நம் ஜாதகத்தில் கடன் வாங்கும் நிலைக்கு இதுதான் காரணமா?

 

நம் ஜாதகத்தில் கடன் வாங்கும் நிலைக்கு இதுதான் காரணமா?

 

- ஸ்ரீ குரு  சாந்தகுமார்.

- ALP  ஜோதிடர்.

 


தொகுப்பாளர்:

 

நண்பரகளோ , உறவுகளோ  உங்களுக்கு ஒரு உறவு முக்கியம் என்றுபட்டால் அங்க கடன் கொடுப்பதும் தவறு வாங்குவதும் தவறு.

ஏன்னா கடன்கிற விஷயம் ரெண்டு பேருக்கு நடுவுல வந்ததுன்னா அந்த உறவு முறிந்துவிடும் அப்படித்தான் எங்களையெல்லாம் சொல்லி வளர்த்தாங்க.

 

சாந்தகுமார் சார்:

 

கடன் கொடுக்கிறது வாங்குறது கடன் அன்பை முறிக்கும் இதெல்லாம் உண்மையானா? அப்படி எல்லாம் கிடையாது. கடன் அன்பெல்லாம் முறிக்கிறது இல்லை. கடன் முறிக்கல நாம தான் முறிக்கிறோம்.

 

இப்போ நான் ரொம்ப பணம் தேவையோடு இருக்கிறேன். எனக்கு கடன் அந்த நேரத்துல என் தேவைக்கு உதவி செய்வதற்கு ஒருத்தர் வரும்போது, அதை வாங்கிக்கிறேன் நான் சந்தோஷமா.

 

கொடுக்கும்போது அவரும் சந்தோஷமாக கொடுத்தார். வாங்கும்போது நானும் சந்தோஷமா வாங்கினேன். ஆனா திருப்பி கொடுக்கும்போது நான் ஏதோ அவர் கேட்கக்கூடாதது கேட்ட மாதிரியே நான் நடந்துகிறது.

 

கொஞ்சம் கூட இங்கி தமே இல்ல. ஏதோ கடன் கொடுத்ததற்காக என்ன வேண்டுமானாலும் பேசுறதா? எப்படி வேணாலும் கேட்கிறதா? என்று ஒரு பேச்சு இருக்கு இதுக்கு. இதுக்கு பொறுப்பு யாரு? நான்தான்.

 

நான் வாங்குன கடனுக்கு நான் தான் பொறுப்பு. அதனுடைய விளைவுகளுக்கும் நான் தான் பொறுப்பு. இதை  இல்லன்னு சொல்ல முடியுமா?

 

ஆனா என்ன பேசுறோம்னா சனி கிரகம் வந்து எனக்கு தாக்கத்தை உருவாக்கிருச்சு அதனாலதான் கடன் ஆயிடுச்சு. புதன் கிரகம் தாக்கம் உருவாக்குச்சி அதனாலதான் கடன் ஆயிடுச்சு. இப்படி பழியைத்தூக்கி கிரகங்கள் மேல போடுறது.

 

அடுத்தபடியாக கடவுளே உனக்கு கண் இல்லையா? எனக்கு மட்டும் ஏன் கஷ்டத்தை கொடுத்த? எனக்கு ஏன் இந்த அவமானத்தைக் கொடுத்த அப்படின்னு பேசுறது.

 

இதெல்லாம் யார் யார் மேலயோ பழி போட்டு நான் செய்த தவறை நான் ஒத்துக் கொள்ளாத வரை இந்த பிரச்சனையிலிருந்து நான் வெளில வர முடியுமான்னா வர முடியாது. இதுதான் முதலில் புரிஞ்சுக்க வேண்டிய விஷயம். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/WmVGEGPv4OI?si=MHj9memhrvu51ndK

 

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

ஆதிபத்தியம் vs காரகத்துவம் – எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? ALP ஜோதிட ரகசியம்!