அட்சய லக்ன பத்ததியும் வாழ்க்கை கல்வியும்

 எனது பெயர், திருமதி, காயத்ரி செந்தில், சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறேன். முன்னாள் வேதியியல் துறை ஆசிரியர் எனக்கு சிறுவதில் இருந்தே ஜோதிடத்தின் மீது ஆர்வம் அதிகம் ஆனால் அதை கற்றுக்கொள்ள ஒரு ஜென்மம் போதாதே என்று நினைத்துக் கொள்வேன். ஏனெனில் அதில் அத்தனை விதிகள், விதிவிலக்குகள், குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் ஜோதிடரிடம் செல்வேன். என் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது. அந்த சூழ்நிலையில் தான் இணையத்தில் ALP ஜோதிட முறையையும், வாக்கு யோகி, ஐயா திரு பொதுவுடை மூர்த்தி அவர்களைப் பற்றியும் அறிந்தேன். ஐயாவின் எளிமை மற்றும் ஜோதிட ஞானத்தையும் கண்டு வியந்தேன்.  ஐயா மட்டும் மேற்கத்திய நாட்டில் பிறந்திருந்தார் என்றால், உலகமே அவரை அறிந்திருந்திருக்கும். இது என்னுடைய தாழ்மையான கருத்து. ஐயா இறையருளாலும் தன் அயராத உழைப்பாலும் ALP ஜோதிடத்தை உருவாக்கி ஜோதிடத்திற்கு புத்துயிர் கொடுத்துள்ளார்.www.alpastrology.com

ALP ஜோதிட அடிப்படை பயிற்சி வகுப்பில் நான் சேர்ந்த 5 நாட்களில் ஆதிபத்யம் வகுப்பு நடந்தது. கிரகங்களே இல்லாத காலி கட்டங்களை வைத்தே பலன் கூற முடியும் என்பதை கண்டு வியந்தேன்.

எங்களது அன்புக்கும், மதிப்பிற்கும் உரிய ஆசிரியர்களான திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார், திரு. சத்திய நாராயணன், திரு, சாந்த குமார், திருமதி. உமா வெங்கட், திரு. ரங்கநாதன் ஆகியோரின் பொற்பாதங்களுக்கு எனது பணிவான நமஸ்காரங்கள். எனது coach ஆன திரு.உமா மகேஸ்வரன் ஐயாவுக்கும் மற்றும் ALP-க்காக உழைக்கும் அனைத்து அன்பர்களுக்கும் என் மணமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பொறுமைக்கும் அக்கறைக்கும் எவ்வளவு நன்றி கூறினாலும் ஈடு ஆகாது..

ALP ASTROLOGY-யின் பாடத்திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது (Both Basic and Advance Class). எண்ணற்ற ஜாதகங்களை வகுப்பில் ஆய்வு செய்வோம். அவ்வாறு செய்யும் போது ALP முறை மீது நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. நம் வாழ்வையே தாம் திரும்பி பார்க்கும்போது, ALP-யின் துல்லியத்தன்மை வியப்பூட்டுகிறது. நம் வாழ்வில் நடந்த நிகழ்வுகளே அதற்கு சாட்சி, ALP Advance Software பலன் எடுப்பதை மேலும் எளிமையாக்குகிறது.


கர்மா வகுப்பில் கலந்துகொண்ட அனைவரும் தங்களைத் தாங்களே உணர்ந்தோம் என்று தான் கூற வேண்டும்.இந்த ஒரு வகுப்புக்காகவே அனைவரும் ஜோதிடம் படிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். பள்ளிப் பாடத்திலேயே ALP ASTROLOGY-னை சேர்த்தாலும் சிறப்பாக இருக்கும்.

ALP ASTROLOGY வகுப்பில் சேர்ந்து பயின்ற பின் என் பேச்சில், என் வார்த்தைகளில் கவனம் அதிகமானது. இதை ஒரு நல்ல மாற்றமாக நான் உணர்கிறேன்.

குறிப்பு: இதை எழுதுவதற்கு தயக்கமாக உள்ளது:

ஆனால் அது தான் உண்மை என்பதால் எழுதுகிறேன்.ALP ஜோதிடம் அடிப்படை பயிற்சி வகுப்பு முடித்ததிலிருந்து என் உறவு நட்பு வட்டங்களில் ALP ஜோதிடம் பார்த்துவருகிறேன். இறைவன் அருளால் கணவருக்கு போதிய வருமானம் உள்ளது. எனவே, ஜோதிடத்தில் இருந்து வரும் வருமானத்தை, வெங்கடபுரத்தில் உள்ள 'சாதன கோசாலை" க்கு அனுப்பி வருகிறேன். அங்கு கிட்டத்தட்ட 750 பால் நின்ற பசு மாடுகளை நல்ல முறையில் கவனித்து வருகிறார்கள். எப்போதும் நிதி தட்டுப்பாடு இருக்கும். இது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது. என் வாழ்க்கைக்கு  ஓர் அர்த்தம் கிடைத்தது. போல் தோன்றுகிறது.www.alpastrology.org

திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா எழுதிய புத்தகங்களை படித்து வருகிறேன். இது என் ஜோதிட அறிவை மேம்படுத்த உதவுகிறது. இதற்காக திரு. பொதுவுடைமூர்த்தி ஐயாவுக்கு மேலும் ஒரு முறை மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656



Comments