லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டில் வர இதை மறக்காமல் பண்ணுங்க.
ALP ஜோதிடர் உமா
வெங்கட்.
full video link: https://youtu.be/GibgtJ4hoSE?si=V4aGXxtDh_-RNqS8
ஆன்மீகம் தமிழ் அன்பர்களுக்கு வணக்கம். இப்போ நம்ம எத பத்தி பேச போறோம்னா, லட்சுமி கடாட்சம் எப்படி நம்ம வீட்டுக்குள்ள கொண்டு வர்றது. எல்லாருமே சொல்லுவாங்க, பெரியவங்க சொல்லுவாங்க ஒரு பொண்ண பாத்த உடனே லட்சுமி கடாட்சமா இருக்கா அப்படிம்பாங்க. எப்படி சொல்றாங்க?
நீங்க அந்த பெண்ணை பாத்தீங்கன்னா போதும். திருமணத்திற்குண்டான பெண்களை தான் அப்படி சொல்லுவாங்க. ஏன்னா அந்த திருமணத்தின் போது அந்த குழந்தைகள் அழகா கம்மல் போட்டு அதுவும் ஜிமிக்கி, அது வசியம் எதுவுமே கிடையாதுன்னு சொல்லலாம்.
அங்கதான் உங்களுக்கு வந்து சொர்ணம் அப்படிங்கிறது அங்க வருது. மகாலட்சுமி குடியிருக்கிற இடம் எது அப்படின்னா தங்கம் அப்படிங்கிற இடத்தில் தான். அப்போ அந்த குழந்தைகள் எல்லாம் ஜிமிக்கி போட்டிருப்பாங்க, வளையல் அணிந்து இருப்பாங்க, பூ வச்சிருப்பாங்க, பொட்டு வச்சிருப்பாங்க, கண்ணாடி வளையல் ரொம்ப சிறப்பு.
என்னடா இது நார்மலா எல்லாம் சொல்றீங்களே அப்படின்னு நினைக்காதீங்க. உண்மையிலேயே லட்சுமி கடாட்சம் என்ன அப்படின்னா இந்த மாதிரி பண்றது தான்.
பெரியவங்க வீட்டுல முன்னோர்கள் வந்து சமையல் செய்யும் போது, அடுத்தவங்களுக்கு பரிமாறும்போது, ரொம்ப முக்கியம் எது அப்படின்னா காதுல கம்மல் போட்டு இருக்காங்களா பார்ப்பாங்க. கம்மல் இருந்தா தான் சமையல் பண்ணனும், போடணும். அதே மாதிரி பொட்டு வைக்கணும். கையில வளையல் போடணும். நம்மளுடைய முந்தானை அப்படிங்கறது எடுத்து சொருகிட்டு தான் சமைக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க. பரிமாறும் போது அதெல்லாம் முக்கியம். இதெல்லாமே உங்களுக்கு லட்சுமி கடாசத்த அங்க கொண்டு வருமானா கண்டிப்பாக கொண்டு வரும்.
கன்னிப்பெண்கள் அப்படிங்கிறவங்க அதாவது திருமணம் ஆனவங்க குடும்ப நிழல் அப்படிங்கறது கண்டிப்பாக இந்த வளையல் கம்மல், மாலை, பூவு, பொட்டு இதெல்லாம் ரொம்ப முக்கியம் அப்படிங்கிறது சொல்லலாம். இப்படி ஒரு வீட்ல எந்த ஒரு பெண்மணி இருக்காங்களோ அந்த வீட்ல எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. அந்த பிரச்சனைகள் வந்தாலுமே அவங்களுக்கு தீரக்கூடிய நிகழ்வாக அது இருக்காது. அதையும் கடந்து அவர்கள் அடுத்த படி நிலைக்கு செல்வார்கள் அப்படிங்கறதுதான் உண்மை.www.alpastrology.com
பரிகாரம்
:
ஏன்னா நீங்க பாருங்க நிறைய குடும்பத்தில் உள்ள பெண்கள் அப்படிங்கறவங்க அழகா கை நிறைய வளையல் போட்டிருப்பாங்க. இந்த கை நிறைய கண்ணாடி வளையல் போடுறது எதுக்கு அப்படின்னா,அவங்க வீட்ல உள்ள ஒரு திருஷ்டி பரிகாரம் சொல்லலாம். அவங்க குடும்பத்துல உள்ள திருஷ்டினு சொல்லலாம். யாருக்கெல்லாம் கண்ணாடி வளையல் போட்டு உங்க வளையல் உடைகிறதோ உங்கள் திருஷ்டி அப்படிங்கறது அதோட தீர்ந்தது.
சில பேருக்கு கேப்பாங்க கண் திருஷ்டி நிறைய இருக்கு என்ன பண்ணலாம் அப்படின்னு. கண்ணாடி வளையல் போடுங்க. கண்ணாடி வளையல் போட்டுட்டு சுத்துங்க. அவங்களுக்கு கண் திருஷ்டி இந்த வளையல் உடைவதின் மூலமாக அது தீர்ந்து விடும் அப்படிங்கறது தான் உண்மை.
ஒரு அழகான பெண் இருக்கா வச்சுக்கோங்களேன் அவங்களுக்கு ரெண்டு கையிலயும் வளையல் போடுறோம் அப்போ அவங்களுக்கு கண் திருஷ்டி ஏற்படுமா அப்படின்னா ஏற்படாது. ஏன்னா அவங்களை பாக்குறத விட அவங்க வளையல பாக்குறவங்க தான் அதிகம். அதே மாதிரி அந்த பெண் பூ வச்சிருப்பாங்க அந்த பொண்ண பார்க்கறதை விட அந்த பொண்ணோட பூவ தான் பார்ப்பாங்க. அந்த திருஷ்டி அப்படிங்கறது நாம எடுத்து வீசி எறியப்படுற ஒரு பொருட்களாக மாறிவிடும். இவங்களோட திருஷ்டி அந்த இடத்துல சேஞ்சு ஆகிடும் அப்படிங்கறதான் உண்மை. இன்று அளவுல நிறைய பேர் அதை செய்ய மாட்டேங்கிறாங்க.
என்ன செய்யலாம் :
அப்போ குடும்பத்துல லட்சுமி கடாட்சம் வரணும் அப்படின்னா வீட்ல உள்ள பெண்கள் எல்லாருமே காதுல கம்மல் போடணும், பூ வச்சுக்கணும் பொட்டு வச்சுக்கணும் வளையல் போடணும். சாஸ்திரத்துக்காகவாது ரெண்டு வளையல் அப்படிங்கிறது கண்டிப்பாக போட்டுக்கணும் அப்படின்னு சொல்லலாம். அதே மாதிரி கிழிந்த துணிகள் அப்படிங்கறது அவங்க வீட்ல உடுத்த கூடாது அப்படிங்கறது தான் உண்மை. அப்படி உடுத்தும் போது லட்சுமிதேவி ஓடிப்போயிருவா அப்படின்னு சொல்லுவாங்க.
ஏன்னா மகாலட்சுமி சீதாதேவி, ஸ்ரீதேவி, பூதேவி சொல்லுவாங்க. அப்போ நம்ம பெரியவங்க சொல்லி இருப்பாங்க ஸ்ரீதேவி மூதேவின்னு சொல்லுவாங்க. அந்த ஸ்ரீதேவி அப்படிங்கிறது லட்சுமியாகும். மூதேவி அப்படிங்கிறவங்க நமக்கு பிரச்சனை தரக்கூடிய ஒரு அம்சமாகவும் நம்ம உடம்புல வீட்ல குடி இருப்பாங்களாம்.
அப்போ நீங்க யாரை வரவேற்க போறீங்க அப்படிங்கறது நம்ம இருக்கிற உடைல, உடுத்தும் துணியில் அமைந்திருக்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்கோங்க.
