்றால்
12 கேது இருபது வெளிநாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கொஞ்சம் மைனஸ்சை
ஏற்படுத்தக் கூடியது. அதுவே அவங்க கிறிஸ்டின் கண்ட்ரிக்கு போகிறார்கள் என்றால்
கொஞ்சம் சப்போர்ட் பண்றதாக இருக்கும்.
சரி
இவர்கள் அரபு நாட்டிற்கு போகலாமா போகக்கூடாது போக வேண்டாம். ஏன் வேண்டாம்
ஆறில் வந்து ராகு இருக்கிறார். அங்க போனான் அதிகமாக ஆசைப்பட வைக்கும். அதனால்
கஷ்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். நஷ்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். கடன்
துணிச்சலாக வாங்க வைக்கும். அப்ப அங்க கடனாளியாக அங்கேயே மாட்ட வைத்திடும். அதனால
அரபு கண்ட்ரிக்கு இப்போதைக்கு வேண்டாம். இந்த ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்கள்
கழிச்சு பயனபடலாம்.
கேது
பகவான் மட்டும் 12 ஆம் இடத்தில் இருப்பதினால் பக்கத்தில் உள்ள விநாயகர்
கோயிலில் அர்ச்சனை செய்து வழிபாடு பண்ணுங்க.
இந்த
பக்கத்தில் உள்ள விநாயகர் கோயில் என்னும்போது இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
இது உங்கள் வீட்டு தெரு முனையிலயே இருக்கும் பிள்ளையார். அதை ஒரு வீட்டில வச்சிருக்காங்க.
அது அவங்க தான் வச்சிருக்காங்க. அந்தப் பிள்ளையார் நம்மளுக்கு பண்ண மாட்டார் என்று
நினைக்கவே நினைக்காதீர்கள். இந்த நேரத்துல உங்களுக்கு பக்கத்து வீட்டு பிள்ளையார்
தான் உதவுவார். அங்க தான் போகணும்.
ஒன்னும்
இல்லங்க உங்க வீட்டு பக்கத்துல ஒரு அருகம்புல் இருக்கா அல்லது செம்பருத்தி
பூ செடி இருக்கா பூக்கள் இருக்கா பிச்சி பூ இருக்கா ஏதோ ஒரு பூ கொண்டு போய்
வச்சு பதினோரு தோப்புக்கரணம் போட்டு
சாமி கும்பிட்டுட்டு வாங்க. அதுக்கு பிறகு நீங்கள் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும் வெற்றி ஆகும்.
ஏனென்றால்
12 இல் போய் கேது உட்கார்ந்து இருக்கிறார். நடந்து போகும் பாதையில் உட்கார்ந்து
இருக்கிறார். அப்போ அவரை தரிசனம் பண்ணிட்டு நீங்க போங்க. நின்னு ரெண்டு கொட்டு
கொட்டிட்டு போங்க. நீங்க பூவே போடல ஊதுபத்தி பத்த வைக்கல சூடம் பத்த வைக்கல
எதுவுமே வேண்டாம்.
வீண்
செலவுகளை தவிர்க்க :
பிள்ளையாரப்பா
அவர்கிட்ட ஒரு ரெண்டு கொட்டு கொட்டிட்டு ஒரு மூணு நாலு தோப்புக்கரணம்
போட்டுக்கிட்டு நீங்க அழகா உங்க வேலையை செய்யுங்க. கண்டிப்பாக உங்களுக்கு சாதகமான
பலன்கள் இருக்கானா நிச்சயமாக இருக்கு. அந்த தெண்ட செலவுகள் வீண் செலவுகள், செலவுகள் தவிர்க்கப்படும். 12 கேது இருந்தால் என்ன
செய்யும் செலவு அதிகமாக வைக்கும். செலவு செய்ய பணமில்லாமல் போகும். அப்புறம் நம்ம
கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வந்துரும். நம்ம கேட்டா மட்டும் எங்கேயும்
கிடைக்காதுப்பா என்று சொல்லக்கூடிய வார்த்தை கொடுத்திடும். அப்போ அலைச்சல்
அதிகப்படுத்தும். நம்முடைய பொருளாதாரத்தில் கொஞ்சம் தடைகளை ஏற்படுத்தும்.
இப்படி
சில நிகழ்வுகள் மூலம் ஒரு சங்கடங்களை ஏற்படுத்தும் அமைப்பு இருக்கிறதுனால 12 ஆம்
இருக்கும் கேதுவிற்கு பரிகாரம் பக்கத்தில் இருக்கிற பிள்ளையாருக்கு அருகம்புல் சாத்துறது.
உங்க வீட்டில கொண்டைக்கடலையை வேக வச்சு தாளிச்சு எடுத்துட்டு போய்
நெய்வேத்தியமா வச்சி சாப்டுட்டு அங்கு உள்ளவருக்கு பிரசாதமா கொடுத்துட்டு
வாங்க.
அப்புறம்
ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையை மிக்ஸியில் போட்டு தூளாக்கி அந்தப் பவுடரை
எறும்புகளுக்கு தானமாக போட்டுட்டு வாங்க. அதுவே உங்கள் வாழ்க்கையில் 12
ஆம் இடத்தின் விரையத்தை தவிர்க்கும் ஒரு
காரணியாக அமையும் என்று பாத்துக்கலாம்.
அடுத்து
இந்த ராகு வந்து ஆறாம் இடத்தில் இருக்கிறதுனால இந்த ராகுவின் நிகழ்வு உங்களுக்கு
என்ன பண்ணுது அப்படின்னா ஒருவிதமான சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கு.
இந்த
ஆறில் இருக்கிறதுனால கடன் அப்படிங்கறத நம்ம சொன்னோம். கடன் அதிகமாகும்
அப்படிங்கறத சொன்னோம். கடன் உங்களுக்கு ஒரு சங்கடமான சூழ்நிலையை பெரிதாக்கும்
என்று சொன்னோம். இந்த மருத்துவத்துறையில் ட்ரீட்மென்ட்காக போறீங்கன்னா இந்த இடத்துல
ரொம்ப கவனமாக வச்சுக்கோங்க.
கன்னி :
இந்த
கன்னி ஆறாம் இடத்தில் இருக்கக்கூடிய ராகு நீங்க ஒரு சின்ன பிரச்சனைனு
மருத்துவமனைக்கு போவீங்க அங்க பெருசா பயமுறுத்தி அறுவை சிகிச்சை பண்ணினா தான்
ஆகும். இதுக்கு இவ்வளவு செலவு செஞ்சாதான் ஆகும்னு நம்மலை பயமுறுத்தி விட்டுருவாங்க.
அதனால
இந்த ஆறாம் இடத்து ராகுக்கு நம்ம அலோபதி மெடிசன் பயன்படுத்துவதை விட ஆயுர்வேதிக்
சித்தா மெடிசின்னு எடுத்துக்கறீங்க அப்படின்னா அது ஹெல்த்துக்கு நல்லது.
அப்ப இந்த காலங்கட்டத்தில் நீங்க ரொம்ப ரொம்ப கவனமாக உடல் ரீதியாக ஏற்படக்கூடிய
மாற்றங்களா இருந்தாலும் சரி கடனுக்காக ஏற்ற க்கூடிய மாற்றங்களாக இருந்தாலும் சரி,
ஒரு சின்ன பிரச்சனை நடக்குதுன்னு வச்சுக்கோங்க, ஒரு அந்த தெருவிலேயே ஏதோ ரெண்டு
பேருக்கு வாக்குவாதம் பிரச்சனை ஆகுது அந்த ஸ்பாட்ல கூட நீங்க போய் தயவுசெய்து
நிக்காதீங்க. நின்னீங்கன்னா உங்கள தூக்கி நீங்களும் காரணம்னு கொண்டு போய்
வச்சிருவாங்க.
அப்ப
அந்த ஆறுல இருக்கக்கூடிய ராகு என்ன பண்ணும் அந்த பிரச்சனையை பெருசா பேச வச்சு அந்த
பிரச்சனையினுடைய நிகழ்வுகளை பெரிதாகிவிட்டுடும். நம்ம போனோம்னா இன்னும்
பெருசாயிடும். அதனால தயவுசெய்து அந்த திசை பக்கம் கூட போயிடாதீங்க ஓரமா
ஒதுங்கிக்கோங்க.
தொழில்
:
தொழில்
சார்ந்த நிகழ்வுகள்ல இது பாதகத்தை தருமானா பெரிய அளவில் பாதகத்தை தராது. அப்பா கூட
உதவிகரமாக இருக்கலாமானா இருக்கலாம். அதுக்கெல்லாம் உங்களுக்கு எந்த விதத்திலும்
நிகழ்வுகள் தப்பாக இல்லை. கணவன் மனைவி புரிதல் அற்ற சூழ்நிலை இருக்குமானா கட்டாயம்
இருக்கும். அவங்களுக்குள்ள ஒற்றுமை குறையுமானா கட்டாயம் குறையும்.
கணவன்
மனைவி
:
இந்த
காலகட்டத்தில் கணவன் மனைவி பிரிவுகளை கொடுக்குமா வெளிநாட்டு யோகத்தை
கொடுக்குமா கட்டாயம் கொடுக்கும். தாராளமா போலாம். வெளிநாடு போன
தப்பிச்சுக்கிருவீங்க. அல்லது வெளி மாநிலம் ஆவது போகணும்.
வெளியூர்
மாற்றம் நல்லது
:
இந்தக்
கன்னி பயணிக்கும் போது அந்த வெளியூர்
மாற்றம் அப்படிங்கிறது நல்லாவே இருக்கு. அதை கொஞ்சம் பயன்படுத்திக்கோங்க. இந்த
நேரத்தில் நீங்க பக்கத்தில் உள்ள பிள்ளையாரை பக்கத்து வீட்டில இல்லைன்னாலும்
பக்கத்து தெருவிலாவது பக்கத்துல இருக்கிற பிள்ளையாரை பலமா பிடித்துக் கொள்ளுங்கள்.
அதுவே உங்கள் வாழ்க்கையை மாற்றும் காரணியாக அமையும். மீண்டும் இனியதொரு நிகழ்வில்
சந்திப்போம்.
நன்றி.
Comments
Post a Comment