ஜோதிட நேரலை – லக்ன மாற்றமும் பிரச்சனைக்கான தீர்வும்

 

ஜோதிட நேரலைலக்ன மாற்றமும் பிரச்சனைக்கான தீர்வும்

 

நேயர்:

நந்தினி – 22/ 10 /1995 ; 1:40 pm ; கோயம்புத்தூர் 

கேள்வி:

பார்ட் டைம் பிசினஸ் பண்ணலாமா? கேக்குறாங்க.


உமா வெங்கட் மேம்:

இங்க வருமானம் சம்பந்தப்பட்டது நீங்க என்ன தொழில் பண்ணாலுமே சரி வருமானம் சரியா இருந்ததுன்னா எதை வேணா பண்ணலாம். இங்க

சரியா இருக்குமான்னு எனக்கு தெரியல. கேள்விக்குறியே. நீங்க என்ன பண்ண போனாலுமே எதிர்ப்பு அப்படிங்கறது அதிகமா இருக்கும்.

இப்ப உதாரணமா எனக்கு ஒரு பேன்சி  ஷாப் நான் வைக்கிறேன்னு வச்சுக்கோங்களேன். மக்களுடைய தேடுதல் அப்படிங்கறது அங்க ரொம்ப யூனிக்கா ட்ரெடிஷனலா அப்படிங்கறது அந்த இடத்துல நான் தேடுவேன். அதை நீங்க எனக்கு கொடுக்க மாட்டீங்க. அப்போ என்னுடைய எதிர்பார்ப்பு அப்படிங்கிறது நீங்க செய்யக்கூடிய அந்த பார்ட் டைம் பிசினஸ் அப்படிங்கறது அதுல அதிகமாகவே இருக்காது.

முதலீடு அப்படிங்கறது இல்லாம எதையாட்டி சுருக்கமாக ஏதாட்டி செய்ய முடிஞ்சதுன்னா பண்ணுங்க. இதுல வருமானம் இன்வெஸ்ட்மென்ட் பண்ணி பண்றதை விட, நீங்க வேலைக்கு செல்வது சிறப்பு அப்படிங்கறதுதான் இந்த இடத்துல பதிவு பண்ணுவேன்.

பரணி நட்சத்திரம் மூன்றாவது பாதம் போகுது உங்களுக்கு. அட்சய லக்னம் மேஷ லக்னமாகவே இருக்குது. பரணி மூன்று பரணி நான்கு அடுத்தது கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதம் முடியற வரைக்குமே தொழிலுக்காக இன்வெஸ்ட்மென்ட் முதலீடு போடுவதுங்கறது சரியான ஒரு அமைப்பு இருக்காது.

மனம் எப்படி இருக்கும்னா இன்னைக்கு ஒரு வேலை செய்யணும் நாளைக்கு ஒரு வேலை செய்யணும்ங்கிற எண்ணம் கடந்த ரெண்டு வருஷமாகவே இருக்குது.

இப்பவும் அதே ஒரு தாட்டுதான் இருக்குது. சோ கொஞ்சம் கவனமாக பார்த்து முடிவு செய்வது சரி. இப்போ ஆழம் தெரியாம காலை விட்டு மாட்டிக்க கூடாது அப்படிங்கிற ஒரு தகவலுக்காகதான் இதை சொல்றேன்.

நீங்க செய்யறது பார்ட் டைம் பிசினஸ் இங்க சரியா அமையுமானா அமையாது. கவனம் தேவை. நன்றி.


வீடியோ லிங்க் :

https://www.youtube.com/live/xSbeqo6c4NE?si=qdKKB9-9_Jr95I-6

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

ஆதிபத்தியம் vs காரகத்துவம் – எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? ALP ஜோதிட ரகசியம்!