சிலர் உப்பை தரையில கொட்டிடுவாங்க. உப்புங்குறது லஷ்மி கடாஷம். ஒரு வீட்ல புது குடித்தனம் யார் போறாங்களோ அவங்க முதன்முதலில் வாங்கக்கூடிய பொருள் என்னது முதல்ல கொண்டு போகக்கூடிய பொருள் என்னது அப்படின்னா உப்பு தான். அந்த உப்புக்கு மிகப்பெரிய ஒரு மகாசக்தி இருக்குகிறது உண்மை. அதே மாதிரி அந்த உப்பை தான் முதல்ல கொண்டு போவாங்க. அப்போ உப்ப கீழ கொட்ட கூடாது. அது லட்சுமி கடாட்சத்தை நமக்கு வரவழைக்காது அப்படிங்கறது நீங்க தெரிஞ்சுக்கணும்.
அன்னலட்சுமி அம்சம் :
சிலர் வந்து உப்புல விளக்கு போடுற அம்சமும் இருக்கு நிறைய பேர் நீங்க பார்த்திருப்பீங்க. அதையும் அடுத்த இதுல பார்க்கலாம். அதே மாதிரி அரிசியை அலம்புவாங்க. அரிசியை கழுவும் போது அந்த தண்ணியோட சேர்த்து அரிசியை கொட்டிடுவாங்க. அப்படியும் கொட்ட கூடாது. அம்சம் மகாலட்சுமி. நம்ம வந்து அன்னலட்சுமி சொல்வோம். அந்த அன்னலட்சுமியோட அம்சத்தை நம்ம கீழ கொட்றதுக்கு சமம். இந்த அரிசியை கழுவும் போது ஒரு பருக்க அரிசியை கொற்றது அப்படிங்கறது.
அதே மாதிரி இடுப்புக்கு கீழ தங்கம் போடக்கூடாது. சிலர் வந்து ஃபேஷனுக்காக கால்ல தங்க கொலுசு தங்க மெட்டி தங்க ஒட்டியாணம் வரைக்கும் போட்டுருக்காங்க. அன்று ராஜாக்கள் பரம்பரைக்கு அது ஒத்துவரும். அவங்களுக்கு அது விதி. அவர்கள் அணிந்தே ஆக வேண்டும் அப்படிங்கறது உண்மை. இன்றைக்கு நாம எல்லாருமே மனிதர்கள். அதை அணியக்கூடாது. அந்த மகாலஷ்மி நம்ம கழுத்தளவு மட்டும்தான் வச்சுக்கணும். கழுத்துல இருந்து கீழ இறக்கி கொண்டு போக கூடாது அப்படிங்கிறது நிறைய பேருக்கு தெரியல தெரிஞ்சுக்கோங்க. இதெல்லாம் லட்சுமி கடாட்சத்திற்கு ஒரு வழியாகவே இருக்கும். அந்த மகாலட்சுமி அம்சம் தடைபடாமல் நமக்கு கிடைக்கணும் அப்படிங்கறது மாத்திரம் தெரிஞ்சுக்கோ.
வழிபாடுகள்:
சரி, என்ன எல்லாம் சுவாமி வழிபாடுகள் பண்ணலாம். அப்படிங்கிறத கேட்டீங்கன்னா, அம்மன் கோவில்ல தேவி வழிபாடு பண்றவங்க செந்தாமரைல அமர்ந்திருக்கிற செந்தாமரையில் அமர்ந்திருக்கும் தெய்வ வழிபாடு அப்படிங்கறது பண்றது சிறப்பா இருக்கும்.
அதே மாதிரி செவ்வாய்க்கிழமை செவ்வரளி பூ வச்சு முருகன் வழிபாடு பண்றது மகாலட்சுமி கடாட்சத்தை கொண்டு வருவதற்கு ஒரு அமைப்பாகவே அமையும். அதே மாதிரி தாமரை மலர் எடுத்து பச்சை பட்டு துணியில் மடிச்சு வைக்கிறது. மடிச்சு உங்க பண பெட்டியில வைக்கிறது மகாலட்சுமிக்கு ஒரு நல்ல வரவு. லஷ்மி கடாட்சம், பணம் வரவிற்கு உண்டான ஒரு வசியம் அப்படின்னு சொல்லலாம்.
