மேஷம் முதல் கன்னி வரை சனிபகவான் எங்கு இருந்தால் என்ன பலன்?

 

மேஷம் முதல் கன்னி வரை சனிபகவான் எங்கு இருந்தால் என்ன பலன்?

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்.

- ஏஎல்பி ஜோதிடர்.

 


தொகுப்பாளர்:

 

மேஷ லக்னம்-  சனிபகவான் எங்கு இருந்தால் நன்மையை கொடுப்பார்? எங்க இருந்தால் பிரச்சினை கொடுப்பார்? மேம்.

 

உமா வெங்கட் மேம்:

 

மேஷ லக்னம் அட்சய லக்னம லக்னமாக யாருக்கு போகுதோ உங்களுக்கு சனி பகவான் பாத்தீங்கன்னா  உதாரணமாக மேஷ லக்னத்திற்கு சனி பகவான் 10க்கும் 11க்கும் அதிபதி.

 

அவரு 10 என்பது தொழில் 11 என்பது லாபம். இது ரெண்டுக்குமே உரியவர் அவரே என்று சொல்லலாம். அதே மாதிரி இப்ப இந்த சனி பகவான் எங்கே இருக்கக்கூடாதுனு ஒரு கேள்வி கேட்டீங்கன்னா இந்த சனிபகவான் பொதுவாக இந்த 7ம் இடத்தில் அமர்வது சிறப்பு தராது.

 

மேஷ லக்னத்திற்கு 7ம் இடமான துலாம் ராசியில் சனிபகவான் அமர்ந்திருந்தால், ஜாதகருக்கு அதுவும் நண்பர்கள் மூலமாக கடன் பிரச்சனைகளை இந்த சனி பகவான் கொடுப்பார்.

 

எதற்காக இந்த தொழில் நம்மளுடைய எண்ணம் அதற்கு காரகன் சனி பகவான். அந்த 10ம் அதிபதி 7ல் இருக்கும்போது நண்பர்கள் மூலமாக தொழில் ஏதாச்சும் ஆரம்பிச்சாங்க என்றால் இந்த சனி பகவானால் அவர்களுக்கு தீராத பிரச்சனை அவமானம் ஏற்படும்.

 

அதே மாதிரி திருமண உறவுகள்ல கணவன் மனைவிக்குள்ள பிரிவு பிரச்சனை இங்க கொடுக்கணும்  சொல்லலாம்.

 

இந்த இடங்களில் மட்டுமா என்று கேட்டிங்கனா கண்டிப்பாக கிடையாது. இதே சனி பகவான் உதாரணமாக இந்த கும்ப ராசியில இருந்தார்னா என்ன? மேடம் சனி பகவானுடைய வீடு கும்ப ராசி அங்கேயே இருக்கக் கூடாதா ஒரு கேள்வி வரும்.

 

உண்மையிலேயே கும்ப ராசியில சனிபகவான் அமர்ந்தாலும் அந்த ஜாதகருக்கு வீடு மனை சார்ந்த பிரச்சனை கண்டிப்பாக கொடுப்பார் யாருக்கு மேஷ ராசிக்காரர்களுக்கு.

எப்ப கொடுப்பார்?

இந்த 10 வருஷம் அட்சய லக்னமாக செல்லும்போது அந்த ஆரம்ப காலகட்டங்களில் இந்த நிகழ்வு ஏற்படும். அப்போ ஒரு வீடு வாங்கறாங்க, ஒரு வண்டி வாங்குறாங்கன்னா இந்த காலகட்டத்தில் கண்டிப்பாக சற்று கவனமாக வாங்கக்கூடிய ஒரு காலமாகவே அமையும் என்பதை இந்த இடத்தில் பதிவு பண்ணிக்கிறேன். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/6iCgmeRjEno?si=wci7eIfQOBSxj1WS


Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

ஆதிபத்தியம் vs காரகத்துவம் – எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? ALP ஜோதிட ரகசியம்!