நீங்க ஜோதிடம் படித்தால் உங்கள் வாழ்க்கை மாறும்.

நீங்க ஜோதிடம்  படித்தால்   உங்கள் வாழ்க்கை மாறும்.


 

வணக்கம். என் பெயர் சத்தியமூர்த்தி. நான் சேலத்தில் இருந்து பேசுறேன். எனக்கு ரொம்ப நாளா ஜோதிடம் கத்துக்கணும்னு ஆசையா இருந்தது instagram-facebook எல்லாம் பார்த்ததில் எனக்கு இந்த ALP ஜோதிடத்தை பற்றி விளம்பரம் வந்தது. அப்ப நான் இந்த நம்பரை தொடர்பு கொண்டு கேட்கும் போது நீங்க படிச்சா உங்க வாழ்க்கை மாறும் சொன்னாங்க.

 

அதுக்கப்புறம் நான் இதை படிக்க ஆரம்பிச்சேன். வகுப்பு மிக எளிமையாய் இருக்கு. எல்லாரும் வயசானவங்கெல்லாம் கத்துக்கலாம். அதே மாதிரி ரொம்ப எளிமையான ஒரு முறையில சொல்லிக் கொடுக்கிறார்கள். அதே மாதிரி நமக்குன்னு ஒரு கோச் அலாட் பண்றாங்க.

 

நம்ம ஜோதிடம் கத்துக்கிட்டு நம்மளுடைய புரிதல் எப்படி இருக்கு? ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக நமக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

 

பஞ்சாங்கத்தை பத்தி சொல்லிக் கொடுத்தாங்க. நட்சத்திரங்களை பற்றி திதிகளைப் பற்றி இதெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி எனக்கு ஜோதிடத்தை பற்றி எந்த ஒரு அறிவும் கிடையாது.

 

இப்போ எனக்கு 27 நட்சத்திரமும் தெரியும் பஞ்சாங்கம் தெரியும் நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி இயங்குது தசாபுத்திகள் எப்படி இயங்குது தெரியும். இப்ப என்னோட வாழ்க்கை என்னால தீர்மானிக்க முடியும். இதனால என்னோட வாழ்க்கை மாறி இருக்கு.

 

ஏன்னா எந்த டைம்ல என்ன முடிவு நாம எடுக்கணும் என்கிறது நமக்கு தெரியாது. இதுக்கு முன்னாடி நம்ம ஒரு ஜோதிடர் சொன்னா அவங்க என்ன சொல்றாங்கன்னு நமக்கு புரியாது.

 

இப்ப நம்ம ஒரு ஜோதிடத்தை பார்க்கும்போது எனக்கு இந்த கிரகம் 6, 8, 10 ,12 இடத்தில ஜோதிடத்தில் கிரகங்கள் நின்றால் அது பிரச்சனைக்குரிய அமைப்புன்னு சொல்லுவாங்க. உதாரணமாக ஆறாம் இடத்தில் இருந்தால் தீரக்கூடிய பிரச்சனைக்காகவே கிரகம். அதே எட்டாம் இடத்தில் இருந்தால் தீராத பிரச்சனைக்காகவே என்பதை புரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நம்ம சூழ்நிலையை மாத்திக்கிட்டா நம்மளுக்கு ஏற்படக்கூடிய தோல்வியை நம்ம மாற்றி அமைக்கலாம்.

 

ஐயா அவர்கள் ரொம்ப எளிமையான முறையை எல்லாரும் எளிமையா கத்துக்குற மாதிரி இதை உருவாக்கி கொடுத்திருக்கிறார். நமக்கு எளிமையான சாஃப்ட்வேர் கொடுத்திருக்காரு. ஏஎல்பி ஆப் என்று அஸ்ட்ராலஜி ஆப் இருக்கு ஜோதிட ஆப்.

 

அதுக்குள்ள போனோம்னா பஞ்சாங்கம், கோச்சார கிரக அமைப்பு, எல்லாமே இன்னைக்கு தேதி படி, ஒரு நாள் நட்சத்திரம் எப்படி இருக்கு, இன்னைக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதோட பேர் எப்படி வைக்கலாம் என்பதும் எளிமையா எல்லாரும் புரிஞ்சிக்கிற வகையில் இந்த ஆப் வடிவமைத்து கொடுத்திருக்காங்க.

 

எனக்கு இப்ப இந்த ஜோதிடம் நானும் கத்துக்கிட்டேன். ஜாதகத்தை பார்த்துகிட்டு அதுக்கு தகுந்த மாதிரி நம்ம சூழ்நிலையை மாத்திக்கிட்டா நம்ம தோல்விகளை வெற்றிகளாக மாற்றிக் கொள்ளலாம் என்பது என்னுடைய தெளிவான புரிதல்.

 

கோச்சும் நமக்கு மிக தெளிவாக சொல்லிக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு குருமார்களுக்கும் நன்றி. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும் நன்றி. எல்லாரும் ஜோதிடம் படிங்க. கண்டிப்பா உங்க வாழ்க்கை மாறும். என்னுடைய வாழ்க்கை மாறிருக்கு.

 

இந்த ஜோதிடம் படிக்க முன்னாடி நிறைய கோவப்பட்டுட்டு இருந்தேன். பெரிய பொக்கிஷ அறிவு இந்த  ALP ஜோதிடம் என்பது அட்சய லக்ன பத்ததி என்பது. எல்லாரும் கண்டிப்பா படிங்க. கண்டிப்பா வாழ்க்கை மாறும். நன்றி.

 


 


Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR