ஜோதிட பலன்களை, எளிமையாக பார்க்க உதவும், அட்சய லக்ன பத்ததி எனும் ALP ஜோதிட முறை -ALP ஜோதிடர். ALP ஸ்ரீ குரு. சத்ய நாராயணன்

 

ALP ஜோதிட ஆய்வு 

அனைவருக்கும் வணக்கம். 

அட்சய லக்ன பத்ததில பாத்தீங்கன்னா, ஒரு சிம்பிளான ரூல்ஸ், சிம்பிளான விஷயங்கள், ஒரே ஒரு கிரகத்தை வச்சு, இரண்டு கிரகத்தை வச்சு, இந்த மாதிரி சிம்பிளான ரூல்ஸ் எடுத்தீங்க அப்படின்னாவே இந்த பலன் அப்படிங்கிற விஷயம் துல்லியமா வந்துரும் அப்படின்னு சொல்லலாம்.

பலன் பார்க்க எல்லா கிரகங்களையும், பார்க்க வேண்டுமா? 

ஏன்னா நம்ம என்ன பண்ணுவோம்னா நிறைய கிரகங்கள் போட்டு குழப்பிப்போம். நிறைய கிரகங்கள் போட்டு குழப்பிக்கிறதுனால, நிறைய குழப்பமான மனோநிலை வரும்னு சொல்லலாம். 

அப்போ ஒரு சிம்பிளான விஷயங்கள் வந்து நிறைய விஷயத்தை மாற்றக்கூடிய தன்மை இருக்கிறது அப்படின்னு சொல்லலாம். 

அப்போ ஏதாவது ஒரு ரோடு போடணும் அப்படின்னு சொன்னா எல்லா மினிஸ்டரும் பார்க்கணும் அப்படின்னு அவசியம் கிடையாது. அந்தப் PWD மினிஸ்டர் மட்டும் பார்த்தா போதும். 

அதே மாதிரி எல்லாரையுமே போய் பார்க்கணும் அவசியம் கிடையாது. எல்லா கிரகங்களையும் போய் பாக்கணும் அப்படிங்கிறது அவசியம் கிடையாது. அப்படிங்கிறது முக்கியமான விஷயம். www.alpastrology.com

ALP முறையில் ஒரு ஜாதக ஆய்வு:

இந்த ஜாதகர் நம்ம நண்பர். இவருடைய ஜென்ம லக்னம் கும்பம். ஜாதகம் வழியா தான் இவர் நண்பர் ஆனார் அப்படின்னு சொல்லலாம். 

இப்போ ALP நட்சத்திரம் பரணி - 1 ஆம் பாதம். பரணி நட்சத்திராதிபதி சுக்கிரன், மூன்றாம் இடமான மிதுன வீட்டில் இருக்கிறார். நல்லா இருக்காரா பாத்தா நல்லா இருக்கார். 

ஆனா இங்க இருக்கிற ALP (மேஷம்) லக்னத்திற்கு இங்க  ( சிம்மம்) இருக்கிற சந்திரனின் அமைப்பு அவருக்கு வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் பிரச்சனையை கொடுக்கிறது அப்படின்னு சொல்லலாம்.

அவர் கேட்ட கேள்வி எப்ப சார் எனக்கு வேலை கிடைக்கும்? எனக்கு வேலையில குழப்பமான மனோநிலை இருக்கு எப்ப மாற முடியும்னு? கேட்டார்.

இவருடைய குழப்பத்திற்கு காரணமே இந்த வேலை தான். இந்த சந்திரன் (சிம்மத்தில்) இந்த ALP லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் இருக்கிற அமைப்பு பார்த்தீங்கன்னா ஒரு குழப்பமான ஒரு மனோநிலையை ஏற்படுத்தும். யாருக்கு? அப்படின்னா இந்த ஜாதகருக்கு குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும்.


இந்த குழப்பங்கள் சந்திரன்னா மனோ காரகன் அப்படின்னு சொல்லுவோம் இல்லையா? இரட்டைத் தன்மை உள்ள கிரகங்கள். 

அப்போ இந்த (மேஷம்) ALP லக்னத்திற்கு சந்திரன் சிம்மத்தில் இருக்கிற அமைப்பு பார்த்தீங்கன்னா இந்த வேலை சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு பிரச்சனை கொடுக்கிறது அப்படின்னு சொல்லலாம். 

எப்படி சார்? வேலை, வேலைங்கிறது என்னது பத்தாம் (மகரம்) பாவகம். இந்த பத்தாம் (மகரம்) பாவகத்திற்கு இந்த சந்திரன் எட்டாம் இடத்தில் (சிம்மத்தில்) இருக்கிறார். அப்போ இந்த மாதிரியான மனக் குழப்பம் அப்படிங்கிற விஷயமே பாத்தீங்கன்னா இந்த ஜாதகருக்கு வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் அந்த அளவுக்கு வெற்றி பெற முடியாத ஒரு சிட்டுவேஷன்ல இருக்கு அப்படின்னு சொல்லலாம்.www.alpastrology.org

அட்சய லக்ன பத்ததியில் மட்டும் தான், இப்படி எளிமையாக பலன் சொல்ல முடியும்: 

அதனால நாம என்ன பண்ணனும் அப்படின்னு பாத்தீங்கன்னா, ஒரே ஒரு கிரகத்தை வச்சு இரண்டு கிரகத்தை வச்சு பலன் சொல்ல முடியுமா? அப்படின்னு பார்த்தீங்கன்னா, அட்சய லக்ன பத்ததிlல மட்டும் தான் இந்த மாதிரி பலன் சொல்ல முடியும் அப்படின்னு ஆணித்தரமாக சொல்லலாம். 

வாங்க சேரலாம், அட்சய லக்ன பத்ததி வகுப்பில்:  

இந்த மாதிரி நீங்க பலன் சொல்றதுக்கு நீங்க தகுதி ஆகணும் அப்படின்னு நினைக்கிறீங்களா? அட்சய லக்ன பத்ததி வகுப்பில் சேர்ந்து நீங்களும் பலன் சொல்லலாம். 

நன்றி. 

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656


 

Comments