அதே மாதிரி ஸ்வர்ண பைரவர்ன்னு சொல்வோம். அதாவது ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்னு சொல்லுவோம். அவருக்கு அவர் பிறந்த தினத்து அன்னைக்கு பன்னீரால் அவருக்கு அபிஷேகம் செய்றது இந்தப் பண வரவிற்கு உங்களுக்கு மிக சிறந்த பரிகாரமாக இருக்கும். இது எல்லாம் எப்படி அப்படின்னா ஒரு பணத்தை இல்ல கோடி கணக்குல பணத்தை உங்க வீட்ல கொண்டு வர்றதுக்கு இந்த மாதிரி பரிகாரங்கள் அப்படிங்கறது ஒரு சிறந்த பலனை கொடுக்கும் அப்படின்னு சொல்லலாம். www.alpastrology.org
அன்னதானம் :
அதே மாதிரி அன்னதானம். அன்னதானம் பண்ணனும்னா உங்களுக்கு தெரியும் நிறைய பணம் வேணும். இப்ப நிறைய நம்ம மக்கள் வந்து அப்படி கிடையாது. கோயிலில்ல அன்னதானத்திற்கு உண்டான உண்டியல் அப்படிங்கறது வச்சிருக்காங்க. இந்த உண்டில அன்னதானத்திற்கு உங்களால் ஆன ஒரு சிறு தொகை அப்படிங்கிறது போடுங்க. நீங்க எவ்வளவு பணம் போட்டீர்களோ அதைவிட பத்து மடங்கு அப்படிங்கறது உங்களுக்கு பகவான் கொடுப்பாரா அப்படின்னா கொடுப்பாரு. இதுவும் ஒரு லட்சுமி கடாட்சம் உங்க வீட்டுக்கு.
நீங்க என்ன ஒரு செயலை செய்து இருந்தாலும் அந்த செயல் திருப்பி உங்களுக்கு நல்ல பலனை தரக்கூடியதாகவே அமையும் என்று சொல்லலாம். அதே மாதிரி பசு மாட்டிற்கு பழம் வாங்கி தானம் பண்ணுங்க. மிக சிறந்த பரிகாரம். இது வந்து உங்களுக்கு ஒரு நல்ல பலனை தரும் என்று சொல்லலாம்.
அதே மாதிரி பசுவும் கன்றுடன் சேர்ந்து இருக்கக்கூடிய பசுக்களுக்கும் கன்றுடன் சேர்ந்து இருக்கக் கூடியவருக்கும் அகத்திக்கீரை வாங்கி கொடுப்பாங்க. இது வந்து ஒரு நல்ல பலனை தரும் அப்படிங்கறது சொல்லலாம்.
செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரை அப்படிங்கறது பணம் கொடுக்கல் வாங்கல் அப்படிங்கிறது வச்சிக்கிட்டீங்கன்னா உங்களுக்கு நல்ல பலனைத் தரும். அதே மாதிரி படியில் நின்று காசு கொடுப்பது காசு வாங்குவது இது உங்களுக்கு நல்லதிற்கு இல்லை அப்படிங்கிறது மாத்திரம் தெரிஞ்சுக்கோங்க. அப்போ எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது அப்படிங்கறது சொல்லியாச்சு. உங்க வீட்ல லட்சுமி கடாட்சம் வருவதற்கு உண்டான வழிகளை நீங்கள் தேர்ந்தெடுத்து முடிவு செய்து அதன்படி வாழுங்கள்.
அனைவருக்கும் நன்றி.
FOR ALP ASTROLOGY OFFICE: 9363035656 / 9786556156
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வீடியோ லிங்க் : https://youtu.be/GibgtJ4hoSE?si=V4aGXxtDh_-RNqS8
Comments
Post a Comment