உங்களோட குரு யாருன்னு எப்படி கண்டுபிடிப்பது ? ALP ASTROLOGY

 னைவரின் தேடல்

வணக்கம்

  அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆசிரியை. ஸ்ரீ குரு உமா வெங்கட், நம்ம எல்லோருக்குமே குரு அப்படிங்கிறவங்க யாருங்கறது தெரியணும்.குருவினை தேடுதல் என்பது எல்லா நண்பர்களுக்கும் கொஞ்சம் அதிகமாக இருக்கும்,  அப்படிங்கறத சொல்லலாம்.www.alpastrology.org

Dr. சி. பொதுவுடைமுர்த்தி ஐயாவின் கருத்து:

    இப்ப பார்த்தீங்கனா, நம்முடைய பொதுவுடைமூர்த்தி சார் எப்போவுமே சொல்லக்கூடியது, நமக்கு, நம்முடைய வாழ்க்கையில் “32 குரு" அப்படிங்கிறவங்க  இருக்கிறாங்க. உண்மையிலேயே, இந்த 32 குருவோட வழிகாட்டுதலில் தான் நாம் இருக்கிறோமா!  அப்படிங்கிற கேள்வி தான் கேட்கனும்.

குருவை பற்றிய கேள்வி:

  எனக்கு அமைந்த குரு சரிதானா? நான் ஒரு குருவின், குருவோட பாதையில் நடக்கிறேனா? குருவோட அனுகிரகம் அப்படிங்கிறது  எனக்கு இருக்குதா? என்ற  கேள்விதான்  நிறைய பேருக்கு இருக்கிறது.

 பதில் - நம்மை தேடி :

   குருவை நாம் தேடி போக வேண்டாம். குரு நம்மை  எப்படியாவது தேடி வந்திருவாங்க. அது “ஒரு இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கும்”. SASTI TV youtube channel: https://youtube.com/@alpastrology?si=93aoPdHlNB6cKTDt

குருவை உணர்தல்:

    இப்போ நம்ம உடம்புல வந்து நல்ல ஜில்லுனு காத்தடிக்குது, அந்த காற்றோட ஸ்பரிசம் வந்து நமக்கு அது தெரியும். அதை நம்ம உணர்வோம். அதே மாதிரி தான் ஒரு குருவை நான் ஏதாவது ஒரு பொருளையோ,  ஏதாவது ஒரு சுவாமியையோ, யாராவது ஒரு நபரையோ,  அவர்களுடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு அவங்க சொல்றத மதிச்சுண்டு அவர்களுடைய வழிகாட்டலுடன் நான் நடந்தேன்னா, எனக்கு உண்டான குரு, அவர் தான், அப்படிங்கிறத அந்த குரு எனக்கு வழிகாட்டுவார். அவர் என்ன சொன்னாரோ, அதை கடைபிடித்தாலே போதும்.

 குருவின் அனுக்கிரகம்:

    நமக்கு அந்த குருவின் அனுக்கிரகம் அப்படிங்கிறது நம்மள தேடி வரும். நம்மள அறியாமலேயே நம்ம செய்யக்கூடிய செயல்களுக்கு அவர் முன் வந்து நிற்பார் என்று சொல்லலாம்.

    இப்ப நாம சொல்ல போனோம்னா, ஒரு வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி,  ஒரு  ஏதாவது ஒரு செயல் செய்கிறோம். எதிர்பாராத விதமாக அவங்க நம்ம வீட்டுக்கோ, இல்லனா அவர்கள் மூலமாக நமக்கு ஒரு தகவலோ,  அவர்கள் மூலமாக ஒரு அனுகிரகமோ நமக்கு கிடைக்கும். அது நடக்குமானா,  கண்டிப்பாக நடக்கும்.

 குரு எப்படி வருவார்?

     நாம தேடி யார் பின்னாலாவது போகணும், அப்பதான் அவர் நம்மளை தேடி வருவாரு அதெல்லாம் கிடையாது.

  நீங்க ஆத்மார்த்தமாக யாரை மதிச்சு நடக்குறீங்களோ,  யாரோட வழிகாட்டல் அப்படிங்கறத உங்களுக்கு தேவைப்படுகிறது, அதை மட்டும் நீங்க எடுத்துக்கோங்க. 

அசரீரி வார்த்தை (உள்முகம்):

    தகுந்த காலகட்டத்துல உங்களுக்கு ஒரு அரீரியாக ஒரு வார்த்தை வரும் அப்படிங்கிறத சொல்லுவாங்க. அந்த வார்த்தை தான் உங்களுக்கு குரு. நீங்க உங்க வாழ்க்கை பயணத்தில் நடந்து கொண்டே இருங்க. எனக்கு இவர் தான் குரு என்பது கிடையாது.

குழந்தையாகவும் குரு வருவார்:

    ஒரு சின்ன குழந்தை கூட உங்களுக்கு ஒரு அட்வைஸ் பண்ணும். அது சொல்றது எல்லாமே நடக்கும். அது வந்து முன் நின்று நிற்கும். அதுதான் குருவானா, அதுதான் குரு.

