மிதுனம் லக்னம் போகும்போது சனிபகவான் எங்கிருந்தால் என்ன பலன்?
மிதுனம்
லக்னம் போகும்போது சனிபகவான் எங்கிருந்தால் என்ன பலன்?
- ஸ்ரீ குரு உமா வெங்கட்
- ALP ஜோதிடர்.
தொகுப்பாளர்:
மிதுன லக்னம் போகும்போது சனிபகவான் எங்க இருக்கலாம்?
எங்க எங்க இருக்க கூடாது?
உமா வெங்கட் மேம்:
இந்த மிதுன லக்னம் போகும்போது சனிபகவான் தனது கும்ப
வீட்லயே இருக்க கூடாது. மறுபடியும் அதை சொல்லிக்கிறேன்.
ஏன்னா இந்த கும்ப வீட்ல சனிபகவான் இருக்கிறாரு ஒரு குழந்தை
படிக்கணும்னு ஒரு முடிவெடுக்குது. மேடம் அந்த குழந்தைக்கு இந்த மிதுன லக்னம்
போகும்போது தந்தைக்கு கிரகம் காரணம் யாருன்னு கேட்டீங்கன்னா சனிபகவான்
தான். அவர் அந்த வீட்டிலேயே இருக்கக்கூடாதா என்றால் இந்த அப்பா சொன்ன
படிப்பினால் ஜாதகருக்கு கல்வி தடைங்கிறது இருக்கும்.
அப்பா விருப்பப்பட்ட கல்விங்குறது போய் சேர்த்து
விடுவாரு. அந்த குழந்தை படிக்குமா என்றால் அதற்குண்டான கெப்பாசிட்டி அந்த
குழந்தைகளுக்கு கண்டிப்பா கிடையாது. அதனால பிரச்சனையை கொடுக்குமானா கண்டிப்பாக
கொடுக்கும்.
எப்போதுமே இந்த கல்வி சார்ந்த விஷயங்கள்ல இந்த சில
காலங்கள் மிதுன லக்னக்காரர்கள் தந்தை முடிவெடுப்பது என்பது ஒரு சரியான ஒரு முடிவாக
இருக்காது.
சில குழந்தைகளுக்கு பார்த்தீங்கன்னா இந்த படிப்பை
விட்டுட்டு வேற படிப்பு படிக்கக்கூடிய ஒரு தன்மையும். சில ஜாதகர்களுக்கு அது
முழுமை பெறாத ஒரு நிலையும் என்பது கண்டிப்பாக கொடுக்கும் சொல்லலாம்.
சரி இந்த கும்ப வீட்ல மட்டும் தானா வேற இடத்துல
இருக்கலாமா அப்படின்னு கேள்வி கேட்டீங்கன்னா, இந்த துலாம் ராசியில் சனிபகவான்.
என்ன மேடம் துலாம் ராசியில் உச்ச சனி வேற அங்கேயே
இருக்கக் கூடாதுன்னு சொல்றீங்கனா, மிதுன லக்னமாக போறவர்களுக்கு துலாம் ராசியில்
சனி பகவான் இருப்பது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அந்த சனிபகவானுடைய அழுத்தம்
அதிகமாக இருக்கும்.
ஏன்னா அவர் அஷ்டமாதிபதி அந்த வீட்டுக்கு அவர் உச்சம் பெறக்கூடிய ஒரு கிரகமாக இருந்தாலும் அங்க பிரச்சனைகளையும் அழுத்தங்களையும் மனப்போராட்டங்களையும் அந்த குழந்தைகளால் ஏற்படக்கூடிய ஒரு போராட்டம்ங்கிறது இந்த ஜாதகருக்கு அதிகமாகவே இருக்கும். இதை சந்திச்சுதான் ஆகணும் என்பதை இந்த இடத்தில் பதிவு பண்ணிக்கிறேன். நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/aTX4b4x5t9s?si=Xii1DgFSkEPCAftB
Comments
Post a Comment