கஸ்தூரி மானே போல நாமும் இருக்க வேண்டுமா? வெற்றியின் ரகசியம் உங்களிடமே உள்ளது
கஸ்தூரி
மானே போல நாமும் இருக்க வேண்டுமா? வெற்றியின் ரகசியம் உங்களிடமே உள்ளது
-திருமதி. அருளரசி பொதுவுடைமூர்த்தி, D.T.Ed.,
M.Sc., B.Ed., Co-founder of the ALPAIR Foundation and the ALP Institute of
Astrology,
அனைவருக்கும் வணக்கம். ஒரு காட்டுல ஒரு கஸ்தூரிமான்
வசித்துக்கொண்டிருக்கு. ஒரு நாள் அந்த காட்டுல திடீர்னு ஒரு தெய்வீக நறுமணம்
இந்த கஸ்தூரிமான் உணரது.
அப்படி இந்த வாசனை எங்க இருந்து வருதுன்னு இந்த நறுமணம்
அப்படின்னு தேடி, இந்த கஸ்தூரிமான் காட்டை
சுத்தி ஓடிக்கிட்டு இருக்கு.
இருக்கிற இடம் புதர் செடி எல்லா இடத்திலேயும் தேடுது. மற்ற மிருகங்கள் விலங்குகள் எல்லார்கிட்டையும் போய் தேடுது.
கடைசில ஒரு கட்டத்துல சோர்வடைந்து தன்னைத்தானே அட சே
இந்த வாசனை எங்க இருந்து வருது கண்டுபிடிக்க முடியலையே அப்படின்னு வேகமா திரும்புது.
அப்படி திரும்பும் போது அதனுடைய மூச்சு காத்து
தன்னுடைய மேனியிலேயே படுது. அப்பதான் அது உணருது ஆகா இந்த நறுமணம்
நம்மமேல இருந்து தான் வருது என்று.
கஸ்தூரிமானுக்கு இயற்கையாகவே என்ன தன்மை அப்படினா அதனுடைய உடம்புலிருந்து ஒரு நறுமணம் வரக்கூடிய
தன்மை கொண்டதுதான் இந்த கஸ்தூரிமான். இதில் இருந்து நம்ம என்ன
தெரிஞ்சுக்கிறோம் அப்படின்னா மனிதர்களாகிய நாம் இந்த சந்தோஷம் அமைதி இது எல்லாம்
வெளியிலேயும் வெளியே இருக்கிற உலகப்பொருள்
கிட்ட தேடி அலையறோம்.
ஆனா உண்மையாகவே இது எங்க இருக்கு அப்படின்னா
நமக்குள்ளேயே நம்ம ஆன்மாவிற்கு உள்ளேயே புதைந்து இருக்குது. நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/PWHXU4Y0PAA?si=4pHciriKNKlao0Rs
Comments
Post a Comment