 நம் ஜாதக அமைப்பு:

    அந்த குரு அப்படிங்கிறது “நம்மளை தேடி வரக்கூடிய ஒரு நிகழ்வு”. நமக்கு தானாக அமையக்கூடிய ஒரு நிகழ்வுன்னு சொல்லலாம். அது அமையுமானா கண்டிப்பாக அமையும்.

    நம்மளுடைய ஜாதக அமைப்பு அப்படிங்கிறது அதுக்கு ஒத்து வரணும். எனக்கு 35 வயசு ஆச்சு, 40 வயசாச்சு, என் குரு யாருன்னு எனக்கு தெரியாது. ஏதாவது ஒரு சாமி கும்பிடுங்கள், ஏதாவது ஒரு பெரியவங்களுடைய பேச்சு கேளுங்க, யாராவது ஒரு உபன்யாம் ஏதாவது ஒன்னு கேட்டுகிட்டே இருங்க. அவர் உங்களுக்கு வழி காட்டுவாரானா, கண்டிப்பாக வழிகாட்டுவார்.

 ஆராவை மதிப்புக்கூட்டல்:

     நம்மளுடைய ஆரா என்று சொல்லுவோம். அந்த ஆராவை நம்ம கொஞ்சம் அதிகப்படுத்திக் கொண்டே இருக்கணும். அது எப்படி முடியும்னு பார்த்திங்கன்னா, இந்த மந்திர உச்சாடனம் மூலமாகத்தான் முடியும்.www.alpastrology.com

 மந்திர ஜெபங்கள்:

    நிறைய மந்திரங்கள் அப்படிங்கறது தெரியனும். சொல்லணும். எனக்கு மந்திரம் எல்லாம் தெரியாது, நாங்க படிக்கவே இல்ல, நான் கேட்டதே கிடையாது. தேவையில்லை.

    இப்ப எனக்கு “நமசிவாய” அப்படிங்கற வார்த்தை எனக்கு வருமானால்  நான் நிறைய தடவை நமச்சிவாய என்கிற வார்த்தையை நான் உருவேத்தனும். அந்த நமசிவாயரே வந்து நமக்கு குருவாக வருவார். அவரே ஒரு சந்நியாசி ரூபமாகவோ,  அவருடைய பூதகணங்களையோ, நமக்கு முன் குருவாக அனுப்புவார். நமக்கு அவர் வழிகாட்டுவாரானா  கண்டிப்பாக அந்த சிவபெருமான் வழிகாட்டுவார்.

    இல்ல, எனக்கு முருகரை பிடிக்கும். வேண்டிக்கோங்க. “ஓம் முருகா” அப்படிங்கறத சொல்லுங்க. “சரவணபவ” அப்படின்னு சொல்லுங்க.

 மந்திரத்தை உருவேற்றல்:

    எதை சொல்லவேண்டுமோ சொல்லுங்க. உங்களுக்கு எந்த வார்த்தைகள், ஒரு ரெண்டு வரி வார்த்தைகள் அப்படின்னா அதை ஒரு லட்சம் தடவை உருவேற்றி வையுங்க. உங்களைத் தேடி குருவும் வருவார். குருவுக்கு பின் உங்களுக்கு தேவையான நிகழ்வுகள் அப்படிங்கறத அந்த தானாகவே அமையும்.

 ஐந்தாம் பாவகம்:

    இது நடக்குமா? இது சாத்தியமா? அப்படிங்கற கேள்வி வேண்டாம். கண்டிப்பாக நடக்கும். அதற்கு உங்களுடைய ஐந்தாம் பாவகம் சொல்லக்கூடிய கிரகம் நன்றாக இருந்தால் மட்டுமே அந்த குரு அப்படிங்கறதையும், நம்ம கேட்கக்கூடியது,  சொல்லக்கூடிய வார்த்தைகள் அப்படிங்கறதையும் உங்களால் அதை உணர முடியும் அப்படிங்கிறதும்  உண்மை.

 உங்கள் குரு யார்?:


      சித்தர் பின்னாடி நம்ம தேடி போகக் கூடாது. சித்தர் வந்து நம்மை தேடி வருவாங்க. அதே மாதிரி தான் குருவை நம்ம தேடி போகணும்ங்கறது கிடையாது. குரு நமக்கு வந்து வழிகாட்டுவார். “நமக்கு உண்டான குருவை அப்பதான் நம்மால் உணர முடியும்”.குருவை பற்றி எல்லோருக்குமே ஒரு தேடுதல் இருக்கும். விரைவாக உங்கள் குரு யாரோ, அவர் வந்து கண்டிப்பாக உங்களுக்கு வழிகாட்டட்டும். உங்கள் வாழ்க்கையில் முன்னின்று அவர் வழி நடத்தி செல்வார் அப்படிங்கறதில் எந்த மாற்றமும் கிடையாது.

 நன்றி, வணக்கம்.

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR